Posts

Showing posts with the label CHO

CHO - SOME THOUGHTS

Image
  CHO - SOME THOUGHTS சோ –சில நினைவுகள்                              -மணா அபாரமான டைமிங்சென்ஸ் ! “” நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சென்னை இவ்வளவு மோசமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள் இல்லையா? அப்போதே உங்களுக்குத் தெரிய வேண்டாமா,சென்னைக்கு எவ்வளவு தூரம் நெருக்கமாக இருக்கிறேன் என்று?’’ -இப்படித் தன்னையே கிண்டல் பண்ணிக் கொண்டவர் துக்ளக் ஆசிரியரான சோ. தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் கேலி தொனியுடன் பார்த்தவர் தன்னை மட்டும் அதிலிருந்து விலக்கிக் கொள்ளவில்லை. தனிப்பட்ட பேச்சு, சினிமா, நாடகம், அரசியல் விமர்சனம் எல்லாவற்றிலுமே இந்தக் கேலியான பார்வை தான் மையமாக இருக்கும். டைமிங் சென்ஸ் அதிலும் மிகவும் முக்கியம். சோ- வசனம் எழுதிய ‘தேன்மழை’  படத்தில்  சோ-வும், நாகேஷூம் சேர்ந்து ஒரு அலுவலகத்திற்கு வந்த நீண்ட கொண்டை போட்ட பெண்ணை இன்டர்வ்யூ பண்ணுவார்கள். ‘’ நீங்க ரொம்பவும் சண்டை போடுவீங்களா?’’ ‘’ ஏன்.. அப்படிக் கேக்கிறீங்க?’’ ‘’ இல்லை.. நாரதர் கொண்டை போட்டிருக்கீங்களே’’ ‘’ சரி.. உங்களுக...

CHO AND HIS CINEMA WITH POLITICS

Image
   CHO AND HIS CINEMA WITH POLITICS   எமர்ஜென்ஸிக்குப் பின்னால் மொரார்ஜி பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி இந்திராவின் தொடர் ஆணவ, அராஜக, சர்வாதிகார, ஊழல் ஆட்சியைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ஒரு அருமருந்தாக அமைந்திருந்தது. விலைவாசிகள் கட்டுக்குள் வைக்கப் பட்டிருந்தன. ஒழுக்கத்திலும் ஊழல் அற்ற ஆட்சி தருவதிலும் மிகவும் கறாராக இருந்த மொரார்ஜி தேசாயின் தலமையை சோ வெகுவாக ஆதரித்தார். எமர்ஜென்சியின் பொழுதே டெல்லி அரசியல்வாதிகளில் சோ பிரபலமாகியிருந்தார். இளம் துருக்கியர் சந்திரசேகர், பிரதமர் மொரார்ஜி என்று பலரும் சோவின் நண்பர்களாக ஆகியிருந்தனர். ஆட்சி கவிழ்க்கப் பட்ட பிறகு மொரார்ஜி தேசாய் சென்னை வந்திருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு எவரும் வரவில்லை. பின்னர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி சோவுக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்த பின்னர் சோ வந்து அவரை அழைத்துச் சென்றார். டெல்லி அரசியல்வாதிகள் பலரையும் தமிழ் நாட்டு வாசகர்களுக்கு சோவின் துக்ளக் மூலமாகவே அறிமுகம் ஆனார்கள். வஞ்சனைகளும், சூதுகளும், சகுனித்தனங்களும், குழிபறித்தலும்,ஊழல்களும், விலை போதல்களும் நிறைந்த இந்தியாவின் மோசமான வருடங்கள் அ...

KAMARAJ DEATH - CHO

Image
  KAMARAJ DEATH  - CHO காமராஜர் மறைவையொட்டி துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய தலையங்க‌ம் !!(நாம் இப்போது நினைப்பதை அப்போது வெளிப்படுத்திய சோ ) துக்ளக் ஆசிரியர் திரு. சோ அவர்களின் தங்கப்பதக்கம் ' திரைப்பட நகைச்சுவையாகட்டும், அவருடைய அரசியல் நையாண்டி " துக்ளக் " திரைப்படமும் சரி கடந்த காலம், நிகழ் காலம், எக்காலத்துக்கும் பொருந்துபவையாகவே உள்ளது, பெருந்தலைவர் திரு. காமராஜர் மரணத்தின் போது அவர் எழுதிய இரங்கல் கட்டுரை இதோ, ''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது . மீண்டும் மீண்டும் எழுகிறது. யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது... மனம் சாய்ந்தபிறகுதான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்துபோன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது. ...

