Showing posts with label OPERATION. Show all posts
Showing posts with label OPERATION. Show all posts

Sunday, 22 August 2021

OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR WELFARE OF CHILD IN OPERATION

 

OLYMPIC MEDAL SOLD IN POLAND FOR 

WELFARE OF CHILD IN OPERATION



குழந்தை ஒன்றின் சத்திர சிகிச்சைக்காக ஒலிம்பிக் இல் கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.
போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.
எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.
இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில்,ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.

Monday, 5 April 2021

OPERATION THUNDERBOLT

 


OPERATION THUNDERBOLT

ஆபரேசன் தண்டர் போல்டு.!
இஸ்ரேல் எந்த வளமும் இல்லாத பாலைவன நாடு. சுமார் 800 சதுர மைல் உள்ள ஒரு சிறிய தேசம். யூதர்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட நாடு. பின்னாட்களில் கிருத்தவர்களாலும், இஸ்லாமியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு யூதர்கள் இஸ்ரேலிலிருந்து விரட்டப்பட்டனர். யூதர்கள் எப்படி தங்கள் தாய் நாட்டை மீட்டெடுத்தனர் என்பது நீண்ட நெடிய வரலாறு.
இஸ்ரேலின் முக்கிய நகரமான ஜெருசலேம் யூதர்கள், கிருத்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் புனித் ஸ்தலம்.
இன்றைய இஸ்ரேலைச் சுற்றிலும் இஸ்லாமிய தேசங்கள்தான் இருக்கின்றன. எகிப்து, பாலஸ்தீனம், ஜோர்டான், சிரியா, லெபனான், அரேபியா, ஈராக்…..
கடந்த காலங்களில் மேற்சொன்ன இஸ்லாமிய தேசங்கள் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இஸ்ரேலை அழிக்க பல முறை முயன்றுவிட்டன. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்விதான். 1967 ஆம் ஆண்டு இஸ்லாமிய சகோதரத்துவம் என்ற பெயரில் இஸ்லாமிய தேசங்கள் அனைத்தும் இஸ்ரேலை ரவுண்டுகட்டினார்கள். விளைவு அவர்களுக்குத்தான் சேதாரம். இஸ்ரேலிடம் இந்த நாடுகள் தங்கள் நாட்டின் சில பகுதிகளை இழந்தன.
நேர்முகமாக இஸ்ரேலை தோற்கடிக்க முடியாது என்று நினைத்த பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள் இஸ்ரேலின் மீது மறைமுக தாக்குதல்களில் ஈடுபட்டன. குண்டு வைப்பது, ராக்கெட்டை வைத்து தாக்குவது என அனைத்தையும் கையாண்டன. இஸ்ரேல் எதற்கும் சளைக்கவில்லை. தீவிரவாத தாக்குதல்களை திறம்பட எதிர்கொண்டது. இன்று உலகிலேயே சிறந்த உளவுப்படை எதுவென்றால் அது இஸ்ரேல் நாட்டின் மோசாட்தான்.
உள்நாட்டில் ஒன்றும் செய்யமுடியாத காரணத்தால் வெளி நாடுகளில் இருக்கும் யூதர்களின் மீது தாக்குதல் நடத்தியது பாலஸ்தீன தீவிரவாத அமைப்புகள். 1972 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் முனிச் நகரத்தில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் கலந்துகொள்ளச் சென்ற 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை Black September என்ற பாலஸ்தீனிய தீவிராவாத இயக்கதைச் சேர்ந்தவர்கள் பணயமாக பிடித்து பின்னர் கொலை செய்தனர்.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேலிய உளவு நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற 11 பாலஸ்தீன தீவிரவாதிகளை உலகம் முழுவதும் சுமார் 20 ஆண்டுகள் தேடி வேட்டையாடிக் கொன்றது. பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தினால், நாங்கள் கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று சொல்லும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை இங்கு ஒப்பிடுக. முனிச் சம்பவத்தையும் அதன் தொடர்ச்சியாக தீவிரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் வேட்டையாடுவதையும் மையமாக வைத்து ஸ்டீபன் ஸ்பீல்பர்க் ”முனிச்” என்ற பெயரில் திரைப்படம் எடுத்து 2005 ஆம் ஆண்டுவெளியிட்டார். சிடி கிடைத்தால் பாருங்கள், அருமையான படம்.
இதையடுத்து 1976 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 27 ஆம் தேதி, இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ்விலிருந்து பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் ஏதன்ஸ் நகரில் தரை இறங்கிய போது, பாப்புலர் ஃப்ரண்ட் என்ற பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு தீவிரவாத அமைப்பும் சேர்ந்து விமானத்தைக் கடத்தினார்கள்.
கடத்தப்பட்ட விமானம் உகாண்டா நாட்டில் உள்ள எண்டபி விமானத் தளத்திற்கு கடத்திச் செல்லப்பட்டது. அப்பொழுது உகாண்டாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர் இடி அமின். ஆம்! நரமாமிசம் சாப்பிடும் அதே மாமனிதர் தான். இடி அமின் பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்துவந்தார்.
விமானத்தில் 304 பயணிகள் மற்றும் 12 சிப்பந்திகள் உட்பட 316 பயணம் செய்தனர். தீவிரவாதிகள் இஸ்ரேலிய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டனர். எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், ஜூலை ஒன்றாம் தேதியன்று பணயக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.
தீவிரவாதிகளின் கோரிக்கை - இஸ்ரேலில் உள்ள 40 தீவிரவாதிகளையும், கென்யா நாட்டில் உள்ள 13 தீவிரவாதிகளையும் விடுதலை செய்யவேண்டும். இடி அமினும் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேசினார். பார்த்துக்கோங்கப்பா, இதில் நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை; தீவிரவாதிகள் பொல்லாதவர்களாகத் தெரிகிறார்கள்; அவர்கள் கேட்பதைக் கொடுத்துவிட்டு பயணிகளை மீட்டுக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்.
ஜூலை ஒன்றாம் தேதிக்கு இன்னும் மூன்று நாட்கள் இருந்தன. இஸ்ரேலிலிருந்து எண்டபி சுமார் 4000 கி.மீ தொலைவில் இருந்தது. இஸ்ரேல், இந்திய அரசாங்கம் போல் கையைப் பிசைந்து கொண்டு நிற்கவில்லை. காரியத்தில் இறங்கியது இஸ்ரேல் அரசாங்கம். பாக்கிஸ்தானிய தீவிரவாதிகளால் இந்திய விமானம் காந்தகாருக்கு கடத்தப்பட்ட போது, இந்திய அரசாங்கம் மூன்று பயங்கர இஸ்லாமியத் தீவிரவாதிகளை விடுதலை செய்து பணயக் கைதிகளை மீட்டது. ஆனால் இஸ்ரேல் அரசாங்கம் என்ன செய்தது என்று பார்ப்போம்.
இதற்கிடையில் எண்டபி விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுடன் கூடுதலாக சில தீவிராவதிகளும் சேர்ந்துகொண்டனர். இடி அமின் அரசாங்கம், தீவிரவாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு மற்றும் இன்ன பிற உதவிகளை புரிந்தது. கடத்தல்காரர்கள் பயணிகளை இரண்டு பிரிவுகளாகப் பிரித்தனர். யூதர்கள், யூதர்கள் அல்லாதோர். 106 யூதப் பயணிகளை மட்டும் தனியாக ஒரு இடத்தில் தங்க வைத்தனர். ஏனையப் பயணிகளை விடுதலை செய்துவிட்டனர். ஏர் பிரான்ஸ் விமான ஓட்டுனர்கள் மற்றும் சிப்பந்திகளை கடத்தல்காரர்கள் விடுவித்த பின்பும் அவர்கள் போக மறுத்துவிட்டனர்.
