Showing posts with label 1747. Show all posts
Showing posts with label 1747. Show all posts

Tuesday, 19 June 2018

NADER SHAH ,MURDER KING , BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19

NADER SHAH ,MURDER KING ,
BORN 1688 AUGUST 6 - 1747 JUNE 19

நாதிர் ஷா (Nader Shah) ஈரானை ஆட்சி செய்த ஓர் அரசர். இவர் பிறந்தது 1688 என்றும் [1] ஆகஸ்டு மாதம் 6 ஆம் தியதி 1688

இவர் ஜூன் 19 , 1747 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவரை பெர்ஸியாவின் நெப்போலியன் அல்லது இரண்டாம் அலெக்சாந்தர் என்று சில வரலாற்றாசிரியர்கள் அழைக்கின்றனர்..[5] நாதிர்ஷா வடக்கு பெர்ஸியாவைச் சேர்ந்த துர்கிக் அஃப்ஷர் (Turkic Afshar) என்ற பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்.[6]

இந்தியா மீதான படையெடுப்பு[தொகு]

1738 ஆம் ஆண்டு கந்தகாரை கைப்பற்றிய நாதிர் ஷா சிந்து ஆற்றை கடந்து, கைபர் கணவாய் வழியாக இந்தியாவில் புகுந்து, தில்லி மொகலாய மன்னர் முகமது ஷா வின் படைக்கும், நாதிர் ஷாவின் படைக்கும் 1739 ல் அரியானாவின் கர்ணல் பகுதியில் போர் நடைபெற்றது. இப்போரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை நாதிர் ஷாவின் படை கொன்று குவித்தது. தோல்வியடைந்த முகமது ஷா, நாதிர் ஷாவுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் விளைவாக கோஹினூர் வைரமும், விலை மதிப்பு மிக்க மயிலாசனமும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் நாதிர் ஷாவுக்கு கொடுக்கப்பட்டன.

முகமது ஷாவின் மகளை, தன் மகனுக்கு திருமணம் செய்வித்தான். [7]
அவுரங்கசீப்பிற்குப் பின்னால் 1738-ஆம் வருடம் இந்தியாவின் மீது படையெடுத்த பாரசீகனான நாதிர் ஷா, டெல்லியில் இரண்டு இலட்சம் இந்தியர்களைக் கொன்றதுடன், ஏராளமான செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றான். அதில் ஆயிரக்கணக்கான இந்திய இளம் பெண்களும் அடக்கம்.

நாதிர் ஷாவின் தாக்குதலைக் குறித்துக் கூறும் ஃப்ரெஞ்சு வரலாற்றாசிரியரான அலெய்ன்-டானெயல் (Alain Danielou), "...பாரசீகப் படைகள் டெல்லியில் ஒரு வார காலத்திற்கும் மேலாக கொலை வெறித் தாண்டவமாடினர். அங்கிருந்த அத்தனை கட்டடங்களையும் இடித்துத் தள்ளியதுடன், கிராமப்புறங்களையும், வயல்வெளிகளையும் அழித்தனர்.

இந்தப் போரில் தப்பிப் பிழைப்பவர் எவருக்கும் உண்ண எதுவும் கிடைக்கக் கூடாது என்பதற்காக. அற்புதமான கலைப் பொருட்களையும், குதிரைகள் இவற்றுடன் கோகினூர் வைரத்தையும், மயிலாசனத்தையும், இன்றைய கணக்கில் ஏறக்குறைய 150 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கத்தையும் நாதிர் ஷா தன்னுடன் கொண்டு சென்றதாக" கூறுகிறார்.

நாதிர் ஷா கொண்டு சென்ற கணக்கிலடங்காத மிகப் பெரும் கொள்ளையின் காரணமாக "அவன் ஆட்சி புரிந்த பாரசீகத்தில் (இரானில்) மூன்று வருடங்களுக்கு பொது மக்களிடமிருந்து வரி வசூலிப்பதை நாதிர் ஷா நிறுத்தி வைத்தான்" என்று மேலும் சொல்கிறார் அலெய்ன்-டானெயல். அப்படியானால் எத்தனை பெரும் செல்வம் நம் கையை விட்டுப் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப்பாருங்கள்!

