Showing posts with label EELAM. Show all posts
Showing posts with label EELAM. Show all posts

Saturday, 1 January 2022

SEMBIAN SELVAN ,EELAM WRITER BORN 1943 JANUARY 1 - 2005 MAY 20

 

SEMBIAN SELVAN ,EELAM WRITER BORN 

1943 JANUARY 1 - 2005 MAY 20



இராஜகோபால் என்ற இயற்பெயருடைய செம்பியன் செல்வன் (சனவரி 1, 1943 - மே 20, 2005) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக் கழக புவியியல் சிறப்புப்பட்டதாரியான இவர் விவேகி சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செம்பியன் செல்வன் யாழ்ப்பாணம், தின்னவேலியில் பிறந்தவர். இவருக்கு சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி நாகமுத்து இவரையும் இவரது தமையன் கணேசபிள்ளையையும் வளர்ந்தார். நாவல், சிறுகதை, நாடகம், உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் தனது ஆளுமையினைப் பதித்தவர் செம்பியன் செல்வன். தனது தனிப்பட்ட வாழ்வில் இவர் ஆசிரியராக, அதிபராகக் கல்விப் பணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.


எழுத்துப்பணி

விவேகி, புவியியல், நுண்ணறிவு ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும், அமிர்தகங்கை, கலைஞானம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியவர். ஈழத்துப் படைப்பாளிகளைப் பற்றிய 'ஈழத்துச் சிறுகதை மணிகள்' என்னும் நூலினை எழுதியுள்ளார். இவரது 'சர்ப்பவியூகம்' சிறுகதைத்தொகுதி இலங்கை சாஹித்யவிருது பெற்றது. கலைக்கழகம் நடத்திய நாடகப்போட்டியில் தொடர்ந்து 4 வருடங்கள் முதல் பரிசு பெற்றவர். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகை தனது வெள்ளிவிழா பொருட்டு நடாத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை இரண்டாவது பரிசினைப் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


திரைக்கதை

செங்கை ஆழியான் எழுதிய வாடைக் காற்று திரைப்படமான பொழுது, அதற்கான திரைக்கதை, வசனங்களை எழுதியவர்.


இவரது நூல்கள்

சர்ப்பவியூகம் - சிறுகதைத்தொகுதி

அமைதியின் இறகுகள் (சிறுகதைகள்)

குறுங்கதைகள் நூறு (குறுங்கதைகள்)

கானகத்தின் கானம் - நாவல்

நெருப்பு மல்லிகை (நாவல்)

விடியலைத் தேடும் வெண்புறாக்கள் (நாவல்)

மூன்று முழு நிலவுகள் (நாடகம்)

ஈழத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனம்)

நாணலின் கீதை (தத்துவம்)

Sunday, 28 February 2021

SENGAI AALIYAAN EELAM WRITER BORN 1941 JANUARY 25 - 2016 FEBRUARY 28

 

SENGAI   AALIYAAN  EELAM WRITER BORN 

1941 JANUARY 25 - 2016 FEBRUARY 28



1941  ஆம்  ஆண்டு  யாழ்ப்பாணத்தில்  ஒரு  சராசரிக் குடும்பத்தில் கந்தையா, அன்னபூரணி தம்பதிகளுக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்து “குணராசா” என்ற பெயர் சூடப்பட்ட இவர்   கல்வியிலும்   இலக்கியத்திலும்  பல்வேறு அரச  பணிகளிலும்  செய்த பல  சாதனைகளைக் கணக்கிடுவது கடினம். பலருக்கு கதாசிரியராக, அரச அதிகாரியாக, நாவலாசிரியராக, இன்னும் பல வடிவங்களில் தெரிந்த குணராசா, எழுதிச் சிவந்த கைகளுக்குச் சொந்தக்காரனாதலால் தனக்குத் தானே “  செங்கை ஆழியான்” எனப் புனை பெயரைச் சூட்டிக்கொண்டு எண்ணிலடங்காத பல இலக்கியங்களைப் படைத்தார்.


எனக்குத் தெரிந்த என் ஆசான் குணராசாவை நான் ஒரு புவியியல் ஆசிரியராக, சரித்திரக் கதை சொல்லியாக, பல்கலைக்கழக பதிவாளராக, உதவி அரசாங்க அதிபராக, மாநகரசபை ஆணையாளராக, பல்கலைக் கழக விரிவுரையாளராக, பல வடிவங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் இலக்கியப் படைப்பாளியாக அவர்; செங்கை ஆழியானாக வகித்துக் கொண்ட அவதாரம்தான் அவரை ஈழத்து இலக்கிய உலகில் கிரீடம் சூட்டி அழகு பார்த்தது. ஈழத் தமிழர்களின் இலக்கிய வரலாற்றின் ஒரு பக்கத்தை செங்கை ஆழியான் எனும் உன்னதமான படைப்பாளியின் படைப்புக்களைக் கொண்டே மதிப்பீடு செய்ய வேண்டும்.


1964 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தைவிட்டு பட்டதாரியாக வெளியேறி 1971 வரை ஆசிரியத் தொழிலில் பணியாற்றினார். 1971 இல் ஓய்வுபெறும் வரை உயர் நிர்வாக சேவை அதிகாரியாகப் பல பதவிகள் வகித்தார். பதவிகள் எல்லாம் இவரைத் தேடி வந்தன. அவர் வகித்த பதவிகள் இவரால் பெருமை பெற்றன. முதலில் அரசாங்கச் செயலாளராக கிண்ணியாவிலும் பின்னர் செட்டிகுளத்திலும் கடமையாற்றினார். அதன் பின்னர் உதவி அரசாங்க அதிபராகத் துணுக்காய்,  பாண்டியன்குளம்,  கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் பணியாற்றி,  கிளிநொச்சியின் மேலதிக அரசாங்க அதிபராகவும் பிரதிக் காணி ஆணையாளராகவும் பதவி உயர்வு பெற்றார்.


அதன்பின்  “கிளிநொச்சி”  மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகியபோது, அம் மாவட்டத்தின் நிர்வாகத்தினை முதன் முதல் ஒழுங்குபடுத்திய மூன்று நிர்வாக சேவை அதிகாரிகளில் செங்கையாழியானும் ஒருவராகச் செயற்பட்டார். 1972 – 1992 வரை இவர் தனது நிர்வாகப் பணிகளை, கிளிநொச்சி, துணுக்காய், மன்னர், செட்டிகுளம்,பாண்டியன் குளம் என வன்னிப் பிரதேசங்களிலேயே ஆற்றியுள்ளார். அவர் கூறுவதுபோல இப்பிரதேசங்களின் வாழ்வியற் கோலங்களை அவர் அவற்றின் பலத்தோடும் பலவீனத்தோடும் தரிசித்து இலக்கிய வடிவங்களுள் சிறைப்படுத்திக் கொள்ள இந்த அனுபவம் உதவியது. இந்த அனுபவத்தின் பயனாகவே இவரால் அரிய பொக்கிசமான “காட்டாறு” நாவலை எழுதி சாகித்திய விருதும் பெற முடிந்தது.


1992 ஆம் ஆண்டு முதன் முறையாகத் தனது சொந்த மாவட்டமான யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்று, யாழ்ப்பாணப் பிரதேச செயலாளர் என்ற பெரும் பணியில் அமர்ந்து கொண்டார். இதன் பின்னர் 1997  தொடக்கம் 2000 வரை ஏறக்குறைய மூன்றாண்டுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான பதிவாளராகப் பதவி வகித்தார். பின்னர் மீண்டும் நல்லூரின் பிரதேச செயலாளராகப் பதவியேற்று, 2001 இல் ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்பும் அவரது நிர்வாகப் பணி ஓயவில்லை. ஓய்வுபெற்ற பின்னர் இரண்டாண்டுகள் சங்கானை, தெல்லிப்பளை ஆகிய பிரதேசங்களின் பிரதேச செயலாளராகக் கடமையாற்றினார்.


அதன் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகப் பதவி வகித்தார். அவ்வேளை அவரை யாழ்ப்பாண மாநகர சபையின் மாநகர ஆணையாளராக மாகாண சபை நியமித்தது. ஓராண்டிற்கு மேல் யாழ்ப்பாண மாநகர ஆணையாளராகப் பணிபுரிந்துள்ளார். அண்மையில் இறக்கும் போதுகூட உலக வங்கியினால் நிதி உதவப்பட்டு, வடக்கு கிழக்கு மாகாணத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் சமூக நிலைப்பாட்டிற்கான அணித் தலைவராகக் கடமையாற்றி வந்தார்.


கிராமத்து மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கையையும், வியர்வை, பனை ஓலை வேலி, சகதி, தேனீர், அத்தி இலைகள் என்று அவர் வர்ணனை இல்லாமலே இயல்பாக கதை சொல்வதில் ஒரு சக்கரவர்த்தியாகவே வாழ்ந்தார். அவரது கதைகளை வாசிக்கும் ஒருவருக்கு அந்தக் கிராமமும், கதையின் கதாபாத்திரங்களும் கண் முன்னே நிழலாடுவார்கள். செய்திகளைக் கூட மேலோட்டமாகப் படித்து விட்டு நகர்ந்துவிடலாம். ஆனால் செங்கை ஆழியானின் எழுத்து என்றால் அதை முழுமையாக வாசிக்காமல் கடந்துபோக முடியாது. அந்தளவுக்கு செங்கை ஆழியானின் எழுத்துக்களும், அவர் கதை சொன்ன பாங்கும் வசீகரமாக இருக்கும்.


1980 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் “அர்ச்சுனா” என்றொரு சிறுவர் இதழ் வெளிவரத் தொடங்கியிருந்தது.  அதில் ஹம்சா குட்டிக்கு அப்பா சொன்னகதைகள் என்று தொடராக வந்த சிறுவர் கதைகளைச் செங்கை ஆழியான் எழுதி இருந்தார். சமகாலத்தில்;  பிரளயம், காட்டாறு, கனவுகள் கற்பனைகள், ஆசைகள், கங்கைக் கரையோரம், அலைகடல் தான் ஓயாதோ, முற்றத்து ஒற்றைப் பனை, யானை, மழையில் நனைந்து; வெயிலில் காய்ந்து, மழைக்காலம், மண்ணின் தாகம், ஜன்மபூமி, யாககுண்டம், ஆறுகால் மடம், கிடுகுவேலி, ஓ அந்த அழகிய பழைய உலகம், காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள், ஒரு மைய வட்டங்கள், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும், ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல், போரே நீ போ போன்ற சமூக நாவல்களும் அக்கினிக் குஞ்சு யாழ்ப்பாணத்து இராத்திரிகள், சித்திரா பௌர்ணமி இதயமே அமைதி கொள்,  இரவு நேரப் பயணிகள், கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத  ஆமைகளும், சாம்பவி போன்ற சிறுகதைகளும் இணையற்றவை. முற்றத்து ஒற்றைப் பனை என்ற கதையில் வழிந்தோடும் மிக இயல்பான எழுத்து நடை. சரளமான பேச்சுத் தமிழ். கூடவே இழைந்தோடும் நகைச்சுவை. எந்த ஒரு வாசகனுக்கும் ஒரே மூச்சில் வாசித்து முடித்து விடத் தோன்றும் சலிப்புத் தட்டாத கதை சொல்லும் ஆற்றல் என எல்லா நளினங்களும் இயல்பாகப் பெற்ற எங்கள் கதை ஆசான் அவர்.


