NEI ARUVI ,NEAR COURTRALLAM
NEI ARUVI ,NEAR COURTRALLAM அருவி என்றால், என் போன்ற ‘இளசுகளுக்கு’ இப்போதெல்லாம் ‘அருவி’ ஹீரோயின் அதிதிதான் ஞாபகத்துக்கு வருகிறார். டூர் பார்ட்டிகளுக்கு என்றால் சாய்ஸே இல்லை; குற்றாலம்தான். ‘பப்பரபப்பப்பப்பேங்..’ என்று ‘அருவி’ பட தீம் மியூசிக் பேக்ரவுண்டோடு குற்றாலத்துக்குப் போனால், வெயிலுக்கு எல்லோரும் எண்ணெய்க் குளியல் போட்டு அருவியை அதகளம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘கூட்டம் என்றால் அலர்ஜி’ என்று நினைப்பவர்களுக்கு, குற்றாலத்தை விட்டால் இன்னொரு ஆப்ஷன் இருக்கிறது. அது, குண்டாறு. குண்டாறு என்பது நீர்த்தேக்கம். பெரிய டூரிஸ்ட் ஸ்பாட் இல்லை என்பதால், நிறையப் பேருக்கு குண்டாறு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால், இங்கே கூட்டமும் அவ்வளவாகக் கும்மியடிக்க வாய்ப்பில்லை. தென்காசியிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கும் குண்டாறுக்கு நிறையப் பேருக்கு வழியே தெரியவில்லை. ‘‘இங்க,அணைக்கட்டு ஒண்ணு இருக்குன்னு கேள்விப்பட்டிருக்கோம்’’ என்று சந்தேகத்தோடு தாடையைச் சொறிகிறார்கள். ‘‘செமையா இருக்கும்ணே... தண்ணி எப்பவுமே விழும்! போய் ஜில்லுனு குளிச்சிட்டு வாங்க!’’ என்கிறார்கள் விவரம் ...