இஸ்லாமிய ஆட்சியாளர்களால் இந்து, பவுத்த, ஜைன, சீக்கிய மதங்களுக்கும், அவர்களின் வழிப்பாட்டி டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பேரழிவிற்கிணையாக உலகின் வேறெங்கிலும் இன்றுவரை நடக்கவில்லை. கோவில்களும், சிலகளும் இடிக்கப்பட்டு அதன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், கோவிலின் இடிபாடுகள் புதிய மசூதிகள் கட்டுவதற்கு உபயோகிக்கப் பட்டன.

இன்றைய டெல்லியின் க்வாட்-உல்-இஸ்லாம் (Kwat-ul-Islam) மசூதியானது அந்தப் பகுதியில் இவ்வாறு இடிக்கப்பட்ட பதினேழு இந்துக் கோவில்களின் இடிபாடுகளைக் கொண்டு கட்டப்பட்டது. இந்து ஆலயப் பூசாரிகளும், பிட்சுக்களும், பொறுப்பாளர்களும் வென்ற இஸ்லாமியர்களால் உடனடியாகக் கொல்லப்ப டுவார்கள். அமிர்-குஸ்ரு, சுல்தான் ஃப்ரோஸ் துக்ளக் போன்றவர்கள் இதுபோல இந்து பூசாரிகள்/ஆலய அர்ச்சகர்கள் கொல்லப்படுவதைக் குறித்து ஒரு விதமான குரூர மகிழ்ச்சியுடன் குறிப்புகள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு எழுதியிருப்பவை அத்தனையும் இஸ்லாமிய வரலாற்றாசிர்களால், இஸ்லாமிய ஆக்கிரமிப்பா ளர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இந்துக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான துன்பத்தைச் சுமத்து வதினைக் குறித்து அத்தனை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் மிகவும் மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் மட்டுமே அக்குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன என்பதனையும் நாம் நினைவில் கொல்ல வேண்டும்.

இஸ்லாம் காஃபிர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. நம்பிக்கையாளர்களும் அப்படியே. இந்தக் கேவல மனோபாவம் குறித்து எழுதப்புகும் வரலாற்றாசிரியர் ஃப்ரான்ஸிஸ் வாட்சன்,

"...சிலை வழிபாடு செய்யும் இந்துக் காஃபிர்களுக்கு எதிராக அவர்களின் மனமெங்கும் வெறியும், விஷமும் நிறைந்தவர்களாக இஸ்லாமியர்கள் இந்தியாவின் பழமையான பெரும் ஆலயங்களை இடித்துத் தகர்த்தனர். இந்த வரலாற்று உண்மை அவர்களுடன் சென்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் மற்றும் பயணிகளால் துல்லியமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு சில ஆலயங்கள் முழுமையாக உடக்கப்படாமல் அரைகுறையாக விடப்பட்டன. ஆனால் ஏராளமான பழம் இந்து ஆலயங்கள் - ஆயிரக்கணக்கானவை - துண்டு, துண்டாக உடைக்கப்பட்டன.

இந்தியாவின் பழமையான நகரங்களான வாரணாசி, மதுரா, உஜ்ஜைன், மஹெஸ்வர், ஜ்வாலமுகி மற்றும் துவாரகாவில் அமைந்திருந்த மிகப் பழமையான கோவில்களில் ஒன்று கூட இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர் களிடமிருந்து தப்பவில்லை."

