Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Sunday, 25 September 2016

உடுமலை நாராயணகவி- தமிழ் சினிமாவின் முதன்மை கவி பிறப்பு 1899 செப்டம்பர் 25



உடுமலை நாராயணகவி-
தமிழ் சினிமாவின் முதன்மை கவி 
பிறப்பு 1899 செப்டம்பர் 25




உடுமலை நாராயணகவி (செப்டம்பர் 25, 1899 - மே 23, 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக்கவிராயரின் மாணவர்; ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 

1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர். ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர். 


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர். அண்ணாத்துரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர்.



ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர். நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.


இளமை[தொகு]

1899ஆம் ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளைவாடிச் சிற்றூரில் 24 மனைத் தெலுங்கு செட்டியார் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி என்பதாகும்.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி வறுமையில் உழன்றார். தனது தமையனார் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். சுற்றுப்புறச் சிற்றூர்களுக்கு தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். இதனால் ஒரு நாளைக்கு 25 பைசா வருமானம் கிடைத்தது. நான்காம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்ட நாராயணசாமி, கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்கு மண்ணின் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு ஆர்வத்துடன் பங்கேற்றார்.


நாடக ஈடுபாடு[தொகு]

பூளைவாடியில் நிகழும் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் 'இராமநாடகம்' என்ற நாடகத்தில் இலக்குவன் வேடம் பூண்டவர் இவரே. இளமைப் பருவத்தில் இவருக்கிருந்த கலை ஈடுபாடே பின்னர்த் திரைத் துறையில் ஈடுபட வழிகாட்டியாய் அமைந்தது. அக்காலத்தே நாடகத்துறையில் புகழ்பெற்றுச் சிறந்த மதுரை சங்கரதாஸ் சுவாமிகளின் நெருங்கிய நண்பராக இருந்தவர் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் என்பவர்.இவர் 'ஆரிய கான சபா' என்னும் நாடக மன்றத்தின் ஆசிரியராகவும் இருந்தார். இவர் ஒரு முறை பூளைவாடித் திருவிழாவில் நாராயணசாமி பங்கு பெற்ற நாடகக் காட்சிகளைக் கண்டு அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார்.பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயர் செல்லுமிடம் எல்லாம் உடன்சென்று நாடகம் நடித்தும், எழுதியும், பாடியும் அதன் நுட்பங்கள் அனைத்தையும் அறிந்தார்.



இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார். அப்போதுதான் பேச்சியம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தனர்.


வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது.'இந்தக் கடனை எல்லாம் திருப்பித் தரும் வரை இந்த ஊர் மண்ணை மிதிக்க மாட்டேன் எனச் சூளுரை செய்து கையில் நூறு ரூபாயோடு பிறந்த ஊரை விட்டுப் புறப்பட்டார். தன்மானம் ஒன்றையே துணையாகக் கொண்டு மதுரை சங்கரதாஸ் சுவாமிகளைச் சென்றடைந்தார். அவரிடம் முறையாக யாப்பிலக்கணம் முழுதும் ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தார். நாடக மன்றங்கள் நிறைந்த மதுரை இவருக்கு உதவியாய் இருந்தது.


விடுதலைப் போரில் ஈடுபாடு[தொகு]

மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார்.


சொந்த மண்ணை அடைதல்[தொகு]


ஒருமுறை மதுரை நாடக சங்கத்தார் இவரின் கலைத்திறத்தைப் பாராட்டி வழங்கிய ஆயிரம் ரூபாய்க்கும் புத்தகங்களாகவே வாங்கினார். அப்போது ஊரில் உள்ள கடன் நினைவுக்கு வரவே மீண்டும் பொருளீட்டினார். ஈட்டிய பணத்துடன் சென்று தன் ஊருக்குப் புறத்தே நின்று கடனையெல்லாம் அடைத்த பிறகே ஊருக்குள் நுழைந்தார்.

