SONG COMPOSING IN LIVE IN MADRAS -AVARKAL
SONG COMPOSING IN LIVE IN MADRAS -AVARKAL கவியரசர் கண்ணதாசன் பற்றி அவருடைய மகன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள் இப்படி கூறுகிறார்... ************************************************ ஒரு திரைப்படப் பாடல் எப்படி உருவாகிறது என்பதை, ரசிகர்கள் முன்னிலையில் அரங்கேற்றிய நிகழ்வு ஒன்று உண்டு. 1970 - 80-ம் ஆண்டுகளில் ‘பிலிமாலயா’ என்று ஒரு சினிமா இதழ் வந்து கொண்டிருந்தது. ராமச்சந்திரன் என்பவர் பதிப்பாளர். பஞ்சு அருணாசலம் அதன் ஆசிரியர். பஞ்சுவின் தம்பி லட்சு மணன் என்பவர் நிருபராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். செய்திகள் சேகரிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதனால் லட்சுமணனுடனோ அல்லது புகைப்பட கலைஞர் அர்ஜுன் ராவ் என்பவருடனோ நானும் செய்திகள் சேகரிக்க சுற்றிக்கொண்டு இருப்பேன். தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு ஒரு பிரமாண்டமான பரிசளிப்பு விழாவிற்கு, பிலிமாலயா ஏற்பாடு செய்து இருந்தது. அந்த காலத்தில் தமிழ் படங்களுக்கு அது போன்ற பிரமாண்டமான விழாக்கள் என்பது கிடையாது. பிலிம்பேர் என்ற பத்திரிகை மட்டும்தான் செய்து கொண்டிருந்தது. அதுவும் இந்திப் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த...