TRIANGLE OF KAMARAJ,INDHIRA GANDHI ,AND CHO

Image
  TRIANGLE OF  KAMARAJ,INDHIRA GANDHI ,AND CHO பிரதமராக அன்று இருந்த இந்திராகாந்தியை நான் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத ஒன்றுதான். ‘துக்ளக்’கை துவக்கி அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இந்திராகாந்தியை நான் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்த நேரம் அது. பிரஸ் இன்பர்மேஷன் பீரோ அதிகாரி “பிரதமரைச் சந்திக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறோம்” என்று என்னிடம் சொன்னதும் எனக்கு ஆச்சரியம். “எனக்கு விருப்பம் தான். ஆனால் பிரதமர் சம்மதிப்பாரா?” “அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் அந்த அதிகாரி. பிரதமர் அலுவலகத்திற்கு என்னைக் கடிதம் எழுதச் சொன்னார். எனக்கு என்னவோ இதற்குப் பின்னால் ஏதோ ஒரு நோக்கம் இருப்பதாகத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஏனென்றால் காமராஜரின் ஸ்தாபன காங்கிரசும், இந்திரா காங்கிரசும் இணைவது தேவை என்று கருதிய நான் அது பற்றி எழுதி இருந்தேன். அது குறித்து காமராஜரிடமும் விவாதித்தேன். நீண்ட நேரத்திற்குப் பிறகு அகில இந்திய ரீதியில் இணைப்பு என்றால் தான் ஒப்புக்கொள்ள முடியும். தமிழ்நாட்டில் மட்டும்தான் என்றால் தன்னால் ஏற்க முடியாது என்று...

KAMARAJAR BOLD AND EXECUTIVE -CHO

Image
  KAMARAJAR BOLD AND EXECUTIVE -CHO காமராஜரின் திட்டமும் திடமும்! அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு. அந்த, "சப்வே'யை எப்படி கட்டுவது, அதன் செலவுகள் என்ன, மத்திய, மாநில அரசுகள் அதை எப்படி பங்கீடு செய்து கொள்வது, "சப்வே' கட்டுவதில் என்ன விதமான இன்னல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கக்கூடும், அவற்றை எப்படி தவிர்ப்பது போன்ற பல பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பதற்காக, சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், மத்திய அரசின் சார்பாக, ரயில்வே அமைச்சர் கலந்து கொண்டார். தமிழக அரசின் சார்பில் காமராஜர் கலந்து கொண்டார். மத்திய - மாநில அதிகார...

NAZIST KARUNANIDHI ATTEMPT TO ASSASSINATE CHO

Image
  NAZIST KARUNANIDHI ATTEMPT  TO ASSASSINATE CHO தமிழ் நாட்டில் புலிகளின் ஆதிக்கம் உச்சத்தில் இருந்த சூழலில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த அப்பொழுதைய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. சோ தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட ஒரே அரசியல் கட்சி மொரார்ஜி தேசாயின் ஜனதா கட்சி மட்டுமே. அன்றைய பொதுக் கூட்டம் மதுரை மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நானும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தேன். மிகவும் குறைவான நபர்களே இருந்த கட்சி அது என்பதினால் நிகழ்ச்சி ஏற்பாட்டு உதவிக்காக சீக்கிரமே நானும் பொதுக்கூட்டம் நடந்த இடத்திற்கு சென்றிருந்தேன். மாநிலத்தில் கருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சி உச்சத்தில் இருந்தது. கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லாம் கடுமையாகத் தாக்கப் பட்டனர். கொல்லவும் பட்டனர். புலிகளின் ஆதரவில் தான் தனித் தமிழ் நாட்டின் அதிபர் ஆகி விடும் கனவில் கருணாநிதி மிதந்து கொண்டிருந்தார். அந்தப் பொதுக்கூட்டம் நடைபெறும் அன்று காலையிலேயே தினமலர் நிருபர்கள் மாலையில் சோ தாக்கப் படுவார் என்றும் கொலை கூடச் செய்யப் படலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ...