இஸ்ரேல் அரசாங்கம் கடத்தல்காரர்களிடம் தங்களுக்கு விடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்கும்படி கேட்டுக்கொண்டது. அதற்கிணங்கிய கடத்தல்காரர்கள், காலக்கெடுவை ஜூலை 4 ஆம் தேதி வரை நீட்டித்தனர்.
மறுபக்கம் இஸ்ரேலில் ஆபரேஷன் தண்டர்போல்ட்க்கு (Operation Thunderbolt) ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ஜுலை 3 ஆம் தேதி இரவு, நான்கு கனரக விமானங்கள் (ஹெர்குளிஸ் சி 130) தயாராகின. அவைகளுக்கு ஹிப்போ என்ற பெயரும் உண்டு. ஹிப்போபொட்டாமஸ் (நீர்யானை) போன்று உருவில் பெரியதாக இருக்கக்கூடிய விமானங்கள். 100 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் ஹிப்போவில் ஏறிக்கொண்டனர். இராணுவத் தளவாடங்களும், ஆயுதங்களும் ஏற்றப்பட்டன. மருத்தவர்களும், செவிலியர்களும் ஏற்றப்பட்டனர். ஹிப்போக்கள் தன்னுடைய எண்டபிக்கான 4000 கி.மீ பயணத்தை தொடங்கின. கடல் மார்க்கமாகவே ஹிப்போ விமானங்கள் ஓட்டிச் செல்லப்பட்டன. ஆப்பிரிக்கா கண்டத்தில் மற்ற நாடுகளின் அருகாமையில் பறக்கும்போது, அவர்களின் ரேடார்களின் பார்வையில் ஹிப்போக்கள் பட்டுவிட்டால் விபரீதம்தான். அதனால் ரேடார்களின் பார்வையில் படாமால் இருப்பதற்காக 100 அடி உயரத்திற்குக் குறைவான உயரத்தில்தான் ஹிப்போக்கள் பறந்தன.
இந்த நீண்ட பயணத்தில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அதாவது ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு தேவைப்படும். போகும் வழியில் ஹிப்போ விமானங்களுக்கு எரிவாயு நிரப்பப்படவேண்டும். இல்லையென்றால் இந்த மீட்பு முயற்சி தோல்வியில் முடியும். இஸ்ரேல் அரசாங்கம், கென்யா அரசாங்கத்தின் உதவியை நாடியது. கென்யா அரசாங்கம் ஹிப்போக்களுக்கு எரிவாயு நிரப்ப ஒப்புக்கொண்டது (இதற்காக கென்யா அரசாங்கம் பின்னாளில் பல பின்விளைவுகளை சந்தித்தது என்று நான் சொல்லவேண்டியதில்லை).
திட்டமிட்டபடி எண்டபிக்கு போகும் வழியில் ஹிப்போக்கள் கென்யாவில் எரிவாயுவை நிரப்பிக்கொண்டன. இரவு சுமார் 11 மணிக்கு, நான்கு ஹிப்போக்களும் எண்டபி விமான நிலையத்தில் சத்தமில்லாமல் தரை இறங்கின. விமானத்திலிருந்து இராணுவ பீரங்கிகள் மற்றும் ஜீப்புகளுடன் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் இறங்கினர். சந்தடி சத்தமில்லாமல் பணயக்கைதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். நாங்கள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள், உங்களைக் காப்பற்ற வந்திருக்கிறோம். அனைவரும் தரையில் படுங்கள் என்று ஹிப்ரு மொழியில் ஒலிப் பெருக்கியில் அறிவிப்பு கொடுத்தனர். பணயக் கைதிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தரையில் படுத்தனர். இஸ்ரேலிய வீரர்கள் தங்களுடைய கட்டளையை ஏற்க மறுத்த அந்த ஒரு பணயக் கைதியை தீவிரவாதி என்று நினைத்து சுட்டுவிட்டனர்.
ஏனைய பணயக் கைதிகளை பத்திரமாக இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஹிப்போவுக்கு கூட்டிச் செல்லும் வழியில், தீவிரவாதிகள் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களுடன் உகாண்டா இராணுவமும் சேர்ந்துகொண்டது. மீட்புக் குழுவினருக்கும், தீவிரவாதிகளுக்கும்/உகாண்டா இராணுவ வீரர்களுக்கும் நடந்த இந்தச் சண்டையில் மேலும் இரண்டு பணயக் கைதிகளும் ஒரு இஸ்ரேலிய தளபதியான யோனாதன் நேத்தன்யாஹூம் கொல்லப்பட்டனர். இவர் வேறுயாறும் அல்ல பின்னாளில் இஸ்ரேலின் பிரதம மந்திரியாகப் போகும் பெஞ்சமின் நேத்தன்யாஹூவின் தமையனார். கடத்தல்காரர்கள் தரப்பில் அனைத்து கடத்தல்காரர்களும் உயிரிழந்தனர். உகாண்டா இராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்களும் நடந்த சண்டையில் கொல்லப்பட்டனர். மீட்பு முயற்சி சுமார் 90 நிமிடங்கள் நடைபெற்றது.
ஏனைய பணயக் கைதிகளும், இஸ்ரேலிய இராணுவ வீரர்களும் பத்திரமாக இஸ்ரேல் திரும்பினர். ஆபரேஷன் தண்டர்போல்ட் வெற்றிகரமாக முடிந்தது.
முந்தைய நாள் இரவு நடந்த விவகாரம் தெரியாமல் , மறு நாள் காலையில் இடி அமின் தன் தொலைபேசியில் இஸ்ரேலிய அரசைத் தொடர்பு கொண்டார். என்ன முடிவெடுத்திருக்கிறீர்கள். இன்றோடு உங்களுக்கு கொடுத்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. பணயக் கைதிகள் ஒவ்வொருவராக கொல்லப்பட போகிறார்கள். பின்னால் வருத்தப்படாதீர்கள் என்று தெரிவித்தார். பதிலுக்கு இஸ்ரேல் அரசாங்கம், முடிந்தால் தீவிரவாதிகள் பணயக் கைதிகளை தாராளமாக கொன்று கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தனர்.
ஒன்றும் புரியாத இடி அமின், பின்னர் நடந்த விவரங்களைக் கேட்டறிந்து ஆடிப்போய் விட்டார். இடி அமின் மட்டுமல்ல, வெற்றிகரமான இந்த மீட்பு முயற்சியைக் கேட்டறிந்த உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருமே மூக்கில் விரலை வைத்தனர்.
தீவிரவாதிகளுக்கு அவர்களுடைய பாஷையில்தான் பேசவேண்டும். இஸ்ரேல் என்ற சிறிய நாடுசதா பிரச்சனைகளுக்கு நடுவில் இருக்கிறது. ஒரு யுத்த பூமி. அதைச் சுற்றிலும் முஸ்லீம் நாடுகள்தான். 24 X 7 அதற்கு பிரச்சனைதான். ஆனால் அந்நாட்டுக்கு வரும் பிரச்சனைகளை, சவால்களை வெற்றிகரமாக கையாளுகிறது. காரணம் இஸ்ரேல் தன்னுடைய எதிரிகளையும், அவர்களின் செய்லபாடுகளையும் நன்கு தெரிந்துவைத்திருக்கிறது. உடனுக்குடன் பதிலடி கொடுக்கிறது. இந்தியா போன்று சிறுபான்மை என்ற பெயரில் வாக்கு வங்கிக்காக மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்த்து விடுவதில்லை. ஓட்டுக்காக சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் சன்மானங்களும், சிறுபான்மையினர் செய்யும் அட்டூழியங்களும் ஒரு நாள் பெரும்பான்மை மக்களின் தலையில் இடியாக விழப்போகிறது என்பது திண்ணம்.
ஆபரேஷன் தண்டர்போல்ட் எவ்வளவு சுவாரஸ்யமோ, அவ்வளவு சுவாரஸ்யம் அதற்கு பின் நடந்த சம்பவங்கள். உகாண்டா அரசாங்கம், இஸ்ரேல் அரசாங்கத்தின் மேல் தன்னுடைய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டதாக ஐ. ந. பாதுகாப்பு சபையில் புகார் கொடுத்தது. இந்தப் புகாருக்கு, இஸ்ரேல் பிரமாதமான பதிலளித்தத
மேற்சொன்ன விஷயங்கள் யாவும் 90 Minutes at Entebee என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்தச் சம்பவங்களை வைத்து ஹாலிவுட்டில் பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது The Delta Force. இவைகளைப் படித்துப்பாருங்கள்.!#நன்றி Sp.chockalingam
Durai Singh, Mano Kumar and 8 others
2 Shares
Share

