Monday, 11 May 2020

THAIYILLAMAL NANILLAI - ADIMAI PENN SONG COMPOSING



THAIYILLAMAL NANILLAI -
ADIMAI PENN SONG COMPOSING
.

அம்மாவை பற்றி பாட்டு ஒன்று வேண்டும் போய் கண்ணதாசனிடம் எழுதி  வாங்கிவா என்கிறார் எம்ஜிஆர் ,உதவியாளரோ நாம் கொண்டு வந்த வாலி இருக்கிறாராரே என்கிறார்

அம்மாவை பற்றி எழுதனும் என்றால் யாரை
வைத்து எழுதனும் என்று எனக்கு தெரியும்
முதலில் நான் சொன்னதை செய் என்கிறார்

உதவியாளருக்கோ பெரிய சங்கடம் ஏன்
என்றால் வாத்தியாருக்கும் கண்ணதாசனுக்கும் ஆகாது அதனால்
தான் வாலியையே திரையுலகிற்க்கு அழைத்து வந்ததே எம் ஜி ஆர் தான்

கண்ணதாசன் வீட்டுக்கு வந்து வாத்தியார்

சொன்ன விஷயத்தை சொல்கிறார், அவரோ
உங்களுக்கு தான் வாலி இருக்கிறரே என்கிறார் கண்ணதாசன்

வாத்தியார் சொன்னார் நான் உங்ககிட்டே
சொல்லி விட்டேன் என்கிறார் உதவியாளர்

சரி உட்காருங்கள் என்று கண்ணதாசன் பாடல் எழுத உற்காந்து விடுகிறார் சில
மணி நேரத்தில் மூன்று பாடல்களை எழுதி
தருகிறார்

உதவியாளரோ ஒன்று க்கு மூன்று கொடுக்கிறீர்களே என்று கேட்கிறார்
இதை கொண்டு போய் கொடு அப்புறம்
தெரியும் ஏன் மூன்று பாடல் எழதி கொடுத்தேன் என்பது

கண்ணதாசன் எழுதிய மூன்று பாடல்களையும் பார்க்கிறார் மூன்று பாடல்
களில் உள்ள ஒரு சில வரிகளை பெண்சிலால் அடிக் கோடு இடுகிறார் 
வாத்தியார் அதாவது அந்த வரிகள் ஒகே என்று அர்த்தம்

சரி இதை கொண்டு போய் அவரிடம் கொடு
என்கிறார், மீண்டும் கண்ணதாசன் வீட்டில்
எம்ஜிஆரின் உதவியாளர்

ஒரு பாட்டு எழுதி கொடுத்து  உங்க வாத்தியாரை திருப்தி படுத்த முடியாது அதான் மூன்று எழுதினேன் என்கிறார்
கண்ணதாசன்

இப்போது அவருக்கு பிடித்த வரியை கோர்வை படுத்தி வருகிறேன் என்று எழுதிய பாடல் தான் அடிமைப்பெண் படத்தில்
வரும் " #தாயில்லாமல் நானில்லை " என்ற பாடல்

அன்னையர் தின நினைவு


இன்று #அன்னையர் தினம் உலகில் உள்ள
அனைத்து உயிரினத்திலும் உள்ள அன்னையருக்கும்  எனது அன்னையர் தின #வாழ்த்துக்கள்



தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
ஜீவ நதியாய் வருவாள்
என் தாகம் தீர்த்து மகிழ்வாள்
தவறினை பொறுப்பாள்
தர்மத்தை வளர்ப்பாள்
தரணியிலே வளம் சேர்த்திடுவாள் ( 2)
(தாய் இல்லாமல் நான் இல்லை)

தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தூய நிலமாய் கிடப்பாள்
தன் தோளில் என்னை சுமப்பாள்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
தாய்மையிலே மனம் கனிந்திடுவாள்
(தாய் இல்லாமல் நான் இல்லை)

மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மேக வீதியில் நடப்பாள்
உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
மலை முடி தொடுவாள்
மலர் மணம் தருவாள்
மங்கல வாழ்வுக்கு துணை இருப்பாள்
தாய் இல்லாமல் நான் இல்லை

ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
ஆதி அந்தமும் அவள் தான்
நம்மை ஆளும் நீதியும் அவள் தான்
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி
அகந்தையை அழிப்பாள் ஆற்றலை கொடுப்பாள்
அவள் தான் அன்னை மகாசக்தி


அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை





.

No comments:

Post a Comment