ஆச்சி பயணம் போகிறாள்  என்ற கதையில் யாழ்ப்பாணத்தில் தன் கிராமம் தாண்டாத ஒரு கிழவி கதிர்காமம் நோக்கிப் பயணிக்கிறாள். கிராமியம் கடந்த நகர வாழ்வியலும், புதிய உலகம் அவளுக்கு ஏற்படுத்தும் மன உணர்வுமே ஒரு நகைச்சுவை நாவலாக அமைந்திருக்கின்றது. யானை – ஈழத்துக்காட்டுப் பகுதியில் வெறிபிடித்த ஒரு யானையிடம் தன் காதலியை இழந்தவன் தன் வஞ்சம் தீர்க்கப் புறப்பட்ட கதை. ஓ அந்த அழகிய பழைய உலகம்  என்ற கதையில்  ஓய்வு பெற்ற ஒரு பொறியிலாளர் நகரவாழ்க்கையை வெறுத்துத் தன் கிராமத்திற்கு வரும் போது நாகரிகம் தன் கிராமத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்னும் கதையைச் சொல்லியிருந்தார். “கிடுகுவேலி”யில் புலம் பெயர்ந்து வெளிநாட்டுக்குப் போகும் போது நம் கிடுகுவேலிப் பாரம்பரியம் சொந்த நாட்டில் எவ்வாறு சிதைகின்றது என்பதைக் காட்டுகின்றது.  நடந்தாய் வாழி வழுக்கியாறு – வழுக்கியாறுப் பிரதேசத்தில் தொலைந்த தம் மாட்டைத் தேடுபவர்களின் கதை.  கங்கைக் கரையோரம் – பேராதனை வளாகச் சூழலில் மையம் கொள்ளும் காதல் கதை.


கொத்தியின் காதல் என்ற உருவகக் கதையில் கொத்தி என்ற பெண் பேய்க்கும் சுடலைமாடன் என்ற ஆண் பேய்க்கும் வரும் காதல், சாதி வெறி பிடித்த எறிமாடன் என்ற இன்னொரு பேயால் கலைகிறது. எமது சமூகத்தில் சாதிப்பேய் எப்படித் தலைவிரித்தாடுகிறது என்பதைக்காட்டும் கதை. இது சிரித்திரன் பத்திரிகையில்  தொடராக வந்து மாணிக்கம் பிரசுரமாக வெளிவந்தது. கடல்கோட்டை – ஒல்லாந்தர் காலத்தில் ஊர்காவற்துறை கடற்கோட்டையைப் பின்புலமாக வைத்து எழுதப்பட்ட அருமையான வரலாற்று நவீனம். தீம் தரிகிட தித்தோம் – 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்களம் சட்டம் கொண்டுவந்தபோது மலர்ந்த கற்பனைக் காதற் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச் சிங்களச் சட்டவிவாதம் நடந்தபோது எடுக்கப்பட்ட குறிப்புக்களும் விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க , இன்னொரு பக்கம் தமிழ்ப் பையனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களத்தை மிகவும் அழகாகக் காட்டியிருப்பார். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்துபோகும்.


இவர் எழுதிய “வாடைக் காற்று” என்ற நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது.  அடிப்படையில் ஒரு புவியியல் ஆசிரியர்/ஆய்வாளன் என்பதால் இந்த நாவல் வெறும் கதைக்கோர்வையாக மட்டுமில்லாது மீன்பிடிப் பிரதேச வாழ்வியலையும், அவர்கள் மீன் பிடிக்கும் முறையையும் விளக்கும் விபரணப் படைப்பாகவும் திகழ்கின்றது. மற்றையப் படைப்பாளிகளிடம் இருந்து தனிக்கென ஒரு பாணியை ஏற்படுத்துகையில் களம் பற்றிய புவியியல் ஆதாரங்களை அவரின் மற்றையப் படைப்புக்களிலும் அவதானிக்கலாம். வாடைக்காற்று திரைப்படமான போது கமலாலயம் மூவிஸ் சார்பில் ஏ.சிவதாசன், பா.சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்தக் கதையைத் திரைப்படமாக்கினர்.


செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சிகள் மிக முக்கியமானவை.  குறிப்பாக மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய 12 மணி நேரம் என்கிற நூலும், 1977 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதக் கலவரத்தின் முதல்நாள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய 24 மணி நேரம் என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள்.  இவ்வகையான ஆவணப்படுத்தல்கள், வரலாற்று ஆய்வுகளின் முக்கியம் அதிகமானதாக இன்று உணரப்படுகையில் இந்த இரண்டு நூல்களையும் செங்கை ஆழியான், நீல வண்ணன் என்ற இன்னொரு புனைபெயரில் 40 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கின்றார் என்பது இன்னமும் ஆச்சரியமளிக்கின்றது. அவரது இலக்கியச் செயற்பாடுகளில் ஈழத்துச் சிறுகதை வரலாறு மிகமுக்கியமாது. மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள் என்கிற பத்துக்கு மேற்பட்ட தொகுப்புநூல்களை அவர் உருவாக்கியிருக்கின்றார்.


மாணவர் சமூகத்திற்கு அவரின் ஆக்கங்கள் அதிகளவுக்கு உசாத்துணை நூல்களாக உதவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களின் வரலாற்றுப் பாட நூல்களில் தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான விபரங்கள் உரியளவிற்கு இடம் பெற்றிருக்கவில்லையெனவும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரான யாழ்ப்பாண இராச்சியம் பற்றி ஓரிரு பத்திகளுடன் வரலாற்றுப் பாட நூலில் தமிழர் விவகாரம் நிறைவடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில் செங்கை ஆழியானின் நந்திக்கடல், கந்தவேள் கோட்டம், காதல் கோட்டை, குவேனி, நல்லைநகர் நூல், ஈழத்தவர் வரலாறு, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, தமிழர் தேசம் போன்ற நூல்கள் எதிர்காலத் தலைமுறையினர் கற்று அறிந்து கொள்வதற்கான அரிய தகவல்களின் பெட்டகமாக காணப்படுகின்றன.  இவர் எழுதிய “ பூமியின் கதை”  என்ற புவியல் புத்தகம் இன்றுவரை பல பல்கலைக் கழகங்களின் பாடநூலாக உள்ளத்தில் இருந்தே இதனை அறியலாம்.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருந்த செங்கை ஆழியான் அவர்கள் ஜனரஞ்சக தமிழ் இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்தார். ஈழத்தில் பிறந்ததாலோ என்னவோ இவரது இலக்கிய வாழ்வு ஒரு வட்டத்தை விட்டு வெளிவராமலே அடங்கிப் போயிற்று. வரலாற்று நாவல்கள், நகைச்சுவை நாவல்கள், சாதிய நாவல்கள், புலம் பெயர் நாவல்கள், அரசியல் நாவல்கள், தமிழ் தேசிய இன நாவல்கள், போர்க்கால நாவல்கள் என 34 நாவல்களை எழுதி சாகித்திய ரத்னா, சாகித்திய விருது உட்பட பல விருதுகளை வென்று வாழ்ந்தபோது கடந்த  2016, பெப்ரவரி 28 அன்று மீண்டும் மீள முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். மண்ணுலகை விட்டு விண்ணுலகு சென்றாலும் நம் வாசிப்பில் என்றும் வாழ்வார் எங்கள் ஆசான்.


தொகுப்பு – தியா



செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்


பிறப்பும் கல்வியும்

இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழந்தையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார். இவர் 28.02.2016 இல் தனது 75 வது வயதில் இயற்கையெய்தினார்


இவருடைய ஆக்கங்கள்

தொடர் கதை

ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.


திரைப்படம்

இவர் எழுதிய 'வாடைக் காற்று' புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.


புதினங்கள் மற்றும் குறும் புதினங்கள்

நந்திக்கடல்

சித்திரா பௌர்ணமி

ஆச்சி பயணம் போகிறாள்

முற்றத்து ஒற்றைப் பனை

வாடைக்காற்று

காட்டாறு

இரவின் முடிவு

ஜன்ம பூமி

கந்தவேள் கோட்டம்

கடற்கோட்டை

சிறுவர் புதினங்கள்

பூதத்தீவுப் புதிர்கள்

ஆறுகால்மடம்

வரலாற்று நூல்கள்

யாழ்ப்பாண அரச பரம்பரை

நல்லை நகர் நூல்

24 மணிநேரம்

மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம்

ஆய்வு நூல்கள்

ஈழத்துச் சிறுகதை வரலாறு

தொகுப்புக்கள்

மல்லிகைச் சிறுகதைகள் - 1

மல்லிகைச் சிறுகதைகள் - 2

சுதந்திரன் சிறுகதைகள்

மறுமலர்ச்சிச் சிறுகதைகள்

ஈழகேசரிச் சிறுகதைகள்

முனியப்பதாசன் கதைகள்

ஆயிரமாயிரம் ஆண்டுகள்

புவியியல்

அடிப்படைப் புவியியல் உலகம் இலங்கை

இலங்கைப் புவியியல்

பிற

நல்லை நகர் நூல்

ஈழத்தவர் வரலாறு

‘இலக்கியச் செம்மல்’ செங்கை ஆழியான்

 


ஈழம் தமிழ் இலக்கியங்கள் தமிழ்ச் சான்றோர்கள்

மண்வாசனை கொண்ட எழுத்தாளர் வரிசையில் செங்கை ஆழியானுக்கு இடம் பிடித்துக் கொடுத்த வாடைக் காற்று என்ற நாவல் ஈழத்து நாவல் வரலாற்றில் ஒரு மைல் கல். செங்கை ஆழியானின் காட்டாறு, கடற்கோட்டை, ஒரு மைய வட்டங்கள் முதலிய நாவல்கள் இத்தளத்தில் எழுதப்பட்டவையாகும். மண்ணும் மக்களும், மக்களின் உரிமைக்குரல்கள், உழைப்புச், சுரண்டல், சாதிக்கொடுமை. சீதனக் கொடுமை, இனவெறிப் போராட்டம் என்ற வகையில் செங்கை ஆழியானின் சமூகம் நோக்கிய அகலப் பார்வை, அவரது நாவல்களின் கருப்பொருளாக அமையலாயின.”


sengai aazhiyaan“சமுதாயப் பிரச்சனைகளை நகைச்சுவையுடன் விமர்சிக்கும் பண்பு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கியத் துறையில் ஒரு தனிப் பிரிவாக வளர்ச்சியடையவில்லை. இவ்வகையில் குறிப்பிடத்தக்க ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்ட பெருமை செங்கை ஆழியானையே சாரும். ‘விவேகி’ மாத இதழில் தொடர்கதையாக வந்து 1969 ஆம் ஆண்டு நூலுருவம் பெற்ற இவரது ‘ஆச்சி பயணம் போகிறாள்’ நாவல் தான் இவ்வகையில் முதல் முயற்சியாகும்.” எனப் பேராசிரியர் நா. சுப்பிரமணியன் புகழ்ந்துரைத்துள்ளார்.