Monday, 20 April 2020

OPERATION ALCOHOL ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன்




ஆப்பரேசன் அல்ககோல் – யதார்த்தன்



வவுனியா, நெழுக்குளம்

வன்னியை விட்டு வெளியேறியவுடன் நாங்கள் தங்கவைக்கப்பட்ட முதலாவது நலன்புரி முகாம். நெழுக்குளம் முகாமிற்கு வந்து 4 மாசத்திற்கு மேலாகி விட்டது. இன்னும் மூன்று மாதத்தில் எங்களுக்கு ஓ.எல் பரீட்சை. முகாமிற்கு வெளியில் எங்கட வயது இருக்கும் பிள்ளைகள் பள்ளிகூடம் ஸ்பெசல் கிளாஸ் டியூசன் என கற்று கொண்டிருந்தார்கள். நாங்கள் தண்ணீர் எடுபதற்கும் சாப்பாட்டிற்கும் லைனில் நிற்பது போக மீதி நேரங்களில் கரம் போட் விளையாடுவது. இரவில் பெரிய திரையில் போடப்படும் ஏதோ ஒரு தமிழ் சினிமாவை பார்த்த படி நாட்களை நகர்த்தி கொண்டு இருந்தோம். அப்போது முகாமில் இருக்கும் ஆசிரியர்கள் சிலர் சும்மா சம்பளம் எடுக்கிறம் என்று மனம் உறுத்த ராணுவத்திடம் அனுமதி வாங்கி முகாமில் இருக்கும் ஓ எல் மாணவர்களுக்கு பாடம் எடுத்தனர்.

ஒரு பெரிய வேப்ப மரத்தின் கீழ் தறப்பாள்களை விரித்து கிட்டத்தட்ட 40 மாணவர்களுக்கு மேல் படிக்கத் தொடங்கினோம். எனக்கு புது நண்பர்கள் அறிமுகமானார்கள். அருண், லூக்கு, டிலக்சன், ஜூலியட், பவதாரணி இப்படியாக. தர்ஷிகாவும் அறிமுகமானாள். அவள் எனக்கு கணிதம் சொல்லிதருவாள். அவள் எனக்கு நல்ல தோழியானாள். அவள் மேல் எனக்கு பிரியம் வர அவளின் பெயரிலிந்து ஏராளமான இத்யாதி காரணாங்கள் இருந்தன.

அன்று அவளிற்கொரு பரிசை எடுத்து வந்திருந்தேன்.