திராவிட இயக்கத் தொடர்பு[தொகு]

மதுரையில் வாழ்ந்த போது அங்கு முகாமிட்டிருந்த டி.கே.எஸ் நாடகக்குழுவினரோடு ஏற்பட்ட தொடர்பால் என்.எஸ் கிருஷ்ணனுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் முதலிய திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதனால் திராவிடர் இயக்கப்பற்றும், பகுத்தறிவுப் பார்வையும் கவிக்குக் கிடைத்தன.


திரையுலகத் தொடர்பு[தொகு]

நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அப்படியே திரைப்படப் பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார். முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் "சந்திர மோகனா அல்லது சமூகத்தொண்டு" ஆகும். "கவிராயர்" எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள். அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயணகவியாவார். 


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள். அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார். தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார்.


இயற்றிய சில பாடல்கள்[தொகு]

கா...கா...கா... (பராசக்தி)
அந்தக்காலம் (நல்லதம்பி, 1949, பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)
நல்ல, நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும் விவசாயி, 1967
1954ஆம் ஆண்டில் "இரத்தக்கண்ணீர்" படத்தில் இவர் எழுதிய "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?"

ஒன்னுலயிருந்து இருபது (முதல்தேதி, 1955, இசை: ஜி. ராமநாதன், பாடியவர்: என். எஸ். கிருஷ்ணன்)

1956ஆம் ஆண்டு வெளியான "மதுரை வீரன்" படத்தில் உழைப்பவர்களுக்கெனப் பாடிய "சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்" போன்ற பாடல்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

பாடல் எழுதிய திரைப்படங்கள்[தொகு]
வேலைக்காரி
ஓர் இரவு
ராஜகுமாரி
நல்லதம்பி
பராசக்தி
மனோகரா
பிரபாவதி
காவேரி
சொர்க்க வாசல்
தூக்குத் தூக்கி
தெய்வப்பிறவி
மாங்கல்ய பாக்கியம்
சித்தி
எங்கள் வீட்டு மகாலட்சுமி
ரத்தக்கண்ணீர்
ஆதி பராசக்தி
தேவதாஸ்

சிறப்புகள்[தொகு]


கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. 'கலைமாமணி' என்னும் பட்டம் பெற்றார். தமிழும் இசையும் உள்ளவரை சாகாவரம் பெற்ற பாடல்களை எழுதிய உடுமலை நாராயணகவி தம் 82வது வயதில், 23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவை போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது[1]

மணி மண்டபம்[தொகு]

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது [2].
இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

Thursday, 8 September 2016

பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் மரணம் செப்டம்பர் 8,1978


பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் 
சாண்டோ சின்னப்பா தேவர் மரணம் 
செப்டம்பர் 8,1978





"Sandow" Marudur Marudachalamurthy Ayyavoo Chinnappa Devar (Tamil:மருதூர் மருதாச்சலமூர்த்தி அய்யாவு சின்னப்ப தேவர்) (28 June 1915 – 8 September 1978) was an eminent producer of Tamil films in the mid-1950s through the 1960s and 1970s. He is best known for his films featuring animals, and has produced numerous movies with M. G. Ramachandran as lead actor (16 movies with under his famous banner: Devar Films).














He launched all his movies under the Devar Films banner, which also produced the Rajesh Khanna's Bollywood hit 


Haathi Mere Saathi (1971) in which he achieved national fame.[1]













The title of "Sandow" was given to Chinnappa Thevar in tribute
 (to the father of the modern bodybuilding, Eugen Sandow) and because of its impressive muscle structure


















Early years[edit]

M. M. A. Chinnappa Thevar was born in Ramanathapuram locality in Coimbatore to Ayyavoo thevar and Ramakkal. He has one elder brother named Subbiah thevar and three younger brothers named Nataraja thevar, Arumugam (M.A.Thirumugam) and Mariappan. His father was an agriculturist.[2]


Chinnappa thevar studied only till 5th grade due to financial reasons. During his youth in 1930's, he joined in Pankaja mill for a salary of Rs.9 and started his earnings. He later worked in Stanes motor company for few years. He also earned through milk production, rice shop and soda production.