 

 “ஈழத்து ஆக்க இலக்கியத்துறையில் கடந்த மூன்று சகாப்தங்களாகச் சிறுகதை நாவல் ஆகிய படைப்புகள் மூலம் தமது பெயரை நிலை பெறச் செய்தவர் செங்கை செழியான். அவரது கல்விப் புலமையும் உத்தியோகரீதியான அனுபவங்களும் இயற்கையாகவே அவரிடம் காணப்பட்ட கலை, இலக்கிய ஆர்வமும் இலக்கியத்துறையில் அவர் காட்டும் நிதானமும் அவரைச் சிறந்த இலக்கிய கர்த்தா என்ற வரிசையில் நிலை நிறுத்தியுள்ளன ” என பேராசிரியர் இ. பாலசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.


செங்கை ஆழியான் க. குணராசா 25.01.1941 அன்று யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கந்தையா – அன்னம்மா வாழ்விணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் , இடைநிலைக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து பயின்று புவியியல் சிறப்புப் பட்டதாரியாகத் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 1984 ஆம் ஆண்டு முதுகலைமாணி பட்டத்தையும், 1991 ஆம் ஆண்டு கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.



 

பேராதனைப் பல்கலைக்கழ பயிற்சியாளராகவும் , கொழும்புக் பல்கலைக் கழக உதவி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலை வருகை விரிவுரையாளராகவும், ஆறு ஆண்டுகள் ஆசிரியராகவும், கடமையாற்றியுள்ளார். 1971 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, கிண்ணியா, செட்டிக்குளம் ஆகிய ஊர்களில் காரியாதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் உதவி அரசாங்க அதிபராகவும், மேலதிக அரசாங்க அதிபராகவும், பிரதிக்காணி ஆணையாளராகவும் செயல்பட்டார். கிளிநொச்சி மாவட்டம் உருவாகியபோது, அம்மாவட்டத்தின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்திய நிர்வாக சேவை அதிகாரிகளில் ஒருவராகச் செயல்பட்டார். நிர்வாக சேவை அதிகாரியாக வன்னிப் பிரதேசத்தில் நீண்ட காலம் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பிரதேச செயலாளராக பதவி வகித்தார். மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளராக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். இறுதியாக நல்லூர் பிரதேசச் செயலாளராக கடமையாற்றி 2001 ஆம் ஆண்டு அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்றார்.



 

ஓய்வு பெற்ற பின்னரும் சங்கானை, தெல்லிப்பனை ஆகிய பிரதேசங்களின் பிரதேசச் செயலாளராகவும் , வடக்கு கிழக்கு மகாணத்தின் வடபிராந்திய ஆணையாளராகவும் பதவி வகித்தார். பின்னர் ஓராண்டு காலம் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக பணிபுரிந்தார்.


இவரது சிறுகதைகள் ஈழநாடு, வீரகேசரி, தினகரன், புதினம், செய்தி, சஞ்சீவி, சுதந்திரன், சிந்தாமணி, இளங்கதிர், தமிழின்பம், கதம்பம், கலைச்செல்வி, தேனருவி, அமுதம், விவேகி, இலக்கியம் , மலர், அஞ்சலி, மல்லிகை, மாணிக்கம், அமிர்தகங்கை, மாலைமுரசு, வெளிச்சம், நான், ஆதாரம், அறிவுக்களஞ்சியம் , அர்ச்சுனா, ஈழமுரசு, நுண்ணறிவியல், சிரித்திரன், தினக்குரல், ஈழமுரசு, மறுமலர்ச்சி , ஈழநாதம், புதிய உலகம் முதலிய இலங்கை இதழ்களிலும் , உமா, தாமரை , கணையாழி, குமுதம், சுபமங்களா , கலைக்கதிர், கலைமகள், ஆனந்தவிகடன் முதலிய தமிழ்நாட்டு இதழ்களிலும், ஈழநாடு ( பாரீஸ்) , ஈழகேசரி ( லண்டன்) , கனடாவிலிருந்து வெளிவரும் நம்நாடு, தாயகம், செந்தாமரை, உதயன் முதலிய இதழ்களிலும் வெளிவந்ததுள்ளன.



 

 செங்கை ஆழியான் ‘ புவியியல் ’ என்ற அறிவியல் இதழை நடத்தினார். மேலும், ‘விவேகி’ என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். சிங்கள இதழ்களான ராவய, சிலுமின, லங்காதீப முதலியவற்றில் இவரது சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.


செங்கை ஆழியான் படைத்தளித்துள்ள நூல்கள், நாவல்கள் : நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், இரவின் முடிவு, கொத்தியின் காதல் , பிரளயம், வாடைக்காற்று, கங்கைக்கரையோரம், காட்டாறு, ஒரு மைய வட்டங்கள், யானை, காவோலை, கனவுகள் கற்பனைகள் ஆசைகள், இந்த நாடு உருப்படாது, கிடுகுவேலி, காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள், கடற்கோட்டை, மழைக்காலம், ஓ அந்த அழகிய பழைய உலகம், தீம்தரிகிடத்தோம், குவேனி, போராடப்பிறந்தவர்கள், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, கந்தவேள் கோட்டம், அக்கினி , ஜன்மபூமி, கொழும்பு லாட்ஜ், போரே நீ போ, மழைக்காலம், மரணங்கள் மலிந்த பூமி, ஈழராஜா எல்லாளன், யாக குண்டம், வானும் கனல் சொறியும், ஆறுகால்மடம் (சிறுவர் நாவல்), பூதத்தீவுப் புதிர்கள் ( அறிவியல் நாவல்) .


குறுநாவல்கள் : அலைகடல் தான் ஓயாதோ , யொகாறா, நிலமகளைத் தேடி, முற்றத்து ஒற்றைப் பனை, நடந்தாய் வாழி வழுக்கியவாறு, அக்கினிக் குஞ்சு, மீண்டும் ஒரு சீதை, சாம்பவி, யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று, பழைய வானத்தின் கீழ்.



 

புனைகதை சாராத படைப்புக்கள் : இருபத்து நான்கு மணி நேரம், மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது, பன்னிரண்டு மணிநேரம், சுனாமி.


ஆய்வு நூல்கள் : நல்லை நகர் நூல், ஈழத்துச் சிறுகதை வரலாறு, ஈழத்தவர் வரலாறு, யாழ்ப்பாணக் கோட்டை வரலாறு, சுருட்டுக் கைத்தொழில், யாழ்ப்பாண அரச பரம்பரை, துயககயே னுலயேளவல , மகாவம்சம் கூறும் இலங்கைச் சரித்திரம்.


சிறுகதை தொகுப்புகள் : இதயமே அமைதி கொள், யாழ்ப்பாணத்து இராத்திரிகள், இரவு நேரப் பயணிகள், குந்தியிருக்க ஒரு குடிநிலம், கூடில்லா நத்தைகளும் ஓடில்லா ஆமைகளும்.


தொகுத்து பதிப்பித்த நூல்கள் : கதைப் பூங்கா ( சிறுகதைகள்), விண்ணும் மண்ணும் ( சிறு கதைகள்) , காலத்தின் குரல்கள் ( சிறு கதைகள்) , சம்பந்தன் சிறுகதைள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், சிரித்திரன் சுந்தரின் நானும் எனது கார்ட்டூன்களும், ஈழகேசரிச் சிறுகதைகள், சிங்களச் சிறுகதைகள், முனியப்பதாசன் சிறுகதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள், புதுமைலோலன் சிறுகதைகள், சுதந்திரன் சிறுகதைகள், ஆ.முத்துதம்பிப் பிள்ளையின் யாழ்ப்பாணச் சரித்திரம், எஸ்.ஜோனின் யாழ்ப்பாணச் சரித்திரம், ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமர்சனம் , யாழ்ப்பாண வைபவமாலை - ஒரு மீள் வாசிப்பு.



 

                இவரது இரவு நேரப் பயணிகள் என்ற சிறுகதைத் தொகுப்பு, ‘ ராத்திரி நொனசாய்’ எனச் சிங்களத்தில் சாமிநாதன் விமல் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ‘காட்டாறு’ என்ற நாவல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘வன மத கங்க’ என்ற பெயரிலும், ‘வாடைக்காற்று’ என்ற நாவலும் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டு உள்ளது.


                Geography of Cylon  , Geography of World, Geography of India, Environmental Geography, Physical  Geography, Human Geography, Topography உட்பட 35-க்கும் மேலான புவியியல் சம்பந்தமான நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘பூமியின் கதை’ என்ற புவியியல் நூல் பல பல்கலைக் கழகங்களில் பாடநூலாக இடம் பெற்றுள்ளது.


                செங்கை ஆழியானின் இலக்கியச் செயற்பாடுகளில் அவரது ஆவணப்படுத்தல் முயற்சி மிக முக்கியமானது ஆகும். மட்டக்களப்பில் ஏற்பட்ட சூறாவளியைப் பற்றி அவர் எழுதிய 12 மணி நேரம் என்கிற நூலும், 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இனக்கலவரத்தின் முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச வன்முறைகள் பற்றி அவர் எழுதிய 24 மணி நேரம் என்கிற நூலும் முக்கியமான ஆவணங்கள். இந்த இரண்டு நூல்களையும் நீல வண்ணன் என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்.


இவர் பெற்ற விருதுகள் மற்றும் பரிசுகள் : இலங்கை தேசிய சாகித்திய மண்டலப் பரிசுகள் ( நான்கு) , சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசு, ஈழ நாடு 10 ஆவது ஆண்டு நாவல் பரிசு மற்றும் சிறு கதைப் பரிசு, வடகிழக்கு மாகாண சாகித்திய விருதுகள் (ஆறு) , இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு (ஐந்து) , கொழும்பு தமிழ்ச் சங்கப் பரிசுகள் (இரண்டு) , தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி நினைவு இலக்கியப் பரிசு, கலைமகள் குறுநாவல் போட்டி பரிசு, விஜயகுமாரதுங்க கலாச்சார விருது, அரசகரும மொழித் திணைக்கள கலாச்சார நிகழ்ச்சித் திட்டப் பரிசு, அமுதம் சிறுகதைப் போட்டி பரிசு, இளங்கதிர் குறுநாவல் போட்டி பரிசு, வீரகேசரி அகில இலங்கை நாவல் போட்டி பரிசு முதலிய பரிசுகள் பெற்று உள்ளார்.



 

                இலங்கை இந்து கலாச்சார அமைச்சு, ‘ இலக்கியச் செம்மல்’ என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. கனடா சி.வை. தாமோதரம்பிள்ளை ஒன்றியம் ‘புனைகதைப் புரவலர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு 2001 ஆம் ஆண்டு நடத்திய தமிழ் இலக்கிய விழாவில் ‘ஆளுநர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது .


                இலங்கை அரசு இலக்கியத் துறையின் உயர்ந்த விருதான ‘சாகித்திய ரத்னா’ விருதினை 2009 ஆம் ஆண்டு செங்கை ஆழியானுக்கு வழங்கிச் சிறப்பித்தது. மேலும் ‘கலைஞானச் சுடர்’ ‘கலாபூஷணம்’ முதலிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.


                இவரது ‘பாடிப்பறந்த பறவைகள்’ என்ற திரைப்பட எழுத்துக்கு விஜயகுமாரதுங்க நினைவு மன்றம் முதல் பரிசு வழங்கிச் சிறப்பித்தது. ‘கஞ்சித் தொட்டி’ என்ற நாடகம் நாவலர் நூற்றாண்டு விழாப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது.


                யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகவும், இலங்கை இலக்கியப் பேரவையின் தலைவராகவும், தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும் விளங்கி சிறப்பாகச் செயல்பட்டார். மேலும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையின் நினைவாக வழங்கப்படும் சம்பந்தர் விருதுக் குழுவின் இணைப்பாளராகவும், கனக செந்தி கதா விருது அமைப்பின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.


                இவரது மனைவி கமலாம்பிகை, அவர் ஒய்வு பெற்ற பாடசாலை அதிபராவார். செங்கை ஆழியானின் மணிவிழா 25.01.2001 அன்று கொண்டாடப்பட்டது.


                சீதனம் என்பது யாழ்ப்பாணச் சமூகத்தின் தனித்துவமான அம்சம். ஒரு குடும்பத்தில் மூத்தப்பிள்ளை பெண்பிள்ளையாகப் பிறந்து விட்டால் அக்குடும்பம் குழந்தை கிடைத்த சந்தோசத்தையே இழந்துவிடும். சிறுது காலம் சோகத்தில் ஆழ்ந்திருக்கும். அடுத்தடுத்து இரண்டு, மூன்று பெண் பிள்ளைகள் பிறந்துவிட்டால் அக்குடும்பத்தில் பெற்றோர் தம் வாழ்வின் சந்தோசங்களையே இழந்து விடுவர். பெண்பிள்ளைகளுக்குச் சீதனம் சேர்ப்பதற்காக கடுமையாக உழைப்பார்கள்.



 

                செங்கை ஆழியானின் அக்கினி, கிடுகுவேலி, காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் ஆகிய நாவல்களில் சீதனம் முக்கிய இடம் பெற்றுள்ளது.


                “யாழ்ப்பாண சமூகத்தில் சீதனம் இரண்டு வகையாகப் பெற்றுக்கொள்ளப்படுகிறது. பெண் வீட்டார் தம் பெண்ணுக்காக கொடுக்கும் வீடு, காணி முதலிய அசையா சொத்துக்களும், ஆபரணங்களும் பணமும் சீதனம் என்ற பெயரில் குறிக்கப்படுகின்றன. இவற்றைவிட அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளையின் வீட்டாருக்கும் ஒரு தொகைப் பணமாக வழங்கப்படுகிறது. இது மாப்பிள்ளையின் பெற்றோருக்கோ, மணமாகாத சகோதரிகளுக்கோ வழங்கப்படுகின்றது. இப்பணம் மணமகனின் சகோதரியின் வாழ்வுக்கு அவசியமானது என்பதால் ஆணின் தரப்பிலிருந்து அது நியாயப்படுத்தப்படுகின்றது. இத்தகைய நிலைமையினால் பெண்ணைத் தெரிவு செய்யும் போது ஆண்கள் தமது விருப்புகளைப் புறக்கணித்து சீதனம், நன்கொடை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே பெண்ணைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இது ஒரு வகையில் ஆணைப் பாதித்தாலும், இதனால் வாழ்வை இழந்து நிற்பவர் பெண்ணே. சீதனப் பணமில்லாமல் வாழ்வை இழந்து நிற்கும் பெண்களால் சமூகத்தில் பல்வேறு விதமான பிரச்சனைகள் உருவாகின்றன. இவ்வாறானப் பிரச்சனைகளை செங்கை ஆழியானின் நாவல்களினூடாகவும் காண முடிகிறது.” என ‘செங்கை ஆழியானின் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்’ என்ற ஆய்வுக்கட்டுரையில் கலாநிதி ம. இரகுநாதன் பதிவு செய்துள்ளார்.


                “சாதி ஏற்றத்தாழ்வு என்ற சமூகக் குறைபாட்டைப் பொருளாகக் கொண்டு இவரால் படைக்கப்பட்ட ‘பிரளயம் ’ நாவல் யாழ்ப்பாணக் கிராமமொன்றில் நிகழ்ந்துவரும் சமுதாயத்தின் மாற்றத்தை அதன் இயல்பான நடப்பியல்புகளுடன் காட்டுவது. நீண்ட காலமாக உயர்சாதிக்குக் குடிமை செய்து வந்த சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒன்று கல்வி, பிற தொழில் முயற்சிகள் என்பவற்றால் அக்குடிமை நிலையினின்று விலகி புதிய வாழ்க்கை முறைக்கு அடியெடுத்து வைக்க முயல்வதே இந்நாவலின் கதைப் பொருள் .”


                “சமுதாய வரலாற்று நோக்கில் நாவல் படைக்கும் முயற்சியில் இருவகை அணுகுமுறைகள் காணப்பட்டன. ஒருவகை இப்பிரச்சனையை வர்க்கப் போராட்ட வரலாறாக நோக்குதல், இன்னொரு வகை சமுதாயத்தின் சிந்தனை மாற்றத்தின் வரலாறாக நோக்குதல். இவற்றில் இரண்டாவது வகை அணுகுமுறையை மேற்கொண்டோரில் ஒருவர் செங்கை ஆழியான். அவரது நாவல் இந்த அணுகு முறைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள தரமான ஆக்கமாகும். தாழ்த்தப்பட்டோர் , உயர்த்தப்பட்டோர் இரு சாரரிடமும் நிகழும் சிந்தனை மாற்றங்கள் இயல்பாகவே சமுதாய மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் ” என்பதை இந்நாவல் உணர்த்தியுள்ளது. என ‘பிரளயம்’ நாவலின் முன்னுரையில் பேராசிரியர் கலாநிதி. நா.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.


‘நிலமகளைத் தேடி’, ‘யாழ்ப்பாணக் கிராமம்’ ஒன்று ஆகிய இரண்டிலும் யாழ்ப்பாணத்தின் சாபக்கேடாக அமைந்துள்ள வேளாளச் சாதியினரின் மேலாதிக்க அசிங்கங்கள் மிக நொய்மையான ஊடு பாவாக இழைக்கப்பட்டுள்ளன. சாதிக் கொடுமை, அதன் அவலம், அதன் அசிங்க முகம் ஆகியவற்றை எடுத்துரைப்பதுடன், பாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்டவர்களெனக் கணிக்கப்படும் மக்கள், உழைப்பின் உபாசகர்களாகத் தலை நிமிரும் மாட்சி சொல்லப்படுகின்றது. யாழ்ப்பாண வாழ்க்கைக் கோலத்திலே இந்த சாதிய ஆதிக்கக் கொடூரம் புரையோடிக்கிடக்கிறது என்கிற உண்மையை உள்வாங்கி இக்கதைகள் அமைந்துள்ளன. பிரச்சாரம் சாராத நேர்த்தி, இவற்றிற்கு யதார்த்தம் என்கிற ஒரு பரிமாணத்தைப் பொருத்துவதில் வெற்றி பெற்றுள்ளது’ என ஈழத்து எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை (எஸ்.பொ.) தமது ஆய்வில் புகழ்ந்துரைத்துள்ளார்.


                “விவசாயக் கிராமமாகிய கடலாஞ்சியிலே நிகழும் சமுதாயச் சுரண்டல்களும் அவற்றுக்கெதிராக நிகழும் எழுச்சியுணர்வே ‘காட்டாறு’ நாவலின் கதையம்சம். விளைந்து வரும் பயிருக்கு தண்ணீர் பெறமுடியாமல் விவசாயிகள் வாடி வருந்தி நிற்கும் வேளையிலே சமூகத்தில் பணம் படைத்தவர்களும், அரச பணியாளர்களும் சகல வசதிகளையும் , வாய்ப்புகளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தகைய ஊழலும், சுரண்டலும் இளையதலைமுறையினரையும், ஏழைகளையும் வர்க்க ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி நிற்கின்றன. இந்நிகழ்ச்சிகளே ‘காட்டாறு ’ என்ற நாவலாக விரிவடைகின்றன.”


“‘காட்டாறு’ நாவல் செங்கை ஆழியானுடைய படைப்பு என்ற வகையில் மட்டுமின்றி வன்னிப் பிரதேச நாவல் என்ற வகையிலும், பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல் வரிசையிலும், குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு நாவலாகும். இந்த நாவல் வன்னி மக்களின் பிரச்சினைகளுக்கு வடிவம் கொடுத்த தரமான படைப்பு என்ற சிறப்புக்குரியது. கடந்த ஒரு நூற்றாண்டுத் தமிழ் நாவல் வரலாற்றிலே வெளி வந்த ஐந்நூறுக்கும் மேற்பட்ட நாவல்களில் விரல் விட்டு எண்ணத்தக்க பத்துத் தரமான படைப்புக்களிலே ஒன்றாக அமையும் சிறப்பு இந்த நாவலுக்கு உள்ளது. ” எனப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் பதிவு செய்துள்ளார்.


                ஈழத்தமிழர்களின் சாதி அமைப்பில் சாதிப்பெயர்கள் முத்திரைகளாகப் பயன்பட்டது போல் சாதியை அமுல்செய்வதற்குப் பல நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. அகமண முறைமை ( ஒவ்வொரு சாதியினரும் தமது சாதிக்குள்ளேயே திருமணம் செய்தல்), சமய நடைமுறைகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் , சமூகச் சடங்குகளின் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள், பொது இடங்களில் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள், உயர் சாதியினரைக் காணும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், விதிக்கப்பட்ட ஆடை, அணிகளைப் பயன்படுத்துதல், பிள்ளைகளுக்குப் பெயரிடுதல் எனப் பலவற்றை இது தொடர்பாகக் காட்டலாம் என ‘ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்’ என்னும் நூலில் கலாநிதி ம. இரகுநாதன் பதிவு செய்துள்ளார்.


விவசாயத் தொழிலாள மக்கள் கூட்டமாக காடுகளை வெட்டிக் கொளுத்தி கழனியாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னோரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன்.. அழகிய விவசாயக் கிராமங்களைப் பெரிய மனிதர் என்ற போர்வையிலே உலாவும் முதலாளித்துவக் கூட்டமும் உத்தியோகக் கூட்டமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றனர் என்பதை நான் என் கண்களால் காணநேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? கல்வியையும் சுரண்டினார்கள். சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. கிராமாந்திர வாழ்க்கையில் ஏதுமறியாத அப்பாவி விவசாயிகள் பல முனைகளிலும் தாம் சுரண்டப்படுவதை அறியாது, அறிய வகையற்றுத் தேங்கிய குட்டைகளாக வாழ்ந்து வருவதையும் , அதிகாரத்தின் சண்டித்தனங்களுக்குப் பயந்து ஒதுங்கியிருப்பதையும் , ஆங்காங்கு சிறு தீப்பொறிகளாக, இளைஞர்கள் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன்.


 கிராமப்புறங்களின் அபிவிருத்திக்காக நல்ல மனத்துடன் ஒதுக்கப்படுகின்ற செல்வம் (நிதி) ஐஸ்கட்டி கைமாறுவதைப் போல் கைமாறி ஒரு துளியாக நிலைப்பதையும் கண்டேன். இந்தத் தேசத்துரோகிகளை , மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டுமென்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானதுதான் காட்டாறு” என நாவலின் முன்னுரையில் செங்கை ஆழியான் நாவல் உருவானதன் பின்னணியைக் குறிப்பிட்டுள்ளார்.