அன்று காலையில் நான் அதனை அவளிற்கு பரிசளித்தபோது அதனை வாங்கி திருப்பிதிருப்பி பார்த்தாள். லேசாய் மஞ்சள் படிந்து கிடந்த அந்த யானைத் தந்த லொக்கட்டை சீவிச்சீவி நான் மிக வெண்மையாக அடித்திருந்தேன். சமர வீர என்ற அந்த வயதான பொலிஸ்காரரிடம் நான் அந்த இரண்டு விரலிடை கூட இல்லாத யானைத்தந்தத்தை வாங்குவதற்கு எத்துனை பிரயத்தனங்களை மேற்கொண்டேன். அது எனக்கு கொஞ்சம் மரியாதைத் குறைவான ஒரு செயலாகவே பட்டது. எனினும் அந்த மனப்பாங்கு அவள் அதனை கண்டவுடன் அவள் கண்கள் உற்பத்தி செய்ய, மகிழ்ச்சிக்குள் மூழ்கி காணாமல் போயிருந்தது.

THARSHIKA என்று பொறிக்கபட்ட அந்த யானைத் தந்தத்தினை லேசாய் அவள் விரல் ரேகைகள் தடவிக்கொடுத்தன.

“எங்காலை உனக்கு தந்தம் ? ”

“யானை ஒண்டு வேட்டையாடின்னான் ”

“எங்க இந்த முகாமுக்கையோ ?”

“ஓம்”

“நம்பிட்டன் ”

“தங்ஸ்”

“சொல்லடா.. எங்காலை ?”

“சமர வீர ட்ர வாங்கின்னான் ”

“அந்த மனுசன என்ன சொல்லி மயக்கின்னி ? அதுவும் உன்ர அரை குறை இங்கிலீசால ?”

“ஹிம்”

”தந்தம் வச்சிருந்தா குற்றமெல்லோ ? ”

“ ஒமடி இந்த ஒண்டரை இஞ்சி தந்தத்துக்கு என்னை தூக்கில போட போறாங்கள் ”

“வெவ்வ்வேவ்வே ”

கழுத்தில் எபோதும் இருக்கும் முருகன் டாலர் தொங்கிய கறுப்பு நூலில் என் தந்த லொக்கட்டை கோர்த்து கழுத்தில் போட்டுக்கொண்டாள்.

சரி வா கிளாசுக்கு போவம் என்றேன். டெண்டுக்கு போய் கொப்பி எடுக்கோணும். நடந்தாள். தொடர்ந்தேன். தர்ஷியின் கூடாரம் முகாமின் பின் பக்கம் இருந்த நீர் எடுக்கும் குழாய் கிணற்றின் பக்கம் இருந்தது. என்னுடைய கூடாரம் முகாமின் முன் பக்கம் உள்ள குழாய் கிணற்றடியில் இருந்தது.

அவளுடைய கூடாரம் வர உள்ளே நுழைந்தாள். கூடாரத்தின் வெளியே உள்ள மர நிழலில் அவள் அம்மா தர்ஷியின் சகோதரியொருத்தியின் தலையில் வகிடு பிடித்து தலை வாரிக்கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும்

”தம்பி காட் வாங்கி வச்சிருக்கிறன்” என்றாள் இரகசியமான குரலில்.

“சரி அன்ரி ”

“எத்தினை மணிக்கு கதைக்கலாம் ?”

“படம் போட்ட பிறகு வாங்கோ அன்ரி ”

“சரி தர்சின்ர அண்ணா காசு போட்டவனோ எண்டு கேக்கோணும் ”

“ஓம் அன்ரி தர்ஷி சொன்னது ”

“கவனமா இருக்கோணும். நேற்று கிச்சின் பல சார்ச் போட்ட எண்டு யாற்றையோ போன் பிடிபட்டு போச்சு ”

“ஓம் அன்ரி தெரியும் ”

நாங்கள் முகாமில் மொபைல் போன் வைத்திருக்க தடை. எனினும் ஒரு சிலர் இரகசியமாக வைத்திருந்தனர். நானும் ஒரு NOKIA 1100 வைத்திருந்தேன். முகாமில் ஒவ்வொரு நாளும் இரவில் மல்டிமீடியா புரோஜெக்டர் வைத்து எதோ ஒரு தமிழ் படம் போட்டனர். இரவில் பெரும்பாலான ரெண்ட்களில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். அந்த இடைவெளிக்குள் நாங்கள் டெண்ட்களில் போன் கதைத்து கொள்வோம், பெரும்பாலும் வெளிநாட்டில் இருப்பவர்களுடன் பொருளாதார தேவையின் பொருட்டு பேச வேண்டியிருந்தது.

உள்ளே போன தர்ஷி வெளியே வந்தாள். வகுப்பு நடக்கும் வேப்ப மரத்தடி நோக்கி நடந்தோம்,

”அம்மா என்னவாம் ?”

“போன் கதைக்கோணுமாம் ”

”ஓமடா இரவுக்கு ஒருக்கா கதைக்கோணும் அண்ணாவோட“

“சரி டி”

தர்ஷியின்கூடாரத்திற்கு அடுத்ததாக இருந்த கூடாரத்தை கடக்கும் போது ஏதோ ஒரு வித்தியாசமான வாடை என் நாசியை தாக்கியது.

“என்னடி மணக்குது ? ”

“என்ன மணம் ? ”

“உனக்கு மணக்கேலையே ஏதோ அழுகின மணம் ”

“முகாம் எண்டா அப்பிடிதான் பேசாம வாடா ” அதட்டினாள்.

வகுப்பு முடிந்ததும் தர்ஷிகா தன் தோழிகளை அழைத்துக்கொண்டு எங்கோ போய்விட்டாள். அருண், லூக் டிலக்சன் இருவரும் என்னிடம் வந்து

“டேய் இரவுக்கு ஒரு மிசன் இருக்கு ”

(பாணிற்கு வெங்காயம் முட்டை எல்லாம் சமயலறையில் இருந்து சுட்டு வருதல், போனிற்கு துப்பரவுக்கு வரும் தொழிலார்களை பிடித்து காட் வாங்குதல், காய்ச்சல் தலையிடி எண்டு பொய் சொல்லி கொஸ்பிட்டலுக்கு பதிஞ்சு அம்புலன்ஸில் இராணுவ பாதுகாப்புடன் போய் வவுனியா ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருக்கிற சீடி கடையில் இங்கிலிஸ் பட டீவிடி வாங்கி வந்து சமரவீர வின் லப்டொப்பில் படம் பார்த்தல் முதலான சாகசங்களை நாங்கள் மிஷன் என்று அழைத்தோம் ஒவ்வொரு மிஷனுக்கும் ஒவ்வொரு பெயர் வேறு வைக்கப்படும்)

”என்ன மிசன் மச்சான் ? ’

“ஆப்பரேசன் அல்க கோல் ” என்றான் லூக்.