From a very young age he was interested in gymnasium. He started "Veera Maruthi Deha Payirchi saalai" with his friends in Ramanathapuram area. To join the film industry, he mastered various martial arts and improved his physique.

He and his brother first acted in the 1940 film Thilottama. It was a fight sequence where only their shadows were filmed. Devar earned the title ‘Sandow’ because of his physique and fighting skills.[3]

He had started playing small roles in films that were shot in Coimbatore, until he was roped in by Jupiter Pictures[4] for villain role in the 1947 movie Rajakumari with then-a-relatively unknown lead actor M. G. Ramachandran with whom he formed a deep friendship.In the film Mohini (1948) there was a scene taken in forest , where the character played by M.G.Ramachandran rushes to rescue a family travelling in a bullock-cart from being robbed by a gang and the main robbers role was played by M. M. A. Chinnappa Thevar as the main robber. [5]

Producer[edit]

Chinnappa thevar developed a deep friendship with M. G. Ramachandran. MGR too apparently recommended Devar in the films he worked. This went on till 1956 when Devar started his own production company Devar Films, and asked MGR to be the hero. MGR agreed, and they made Thaikkupin Thaaram. The film was a success, and launched Devar as a filmmaker.


He later during moved to Chennai in the early 1950s, which by then became the South Indian Cinema Hub. He launched his production company the famous "Devar Films" and used the facilities of Vijaya Vauhini Studios for indoor shooting and post production activities.





He is best known for various M. G. Ramachandran movies and introduced Saroja Devi to Tamil Movies who became a celluloid queen.



M. G. Ramachandran at a make up station with "Sandow" Chinnappa Devar (on the left of MGR).
When MGR became busy with his own production Nadodi Mannan, Devar was forced to make a few other movies.




In 1960, he started to record the music for Thaai Sollai Thattadhe and cast Ashokan as the hero. When the recording was over, MGR heard the songs and wanted the story to be narrated. 


Apparently, after this there was a promise between them that MGR will adhere to all of Devar’s conditions and, in return, Devar would make films only with him and no other ‘big’ hero. This ‘agreement’ led to Devar making 16 films with MGR, the last being Nalla Neram in 1972, the Tamil remake of Haathi Mere Saathi.

Despite working with MGR on several films, he never got a chance to work with Sivaji Ganesan. He once mentioned that he didn't have right story for Mr.Ganesan.[6]


Devar is also known for using animals as a supporting theme in his movies, and at times as the lead character. His brother M. A. Thirumugam was also a successful director was worked predominantly for "Devar Films" production company.





Together the duo gave Rajesh Khanna's biggest blockbuster hit Haathi Mere Saathi, which also
 introduced the Salim-Javed duo as script writers to Bollywood.

In Tamil film industry he was one of the most successful movie producers and his two recurring subjects were his animals and devotional movies, as he was an ardent devotee of Lord Murugan.





Later years[edit]

In his later years with MGR getting more and more into active politics, Devar started to make films in the Socio –mythological Genre.
They were films set in modern times with the Central theme that faith and belief in God will solve one’s problems.[1]

Chinnapa thevar also planned to make movies with Rajinikanth who was rising popular at that time. Rajini worked on the movie Thai Meethu Sathiyam under the Devar Films banner directed by Thevar's son in law R. Thyagarajan. While shooting for the movie, Chinnapa thevar fell ill and died couple of days later.



Personal life[edit]

Chinnapa thevar got married to Mari Muthammal at an early age of 21 by 1936. The couple has one son named Dhandayuthapani, and two daughters named Subbulakshmi and Jagadeeshwari. His elder daughter Subbulakshmi got married to R. Thyagarajan, who became a director later. 


Vellikizhamai Viratham (1974) and 
Aattukara Alamelu(1977) are a couple of famous films to his credit.

Ardent Lord Murugan devotee[edit]

Chinnapa thevar practiced Hindu religion and was an ardent devotee for Lord Muruga.Once Income Tax Ofiicials raided his house and was astonished to findso many Viboothi packets of Murugan temples, but no cash. Any profit from the movie he splits into 4 parts, one part for Murugan temples as he believed that all of his success was because of Lord Muruga. 


