THE BRIEF HISTORY OF COIMBATORE ALIAS COVAI
THE BRIEF HISTORY OF COIMBATORE ALIAS COVAI 1804 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் உருவானதுதான் கோவை மாவட்டம். இந்தக் காலகட்டத்தை வைத்துதான் கோவை தினமாக கோவை பிரமுகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். மாவட்டம் உருவானபோது நீலகிரி, கோவை, ஈரோடு, தாராபுரம் வரை நீண்டிருந்தது. அதற்கு முன்பு காடு அடர்ந்து கிடந்தது. ஆதிகாலத்திலோ மலையும், மலை சார்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருளர்கள், வேடுவர்கள், வேளாளர்கள் குழுவாக, கூட்டங்களாக வசித்து வந்தனர். கோயம்புத்தூரின் பூர்வகுடிகள் இருளர்கள். இவர்களின் தலைவன் கோவன் என்பவன் இந்த அடர்ந்த காட்டுப்பகுதியை பரிபாலனம் செய்து வந்தான். அவன் கும்பிட்டு வந்த தெய்வம் கோனியம்மன். கோவனின் வழி வந்த கோசர் குலத்தவர்கள் சங்க காலத்தில் இங்கே ஆட்சி புரிந்ததால் கோவன், கோனியம்மன், கோசர் பெயராலேயே கோவன்புத்தூர், கோசர்புத்தூர், கோயம்புத்தூராகி, கோவையாகி மருவியது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று. இன்றைக்கும் இவனுக்காக, அவனுக்காக, அவளுக்காக, இவளுக்காக, இவருக்காக, அவருக்காக என்பதை அவனுக்கோசரம், இவனுக்கோசரம், இவளு...