“அல்ககோலா ?”

“சாராயம் டா ”

“என்ன ? வாங்கி குடிக்க போறமா ? ”

“இல்லயடா பிடிக்க போறம்” அருண்.

“தெளிவா சொல்லடா”

“முகாமுக்க ஒரு இடத்த சாராயம் காய்ச்சி வில்படுது ”

“போடா முகாமுக்க என்னெண்டு காய்ச்சுறது ?”

“காய்ச்சுறாங்களாடா ..”

“உனகென்னண்டு தெரியும் ?”

”லூக்க்கின்ர அப்பா நேற்று குடிச்சிட்டு வந்தவராம்”

“டேய் ஆமி ஆரிட்டயும் வாங்கி குடிச்சிருப்பார் ”

“இல்லையடா இண்டைக்கு இரவு அவரை பின் தொடர்றம் கண்டு பிடிக்கிறம்.”

“சரி.”

இரவு படம் போடும் வேளையில் தர்ஷியும் அவள் தாயும் எங்கள் கூடாரத்திற்கு வந்தனர். அவர்களுக்கு நம்பரை டயல் செய்து கொடுத்துவிட்டு. ஆப்ரேசன் அல்க கோலிற்கு புறப்பட்டேன்.

தர்ஷி: “எங்க போற ?”

“அருணாக்களிட்ட ”

“படம் பாக்கவோ?”

“இல்லை வந்து சொல்லுறன் ’

“ம்ம்”

கதைச்சிட்டு போனை அம்மாட்ட குடுத்திட்டு போ.என்றேன் அவள் தலையாட்டினாள். நாங்கள் திட்டமிட்ட படி லூக்கின் அப்பாவை பின் தொடர்ந்தோம்.

அவர் நேராக முகாமின் பின்பக்கம் இருந்த தண்ணீர் குழாய் இருந்த பக்கமாய் போனார். தரிஷியின் கூடாரத்தை கடந்து அடுத்ததாக இருந்த கூடாரத்தினுள் நுழைந்தார். வெளியில் வரும்போது ஒரு சோடா போத்தல் நிறைய இளம்மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்றுடன் வெளிப்பட்டார் நேராக அந்த விளக்கு வெளிச்ச மற்ற ஒரு இடத்திற்கு சென்று அதனை குடித்து தீர்த்தார், எங்களுக்கு பரம திருப்தி நாங்கள் தேடிவந்தது தெரிந்து விட்டது. லூக் தந்தையை கொஞ்சம் பரிச்சமான கெட்ட வார்த்தையால் திட்டினான். மூவரும் காலையில் பொலிசிடம் சொல்லி விடுவதென்ற முடிவுடன் கலைந்து சென்றோம். ஒப்ரேசன் அல்ககோல் ஏறக்குறைய முடிந்துவிட்டது.

அடுத்தநாள் காலையில் முகாமே கதி கலங்கியது. அந்த கூடாரத்தை சுற்றிவளைத்த பொலிசார் இரண்டு இளைஞர்களை பிடித்து அடித்து அவர்களின் தலையில் சாராய கான்களை வைத்து ஊர்வலமாக அழைத்து சென்று பொலீஸ் வானில் ஏற்றி கொண்டு சென்றனர். நாங்கள் மூவரும் சமூக களையெடுப்பை நிகழ்த்தி விட்ட வெற்றிகளிப்பில் படிக்கும் இடத்திற்கு வந்தோம். அங்கே தரிஷிகா அவள் தோழிகளுடன் நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.

“எப்படி எங்கட மிசன் ?” என்றேன் அவளிடம்.

என்ன என்று கேட்டாள்

சொன்னென்.

சட்டென்று அவள் கை எழுந்து என்கன்னத்தில் அறைந்தது.

நிலை குலைந்து விட்டேன். ஒரு கணம், குலைந்து நிமிர்ந்தேன் கோபம் பீறிட்டு வர ஏன் இப்ப அடிச்சனி என்று அவளை பிடித்து உலுக்கி பிடித்து தள்ளிவிட்டேன். அவள் பக்கத்தில் இருந்த வேப்பமரத்தில் கை உரச விழுந்தாள். அழுதாள்.

“டேய் இப்ப ஏன் அவளை தள்ளி விட்டனி ?” பவதாரணி மல்லுக்கு வந்தாள்.

”சும்மா ஏன் இப்ப அடிச்சவள் ?”

“நீ செய்த வேலைக்கு பின்ன என்ன செய்யிறது ? ” விம்மிய படி சொன்னாள்.

அவள் கை, கால் சிராய்ப்பு சிவப்பாய் கசிவது தெரிந்தது.

“நான் என்ன செய்தனான் ? சாரயம் காய்சினவங்களை பிடிச்சு குடுத்தது பிழையோ ?”

“அந்த பெடியளின்ர அக்கா மண்ணெண்ணை குடிச்சிடா தெரியுமோ ?” பவதாரணி சீறினாள்.

அதுக்கு நான் என்ன செய்யிறது அது காய்ச்ச முதல் யோசிச்சு இருக்கோணும்.

”டேய் அவையள பற்றி உனக்கு என்னடா தெரியும் ?” தர்ஷி.

”என்ன? ஏன் இப்ப துள்ளுற ?

”உனக்கென்ன காசு இருக்கு. அப்பா இருக்கு. எங்களுக்கு அண்ணா அனுப்புறான்” ஆனா அதுகளுக்கு ஒருத்தரும் இல்லை. என்னெண்டு அதுகள் சீவிக்கும் ? “

அங்க சாராயம் காய்ச்சி விக்கிறது எனக்கு எப்பவோ தெரியும். அந்த அக்கா அடிக்கடி அழுவா என்னட்ட. தங்கட தலை விதிய சொல்லி. அவாட அண்ணை மார் பாவம் எண்டு. உனக்கு அதெல்லாம் தெரியாது. பாவம் அந்த அக்கா. அவமானத்தில மண்ணெண்ணை எடுத்து குடிச்சிட்டா.

நான் எதுவும் பேசவில்லை .

இன்னும் கொஞ்சம் என்னை திட்டினாள். எனக்கு எதுவும் கேட்கவில்லை.

“இனி என்னோட கதைக்காத ” என்றவள் வேகமாய் நடந்து போய் விட்டாள்.