Because of this many Murugan temples like Pazhani temple and Marudhamalai temple were benefited. Second part he kept for himself. Third part is for his old friends who supported him during his early days who collected few thousands and sent him to Madras for film making. Fourth and final part he gave to the needy people.





Death[edit]

On 6 September 1978, during the shooting of the film Thai Meethu Sathiyam' at Ooty, Devar complained of chest pain, since he had high blood pressure[2] he was advised by the doctors in Ooty to get admitted in hospital, he was soon brought in his car from Ooty to Coimbatore. 


He was admitted in a private hospital upon arrival. After treatment he recovered partially and again got chest pain on 8 September 1978 and died by 10 a.m morning in spite of intense treatment. He was only 63 when he died.[6]

The day of his demise was a ‘Shashti’ day, very special to Lord Muruga.






Tribute and cremation[edit]

Thevar's body was brought from hospital to his Ramanathapuram, Coimbatore residence and kept for public to pay their last respect. M.G.R who had long term association with 


Thevar not only paid rich tribute to Chinnapa thevar but also came to Coimbatore for his funeral. Several eminent personalities like Jaishankar attended the funeral of Chinnapa thevar.







Partial filmography[edit]

Thaaikkuppin Thaaram (1956), (1/16) with MGR & P. Bhanumathi
Neelamalai Thirudan (1957)
Vaazha Vaitha Deivam (1958), with Gemini Ganesan & B.Saroja Devi
Yaanai Pagan (1960), with Uday Kumar & B.Saroja Devi - Director MA Thirumugam
Thaai Sollai Thattadhe (1961), (2/16) with MGR & B.Saroja Devi
Thaayai Kaatha Thanayan (1962), (3/16) with MGR & B.Saroja Devi
Kudumba Thalaivan (1962), (4/16) with MGR & B.Saroja Devi
Dharmam Thalai Kaakkum (1963), (5/16) with MGR & B.Saroja Devi
Needhikkuppin Paasam (1963), (6/16) with MGR & B.Saroja Devi
Thozhilali (1964), (7/16) with MGR & Rathna
Vettaikaran (1964), (8/16) with MGR & Savitri
Kanni Thaai (1965), (9/16) with MGR & Jayalalitha
Mugaraasi (1966), (10/16) with MGR & Jayalalitha
Thanipiravi (1966), (11/16) with MGR & Jayalalitha
Thaikku Thalaimagan (1967), (12/16) with MGR & Jayalalitha
Vivasayee (1967), (13/16) with MGR & K. R. Vijaya
Magarasi (1967), with Ravichandran & Jayalalitha
Thaer Thiruvizha (1968), (14/16) with MGR & Jayalalitha
Kadhal Vaaganam (1968), (15/16) with MGR & Jayalalitha
Haathi Mere Saathi (1971) (Hindi), with Rajesh Khanna & Tanuja
Nalla Neram (1972), (16/16) with MGR & K. R. Vijaya
Films produced after the death of Thevar
Annai Oru Aalayam (1978)
Anbukku Naan Adimai (1980)
Anjatha Nenjangal (1981)
Ram Lakshman (1981)
Ranga (1982)
Adhisayappiravigal (1982)
Jeet Hamari (1983) (Hindi)
Thai Veedu (1983)
Nalla Naal (1984)
Annai Bhoomi 3D (1985)
Anthasthu (1985)
Dharmam (1986)
Dharmathin Thalaivan (1988)

Friday, 12 August 2016

மெய்யப்ப செட்டியார் தமிழ் சினிமாவின் ஆணி வேர் 1979 ஆகஸ்ட் 12 இல் வீழ்ந்தது


மெய்யப்ப செட்டியார் தமிழ் சினிமாவின் 
ஆணி வேர் 1979 ஆகஸ்ட் 12 இல் வீழ்ந்தது 




அவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்)
(28 சூலை 1907 – 12 ஆகத்து 1979), ஓர் இந்தியத் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும், நன்கறியப்பட்ட சமூகத் தொண்டாற்றியவரும் ஆவார். இவர் வடபழனியில் உள்ள ஏவிஎம் புரொடக்சன்சு என்ற நிறுவனத்தை நிறுவியவர். தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.[2]