மூன்று இனங்களைப் பற்றிப் பார்த்தோம். மற்றொரு இனமான உஸ்பெக் குறித்தும் அறிந்து கொள்ளலாம். ஆப்கானிய மக்கள் தொகையில் 6 சதவீதம் உள்ளவர்கள். உஸ்பெக்குகள் இந்துகுஷ் மலைத்தொடரின் வடக்குப் பகுதியில் அதிகமாக வசிக்கிறார்கள். துருக்கியர்களைப் போல காட்சியளிக்கிறார்கள். பிற ஆப்கானிய இனத்தவர்களைவிட அதிக வெளுப்பாக காட்சியளிக்கிறார்கள். இவர்களும் மங்கோலிய மூதாதையர்களைக் கொண்டவர்கள்.

ஆனால் இப்போதைக்கு எந்த ஆப்கானியரின் உடல் பாகங் களைக் கொண்டும் அவரது இனத்தைக் கண்டுபிடிப்பது சரியல்ல. காரணம் காலப் போக்கில் நடைபெற்ற கலப்புத் திருமணங்கள். ஆனால் தலைப்பாகைகள் இன்னமும் இந்த இனங்களை தனிமைப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் பல வட்டாரங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு உள்ளூர் தலைவர். ஆங்கிலத்தில் Warlords. தாதாக்கள் என்று குறிப்பிட்டாலும் தப்பில்லை. இவர்களை ஆப்கானிஸ்தானின் கலவர ஊற்றுகள் எனலாம்.

1747 இதுதான் நவீன ஆப்கானிஸ்தான் உருவான ஆண்டு. இதற்கு மன்னராக முதன் முதலில் பொறுப்பேற்றவர் அகமது ஷா. அப்படி என்ன இவருக்கு சிறப்பு? காரணம் உண்டு.

இந்தியாவின் செல்வங்களை (மயிலாசனம், கோஹினூர் போன்றவை) கொள்ளயடித்துச் சென்றவர் பாரசீக (இன்றைய இரான்) மன்னர் நாதிர் ஷா. அவர் கொலை செய்யப்பட்ட வுடன் அவரது ராணுவ அதிகாரி யாக இருந்த அகமது ஷா பாரசீகத்திலிருந்து வெளியேறி னார், (ஆப்கானிஸ் தானிலுள்ள) காந்தஹாரை அடைந்தார். கூடவே கோஹினூர் உட்பட மதிப்புமிக்க செல்வங்களை அள்ளிச் சென்றார்.

யாரை அடுத்த காந்தஹார் பகுதியின் பஷ்டூன் இனத்தலை வராகத் தேர்ந்தெடுப்பது என்று அந்தக் குழு யோசித்தது. அனைவரும் தேர்ந்தெடுத்தது அகமது ஷாவைத்தான். திறமையான போர்வீரர். ஆயிரக் கணக்கான குதிரைப்படை வீரர்கள் இவரிடம். கொள்ளையடித்த சொத்துகள் வேறு. பிறகென்ன? தலைவரானார்.

அகமது கான் என்று இருந்த தன் பெயரை அகமது ஷா என்று மாற்றிக் கொண்டார் (ஆப்கானிஸ் தானில் மன்னர்களை ஷா என்று அழைப்பது வழக்கம்). ‘’இனி பாரசீகத்துக்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆப்கானிஸ்தான் தனி நாடு’’ என்று முழக்கம் செய்தார். பின்னர் கஜினி பகுதியை வசப்படுத்தினார். காபூலை தன் வசம் கொண்டு வந்தார். சிந்து மாகாணமும், சிந்துநதிக்கு மேற்கே இருந்த வட இந்திய பரப்புகளும் தானாகவே அவர் கைக்கு வந்து சேர்ந்தன. (தாக்குதலிலிருந்து தப்புவதற்காக அளிக்கப்பட்ட தானம்).