“சரிதான் போடி ”

எனக்கு கோபம் ஆறவில்லை. எனக்கு அந்த அக்கா மண்ணெண்ணை குடித்ததை பற்றியோ இல்லை சாராயம் காய்ச்சியவர்கள் பற்றியோ அவர்களை பற்றியோ யோசிக்கவே தோன்றவில்லை. எனக்கு அவ்வளவு பேரின் முன்னால் ஒரு பெண் பிள்ளையிடம் வாங்கிய அறை தான் பெரிதாக தெரிந்தது. என் தன்முனைப்பு அன்று இரவு முழுவதும் பூரணமான வெறுப்பிற்கும் கோபத்திற்கும் என்னை கொண்டு சென்றது.

காலையில் சூரிய வருகைக்கு முதலே எழுந்து எங்கள் கூடாரத்திற்கு சற்றுத்தள்ளி இருக்கும் குழாய் கிணற்றிற்கு அருகில் உள்ள சிறி மூங்கில் புதரின் கீழ் காட் போட் மட்டைகளின் மேல் அமர்ந்து மூங்கிலுக்கு முதுகை கொடுத்து சாய்ந்திருந்தேன்.

“கன்னத்தி விழுந்தது இன்னும் உள்ளே வலித்து கொண்டிருந்தது”

அபோது தர்ஷிகாவும் அவள் சகோதரிகள் இருவரும் தண்ணீர் குடங்களுடன் வருவது தெரிந்தது, நான் பார்த்தபடியிருந்தேன். அவர்களின் தண்ணீர் குழாய் ஏதோ சேதபட்டு இருக்க வேண்டும். அதுதான் இங்கே வருகிறார்கள்.

என்றுமில்லாதவாறு நான் அவளை நன்றாக பார்த்தேன். வானம் லேசாக மஞ்சளடிக்க தொடங்கியிருந்தது. அந்த மெல்லிய மஞ்சள் ஒளியில் அவள் தெளிவாக தெரிந்தாள். கால்வரை நீண்டு தரையை தொட்டும் தொடாமலும் அலையும் கறுப்பு பாவாடையும் கறுப்பு மேற்சட்டையும் அணிந்திருந்தாள். அவள் வெள்ளைத்தேகம் மஞ்சளொளியில் லேசாய் பசாடையடித்தது. முகத்தில் எந்த உணர்வுமில்லை. இன்னும் அவள் முகம் கழுவியிருக்கவில்லை. கண்கள் அழுது வீங்கி இருந்தன. நான் மூங்கில் மீது சார்ந்திருப்பதை கண்டிருப்பாள். முகம் இறுகி இறுகி கொண்டே சென்றது. நடந்து வந்து குடத்தை வைத்தாள். அவள் தங்கை தண்ணீர் பம்பியை அடித்து தண்ணீரை நிரப்பினாள். மூன்று பேரின் குடமும் நிறைந்து முடிய, அவள் சகோதரிகள் நடக்க தொடங்கினர். என்னை பார்த்தபடி குடத்தை தூக்க போனாள் குடம் கைகள் நழுவி அவள் உடலெங்கும் நீர் தெறிக்க விழுந்து உருண்டது அவள் உடை நனைந்து விட்டது.

“போங்கோ நான் அடிச்சு கொண்டு வாறன் ” சகோதரிகளிடம் சீறினாள்.

நான் பார்த்த படியிருந்தேன்.

மறுபடியும் தண்ணீரை நிரப்பினாள். குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தாள். சட்டென்று என்னை நோக்கி வந்தாள். மிக வேகமாக வந்தாள் கழுத்தில் இருந்து கறுப்பு கயிற்றை பிடுங்கி என் முன் போட்டாள்.

எனக்கு சினம் தலைக்கேறியது.சட்டென்று அந்த தந்தத்தை எடுத்து பல்லில் வைத்து கடித்தெறிந்தேன்.

அவளிற்கு அழுகை மார்பபிலிருந்து எழுந்துவந்து தொண்டையில் வந்து நின்று விம்மியது. திரும்பி வேகமாய் நடக்க தொடங்கினாள்.

நீரில் நனைந்த அவள் பாவாடையில் கால்கள் பட்டு ஓசை ஒன்று சீரான சந்தத்தில் கிளம்பி வந்தது. அது ஒரு பெரிய பறவை தன் பிரமாண்டமான சிறகுகளை உதைப்பது போன்றிருந்தது. அவள் நடக்க நடக்க அந்த ஈரப்பாவாடையின் ஒலி பறவையொன்றின் சிறகுகள் தான் என்றே நினைக்க தோன்றியது

மிக லாவகமாக சீரான சந்தத்துடன் அந்த பறவைதன் சிறகு விரித்தலை நிகழ்த்தியது .

பிறகு

பறவையின் உருவம் மறைந்த பின்னரும் சிறகுச்சத்தம் நிற்கவேயில்லை.

- யதார்த்தன்

Monday, 6 April 2020

OPERATION HALALA - MOULANAS GAINED MONEY ALONG WITH SEX



OPERATION HALALA - MOULANAS GAINED MONEY ALONG WITH SEX




முன்னாள் கணவனை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்

முகம் தெரியாத நபருடன் திருமணம், பாலுறவு, பிறகு விவாகரத்து. இவை எல்லாமே, முன்னாள் கணனை அடைவதற்காக முஸ்லிம் பெண்கள் ஏராளமான பணம் கொடுத்து அனுபவிக்கும் துயரங்கள்.

நம்ப முடியாவிட்டாலும், உண்மை அதுதான். இது, பிபிசி புலனாய்வு மூலம் வெளிப்பட்ட தகவல்.

அந்த வேதனையை அனுபவிக்க, பல முஸ்லிம் பெண்கள், `ஹலாலா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய திருமணத்துக்காக ஏராளமான தொகையை செலவிடுகிறார்கள். இந்த சேவையை வழங்க, பல இணையதள சேவை நிறுவனங்கள் அந்தப் பெண்களிடமிருந்து பெருமளவு கட்டணம் வசூலிக்கின்றன.


ஃபரா - இது அந்தப் பெண்ணின் உண்மையான பெயர் அல்ல. ஃபரா தனது 20 வயதுகளில் இருக்கும் போது தனது வருங்கால கணவரை சந்தித்தார். அவர் குடும்ப நண்பர் ஒருவரின் மூலம் ஃபராவிற்கு அறிமுகமானவர். திருமணத்திற்கு பிறகு அவர்கள் குழந்தை பெற்று கொண்டனர் ஆனால் அப்போதிலிருந்து அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக ஃபரா தெரிவிக்கிறார்.