தென்னிந்தியத் திரைத்துறையின் மும்மூர்த்திகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் எஸ். எஸ். வாசனும் எல். வி. பிரசாத்தும்)[3]. தமிழ்த் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக மூன்று தலைமுறையினரால் வெற்றிகரமாக இயங்கிய ஒரே நிறுவனம் ஏவிஎம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இறக்கும் முன்னர் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவரது தயாரிப்பில் வெளியான திரைப்படங்களில் சில





வாழ்க்கை, 
நாம் இருவர், 
சர்வர் சுந்தரம், 
மேஜர் சந்திரகாந்த், 
சிறீ வள்ளி, 
களத்தூர் கண்ணம்மா ஆகியன.



இளம்பருவம்[தொகு]

தந்தை அவிச்சிச் செட்டியாருடன் இளம் ஏவி. மெய்யப்பன்  மெய்யப்பர் காரைக்குடியில் வாழும் நகரத்துச் செட்டியார் குடும்பத்தில், அவிச்சி செட்டியார்-இலக்குமி ஆச்சி இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

தந்தை அவிச்சிச் செட்டியாருடன் 
இளம் ஏவி. மெய்யப்பன்
அவிச்சி செட்டியார் திரைத்துறை தொடர்பான பொருட்களை (கிராமபோன் இசைத்தட்டுக்கள்) விற்பனை செய்தார்.[1] இவரது குடும்பத்தினர் வாணிபம் செய்து நற்பெயர் பெற்றவர்கள் ஆவர். தன் இளம்வயதிலேயே ஒலிப்பதிவுகளை விற்பதைவிட தயாரிப்பதில் அதிக லாபம் கிடைக்கும் என்றறிந்தார்

மெய்யப்பர்.[4][5] தன் நண்பருடன் சென்னை வந்து சரசுவதி சுடோர்சு என்ற நிறுவனத்தைத் 1932 ஆம் ஆண்டு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்று தொடங்கி ஒலிப்பதிவுகளை விற்பதோடல்லாமல் தயாரிக்கவும் செய்தார்.[1][2][4]தொடக்கக் காலத்தில் இவர்கள் விற்ற பதிவுகள் புராணக்கதைகளைக் கொண்டிருந்தன.[4]

திரைத்துறையில் தொடக்கக் காலம்[தொகு]

டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[2] 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் தயாரித்து வெளியிட்ட முதல் திரைப்படமான அல்லி அருச்சுனா என்ற திரைப்படம் வெற்றியடையவில்லை. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.

[2][4] 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.[4] நந்தக் குமார் என்ற இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.[6][7] இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார்.


லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.[4]


 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.[1] அதே ஆண்டில், பூகைலாசு என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் கன்னட மொழி நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட சபாபதி, போலி பாஞ்சாலி, என் மனைவி ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன.

பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான அரிச்சந்திரன் பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே
பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.


[1][7] பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.

ஏவியெம் புரொடக்சன்சு[தொகு]














ஏவிஎம் நிறுவன முத்திரை
ஏவிஎம் நிறுவன 
முத்திரை








நவம்பர் 14, 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) சென்னையின் சாந்தோமில் நிறுவினார். கோடம்பாக்கத்தில் இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று.

வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை காரைக்குடியில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம்
 வேதாள உலகம் ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, நாம் இருவர் என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.[4][8]


இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.[9] இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் வைஜெயந்திமாலாவின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.[10] 25



வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ஜீவிதம் என்ற பெயரில் தெலுங்கிலும்[11], பகர் என்ற பெயரில் இந்தியிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், வங்காளம், சிங்களத்திலும் திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.