நாதிர்ஷாவின் பேரன் ஷாருக்கான். ஹெராத் நகரை இவன் ஆண்டு கொண்டிருந்தான். அவனுடனும் போர் தொடுத்தார் அகமது ஷா. ஒருவருட முற்றுகை. பல உயிர்கள் பிரிந்தன. இறுதி வெற்றி அகமது ஷாவுக்குதான். துருக்மென், தஜிக், ஹசாரா, உஸ்பெக் ஆகிய பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிரதேசங்களும் அகமது ஷாவின் ஆளுகைக்கு உட்பட்டது. (இப்போது புரிகிறதா இந்த இனங்களின் தொடர் விரோதத்தின் வேர் எது என்று?).

அகமது ஷாவின் பார்வை அடுத்ததாக இந்தியாவின் பக்கம் திரும்பியது. பலமுறை படையெடுத்தார். காஷ்மீர், பஞ்சாப் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார். பின்னர் டில்லியை முற்றுகையிட்டார். ஏற்கனவே அங்கு ஒளரங்கசீப் காலம் முடி வடைந்து மொகலாயப் பேரரசு தேய்பிறையில் இருந்தது. ‘‘என் தலைமையை அங்கீகரியுங்கள் உங்கள் ஆட்சியைத் தொடருங்கள்’’ என்று அவர் கூறியதை மொகலாயர்கள் ஏற்றுக் கொண்டனர்.

காலப்போக்கில் மராத்தியர்கள் தங்கள் ஆட்சியை பூனாவில் நிலை நிறுத்திக் கொண்டு வடக்கிலும் பரப்பத் தொடங்கினார்கள். அகமது ஷா 1757ல் மராத்தியர்களுடன் போரிட்டார். ஆனால் மராத்திய சேனை வென்றது. ‘’மராத்தியர்கள் மீதான இஸ்லாமியர்களின் புனிதப் போர் தொடங்கியது’’ என்று அலறினார் அகமது ஷா. மீண்டும் 1761ல் பானிபட் ஒரு கடும் போரைச் சந்தித்தது. இம்முறை பஷ்டூன்கள் மட்டுமல் லாமல் பிற இஸ்லாமியப் பிரிவினரும் அகமது ஷாவிற்குப் பின்னால் அணிவகுத்தார்கள். மராத்திய ராணுவம் தோல்வி கண்டது.

ஆனால் சீக்கியர்கள் வீறு கொண்டு எழுந்தார்கள். பஞ்சாபின் பெரும் பகுதியை தங்கள் வசம் கொண்டு வந்தார்கள். அகமது ஷா உக்கிரம் அடைந்தார். சீக்கியர்களின் பகுதியாக இருந்த லாகூரை சின்னா பின்னமாக்கினார். அமிர்தசரஸில் தங்கியிருந்த சீக்கியர்களைக் கொன்று குவித் தார். அவர்கள் புனிதத்தலங் களில் பசுவின் ரத்தத்தை ஊற்றச் செய்தார். கொடுங்கோன்மையின் சிகரமாகவே மாறினார். மீண்டும் காந்தஹாருக்குத் திரும்பினார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்னால் பஞ்சாபை மீண்டும் சீக்கியர்கள் மீட்டுவிட்டனர்.

காந்தஹார்தான் தன் சாம்ராஜ் யத்தின் தலைநகர் என்பதில் மிக நிச்சயமாக இருந்தார் அகமது ஷா. ஆனால் அவர் இறந்து மூன்று வருடங்கள்கூட ஆகவில்லை. காபூலை அந்த ராஜ்யத்தின் தலைநகராகத் தேர்ந்தெடுத்தனர் அவரது வாரிசுகள். அகமது ஷா இறந்ததும் அவரது இரண்டாவது மகன் தைமூர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். அவரும் இறந்தவுடன் வாரிசு உரிமை போர் உச்சத்தை அடைந்தது. தைமூரின் அத்தனை மகன்களும் அரச பதவிக்கு ஆசைப்பட்டார்கள். இவர்களில் தன் பலம் காரணமாக ஐந்தாவது மகன் ஜமான் ஷா ஆப்கானிஸ்தானின் மன்னரானார். தனக்கு உதவியாக இருந்த பயின்தா கான் என்பவர் தனக்குத் துரோகம் செய்வதாக அறிந்து கொண்டவுடன் அவரைக் கொன்றார் ஜமான்.

