ASHA POORNA DEVI,BENGAL WRITER BORN 1909 JANUARY 8-JULY 13,1995
ASHA POORNA DEVI,BENGAL WRITER BORN 1909 JANUARY 8-JULY 13,1995 ஆஷாபூர்ணா தேவி (பெங்காலி: আশাপূর্ণা দেবী ), புகழ்ப்பெற்ற பெங்காலி நாவலாசியரும் கவிஞரும் ஆவார். இவர் 1909ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் நாள் கொல்கத்தாவில் பிறந்தார். 1976ம் ஆண்டு ஞானபீட விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருதும் பெற்றார். இவர் எழுதிய பல்வேறு நூல்கள் குழந்தைகள், ஆண்- பெண் சமத்துவம் பற்றியே இருந்தது. 1995ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் நாள் மறைந்தார். சுயசரிதை வைதீகக் குடும்பத்தில் பிறந்த அவர் பள்ளிக்கு சென்று படிக்கவில்லை. தனி ஆசிரியர்கள் வீட்டிற்கே வந்து அவருடைய சகோதரர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தனர். அதை பார்த்து கற்றுக்கொண்டார். அவர் தந்தை ஒரு ஓவியர். தாயார் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஷாபூர்ணா கதைகளையும், கவிதைகளையும் எழுத தூண்டியது. முறையான கல்வி இல்லாத போதும் புத்தகங்களை படித்து மிக பெரிய எழுத்தாளராக உருவானார். இவரின் படைப்புகள் விடுதலை புரட்சியை ஏற்படுத்தியது. 'வெளியிலிருந்து ஓர் அழைப்பு' என்ற பெயரில் தான் எழுதிய கவிதையைக் 'குழந்தைகள் நண்பன்' என்ற இதழுக்கு அனுப்பினார்...