பணம் வேண்டும் என்று முதல் முறையாக அவர் தன்னை துன்புறுத்த தொடங்கியதாக பிபிசியின் ஆசிய சேவையிடம் ஃபரா தெரிவித்துள்ளார்.

"எனது முடியை பிடித்து தரதரவென இரண்டு அறைகளைத் தாண்டி வெளியே இழுத்துக் கொண்டு வந்து வீட்டை விட்டு வெளியே துரத்த முயற்சி செய்தார்; சில சமயங்களில் அவர் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்"

ஆனால் இந்த நிலை மாறும் என ஃபரா நம்பினார். ஆனால் அவர் கணவரின் நடத்தை அதைவிட மோசமாகத்தான் மாறிக் கொண்டிருந்தது குறுஞ்செய்தியின் வழியாக அவரை விவாகரத்து செய்யும் அளவிற்கு அவரின் நடத்தை மோசமாகயிருந்தது.

"நான் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தேன். அவர் தனது அலுவலகத்தில் இருந்தார். எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, `தலாக், தலாக், தலாக்`" என்று அவர் குறுஞ்செய்தி அனுப்பினார்.

இந்த விவாகரத்து முறை, பல இஸ்லாமிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில இடங்களில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது; பிரிட்டனில் இம்முறையின் மூலம் எத்தனை பெண்கள் "விவாகரத்து" பெற்றுள்ளனர் என்ற தகவல்களை அறிய வாய்ப்பில்லை.

"அலைப்பேசி என்னிடம் இருந்தது", அதை நான் எனது தந்தையிடம் காண்பித்தேன், அவர் உடனே "உனது திருமணம் முறிந்துவிட்டது, நீ அவரிடம் திரும்ப செல்ல முடியாது." என்று தெரிவித்தார் என்று நடந்ததை விவரிக்கிறார் ஃபரா.

"என் மனம் சுக்குநூறாகிப் போனது. ஆனால் என்னுடைய முன்னாள் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் ஏனேன்றால் அவரை நான் மிகவும் நேசித்தேன்"

அதேபோல,தனது முன்னாள் கணவரும் அவரை விவாகரத்து செய்தது குறித்து வருத்தமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

வதந்திக்கு எதிராக 17 ஆண்டுகள் போராடிய பெண்

இதனால் சர்ச்சைக்குரிய ஒரு திருமண முறையான ஹலாலாவை ஃபரா அணுக நேர்ந்தது; இந்த திருமண முறை முஸ்லிம்களில் ஒரு சிறிய குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது அவர்கள் மும்முறை தலாக்கையும் எற்றுக் கொள்கிறார்கள்.

தம்பதிகள், விவாகரத்து செய்து கொண்ட பின்னர் மீண்டும் இணைய விரும்பினால் ஹலாலா முறைதான் ஒரே வழி என்று அவர்கள் நம்பினார்கள்

ஹலாலா என்பது விவாகரத்து ஆன ஒரு பெண், முகம் தெரியாத வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு முழுமையாக அவருடன் இணைந்து வாழ்ந்து பின் விவாகரத்து பெறுவது. இவ்வாறு செய்தால் மட்டுமே அவரால் திரும்பவும் முதல் கணவரை திருமணம் செய்துகொள்ள முடியும்.

"பணியிடத்தில் தலையில் முக்காடு அணிவதை நிறுவனம் தடை செய்வது சட்டப்பூர்வமானது"

ஆனால் சில சமயங்களில் ஹலாலா சேவையை கோரும் பெண்கள் பெருமளவு பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. மோசடிக்கு உள்ளாக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுகிறார்கள், பாலியல் ரீதியாகவும் துன்புறத்தப்படுகிறார்கள், ஏன் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

இந்த முறை பெரும்பாலான முஸ்லிம் மக்களால் வண்மையாக கண்டிக்கப்படுகிறது; மேலும் விவாகரத்து குறித்த இஸ்லாமிய சட்டத்தை சிலர் தவறாக புரிந்து கொண்டிருப்பதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

பிபிசியால் நடத்தப்பட்ட புலனாய்வில், ஹலாலா சேவைகளை வழங்கும் சில இணையதள கணக்குகள் பற்றி தெரியவந்துள்ளது. அதில் பெரும்பாலானோர், தற்காலிக திருமணங்களை செய்து கொள்வதற்கு பெண்களிடம் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை வசூலிக்கின்றனர்.

`தீவிர விருப்பம்`

விவாகரத்து ஆன ஒரு பெண் 2500 பவுண்டுகளை செலுத்த வேண்டும் என்றும், அவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிறகு ஹலாலா திருமணம் "முழுமையடைந்த" பின் அவருக்கு விவாகரத்து வழங்கப்படும் என்றும் ஹலாலா சேவைகள் குறித்து முகநூலில் விளம்பரம் செய்த நபர் ஒருவர், பிபிசி செய்தியாளர் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாத, விவாகரத்தான ஒரு முஸ்லிம் பெண் என்று அடையாளப்படுத்திக் கொண்ட செய்தியாளரிடம் தெரிவித்தார்.

இதில் தன்னுடன் பலர் பணிபுரிவதாக அந்த நபர் தெரிவித்தார் மேலும் அதில் ஒருவர் ஹலாலா சேவை முடிந்தவுடன் ஒரு பெண்ணிற்கு விவாகரத்து வழங்க மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்தார்.

லெகின்ஸ் அணிந்திருந்த பெண்கள் விமானத்தில் பயணிக்க தடை

ஆனால் அந்த நபர் சட்டவிரோத காரியங்களை செய்கிறார் என தெரிவிப்பதற்கு எவ்விதமான ஆதாரமும் இல்லை. மேலும் பிபிசி இது தொடர்பாக அந்த நபரைத் தொடர்பு கொண்ட போது தான் ஹலாலா திருமண சேவைகளில் ஈடுபடவில்லை எனவும் முகநூலில் உள்ள கணக்கு, சமூகம் குறித்த ஒரு சோதனை முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது கணவருடன் மீண்டும் இணையும் தீவிர எண்ணத்தில் இருந்த ஃபரா, ஹலாலா திருமணத்திற்கு இசையும் ஒரு நபரை தேட தொடங்கினார்.

