Posts

Showing posts with the label PARTHIBAN

PARTHIBAN ,OLD ACTOR REMEMBERED AS JACKSON DURAI

Image
PARTHIBAN ,OLD ACTOR REMEMBERED AS JACKSON DURAI  நீர்தான் ஜாக்ஸன் துரை என்பவரோ..? ‘’கிஸ்தி... திறை... வரி... வட்டி...’’ - சிவாஜியின் அனல் பறக்கும் இந்த வசனத்தை மறக்க முடியுமா? ரசிகர்களின் நாடி நரம்புகளைச் சூடேற்றிய இந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ காட்சியில் ஜாக்ஸன் துரையை கவனித்திருக்கிறீர்களா? யெஸ்... அவரேதான் இவர். நிஜப் பெயர், பார்த்திபன். பளீர் கலரில் மிடுக்கான துரையாக பட்டையைக் கிளப்பிய இவருக்கு இன்று 90 வயது . அவர் உற்சாகமாக நினைவு கூர்கிறார் அந்தப் பொற்காலங்களை... ‘‘வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த, கேதாண்டப்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். ராஜாஜியின் பரம்பரையில் வந்தவன் நான். அப்பா, சக்கரவர்த்தி ராமசாமி. அம்மா, ராஜலட்சுமி. சகோதர, சகோதரிகள் ஐந்து பேரில் நான்தான் மூத்தவன். எலிமென்ட்ரி ஸ்கூலில் படித்தபோதே என்னை நாடகங்களில் நடிக்க வைத்தனர். சென்னை வந்து லயோலா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தபோதும் கல்லூரி விழாக்களில் நடித்தேன். எந்தக் கூட்டத்திலும் நான் மட்டும் பளிச்சென தனியாகத் தெரிவேன். பலரும் ‘நீ யாரப்பா... சினிமாவில் நடிக்கிறவனா?’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்...