‘தீம்தரிகிடதித்தோம்’ நாவல், இலங்கை அரசாங்கம் 1956 ஆம் ஆண்டு தனிச்சிங்கள மொழிச் சட்டம் கொண்டுவந்த போது மலர்ந்த கற்பனை காதல் கதை. இதில் புதுமை என்னவென்றால் தனிச்சிங்கள மொழிச் சட்ட விவாதம் நடந்த போது எடுக்கப்பட்ட குறிப்புகளும், விவாதமும் காட்டப்பட்டிருக்கும் களம் ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தமிழ் இளைஞனுக்கும் சிங்களப் பெண்ணுக்குமான காதல் களம் காட்டப்பட்டிருக்கும். நாவல் முடியும் போது இனக்கலவரம் ஆரம்பிக்க அவர்களின் காதலும் இனவெறியில் எரிந்து போகும். அத்தோடு ஈழப்பிரச்சனையின் மூல வேர் எது என்பதை அரசியல் பின்னணியோடு தொட்டுக்காட்டுகிறது இந்நாவல். சிங்களம் ஆட்சி மொழியாக்கப்பட்ட போது தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பல்ம், சி. சுந்தரலிங்கம் போன்ற முதுபெரும் தலைவர்கள் சாத்விக முறையில் கிளர்ச்சி நடத்தி, தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.


அறவழியில் நடந்த போராட்டத்தை ‘சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான போர்’ என்று திசைதிருப்பு, அன்றைய இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்கா, காவல்துறையின் துணையோடு சிங்கள சமூக விரோதிகளை ஏவிவிட்டு போராடிய ஈழத்தமிழர்களை அடித்து நொறுக்கினார். பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்கள் வாழக்கூடிய தமிழ்ப்பிரதேசங்களில் சிங்களவர்களை வலுக்கட்டாயமாக குடி அமர்த்தினார். பொருளாதார, சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தினார். தமிழ் மக்களின் அனைத்து எதிர்ப்புகளை மீறி சிங்களத்தை மட்டுமே ஆட்சி மொழியாக்கினார். தமிழ் பேசும் மக்களை அடக்கி ஒடுக்கி இரண்டாந்தர குடிமக்களாக்கும் பிரிவினை உணர்வை ஏற்படுத்தினார். சிங்கள ஆட்சியின் கொடுமையை இனியும் சகிக்க முடியாது என்ற சூழ்நிலையில் தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதையும் இந்நாவல் சித்தரிக்கிறது.


“மரணங்கள் மலிந்த பூமி ” இன்றைய சமூக பொருளாதாரப் பிரச்சனைகளையும் , இன்று வரை தொடரும் மரணங்கள் குறித்த நிகழ்வுகளையும் சித்தரிக்கும் இந்நாவலின் வாயிலாகக் கூறப்படும் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் நினைத்த உணர்ந்த அனுபவித்த விடயங்கள் மரணங்கள் மலிந்த பூமியாக இலக்கியமாக்கப்பட்டிருக்கிறது. இதில் சமூக இடர்பாடுகள் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ” என ‘செங்கை ஆழியானின் சமகாலப் புனைகதைகள்’ என்ற தமது கட்டுரையில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


“‘கங்கைக் கரையோரம்’ நாவல், பல்கலைக் கழக வாழ்வை அடிப்படையாகக் கொண்டு அங்கு கல்வி பயின்று நாட்டின் எதிர்காலச் சிற்பிகளாக வரவிருக்கும் மாணவ சமுதாயத்தின் மனநிலையில் எழும் உணர்ச்சியலையின் ஏற்ற இறக்கங்களைக் காட்டி அதனால் ஏற்படும் வெளியுலகத் தாக்கத்தைச் சித்தரிக்குமொன்றாகக் காணப்படுகிறது”. என கலாநிதி செல்லத்துறை குணசிங்கம் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.


 “ஒரு மீனவ சமூகத்தின் வாழ்க்கையை மிக அற்புதமாகச் செங்கை ஆழியான் வாடைக்காற்றில் சித்திரித்துள்ளார். இவரால் இதை எப்படி படைக்க முடிந்தது என்று எண்ணும் போது அவரின் திறனை நான் வியக்கிறேன். மீனவ மக்களின் சொற்களையும், மீன்பிடித் தொழில் நுணுக்கங்களையும் கலை அழகோடு சித்தரித்துள்ளார். புதிய களம், புதிய சூழல், நாவலின் படிமம் மிக அற்புதமாக இந்த நவீனத்தில் விழுந்துள்ளது.” என தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி கே. டேனியல் பதிவு செய்துள்ளார்.


‘அக்கினிக் குஞ்சு’ நாவலில் சாதியத்தின் அடையாளங்கள் மாறாத கிராமம் ஒன்று காட்டப்படுகிறது. உயர்த்தப்பட்ட சாதியினர் குடிமை முறையை தக்கவைத்துக் கொள்வதில் மேற்கொள்ளும் முயற்சிகளும் அதற்கெதிராகத் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டங்களும் இந்நாவலில் இடம்பெறுகின்றன.


சுமூக நோக்கோடு இலக்கியங்கள் படைக்கப்பட வேண்டும். வாடைக்காற்று அத்தகைய ஒரு ஆக்கம். எழுத்தாளன் சத்திய வேட்கையை, சமூக நோக்கை இந்த நாவலில் காணலாம். நெடுந்தீவின் பகைப்புலத்தில் அங்கு ஒரு பருவத்திற்கு வந்து தொழில் செய்கின்ற மீனவரின் வாழ்வையும், அப்பருவத்தில் வெகு தூரத்திலிருந்து அத்தீவிற்கு வருகின்ற கூழைக்கடா என்ற பறவைகளையும் இணைத்து சிறப்பாக இந்த நாவலைப் படைத்துள்ளார். பாமர மக்களது தொழிலாள வர்க்கத்தினது பிரச்சனைகளை வாடைக்காற்றில் செங்கை ஆழியான் சித்திரித்துள்ளார். செங்கை ஆழியான் ஒரு மகத்தான சாதனையைப் புரிந்துள்ளார். ‘வாடைக்காற்று’ என்ற நாவலின் அமைப்பையும் வெற்றியையும் கண்ட குடும்பசிட்டி அன்பர்கள் அதைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள்.


“வாழத் துடிப்பவர்கள் அழிக்கப்பட்டனர். தாலிகட்டிய கணவனும் மனைவியும் தாம் மாற்றிக் கொண்ட மணமாலைகள் , மலர் மாலைகள் வாடுவதற்கு முன்னரே ஷெல் விழுந்து துடிதுடித்து இறந்தனர். தாலி கட்டியவன் இரத்த வெள்ளத்தில் மணமாலையோடு மிதந்த காட்சியைக் கண்ட மணப்பெண்கள் , காதலித்தவன் கதைத்து விட்டு வீடு சேருமுன் அழிக்கப்பட்ட கதைகள். தோட்டம் சென்றவர்கள் பிணமாக வீடுவந்த காட்சிகள். கந்தோர் (அலுவலகம்) சென்ற கணவனின் உடம்பு சாக்குப் பையுள் துண்டு துண்டாக வந்த காட்சியை கண்ட மனைவிமார். பாடசாலை சென்ற தம் பிள்ளைகள் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் இறந்த செய்தி சுமந்த பெற்றோர். அப்பாவி மக்கள் அராக்கர்களால் கத்தரிக்காய், வெண்டைக்காய் போல் துண்டந்துண்டமாகத் துடிக்கத் துடிக்கத் துண்டாடப்பட்ட செய்திகள் கேட்ட மக்கள். இவற்றைத் தாங்கி வரும் செய்தித்தாள்கள். இக்கதை நடந்த காலப்பின்னணி. கதாநாயகி காதலித்ததால் கருவுண்டால், ‘பங்கருக்குள்’ ஒடி ஒதுங்கிய காதலன் தன் தாயின் கதி தெரியாது ஓடுகிறான். அங்கே அவனின் முடிவு ? கதாநாயகி கலங்கினால், வைராக்கியம் கொண்டாள்...


“அக்கினியைக் கருவாகக் கொண்டேன். போராளியான தன் சகோதரனுக்கு கடிதமெழுதுகின்றாள். தம்பி என் வயிற்றில் வளர்வது கருவன்று. அக்கினி ஆமாம் . இந்தப் பாவிகளைப் பழிகாரார்களைச் சுட்டெரிப்பதற்கு நான் என் வயிற்றில் வளர்ப்பது அக்கினிதான்”. ‘அக்கினி ’ நாவலின் கதைக்கரு மிகவும் போற்றப்பட வேண்டியது ஆகும்.


‘ கிடுகுவேலி’ “மக்களின் அதிக கவனத்தை பெற்ற நாவலாகும். யாழ் மண்ணின் நிகழ் காலப்படப்பிடிப்பு. திருமண ஒப்பந்த வியாபாரங்களும், சீதன வருமானமும், அந்த வருமானத்தைப் பெருக்க அதனை முதலீடாகக் கொண்டு மத்திய கிழக்குப் பயணமும், அதனால் கட்டியவள் கொள்ளும் ஏக்கமும் சீற்றமும் அழகாகக் காட்டப்பட்டுள்ளது. நாவலின் உச்சக் கட்டம் சமீப கால கொடூர நிகழ்ச்சி ஒன்றுடன் கலாபூர்வமாக இணைக்கப்பட்டு, சமகால இலக்கியம் என்ற பெயரையும் பெற்றுவிடுகிறது.” என ஈழத்துச் சிறுகதையாசிரியர் செம்பியன் செல்வன் பதிவு செய்துள்ளார்.


கிடுகுவேலி , யாககுண்டம், கொழும்பு லாட்ஜ், மழைக்காலம் ஆகிய நாவல்கள் புலம் பெயர்வு தொடர்பான பிரச்சனைகளை மையக் கருத்தாகக் கொண்டவைகளாக விளங்குகின்றன.


செங்கை ஆழியானின் நாவல்களில் கதைப்பொருளாக அமைந்து விடயங்களைப் பின்வருமாறு தொகுத்துக் கூறியுள்ளார். ‘செங்கை ஆழியான் நாவல்கள் – ஒரு திறனாய்வு நோக்கு ’ என்ற ஆய்வேட்டின் ஆசிரியர் கந்தையா முருகதாசன்.


சாதிய ஒடுக்குமுறைகள் அவற்றின் விளைவுகள் தாக்கங்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல் நடவடிக்கைகள். அரசியல் ஒடுக்கு முறைகள், ஆயுதப் போராட்ட முயற்சிகள். மனித உறவுகளின் விரிசல்கள். நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறையில் சிதைவுறும் கிராமம். அழிந்து வரும் பாரம்பரியக் கலை மரபுகள். இடப்பெயர்வுகள், புலம்பெயர்வுகள் அவற்றின் விளைவுகள் தாக்கங்கள். ஈழத்தமிழர்களின் தொண்மை.


 ‘யாழ்ப்பாணக் கிராமம் ஒன்று’ இக்குறுநாவல் இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியமை, அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவம் கோட்டைக்குள் நிலை கொண்டமை. கோட்டை விடுதலைப் போராளிகளால் முற்றுகையிடப்பட்டமை, கோட்டைக்குள் இருந்த இராணுவம் பின்னர் தப்பியோடித் தீவுப்பகுதிகளில் நிலை கொண்டமை, அங்கிருந்து யாழ்ப்பாணப் பகுதியை நோக்கி எறிகணைகளையும், விமானக் குண்டுகளையும் வீசியமை முதலிய சம்பவங்களின் சூழ்நிலையில் யாழ்ப்பாணக் கிராமமான கொட்டடிக் கிராமம் பட்ட அவலங்களைச் சித்திரிக்கிறது.


