அந்தனி ஜீவாவின் நெஞ்சம் மறப்பதில்லை
அந்தனி ஜீவாவின் நெஞ்சம் மறப்பதில்லை நேர்காணல்- மணி ஸ்ரீகாந்தன் இவரைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் இவர் சுமார் நாற்பது ஆண்டுகளாக எழுத்துலகில் நீடித்து நிற்பவர். அறுபது வயதைக் கடந்த நிலையிலும் இளைஞரைப் போல சுறு சுறுப்பாக இயங்கி வருபவர். மலையக இலக்கியத்தையும் அம் மக்களின் வரலாற்றுப் பின்னணியையும் வெளிக் கொணர்ந்த மீட்பர்களில் அந்தனி ஜீவா முக்கியமானவர். நாடக உலகில் பேசப்படும் நபராக விளங்கும் ஜீவா, தமிழ் - சிங்கள கலைஞர்களின் பாலமாக விளங்கி வருபவர். தமிழ் இலக்கிய, இதழ் வெளியீட்டுத்துறையில் தொடர்ச்சியாக இயங்கி வரும் ஜீவா தற்போது கொழுந்து சஞ்சிகையை அழகிய வடிவமைப்பில் வெளியிட்டு வருகிறார். ஈழத் தமிழ் இலக்கிய பரப்பில் அந்தனி ஜீவா தவிர்க்க முடியாத பிரமுகர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல. "எனது அப்பா பர்மாவில் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய போது ஒரு தடவை கொழும்பு வந்திருக்கிறார். வந்த இடத்தில் ஒரு மலையக பெண்ணை மணந்திருக்கிறார். அதன் பிறகு அவர்களுக்கு இரண்டாவது பிள்ளையாக நான் பிறந்திருக்கிறேன்... எனது அம்மாவின் பெயர் லெச்சுமி அம்மாள். அவர் ஒரு இந்து....