1950களில்[தொகு]

1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன.
1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)பராசக்தி திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. மு. கருணாநிதியால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான சிவாஜி கணேசன் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[12]

தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார். ஏவிஎம் வெளியிட்ட அந்த நாள் என்ற திரைப்படத்திலும்  நடித்தார்.[15] இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன.


[16] இதில் இரண்டாம் உலகப் போரின்போது ஊடுருவிய யப்பானியருடன் சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார்.[17]இத்திரைப்படத்தின் கதை சொல்லப்பட்டவிதம், அகிரா குரோசவாவின் ரசோமோன் என்ற கதையினைப் போன்றே அமைந்திருந்தது. 1953 ஆம் ஆண்டில், சடகபாலா என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான சடகபாலம் என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது.

[18][19] 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் பூகைலாசு என்ற திரைப்படம் வெளியானது.[20] இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை பக்த ராவணா எனத் தமிழிலும், பக்தி மகிமா என இந்தியிலும் வெளியிட்டனர்.[21]

1960கள்[தொகு]
1961 ஆம் ஆண்டில், பாவ விமோசனம் என்ற திரைப்படத்தையும் அதன் தெலுங்குப் பதிப்பான பாப பரிகாரம் என்ற திரைப்படத்தையும் வெளியிட்டனர். இத்திரைப்படத்தில் சிவாசி கணேசன், செமினி கணேசன், தேவிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

1960 ஆம் ஆண்டில் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் கமலஃகாசன் அனாதைச் சிறுவனாக நடித்தார். அதைத் தொடர்ந்து சர்வர் சுந்தரம் (1964) திரைப்படத்தில் நாகேசும், தொடர்ந்து வெளியான மேசர் சுந்தரராசன் திரைப்படமும் வெற்றியடைந்தன. மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் நடித்த சுந்தரராசன் தன் பெயரை மேசர் சுந்தரராசன் என் மாற்றிக் கொண்டார்.





ஏவியெம் நிறுவனம் வெளியிட்ட பவித்ர பிரேமா, பெஞ்சின பிரேமா, நாடி ஆட சன்மே, சிட்டி செல்லுலு, லேத மனசுல, மூக நோமு ஆகிய தெலுங்குத் திரைப்படங்களும் வெற்றியடைந்தன. இருப்பினும் ஏவியெம்மின் பெரிய வெற்றியைத் தந்தது பக்த பிரகலாதா என்னும் திரைப்படமே. இது தமிழிலும் இந்தியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது.



வைணவர்களின் புராண நாயகரான நரசிம்மரை பற்றிய கதை இது. சித்திரப்பு நாராயண மூர்த்தி இயக்கத்தில், கிரணியகசிபுவக ரங்கா ராவும், பிரகலாதனாக குழந்தை ரோசாமணியும் நடித்தனர். இதை முன்பு கருப்பு வெள்ளைத் திரையில் எடுத்து வெளியிட்டார். திரைப்படம் தோல்வியடைந்தது. பிரகலாதனைப் பற்றி வெளியான திரைப்படங்களில் இதுவே அதிகம் அறியப்படுகிறது. சரோஜா தேவி, நாகேசு, எம். ஜி. ஆர் நடித்து வெளியான அன்பே வா என்ற திரைப்படமும் வெற்றி பெற்றது.


இந்தித் திரைப்படங்கள்[தொகு]
திரைத்துறையில் இணைந்ததிலிருந்து பல வட இந்திய இயக்குனர்களுடனும் தயாரிப்பாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். 1938 இல் வெளியான நந்தகுமார் என்னும் திரைப்படம் மராத்தி மொழியிலிருந்து மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது.

1951 ஆம் ஆண்டில் இந்தித் திரைத்துறையில் நுழைந்தார். பகார் என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இதில் வைசெயந்திமாலா, கரன் திவான், பண்டரி பாய், பிரான், ஓம் பிரகாசு, டபசும் நடித்திருந்தனர். இது மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான வாழ்க்கை என்னும் திரைப்படத்தைத் தழுவி வெளியானது. இது வைசெயந்திமாலாவின் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.