வரலாற்று நூல் எழுதுவதென்பது ஒரு கலை. அதற்கு வரலாற்றுக் குறிப்புகளே முக்கியம். ஆனால், வரலாற்றினை முக்கியமாகக் கொண்ட நவீனம் ஒன்றைப் படைப்பதென்பது முற்றிலும் மாறுபட்டதோரு தனிக்கலை. இதற்கு வரலாற்றுக் குறிப்புகளும் கற்பனைத்திறனும் மட்டுமின்றி, நூற்பயிற்சியும், ஆராய்கின்ற அனுபவமும் அவசியம். இவையனைத்தும் கைவரப் பெற்றவராக இப்புதுமை எழுத்தாளர் விளங்குகிறார். கடல் கோட்டையைப் படைப்பதற்கு அவர் செய்துள்ள ஆய்வுகள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் யாவும் இதனைப் புலப்படுத்துகின்றன.” என ஈழநாடு இதழ் ஆசிரியர் பி. எஸ் . பெருமாள் செங்கை ஆழியானின் வரலாற்று நாவல்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.


“‘கடல் கோட்டை’ யைக் கட்ட நீர் பட்டபாட்டையும், தளரா முயற்சியையும், அதன் போக்கினையும் மற்றைய எழுத்தாளர்களின் சரித்திர நாவல்களைப் போலல்லாது முழுக்க முழுக்கச் சரித்திரச் சான்றுகளை அமைத்து எழுதிய விதத்தையும் நான் மனமார வியந்து பாராட்டுகிறேன். கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சரித்திரச் சான்றுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல தமிழில் இப்படியொரு நவீனம் இதுவரை தமிழ் நாட்டில் வந்ததில்லையென்று தமிழ்த்தாயின் முடியில் சூட்டக் கூடிய ஒரு மலர்!” என எழுத்தாளர் ஈழத்துறைவன் பாராட்டியுள்ளார்.


ஆயிரமாயிரம் இனிய கனவுகளுடன் வாழ்க்கையை எதிர் கொள்ளுதல் இளமைக்காலம். இவற்றைத் தொலைத்து, ஈழத்தமிழ் இளைஞர்களும், யுவதிகளும் தமது மண்ணையும் மானத்தையும் மீட்கும் போரிலே தற்கொடையாளராய் சமர் செய்யும் வீரமும், வைராக்கியமும் அவல வாழ்க்கையிலிருந்து எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை ‘சாம்பவி’ குறுநாவல் அற்புதமாகச் சித்தரிக்கிறது.


“ஆக்க இலக்கியம் இந்த மண் சார்ந்த பிரச்சனைகளையும் பேசுவதாக அமைதல் வேண்டும். அத்துடன் அப்பிரச்சனைகளின் விடிவிற்கு ஒரு மார்க்கம் காட்டுவதாகவும் அமைதல் வேண்டும். இலக்கியம் என வரும்போது அதற்கென ஒர் அழகும், இலக்கிய ஆக்கம் என்று வரும் போது அதில் ஒர் இலக்கியத் தேடலும் இருக்க வேண்டும்.” என செங்கை ஆழியான் எழுதிய ‘நானும் எனது நாவல்களும்’ என்ற நூலில் ஆக்க இலக்கியம் குறித்த தமது கோட்பாட்டை எடுத்துரைத்துள்ளார்.


ஈழத்து நவீன இலக்கிய உலகின் ஈடிணையற்ற இலக்கியவாதியாகத் திகழ்ந்த செங்கை ஆழியான் 08-02-2016 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.


“ஈழத்தின் இன்றைய படைப்பாளர்களுள் செங்கை ஆழியான் மிகவும் வெற்றிகரமானவர்” என ஈழத்து மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி கா.சிவத்தம்பி புகழ்ந்துரைத்துள்ளார்.


“இலங்கை எழுத்தாளர்களில் டேனியலும் செங்கை ஆழியானும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் தம் நாவல்களில் இடம் பெறும் மனிதர்கள் பற்றிய சமூகச் சூழல் , பொருளியல் சூழல், வரலாற்று விபரங்கள் ஆகியவற்றை நிறையத் தருவதில் தமிழ் நாட்டு முற்போக்காளர்களைவிடச் சிறந்து இருக்கிறார்கள்.” என ‘ மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ’ என்ற நூலில் இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பாராட்டியுள்ளார்.


Thursday, 5 November 2020

RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977

 RASIGAMANI ,KANAGA SENTHILNATHAN EELAM WRITER NOVEMBER 5,1916 - NOVEMBER 16,1977




.இரசிகமணி கனக செந்திநாதன் (நவம்பர் 5, 1916 - நவம்பர் 16, 1977)[1] ஈழத்து எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள் எனப் பல்துறைகளில் தன் திறமையை வெளிக்காட்டியவர். தன் கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். கரவைக்கவி கந்தப்பனார் என்ற புனைபெயரில் ஈழத்துப் பேனாமன்னர்களை அறிமுகம் செய்தவர். "நடமாடும் நூல்நிலையம்" என ஈழத்து இலக்கிய உலகில் பேசப்பட்டவர். ஆசிரியராகப் பணியாற்றியவர். வாழ்க்கைச் சுருக்கம் கனக செந்திநாதனின் இயற்பெயர் திருச்செவ்வேழ். இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம், குரும்பசிட்டி ஊரில் கனகசபை, பொன்னம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். ஆரம்பத்தில் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். இளமையிலேயே தந்தையை இழந்த கனக செந்திநாதன், 1937 - 38ல் திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலையில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் மாணவராகப் படித்து வெளியேறி ஆசிரியராகப் பணியாற்றினார்.[2] எழுத்துலகில் சிறுகதை, நாவல், நாடகம், விமரிசனம், கட்டுரை முதலான பல்துறைகளில் இவர் எழுதினார். ஏராளமான நூல்களை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். யாழ் இலக்கிய வட்டத்தை உருவாக்கி வளர்ப்பதிலும் பெரும் பங்காற்றினார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25 சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவற்றை விட அறிஞர்கள் பற்றிய நான்கு வரலாற்று நூல்கள், மூன்று விமர்சன நூல்கள், பல கட்டுரை நூல்களை இவர் எழுதினார். "ஒரு பிடி சோறு" என்ற இவரது சிறுகதை உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.[2] சமூகப் பணிகள் குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இவர் பல முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றினார்.[2] பட்டங்கள் 1964ல் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் "இரசிகமணி" என்ற பட்டம் வழங்கியது. 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் "இலக்கிய செல்வர்" என்ற பட்டம் வழங்கியது. இவரது சில நூல்கள் Noolagam logo.jpg தளத்தில் கனக செந்திநாதன் எழுதிய நூல்கள் உள்ளன. வெண்சங்கு (சிறுகதைகள்) ஈழத்து இலக்கிய வளர்ச்சி (ஆய்வு) வெறும் பானை (நாவல்) விதியின் கை (நாவல்) ஒருபிடி சோறு (நாடகம்) ஈழம் தந்த கேசரி கவின்கலைக்கு ஓர் கலாகேசரி கலை மடந்தையின் தவப் புதல்வன் நாவலர் அறிவுரை கடுக்கனும் மோதிரமும் Image may contain: 1 person, text Share

