Posts

Showing posts with the label revolt

CHOWRI CHOWRA HISTORICAL REVOLT 100 YEARS FEBRUARY 4,1922 - FEBRUARY 4 ,2022

Image
  CHOWRI CHOWRA  HISTORICAL REVOLT 100 YEARS  FEBRUARY 4,1922 - FEBRUARY 4 ,2022 100ஆண்டுகள் கடந்தும், சௌரி சௌராவின் தாக்கம் குறித்து வரலாற்றாசிரியர்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர் சௌரி சௌராவில் நடந்த வன்முறை காந்தியைக் காட்டிக் கொடுத்ததா அல்லது அந்தச் சம்பவத்தை மதிப்பிடுவதில் மகாத்மா தவறிழைத்தாரா என்பது அந்த நிகழ்வு நடந்து100ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்று மாணவர்களை இன்னும் ஆட்டிப்படைக்கும் கேள்வி. பிப்ரவரி 4, 1922 அன்று கோரக்பூருக்கு அருகிலுள்ள சௌரி சௌராவில் சத்தியாக்கிரகிகளின் ஊர்வலத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து 22 காவலர்கள் வெறித்தனமான கும்பலால் உயிருடன் எரிக்கப்பட்டனர். சௌரி சௌராவுக்குப் பிறகு, பிரிட்டிஷ் காவல்துறை அந்தப் பகுதியில் பயங்கர ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டது மற்றும் கோரக்பூர் அமர்வு நீதிமன்றத்தால் சம்பவங்கள் தொடர்பாக 172 சத்தியாக்கிரகிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, இறுதியாக 19 பேர் தூக்கிலிடப்பட்டனர். உள்ளூர் கிராம மக்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்களின்...

NAT TURNER SLAVE REVOLT

Image
NAT TURNER SLAVE REVOLT   நாட் டர்னர் (Nat Turner, அக்டோபர் 2, 1800-நவம்பர் 11, 1831) ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்கு முன் அடிமை கிளர்ச்சி செய்தவர் ஆவார். பல அமெரிக்க அடிமைக் கிளர்ச்சிகளில் இக்கிளர்ச்சியில் மிக அடிமை அதிபர்கள் உயிரிழந்தனர். வர்ஜீனியாவில் பிறந்த நாட் டர்னர் சிறுவராக இருக்கும் பொழுது அமெரிக்காவின் அடிமை சட்டங்களுக்கு எதிராக எழுதப்படிக்க கற்றுக்கொண்டார். பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சமயத்தை நம்பிக்கைக் கொண்ட டர்னர் மற்ற அடிமைகளுக்கு பாப்டிஸ்ட் சமயத்தை பற்றி அறவுரை கூறியுள்ளார். பெப்ரவரி  12, 1831 இவர் ஒரு சூரிய ஒளிமரப்பை பார்த்துக்கொண்டு இதை கடவுளின் அடையாளம் என்று நம்பி விட்டு அடிமை கிளர்ச்சியை திட்டமிட்டார். அதே ஆண்டில் ஆகஸ்ட் 21 கிளர்ச்சியை தொடங்கியுள்ளார். நாட் டர்னரும் அவரின் துணைவர்களும் வீடு வீடாக சென்று அடிமைகளை விடுதலை செய்து AUGUST 21 வெள்ளைகாரர்களை கொலை செய்தனர். மொத்தத்தில் 57 வெள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டனர். 48 மணி நேரத்தில் ஒரு வெள்ளைக்காரர் படை கிளர்ச்சியாளர்களை கைது செய்யப்பட்டனர். நாட் டர்னர் அக்டோபர் 30 வரை கைது செ...