பயின்தாகனின் மகன் இரானுக்குத் தப்பியோடி அங்கு வசித்த மகமூது ஷாவுக்கு ஆதரவு தெரிவித்தான். இந்த மகமூது, ஜமானின் அண்ணன்தான். அவன் மீண்டும் படையெடுத்து தன் தம்பியைத் தோற்கடித்து மன்னன் ஆனான். சீக்கிரமே அவனது பிற சகோதரர்கள் அவனைப் பதவியிலிருந்து கீழிறக்கினர். ஷுஜா ஷா என்ற தம்பி ஆட்சியைக் கைப்பற்றினான்.

1809 ஜூன் 6 அன்று பிரிட்டிஷ் அரசுடன் ஷுஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். ‘‘எந்த வெளிநாட்டுப் படை இந்த இரு நாடுகளில் ஒன்றில் நுழைந்தாலும் மற்றொரு நாடு அதை வெளியேற்ற வேண்டும்’’ என்றது அந்த ஒப்பந்தம். இதுதான் ஐரோப்பிய நாடு ஒன்றுடன் ஆப்கானிஸ்தான் செய்து கொண்ட முதல் ஒப்பந்தம். காட்சிகள் மாறத்தொடங்கின.

Sunday, 4 February 2018

VEERAMAA MUNIVAR ,WROTE THEMBAAVANI DIED 1747 FEBRUARY 4

VEERAMAA MUNIVAR ,WROTE 
THEMBAAVANI DIED 1747 FEBRUARY 4

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பிப்ரவரி 4, 1747)[1] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.
இந்தியாவில்[மூலத்தைத் தொகு]
இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில்[மூலத்தைத் தொகு]

கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம்

சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

அவரது தமிழக வாழ்க்கை முறை[மூலத்தைத் தொகு]
1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.
வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து[மூலத்தைத் தொகு]

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் [2]. முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு
ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை
நூல்கள்.இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது [3]
பெயர்மாற்றம்[மூலத்தைத் தொகு]

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

தமிழ்ப் பணி[மூலத்தைத் தொகு]
இதனையும் பார்க்க: வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
இதனையும் பார்க்க: வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம்[சான்று தேவை], திருப்புகழ்[சான்று தேவை], நன்னூல்[சான்று தேவை], ஆத்திசூடி[சான்று தேவை] போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

பிற தமிழ் படைப்புகள்[மூலத்தைத் தொகு]
தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.
திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தார்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.
வீரமாமுனிவரின் இறப்பு[மூலத்தைத் தொகு]
வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம் [4]

வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குருவின் கதையை 1822 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெஞ்சமின் பாபிங்டன் என்பவர் "வீரமா முனிவர் திருச்சியில் சந்தா சாகிப் என்பவரின் அரசில் திவானாகப் பணியாற்றினார் என்றும், பின்னர் மரதர்களின் படையெடுப்பை அடுத்து, வீரமாமுனிவர் டச்சு ஆட்சியில் இருந்த காயல்பட்டினத்தில் வாழ்ந்து நோயால் தாக்கப்பட்டு இறந்தார்" எனக் குறிப்பிடுகிறார்.[

Wednesday, 8 November 2017

VEERA MAAMUNIVAR BORN 1680 NOVEMBER 8

VEERA MAAMUNIVAR  
BORN 1680 NOVEMBER 8

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680)

கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு .

தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர்
கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .

தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர்  .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் 'சுவடி தேடிய சாமியார்'  எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல்  குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி  "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

 இத்தாலியில் பிறந்த வர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

 மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

 கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

 இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

 வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

 அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

 தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

 உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

 தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 - பெப்ரவரி 4, 1742)[1] இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் - கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன், இயேசுக் கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளையும் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய புனித யோசேப்பின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது இவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் 

இந்தியாவில்[மூலத்தைத் தொகு]

இவர் லிஸ்பனில் இருந்து புறப்பட்டு 1710 சூனில் கிறித்தவ மதம் பரப்பு பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார்.