ஈழத்துத்தமிழ் நாவல்களில் அனைத்துக்குழுக்களாலும் தவிர்க்க முடியாததொரு படைப்பாகக்கருதக்கூடிய படைப்பு அ.பாலமனோரகனின் 'நிலக்கிளி'. அந்த ஒரு படைப்பின் மூலம் ஈழத்துத்தமிழ் இலக்கியத்தில் தனக்கென்றோரிடத்தைப்பிடித்துக்கொண்டவர் அவர். வன்னி மண்ணின் மணம் கமழும் நல்லதொரு நாவல். நிலக்கிளி நல்லதொரு படிமம். நிலத்தில் பொந்துகள் அமைத்து கூடுகட்டி வாழும் அழகிய பறவைகள் நிலக்கிளிகள். இவை தாம் வசிக்கும் வளைகளை விட்டு அதிக உயரம் பறப்பதில்லை. இவ்விதம் நிலக்கிளிகளைப்பற்றிக்குறிப்பிடும் ஆசிரியர் பதஞ்சலியையும் அவ்விதமானதொரு நிலக்கிளியாக நாவலில் உருவகித்திருக்கின்றார். இந்த நாவல் என்னைக்கவர்ந்ததற்கு முக்கிய காரணங்கள்: வன்னி மண் வாசனை தவழும் எழுத்து மற்றும்பாத்திரப்படைப்பு (நாவலின் பாத்திரங்கள் அனைத்துமே உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டிருக்கின்றன). இந்த நிலக்கிளிகளைப்பற்றி நான் இந்நாவலைப்படிப்பதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. எனது பால்ய காலம் வன்னியின் ஒரு பகுதியாக வவுனியாவில் கழிந்திருந்தாலும் அங்கு நான் வாழ்ந்திருந்த காலத்தில் இவ்விதமானதொரு பறவையைப்பற்றிக்கேட்டதேயில்லை. நிலக்கிளி என்பது இன்னுமொரு பறவைக்கு பால மனோகரன் வைத்த பெயரா அல்லது உண்மையிலேயே அப்பெயரில் அழைக்கப்படுமொரு பறவை உள்ளதா? ஏனெனில் இன்று வரை எனக்கு 'நிலக்கிளி' என்னும் பறவை பற்றி 'நிலக்கிளி' நாவலில் வருவதை விட மேலதிகமான தகவல்களெதுவும் கிடைக்கவில்லை. 'நிலக்கிளி' பற்றி வன்னி நண்பர்கள் யாராவது மேலதிகத்தகவல்களிருப்பின் பகிர்ந்து கொள்ளவும். இந்த நாவலின் ஆரம்பம் முரலிப்பழம் பற்றிய வர்ணனையுடன் 'கார்த்திகை மாதத்தின் கடைசி நாட்கள்! அடிக்கடி பெய்த பெரு மழையில் குளித்த தண்ணிமுறிப்புக் காடுகள் பளிச்சென்றிருந்தன. ஈரலிப்பைச் சுமந்துவந்த காலையிளங் காற்றில் முரலிப் பழங்களின் இனிய மணம் தவழ்ந்து வந்தது' என்று ஆரம்பிக்கின்றது. நல்லதோர் ஆரம்பம். அந்த ஆரம்பமே நாவல் இயற்கை எழில் ததும்பும் வன்னி மண்ணின் மணம் கமழும் நாவலென்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. தொடர்ந்து வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த முரலிப்பழங்கள் எனக்கு வவுனியாவில் கழிந்த மாணவப்பருவத்தினை ஞாபகத்தில் எழச்செய்வது வழக்கம். வவுனியா மகா வித்தியாலயத்தின் வாசலுக்கு முன்பாகவிருந்த மரமொன்றின் கீழ் ஆச்சிமார்கள் சிலர் கடலை, பல்வகைப்பழங்களென கடகங்களில் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருப்பார்கள். பருவ மாறுதல்களுக்கேற்ப அவர்கள் கொண்டுவரும் பழங்களின் தன்மையும் மாறுவது வழக்கம். சில சமயங்களில் அவர்கள் 'முதலி'ப்பழம்தான் கொண்டுவருவார்கள். நிலக்கிளி நாவலை வாசிக்கும்மட்டும் அந்த முரலிப்பழங்கள் எனக்கு முதலிப்பழங்கள்தாம். அவ்விதம்தான் நாங்கள் அந்தப்பழங்களை அக்காலகட்டத்தில் குறிப்பிட்டுக்கொண்டிருந்தோம். அக்காலகட்டத்தில் 'முதலி'ப்பழங்கள் கரடிகளுக்கு மிகவும் பிடித்த பழங்களென்று கூறக்கேட்டிருக்கின்றோம். கரடிகளுக்கு மட்டுமல்ல மாணவர்களாகிய எங்களுக்கும் மிகவும் பிடித்த பழங்களாக அவை விளங்கினவென்றே கூறலாம். 'நிலக்கிளி' நாவலில் வாசிப்பவர்களின் மனதையள்ளும் இயற்கை வர்ணனைகள் நிறையவே உள்ளன. அவற்றிலொன்று மாதிரிக்காக: "பதஞ்சலிக்கு தண்ணிமுறிப்புக் கிராமத்தில் எல்லாமே மிகவும் பிடித்திருந்தன. அடர்ந்து கிடக்கும் இருண்ட காடுகள், அவற்றினூடாகச் சலசலத்தோடும் காட்டாறுகள், அவற்றின் கரையோரங்களில் கானமிசைக்கும் காட்டுப்பறவைகள் - இவையனைத்திலும் அவளுக்குக் கொள்ளை ஆசை! பருவத்தின் தலைவாசலில் அடியெடுத்து வைக்கத் தயாராய் இருக்கும் பதஞ்சலி, நடந்து திரிவது கிடையாது. சதா மான்குட்டியின் துள்ளலும் துடிப்புந்தான்! தண்ணிமுறிப்புக் காடுகளில் காணப்படும் மரைகள் நீலங்கலந்த கருநிறம் படைத்தவை. அழகிய கொம்புகளைத் தலையில் ஏந்தி, அவை கம்பீரமாக நடக்கையில் காண்பவர் நெஞ்சு ஒருதடவை நின்றுதான் பின் அடித்துக்கொள்ளும்! அத்தனை கம்பீரம்! " எனக்கு அந்த நாவலில் பிடிக்காத முக்கியமானதொரு விடயம் நாவலின் நாயகியான பதஞ்சலி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தன்னை இழந்தத்தற்குக் காரணமாகத் தன் அறிவுக்கண்ணைத்திறந்து விட்ட புத்தக வாசிப்பே காரணமென்றெண்ணி அவற்றைத்தீயிட்டு எரித்து விடுகின்றாள். அதனை என்னால் ஒரு போதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பதஞ்சலி நூல்களை எரிக்கும் காட்சியைப்பற்றி நூலாசிரியர் பின்வருமாறு விபரிப்பார்: " பிரசவப் படுக்கையால் எழுந்தவுடன் அவள் செய்த முதற்காரியம், தனக்கு உலகரீதியான நாகரீகம், பண்பாடு என்ற பலவற்றைக் கூறிப்பலவீனமடையச் செய்த கதைப் புத்தகங்களை அடுப்பில் போட்டுக் கொளுத்தியதுதான்! அவை கொழுந்து விட்டெரிந்து சாம்பராவதற்கு முன்பே, அவள் அவற்றையும், அவை தனக்குக் காட்டிய புதிய உலகத்தையும், அதன் புதிய வாசல்களையும் அறவே மறந்து போனாள்." அவளுக்கு அறிவுக்கண்ணைக்காட்டிய புத்தகங்கள் அவளைப்பலவீனமடையச் செய்து விட்டதாக ஆசிரியர் விபரிக்கின்றார். அவள் தன்னை மறந்து போனதற்குக் காரணம் புத்தகங்களல்ல. மானுடப்படைப்பின் பல பலவீனங்களே. அவள் புத்தகங்களைப்படித்திருக்காவிட்டாலும் அவள் அவ்விதம்தாம் அச்சூழலில் நடந்துகொண்டிருப்பாள். நாவலிலும் அதற்கான சூழலை ஆசிரியர் விரிவாகவே விபரித்திருப்பார். புயல் வீசுமிரவில் பதஞ்சலியும், ஆசிரியர் சுந்தரலிங்கமும் நிலை தடுமாறுவதை விரிவாகவே விபரித்திருப்பார். உண்மை இவ்விதமிருக்க எதற்காக எழுத்தாளரான ஆசிரியர் புத்தகங்கள் மீது இவ்வளவு வெறுப்பு கொண்டிருந்தாரோ தெரியவில்லை. புத்தகங்களைப்பற்றி வரும் அந்த வரிகளை நீக்கி விட்டாலும் அது நாவலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. எனவே எதிர்காலத்தில் வெளியாகும் 'நிலக்கிளி'யின் புதிய பதிப்புகளில் அவ்வரிகளை நீக்கி வெளியிட்டால் அது நாவலுக்கு இன்னும் வலுச்சேர்ப்பதாகவே அமையுமென்பதென் அபிப்பிராயம். 'நிலக்கிளி'யுட்பட பல நாவல்கள் அக்காலகட்டத்தில் நூலுருப்பெற்றதற்கு முக்கிய காரணங்களிலொன்று வீரகேசரி பதிப்பகம். அவ்விதம் அவர்கள் வெளியிடுவதற்கு முக்கியமான காரணங்களிலொன்றாக இருந்தது அக்காலகட்டத்தில் இலங்கையை ஆண்டுகொண்டிருந்த சிறிமா அம்மையாரின் பொருளாதாரக்கொள்கை. இறக்குமதிகளைக்குறைத்து அனைத்துத்துறைகளிலும் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது அவரது பொருளாதாரக்கொள்கை. அதற்குக்காரணம் அவரது கட்சியினருடன் இலங்கையின் பிரபல இடதுசாரிக்கட்சிகளெல்லாம் கூட்டணி அமைத்திருந்ததுதான். விவசாயிகள் தொடக்கம், பதிப்பகங்கள், திரைப் படத்தயாரிப்பாளர்கள் எனப்பல்துறையினரும் இலாபம் அடைந்துகொண்டிருந்தார்கள். யாழ்ப்பாண விவசாயிகள் தொடக்கம், வன்னிக்குப்படையெடுத்து மிளகாய் வைத்து இலாபம் சம்பாதித்த விவசாயிகள் வரை விவசாயிகள் பலர் அக்காலகட்டத்தில் இலாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தார்கள். அது போல் அக்காலகட்டத்தில் இலங்கையில் பல தமிழ்த்திரைப்படங்கள் (கோமாளிகள், வாடைக்காற்று, நான் உங்கள் தோழன், புதிய காற்று என) வெளியாகி அவற்றில் சில (கோமாளிகள் போன்ற) நூறு நாள்களையும் கடந்து ஓடின. வீரகேசரி பதிப்பகமும் அக்காலகட்டத்தில்தான் ஐம்பது நாவல்களை மாதாமாதம் வெளியிட்டு இலாபம் சம்பாதித்ததுடன் , அதன் மூலம் ஈழத்துத்தமிழ் எழுத்தாளர்கள் பலரின் நூல்கள் வெளிவரவும் காரணமாக அமைந்தது. தமிழர்களுக்கெதிரான அரசியல் ரீதியான அடக்குமுறைகளைச் சிறிமா அரசாங்கம் கட்டவிழ்த்து விடாமலிருந்திருந்தால் உண்மையில் நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதொரு காலகட்டமாக அக்காலகட்டம் விளங்கியிருந்திருக்கும். 'நிலக்கிளி' நாவலைக்கீழுள்ள 'நூலகம்' இணையத்தள இணைப்பினில் வாசிக்கலாம்: : http://noolaham.net/project/01/93/93.htm

Thursday, 26 October 2017

SARUMATHI ALIAS K.YOGANATHAN EELAM WRITER BORN ON 1947,OCTOBER 26



SARUMATHI ALIAS K.YOGANATHAN  EELAM WRITER 
BORN ON 1947,OCTOBER 26




சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) பிறந்த நாள்  அக்டோபர் 26,1947







நமது காலத்தைய மகத்தான கவிஞர்களில் ஒருவரான சாருமதி (இயற்பெயர் க. யோகநாதன்) 28.09.1998 அன்று இறந்தார் என்ற செய்தி ஈழத்து இலக்கிய உலகினையே கவலைக் கடலில் மூழ்கச் செய்தது. கண்ணீர் சிந்தாத இலக்கிய நெஞ்சங்களே இல்லை. ஆனால் வருட காலங்கள் உருண்டோடி விட்டன சாருமதியின் காலத்தில் வாழ்ந்தவர்கள் அவர் வரித்திருந்த மக்கள் இலக்கியத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்ற வகையில் சாருமதியின் பங்களிப்பினை தமிழ் கூறும் நல்லுகத்திற்கு அறிமுகம் செய்ய வேண்டியது சமகால தேவையாகும்.
ஒருவருடைய வாழ்க்கை அவருடைய குடும்ப மட்டத்திற்கு மேலாக சமூக வாழ்க்கையின் யாதேனும் ஒன்றின் மட்டத்திலே நிலக்கப்படுகின்ற தேவை ஏற்பட்டு விட்டதென்றால் அம் மனிதன் வாழ்க்கை ஏதோ ஒருவகையிலும் அளவிலும் சமூக பயன்பாடு மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கொள்ள வேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப கொள்ள முயற்ச்சிகிறார்கள். இதனால் அத்தகையோரின் வாழ்வும் பணியும் இன்றைய நிகழ்வாகின்றது. கவிஞர் சாருமதி அவர்களும் இவ்வாறுதான் இன்றைய நிகழ்வாகின்றார்.
இறந்த மனிதனின் வாழ்வும் நினைவுகளும் இன்றைய பிரச்சனைகளோடு இயைபுடையதாகின்ற போது அவர்கள் பற்றிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன முக்கியத்துவம் உடையதாகின்றது. அவ்வகையில் சாருமதியின் பங்களிப்பினை புரிந்துக் கொள்வதற்கும் அவர் பொறுத்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவரது கொள்கையை நடைமுறையை பட்டைத் தீட்ட முனைந்த சமூக பின்புலம் குறித்த தெளிவு அவசியமானதொன்றாகும். இப்பின்புலத்தில் க. யோகநாதன், சாருமதியாக பரிணாமம் அடைந்த கதை வரலாற்றினை நோக்குவோம்.
யோகநாதன் சாருமதியான சமூக பின்புலம்:-

70 களின் இறுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் தோழர் கிருஷ்ண குட்டி, சுபத்திரன் முதலானோர் தலைமையிலான மக்கள் இயக்கமானது புதியதோர் பரிணாமத்தை எட்டியிருந்தது. இவ்வியக்கம் மக்கள் மத்தியில் வேர்கொண்டு கிளை பரப்பிய போது பல்வேறு ஆளுமைகளை - புத்திஜீவிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் விவசாயிகள் என தன் நோக்கி வேகமாக ஆகிர்ஷித்திருந்தது. அவ்வாறு ஈர்க்கப்பட்ட ஆளுமை சுவடுகளில் ஒருவர் தான் கவிஞர் சாருமதி.
தானுண்டு, தனது குடும்பமுண்டு என்ற நிலையில் வாழ்த்து அந்திம காலத்தில் தமது குடும்ப பெருமைகளை முன்னெடுக்கும் வாரிசாகவும் வளர வேண்டும் என்ற தமது குடும்பத்தாரின் எதிர்ப்பர்ப்புகளுக்கும் முழக்கு போட்டு விட்டு, அவர்களின் எதிர்ப்பினையும் கடந்து ஓர் மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கியவர் சாருமதி. 