1954 ஆம் ஆண்டில், வைசெயந்தி மாலாவின் நடிப்பில் லட்கி என்னும் இந்தித் திரைப்படத்தைத் தயாரித்தார். இவ்விரண்டு திரைப்படங்களும் ஓரளவு வெற்றி பெற்றன.

1957 ஆம் ஆண்டில், அம் பஞ்சி ஏக் தால் கி என்னும் திரைப்படத்தை வெளியிட்டார். இது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதாக இருந்ததால், பிரதமர் தங்கப் பதக்கம் வழங்கிக் கவுரவித்தார்.



தமிழ்த் திரைப்படமான மிச்சியம்மா இந்தியில் பாய் பாய் என்று வெளியானது. இது மேரா நாம் அப்துல் ரகுமான் என்ற பாடலுக்காக நன்கு அறியப்படுகிறது.

 பாபி என்னும் திரைப்படத்தில் ஜக்தீப், பண்டரி பாய், பால்ராஜ் சஹ்னி, நந்தா ஆகியோரும் நடித்தனர். இந்தித் திரைப்படங்களான மிஸ் மேரி, பக்தி மகிமா, பக்த் பிரக்லாத் ஆகிய திரைப்படங்கள் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களை மொழிமாற்றி எடுக்கப்பட்டவை.


1961 ஆம் ஆண்டில் நிருபா ராய்க்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. ஏவியெம் தயாரித்த பிற இந்தித் திரைப்படங்களுள் சில: மன் மௌஜி, மெயின் சூப் ரகுங்கி, பூஜா கே பூல், மெக்ர்பான். மெய்யப்பரின் கடைசி இந்தித் திரைப்படமான ஜைசே கோ தைசா, 1973 ஆம் ஆண்டு கிருசுணா- பஞ்சு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது



ஏவி.எம். அறக்கட்டளை[தொகு]

மெய்யப்பர் திரைத்துறையில் ஈடுபட்டது மட்டுமின்றி, பல நற்பணிகளும் செய்துள்ளார். இதற்கென ஏவி.எம் அறக்கட்டளை என்னும் அமைப்பை உருவாக்கினார். அது சென்னையின் மயிலாப்பூரில் இயங்குகிறது.

கட்டிடங்கள்[தொகு]

இது முதியோர் இல்லம் கட்டவும், சமுதாய நலக்கூடங்கள் கட்டவும் நிலம் வழங்கியது. அறக்கட்டளைக்குச் சொந்தமான திருமண மண்டபமும் உள்ளது. சிவாஜி திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, நான்கில் ஒரு பங்கை சமூக நிதிக்காக வழங்குவதாக அறிவித்தனர் அறக்கட்டளைக்குழுவினர்.

கல்வி நிறுவனங்கள்[தொகு]
இக்குழும சென்னையின் பல பகுதிகளிலும் கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். விருகம்பாக்கத்தில் அவிச்சி மேல்நிலைப் பள்ளியை நிறுவி, ஏழைகளுக்கு கல்வி வழங்கினர். இக்குழுமத்தின் கல்வி நிறுவனங்கள் சென்னையின் தலைசிறந்த கல்வியகங்களாக விளங்குகின்றன.


அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு[தொகு]
1984 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோராண்டும் மெய்யப்பர் பிறந்த சூலை 28ஆம் நாள் சென்னை கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயண ஆராய்ச்சிச் சொற்பொழிவை அமரர் ஏவி.எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு தொடரை நடத்துவருகிறது.



இறுதிக்காலம்[தொகு]

மெய்யப்பரின் உடல்நலம் குன்றியதால் திரைப்படத் தயாரிப்புகள் குறைந்தன. 1970களில் குறைவான திரைப்படங்களே வெளியாயின. மேலும், இவரது குடும்பத்தினர் சமூகத் தொண்டில் ஈடுபட்டனர். இவ்வாண்டுகளில் நான்கு திரைப்படங்களை வெளியிட்டனர். பொம்ம பொருசா, தில் கா ராசா, அக்கா தமுடு, சைசே கோ தைசா ஆகிய திரைப்படங்களில் பொம்ம பொருசா, தில் கா ராசா ஆகியன ஓரளவு வெற்றியடைந்தன.