தமிழகத்தில்[மூலத்தைத் தொகு]

கோனான்குப்பத்தில் பெரிய நாயகி அன்னை ஆலயத்தின்முன் அமைந்துள்ள வீரமாமுனிவர் திருவுருவம் சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு செல்ல உத்தேசித்து, கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக அம்பலக்காடு வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

அவரது தமிழக வாழ்க்கை முறை[மூலத்தைத் தொகு]

1822 இல், முதன் முதலாக இவருடைய சரித்திரத்தைத் தமிழில் எழுதி வெளியிட்ட வித்துவான் முத்துசாமி பிள்ளை, இவருடைய நடையுடை பாவனைகளை, அந்நூலில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.

இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து, இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லித் தினமொரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும் பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியிலிட்டுக் கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப பட்டுக் குல்லாவும், அரைக்கு நீர்க்காவிச் சோமனுந் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடுமிட்டுக் காலிற் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியிற் சாரி போகும் போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும் , இளங்காவி யுத்தரிய முக்காடும், கையினிற் காவி யுருமாலையும், காதில் முத்துக் கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலிற்றம்பாக்கு மோதிரமும், கையிற் றண்டுக் கோலும், காலிற் சோடுடனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேலெழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயிற்றோகைக்கொத் திரட்டவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவுஞ் சாரிபோவார். இவரிறங்கும் இடங்களிலும் புலிதோலாசனத்தின் மேலுட்காருவார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய மாற்றுக் கருத்து[மூலத்தைத் தொகு]

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 1840இல் வெளியிட்டார். அவர் 1840இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843இல் அப்பாவுபிள்ளை பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றி அச்சான முதல் நூல் இதுவே. ஆனால், இதற்கு முன்னரே சாமிநாத பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வுநூலில் ச. இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார் [3]. முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் தெ நோபிலி என்னும் மறைபரப்பாளர் பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று இராசமாணிக்கம் ஆய்வினடிப்படையில் நிறுவியுள்ளார். தத்துவ போதகர் 1606இல் மதுரை வந்து ஐம்பது ஆண்டுகளாக உழைத்தபின் 1656 சனவரி 16ஆம் நாள் மயிலாப்பூரில் உயிர்துறந்தார். அவருக்குத்தான் தத்துவ போதகர் என்ற பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை இராசமாணிக்கம் பின்வருமாறு விவரிக்கிறார்:

வீரமாமுனிவரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வருவதாலும், தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாததாலும், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறுவதோடு வீரமாமுனிவரையும் தத்துவ போதகர் என்று அழைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது, முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை  நூல்கள். இயற்றியது, இவைபோன்ற பலவற்றைக் கையாண்டவர் தத்துவ போதகர். இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது...கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவ போதகரே. தத்துவ போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவ போதகர் என்று அழைப்பதோ, தத்துவ போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது [4]

பெயர்மாற்றம்[மூலத்தைத் தொகு]

மறை பரப்பு முயற்சிக்காக முதலில் தமிழைக் கற்றுக்கொண்ட இவர், தமிழில் வியத்தகு புலமை பெற்று இலக்கணம், இலக்கியம், அகராதி படைத்து தமிழுக்குச் செழுமையூட்டினார். தமது பெயரினை தைரியநாதசாமி என்று முதலில் மாற்றிக் கொண்டார். பின்னர், அப்பெயர் வடமொழி என்பதாலும், நன்கு தமிழ் கற்றதாலும், தமது இயற்பெயரின் பொருளைத் தழுவி, செந்தமிழில் வீரமாமுனிவர் என மாற்றிக் கொண்டார்.