CUNCOLIM REVOLT , CHURCH FATHERS MURDERED FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25

Image
. CUNCOLIM  REVOLT , CHURCH FATHERS MURDERED  FOR DEMOLITION OF HINDU TEMPLES , 1583 JULY 25 குங்கோலிம் கிளர்ச்சி (Cuncolim Revolt) என்பது இந்தியாவின் கோவாவில் 1583 சூலை 25 அன்று குடியேற்றக்கால போர்த்துக்கீச அரசு நிருவாகம் இந்துக் கோவில்களை அழித்தும், உள்ளூர் இந்துக்களை கட்டாயமாக கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளூர் இந்துக்கள் ஈடுபட்ட கிளர்ச்சியைக் குறிக்கிறது.[1] இக்கிளர்ச்சியின் போது குங்கோலிம் நகரில் கிறித்தவ குருமார்களும் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர். கத்தோலிக்க திருச்சபை இந்நிகழ்வை குங்கோலிம் தியாகம் (Cuncolim martyrdom) என அழைக்கிறது.[2] இந்நிகழ்வில் ஐந்து இயேசு சபை மதப்பரப்புனர்களும், ஒரு ஐரோப்பியரும், 14 இந்தியக் கிறித்தவர்களும் கொல்லப்பட்டனர்.[2] கிளர்ச்சியில் ஈடுபட்ட உள்ளூர்த் தலைவர்கள் பலரும் போர்த்துக்கீச அரசினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் எதுவுமின்றித் துக்கிலிடப்பட்டனர்.[3] 1510 ஆம் ஆண்டில் போர்த்துக்கீசர் கோவாவைக் கைப்பற்றிய பின்னர் அவ்வரசுக்கெதிராக உள்ளூர் மக்களால் நடத்தப்பட்ட முதலாவது எத...

REGIMENT REVOLT OR REVOLUTION IN INDIA

Image
இந்தியாவில் ராணுவ புரட்சி ஏற்படும் வாய்ப்பு உண்டா?  லெஃப்டினெண்ட் ஜெனரல் எம்.எஸ் பன்னா  ( ஓய்வு)  முன்னாள் ராணுவ அதிகாரி ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தலைநகர் ஹராரேவில் தனது வீட்டில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கு ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது இதற்கு முன் துருக்கி மற்றும் வெனிசுவேலாவில் ராணுவப் புரட்சிகள் நடைபெற்றுள்ளன. பாகிஸ்தான் விடுதலை அடைந்த சில நாட்களிலேயே தொடங்கிய ராணுவப் புரட்சி அந்நாட்டில் பலமுறை தொடர்ந்துள்ளது. ஆனால் ஆஃப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளைப் போன்றே இந்தியாவும் இதுவரை ராணுவப் புரட்சியை சந்தித்ததில்லை. இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மிகவும் வலுவாக உள்ளதால், ராணுவம் ஆட்சியை கைப்பற்றுவது சாத்தியமல்ல. இதற்கு முக்கிய காரணம் இந்திய ராணுவத்தை உருவாக்கிய ஆங்கிலேயர்கள், மேற்கத்திய நாடுகளில் இருப்பதைப் போன்றே இந்திய ராணுவத்தின் அடிப்படையை கட்டமைத்துள்ளனர். மேற்கத்திய ஜனநாயக நாடுகளில் ராணுவப் புரட்சி எதுவும் ஏற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்திய ராணுவத்தில் 1857ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்...

TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000

Image
TIANANMAN SQUARE STUDENT`S REVOLT JUNE 4,1989 -DIED 10,454 WOUNDED 40,000 இந்தியாவில் இன்று ஜூன் 4 ஆனால் நாசகார சீனாவில் இன்று மே 35 சீனாவில்  தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற  மாணவர் போராட்டம் பலி - 10,454; காயம் - 40,000 உலக மனித உரிமைகள் தினம் - டிசம்பர் 10. மனித உரிமைகள் நினைவு தினம்....? மே 35. இது என்ன.... புது தேதியாக இருக்கிறது....? ஒரு நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய அரசாங்கம், தனது நாட்டு எல்லைக்குள், இணைய தளத்தில் ஜூன் 4 என்கிற தேதியையே தடை செய்து வைத்து இருக்கிறது. அதற்காக.....? சுதந்திரப் பிரியர்கள் சும்மா இருக்க முடியுமா.....? மே மாத 31 நாட்களுடன் ஜூன் மாத 4 நாட்களை சேர்த்து, மே 35 ஆக்கி விட்டார்கள். இந்த ஆண்டு, மே 35-க்கும் தடை வந்து, காணாமல் போய் விட்டது என்கிறார்கள். ஆமாம்.... ஜூன் 4க்கு தடை விதித்த நாடு... மனித உரிமைகளை, மனித மாண்புகளை அடியோடு அழித்த நாடு சீனா! மா சே துங்கின் சிவப்புப் படை 1960 - 70-களில் சீனாவின் அசைக்க முடியாத தலைவராக மா சே துங் இருந்தார். ‘கலாச்சாரப் புரட்சி’ என்று புதிதாக ஒரு கோட்பாட்டை 1966-ல் அறிமுகம் செய்தா...