கிருசுணன் - பஞ்சு ஆகியோரின் கூட்டுத் தயாரிப்பில் அக்கா தமுடு என்ற வெற்றித் திரைப்படமும் வெளியானது. ஏவியெம் இயக்கி செயலலிதா நடித்த ஒரே தெலுங்குத் திரைப்படம் இதுவே. 1973 இல் மெய்யப்பர் தன் கடைசித் திரைப்படத்தை சிதேந்திரா என்றவரின் முன்னணி நடிப்பில் வெளியான சைசே கோ தைசா என்ற இந்தித் திரைப்படத்தை வெளியிட்டார். பின்னர் தன் சமூகத் தொண்டையும் வியாபாரங்களையும் கவனித்துக் கொண்டார். மெய்யப்பர் தன் 72 ஆவது அகவையில் ஆகத்து 12, 1979 அன்று இறந்தார். இவரது கடைசி விருப்பத்திற்கேற்ப, இவரது மகனின் பெயரில் ஏவியெம் நிறுவனம் திரைப்படங்களை வெளியிட்டது.



சிறப்புகள்[தொகு]
இவரது நாற்பது ஆண்டு காலத் திரை வரலாற்றில் 167 திரைப்படங்களைத் தயாரித்திருந்தார். இவற்றில் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார்.

தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர். தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும்.



நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார்.
பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார்.
அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும்,
மேசர் சந்திரகாந்து திரைப்படத்தில் செயலலிதாவும் நடித்திருந்தனர்.







இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமல்காசன், மேஜர் சந்திரகாந்து ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இவரது வெற்றிகளிலேயே பெரியது இவரது பெரிய தொழிற்கூடங்கள் தான். திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள், தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை நிர்வகித்து சாதனை புரிந்துள்ளார்.

ஏவியெம் நிறுவனம் மூன்று தலைமுறைகளாக வெற்றித் திரைப்படங்களை வழங்குகிறது. மெய்யப்பரின் இறப்புக்குப் பிறகு, அவரது மகன்களான பாலசுப்பிரமணியம், சரவணன் ஆகியோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். புன்னாமி நாகு (சிரஞ்சீவி நடித்த முதல் திரைப்படம்), முரட்டுக் காளை (ரசினிகாந்திற்கு வெற்றியளித்த திரைப்படம்), சம்சாரம் அது மின்சாரம், மின்சாரக் கனவு, ஜெமினி, பேரழகன் ஆகியன குறிப்பிடத் தகுந்த திரைப்படங்கள். மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவு ஆண்டில் சிவாஜி திரைப்படம் வெளியானது.





ஏறத்தாழ 77 கோடியில் உருவான இத்திரைப்படமே தமிழ்த் திரைத்துறையின் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். தற்காலத்தில் அதிக தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிப்பதிலேயே முனைப்பு காட்டுகின்றனர். சரவணின் மகன் குகன், பாலசுப்பிரமணியத்தின் மகன் குருநாத் ஆகியோரும் திரைத்துறையில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர்.



1955 இல், அம் பஞ்சி ஏக் தல் கே திரைப்படத்தில் நடித்ததற்காக பிரதமர் மெய்யப்பருக்கு தங்கப் பதக்கம் வழங்கினார். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு இவர் நினைவாக அஞ்சல்தலை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. மெய்யப்பரின் 24 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், இவர் நினைவாக குறுவட்டுகள் வெளியிட்டது. அவரது இளமைக்காலத்தில் தொடங்கி, திரைத்துறை வரலாறு முழுமையும் குறுவட்டில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 2006, யூலை 30 இல், மெய்யப்பரின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, தென்னிந்தியத் திரைத்துறை வளாகத்தில், அன்றைய முதல்வர் மு. கருணாநிதி, மெய்யப்பரின் சிலையைத் திறந்துவைத்தார்.