"குடும்பங்களின் ஆதரவுடன் இதனை செய்யும் சில பெண்களை எனக்கு தெரியும். அவர்கள் இதுபோல திருமணம் செய்துகொண்டு பிறகு, அவர்கள் பல மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள்" என ஃபரா தெரிவிக்கிறார்,

"அவர்கள் மசூதிக்கு செல்வார்கள். அங்கு இதற்காக ஒதுக்கப்பட்ட அறையில் அந்த சேவையை அளிக்கும் நபர்களுடன் பாலுறவு கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் வேறு நபர்களையும் அப்பெண்ணிடம் பாலுறவு கொள்ள அனுமதிப்பார்கள்."

விவாகரத்து குறித்து பெண்களுக்கு ஆலோசனை வழங்கும் கிழக்கு லண்டனில் உள்ள இஸ்லாம் ஷரியா கவுன்சில், இந்த ஹலாலா திருமணங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.

"இது ஒரு போலியான திருமணம், இது பணம் சம்பாதிபதற்கான வழியாகக் கருதப்படுகிறது; மேலும் பலவீனமானவர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்" என அந்த அமைப்பைச் சேர்ந்த கோலா ஹசன் தெரிவிக்கிறார்.

"இது மன்னிக்க முடியாத கொடுமை; ஹலாலா திருமணத்தை தவிர்க்க உதவிகளை நாடலாம் அல்லது ஆலோசனை பெறலாம். எவரையும் இந்த ஹலாலா திருமணத்தை செய்து கொள்ள அனுமதிக்க மாட்டோம்" என்று அவர் தெரிவித்தார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு, ஹலாலா திருமணம் செய்து, அதில் பல கொடுமைகளை அனுபவித்து, அதன் பிறகு தனது முதல் கணவருடன் மீண்டும் சேரும் முடிவிலிருந்து பின் வாங்கிவிட்டார் ஃபரா.

ஆனால் என்னைப் போல ஏராளமான பெண்கள், எப்படியாவது தீர்வு கிடைக்காதா என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என எச்சரிக்கிறார் ஃபரா.

"விவாகரத்து பெற்றுவிட்டு வலியை அனுபவித்து கொண்டிருக்கும் என்னை போன்றவர்களின் நிலையில் இருந்தால் ஒழிய, பெண்களின் வலியை புரிந்து கொள்ள முடியாது".

"இப்போது என்னைக் கேட்டால் நான் இந்தக் காரியத்தை ஒரு போதும் செய்ய மாட்டேன். ஒருவரிடம் சேர்ந்து வாழ இன்னொருவருடன் என் உடலைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். ஆனால் அந்த நேரத்தில், எனது முன்னாள் கணவருடன் சேர்ந்து எந்த ஒரு நடவடிக்கைக்கும் நான் தயாராகவே இருந்தேன்" என்கிறார் ஃபரா.




A number of online services are charging "divorced" Muslim women thousands of pounds to take part in "halala" Islamic marriages, a BBC investigation has found. Women pay to marry, have sex with and then divorce a stranger, so they can get back with their first husbands.

Farah - not her real name - met her husband after being introduced to him by a family friend when she was in her 20s. They had children together soon afterwards but then, Farah says, the abuse began.

"The first time he was abusive was over money," she tells the BBC's Asian Network and Victoria Derbyshire programme.

"He dragged me by my hair through two rooms and tried to throw me out of the house. There would be times where he would just go crazy."

Despite the abuse, Farah hoped things would change. Her husband's behaviour though became increasingly erratic - leading to him "divorcing" her via text message.

"I was at home with the children and he was at work. During a heated discussion he sent me a text saying, 'talaq, talaq, talaq'."

"Triple talaq" - where a man says "talaq", or divorce, to his wife three times in a row - is a practice which some Muslims believe ends an Islamic marriage instantly.

It is banned in most Muslim countries but still happens, though it is impossible to know exactly how many women are "divorced" like this in the UK.

"I had my phone on me," Farah explains, "and I just passed it over to my dad. He was like, 'Your marriage is over, you can't go back to him.'"


Media captionFarah would have had to consummate her halala marriage
Farah says she was "absolutely distraught", but willing to return to her ex-husband because he was "the love of my life".

She says her ex-husband also regretted divorcing her.

This led Farah to seek the controversial practice known as halala, which is accepted by a small minority of Muslims who subscribe to the concept of a triple talaq.

They believe halala is the only way a couple who have been divorced, and wish to reconcile, can remarry.

Halala involves the woman marrying someone else, consummating the marriage and then getting a divorce - after which she is able to remarry her first husband.


But in some cases, women who seek halala services are at risk of being financially exploited, blackmailed and even sexually abused.

It's a practice the vast majority of Muslims are strongly against and is attributed to individuals misunderstanding the Islamic laws around divorce.

But an investigation by the BBC has found a number of online accounts offering halala services, several of which are charging women thousands of pounds to take part in temporary marriages.

'Desperation'
One man, advertising halala services on Facebook, told an undercover BBC reporter posing as a divorced Muslim woman that she would need to pay £2,500 and have sex with him in order for the marriage to be "complete" - at which point he would divorce her.

The man also said he had several other men working with him, one who he claims initially refused to issue a woman a divorce after a halala service was complete.

There is nothing to suggest the man is doing anything illegal. The BBC contacted him after the meeting - he rejects any allegations against him, claiming he has never carried out or been involved in a halala marriage and that the Facebook account he created was for fun, as part of a social experiment.

In her desperation to be reunited with her husband, Farah began trying to find men who were willing to carry out a halala marriage.

"I knew of girls who had gone behind families' backs and had it done and been used for months," she says.

"They went to the mosque, there was apparently a designated room where they did this stuff and the imam or whoever offers these services, slept with her and then allowed other men to sleep with her too."

Image caption

Khola Hasan says halala services are "abusing vulnerable people"
But the Islamic Sharia Council in East London, which regularly advises women on issues around divorce, strongly condemns halala marriages.

"This is a sham marriage, it is about making money and abusing vulnerable people," says Khola Hasan from the organisation.

"It's haram, it's forbidden. There's no stronger word I can use. There are other options, like getting help or counselling. We would not allow anyone to go through with that. You do not need halala, no matter what," she adds.

Farah ultimately decided against getting back with her husband - and the risks of going through a halala marriage. But she warns there are other women out there, like her, who are desperate for a solution.

"Unless you're in that situation where you're divorced and feeling the pain I felt, no-one's going to understand the desperation some women feel.

"If you ask me now, in a sane state, I would never do it. I'm not going to sleep with someone to get back with a man. But at that precise time I was desperate to get back with my ex-partner at any means or measure."

Related Topics
.