தமிழ்ப் பணி[மூலத்தைத் தொகு]
இதனையும் பார்க்க: வீரமாமுனிவர் செய்த தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்
இதனையும் பார்க்க: வீரமாமுனிவர் நூல்களில் திருக்குறள்
இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்று, இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். இவற்றில் காண அரிதான பல பொக்கிசங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

அக்காலத்தில் சுவடிகளில் மெய்யெழுத்துகளுக்கு புள்ளி வைக்காமலே எழுதுவது வழக்கம். புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும். மேலும் குறில், நெடில் விளக்க என்று "ாாாா" சேர்த்தேழுதுவது வழக்கம். "ஆ" என எழுத "அர" என 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது. (அ:அர, எ:எர) இந்த நிலையை மாற்றி "ஆ, ஏ" என மாறுதல் செய்தவர் இவர்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் படித்தறிய எளிதில் முடியவில்லை என்பதனை அறிந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

பிற தமிழ் படைப்புகள்[மூலத்தைத் தொகு]

தொன்னூல் விளக்கம்என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.
கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழை விவரிக்க முனைந்தவர். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சியே எனல் வேண்டும்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீன் மொழியில் பெயர்த்தவர் வீரமாமுனிவர். உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தவர்.
திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.
1728-இல் புதுவையில் இவரின் "பரமார்த்த குருவின் கதை" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இந்த நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார் என்று சிலர் கருதுகின்றனர். இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.
காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 விருத்தம்|விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு. மேலும் வீரமாமுனிவரைப் போல, வேறெந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம் உரைநடை எனப் பிற இலக்கிய வகைகளில் நூல்கள் படைத்தாரல்லர்.

வீரமாமுனிவரின் இறப்பு[மூலத்தைத் தொகு]

வீரமாமுனிவரின் வாழ்வையும் பணியையும் விரிவாக ஆய்ந்துள்ள முனைவர் ச. இராசமாணிக்கம் வீரமாமுனிவரின் இறப்புப் பற்றிய செய்தியைக் கீழ்வருமாறு தருகின்றார்:

1742இல் மதுரைப் பணித்தளம் விட்டுச்சென்ற வீரமாமுனிவர், கடற்கரையில் 1745 வரை பணிபுரிந்தபின், 1746-47 ஆண்டுகளைக் கேரள நாட்டிலுள்ள அம்பலக்காட்டில் அமைந்த குருமடத்தில் செலவழித்து, 1747ஆம் ஆண்டு பெப்ருவரி நான்காம் நாளில் தமது 67ஆம் வயதில் உயிர்துறந்தார். திப்பு சுல்தான் காலத்தில் நடந்த வேதகலாபனையில் பல கிறித்துவ நிறுவனங்கள் இடம் தெரியாமல் அழிந்து போயின. வீரமாமுனிவரது கல்லறைக்கும் அந்தக் கதி நேர்ந்திருக்கிறது. தமிழுக்கு இவ்வளவு தொண்டு செய்த பெரியார், தமிழ் நாட்டை விட்டுக் கேரள நாடு சென்று செத்ததும், அங்கு அவரை அடக்கம் செய்த கல்லறையும் தெரியாத நிலையில் இருப்பதும், தமிழ் மக்களுக்கு வருத்தமளிக்கும் செய்திகள். நிற்க, சிலர் இவர் மணப்பாட்டில் இறந்தார் என்றும், வேறு சிலர் மணப்பாறையில் உயிர் துறந்தார் என்றும் கூறுவது வரலாற்றுச் சான்றுக்குப் புறம்பானது. 1746-47 ஆண்டுகளில் கேரள நாட்டு அம்பலக்காட்டில் முனிவர் வாழ்ந்தார் என்பதையும், அங்கே மரித்தார் என்பதையும் அக்கால அதிகாரபூர்வமான அறிக்கையின் வாயிலாக உறுதியாக அறியலாம் [5]