CHO ,INTELLECTUAL LEGEND

Image
CHO ,INTELLECTUAL LEGEND 'எம்.ஜி.ஆருக்கு சோ தந்த பதிலடி!' சோ பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு உணர்ச்சிகளை அடையாளப்படுத்த இன்று எமோஜிக்களை பயன்படுத்துகிறோம். உலகில் அத்தனை கோடி மனிதர்களுக்கும் வெவ்வேறு விதமான அங்க அடையாளங்கள் இருப்பது இயற்கையின் ஆச்சர்யம். ஒரு தொப்பியையும் கண்ணாடியையும் வரைந்தால் அது நிச்சயம்  நமக்கு எம்.ஜி.ஆரைத்தான் நினைவுபடுத்தும்.  தமிழகத்தில் இன்னொரு பிரபலத்தையும் அப்படி எளிதாக  அடையாளம் காணலாம். அது சோ. ஒரு வழுக்கையை வரைந்து அதற்கு பெரிய கண்ணாடி வரைந்தால் அதுதான் சோ. பத்திரிகையாளர் வழக்கறிஞர் எழுத்தாளர் அரசியல்வாதி என்ற பன்முகம் கொண்ட சோ வுக்கு பிறந்தநாள் இன்று. 1934 ம் ஆண்டு இதே நாளில் பிறந்த சோ, தன் பள்ளிப்படிப்பை மயிலாப்புர் பி.எஸ் உயர்நிலைப்பள்ளியிலும் கல்லுாரிப்படிப்பை லயோலாவிலும் படித்தவர். 1955 ம் ஆண்டு சென்னை சட்டக்கல்லுாரியில் சட்டப்படிப்பு படித்த சோ ஐந்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர். தொழிலதிபர் டி.டி.கே வாசுவின் நிறுவனங்களின் சட்ட ஆலோசகராக 2 ஆண்டுகாலம் பணியாற்றியபோதுதான் நாடகங்களின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. யுனைடெ...

CHO , MY POLITICAL GURU DAWN 2016,DECEMBER 7

Image
CHO , MY POLITICAL GURU DAWN 2016,DECEMBER 7 'நேர்மை உறங்கும் நேரம்!' - சோ டிச., 7, சோ நினைவு நாள் சோவின் நண்பரும், அவரது நாடகங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியுமாக இருந்தவரும், எல்.ஐ.சி.,யில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான, எஸ்.வி.சங்கரன், சோவுடன், 60 ஆண்டுகள் நெருங்கி பழகிய, தன் இனிமையான அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: சிறந்த பேச்சாளர், நல்ல எழுத்தாளர், சட்ட ஆலோசகர், நாடகம் மற்றும் சினிமா நடிகர், கதை வசன கர்த்தா, நாடக, திரைப்பட இயக்குனர், அரசியல் விமர்சகர், ராஜ்யசபா அங்கத்தினர், பல லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட, 'துக்ளக்' பத்திரிகையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர், அசாத்திய தைரியசாலி என்று பல முகங்களை கொண்டவர், சோ. இவரது இயற்பெயர்: சீ.ராமசாமி, அப்பா பெயர்: சீனிவாச ஐயர், அம்மா பெயர்: ராஜம்மாள். அக்., 5, 1934ல் பிறந்தவர். ஒற்றை எழுத்தால் உலகம் முழுவதும் அறியப்பட்ட சோவுடன், நீண்டகாலம் நெருக்கமாக பழகியதும், அவரது அளவற்ற பாசத்துக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமானதும், இறைவன் எனக்கு அளித்த வரம். நாடகத்தின் கரு உருவானதும், என்னிடம் சொல்வா...

CHO சோ ராமசாமி வாக்கு வன்மைகளின் தலைவன் (பிறப்பு: அக்டோபர் 5, 1934)

Image
CHO சோ ராமசாமி  வாக்கு வன்மைகளின் தலைவன்  (பிறப்பு: அக்டோபர் 5, 1934) சோ ராமசாமி (பிறப்பு: அக்டோபர் 5, 1934), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். சோ என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்து தந்தது வாழ்க்கைக் குறிப்பு[தொகு] சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய  தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று  இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.  1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்...