இந்தியாவில் தோன்றி வளர்ந்த நகசல் பாரி இயக்கத்தின் தலைவரான சாருமஜிம்த்தாரானால் ஆதரிக்கப்பட்ட யோகநாதன் சாருமதி என தமது பெயரை மாற்றியமைத்துக் கொண்டார். இந்திய நக்கல் பாரி இயக்கத்தின் போக்கினையும் நோக்கினையும் எந்தளவு உணர்ந்திருந்தார் என்பதோ அல்லது அத்தகைய சிந்தனை போர்களை எந்தளவு தமது சூழலில் பிரயோகித்தார் என்பதும் வினாவிற்குரியதாகும். அவரது எழுத்துக்களில் அத்தகைய சிந்தனை வெளிப்படாது என்பதை கவனத்திற் கொள்ளத் தக்கதாகும்.

1970 களில் மட்டகளப்பு பிரதேசத்தில் முகிழ்ந்த புதிய அரசியல் முனைப்புகிளின் பின்னணியில் தனது பாத்திரத்தைத் தீர்க்கமாய் தெளிவாய் வகுத்துக் கொண்டவர். சாருமதி வாழ்வில் பல சமரசங்களையும் கைவிட்டு சிதைந்த சிதைவுறுகின்ற மனித குலத்தின் கம்பீரத்தையும் யௌவனத்தையும் தேக்கி தர முற்பட்டது இவரது வாழ்வு. காலப்போக்கில் பல தோழர்களின் பிரிவு குறிப்பாக தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் மறைவு, இலங்கையில் மட்டுமன்று உலகலாவிய ரீதியிலே இடதுசாரி இயக்கங்களின் தளர்ச்சி, வடகிழக்கில் ஏற்பட்ட மிதவாத அரசியலின் மேலாதிக்கம், ஆயுத அச்சுறுத்தல் இவற்றுடன் தனக்கு கிடைத்த அரசின் சம்பளம் என்பனவற்றுடன் தமது நடவடிக்கைகளுக்கு முழக்கு போட்டிருக்கலாம். மக்கள் இயக்க நடவடிக்கைகளையும் தத்துவார்த்த போராட்டங்களையும் முன்னெடுத்த பலர் இம்மாற்றங்களோடு தடம்புரண்டு போக சாருமதி சற்றே அந்நியப்பட்டு மக்கள் நலன் சார்ந்த பதாகையை அவ்வவ் காலக்கட்டங்களில் முன்னெடுத்து வந்துள்ளார்.

இ;வ்விடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய அம்சம் யாதெனில் குறித்ததோர் காலகட்ட ஆர்பரிப்பில் மக்கள் இயக்கங்களுடன் தன்னை இணைத்திருந்த கவிஞர் அத்தகைய சூழல் இல்லாத காலக்கட்டங்களிலும் நேர்மையுடனும் நம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளார். என்பது அவரது மிக முக்கியமான சமூக பங்களிப்பாகும். அந்தவகையில் ஓர் காலக்கட்டத்தின் இடைவெளியை நிரப்பியவர் சாருமதி என்பதில் இரு நிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை

இத்தகைய பின்ணனியில் தான் சாருமதியின் இலக்கிய சிந்தனைகளும் கோட்பாடுகளும் செழுமைப்படுத்தப்பட்டன. சாருமதியின் சமூக பங்களிப்பு குறித்த கட்டுரையினை ஆய்வு வசதி கருதி பின்வருமாறு வகுத்துக் கூற விழைகின்றேன்.

சாருமதி பல கனதியான கவிதைகளை இலக்கிய உலகிற்குத் தந்துள்ளார். இவரது கவிதைகள் குமரன் தாயகம் தீர்த்திக்கரை, நந்தலாலா, வயல், பூவரசு ஆகிய இதழ்களை அலங்கரிப்பதில் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள்ளது. “கருத்துக்கள் வானத்திலிருந்து வருகின்றனவையல்ல. அவை மக்கள் மத்தியிலிருந்தே வருகின்றன” என்ற மக்கள் இலக்கிய கோட்பாட்;டை வரித்துக் கொண்ட கவிஞர் மக்களையே வரலாற்றின் பிரமக்களாகக் கொண்டு தமது கவிதைகளை தீட்ட முனைந்துள்ளார். தமது கவிதையின் தார்மிகம் குறித்தும் அதன் பிறப்பு குறித்து அவரது உணர்வுகள் இவ்வாறு பிரவாகம் கொள்கின்றன.


அடிமைகளாய் நாங்கள
கவிதைக்கு
அடியெடுத்து பாடவில்லை
விடுதலையின் கீதங்களை
விண்ணதிரும் கலைக்கோஷங்களாய்
நிலையெடுத்துப் பாடுகின்றோம்
ஆயிரம் விலைக் கொடுத்தாலும்
நாங்கள்
கவியை விற்று
பிழைக்க மாட்டோம்
அழுகுரலில் பாட மாட்டோம்
ஆழதழுது ஓயமாட்டோம்
மலைபோல் துன்பங்களை
முதுகினில் ராகத்தை
விடாது இசைத்திடுவோம்.
அடிகளுக்கு அஞ்ச மாட்டோம்
அப்பாவித் தனங்களினால்
எடுபிடியாய் ஆனோரும்
எம் வர்க்கம் ஆயிருந்தால்
அவர்களிடையேயும்
பாட்டாளிவர்க்க அரசியலை
கொண்டு செல்வோம்.
துப்பாக்கிக் குண்டுகளால்
துடி துடித்து இறந்தாலும்
உழைக்கும்
வர்க்கத்தின் விடுதலையை
இறுதி மூச்சிலும் கோஷிப்போம்
நடைமுறைக்கே முதலிடம்
தாம் கொடுத்து பாட்டிசைப்போம்
இயந்திரத்தே இல்லாத
சில்லும் பல்லுமாக
இலக்கியங்கள்
படைக்க மாட்டோம்

கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் உலகிலுள்ள படைப்புகிலே மேலான படைப்பு மனிதனாவான். அதனால் தான் மனிதமன் என்ற சொல் அவருக்கு கம்பீரமாக ஒலிக்கின்றது அத்தகைய மனித குலத்தின் கம்பீரத்தை அதன் நாகரிகத்தை மேற்குறித்த வரிகள் எமக்கு அழகுற படம்பிடித்துக் காட்டுகின்றன. சாருமதியில் காணக்கிட்டும் மனித நேயம் என்பது இக்கவிஞனின் நுண் உணர்வு மிக்க பரந்த இதயத்தை எமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட வர்க்கத்தின் போர் முகமாய் எழுகின்ற இவரது கவிதைகள் மிகுந்த நிசர்சனங்களாய் விளங்குகின்றன.
இனம், மதம், மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து புதியதோர் நாகரிகத்திற்க்காய் அவரது வரிகள் இவ்வாறு நகர்கின்றன.

ஒன்றாய் தொழில் புரிந்தோம்
ஓர் அலுவலகமே சென்றோம்
என்றாலும் எம்மிடையே
எத்தொடர்பும் இருந்ததில்லை
பண்டா நீ சிங்களவன்
பரம்பரை இனவெறியன்
என்றாலும் நான் குறைவோ
என் குரலும் தமிழ் ஈழம்
..........
சி}ங்களப் பெருமையில்
சிந்தித்து வாழ்ந்த நீ
நஞ்சுடன் கலந்தாயென
நாளிதழ் சொன்னது
.......
என்றைக்கும் நானும்
உன் போல் நஞ்சிடம்
தஞ்சம் புக வேண்டி வருமோ!
வறுமையும் வாழ்க்கையும்
உனக்கும் எனக்கும்
ஒன்றென்பதை என்னால் இப்போது தான்
இனம் கான முடிகின்றது
......
தனிச் சிங்களப் பெருமைகள்
உனது தற்கொலையை
தடுக்க முடியாமல் போன போதுதான்
எனது “தமிழ் கனவுகள்”
தகரத் தொடங்கின
என்றாவது ஒரு நாளில்
எமது ஆத்மாக்கள்
ஒன்றாகியே தீர வேண்டும்.

இனக்குரோதம், வகுப்புவாத வெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் மக்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததாக இருக்க முடியும் என்பதை சாருமதியின் மேற்குறித்த வரிகள் வெளிக்கொணர்கின்றன.
குறித்தோர் காலச் சூழலில் உழைக்கும் மக்களின் போர்குணத்தை தீவிரமாகப் பாடிய கவிஞர் இனவாதம் இனக் குரோதம் என்பன கேவலமானதோர் அரசியலின் பின்னனியில் மோசமானதோர் நிலையினை எட்டியபோது அத்தகைய முரண்பாடுகளிலிருந்து அந்நியப் படாமலும் தெலைதூர தீவுகளுக்குள் ஒதுங்கி விடாமலும் அதே சமயம் இயங்கியல் பார்வையிலிருந்து அந்நியப்பட்டாலும் தமது சரித்திர தூரிகையை இவ்வாறு நகர்த்தி செல்கின்றார்.

“தெருவில் பிணங்கள்
தூக்கி வீசப்பட்டிருந்தன
அவைகளின் உதிரத் தொடர்புகள்
துடித்துக் கதறி
ஓர் இனத்தின் கோலத்தை
தம் ஓலத்தில்
உரித்தாக்கி கொண்டன.”

இனவொருக்கு முறை என்பது வர்க்க விடுதலைக்கு அப்பாற்பட்டது என எதிர்க்கொண்டது என எதிர் கொண்ட வரட்டு மார்க்ஸிசவாதிகளிலிருந்தும் அதே சமயம் வர்க்க விடுதலை சாத்தியமற்றது இனவிடுதலைப் போராட்டமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கான தீர்வு எனக் கொண்டு தடம் புரண்ட இடதுசாரிகளின் ஊறைகளிலிருந்தும் அந்நியப்பட்டு இனவொருக்கு முறையினை மார்க்ஸிய நிலை நின்று எதிர்கொண்டமை சாருமதியின் இயங்கியல் பார்வைக்கு வளம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
சாருமதியின் இந்நோக்கும் போக்குமானது காலநகர்வோடு பரந்து விசாலிக்கின்றது. மக்களை ஒட்டியதாய் கிளைப்பரப்புகின்றது. இவரது சுனி ஒரு கலக்காரி எனும் கவிதை லோகாபா பழங்குடியைச் சேர்ந்த சுனில் கொத்தாவின் தற்கொலைக் குறித்து பாடுகின்றது. வங்காளப் பல்கலைக்கழகமொன்றில் ஆ.யு கற்கைநெறியை தொடர்ந்த மாணவியான இவர் இங்கு இடம்பெற்ற சாதி, பால் ரீதியாக இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிராகத் தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிகழ்வு குறித்து சாருமதியின் வரிகள் இவ்வாறு அமைகின்றன.

மாதவியும்
மனிதப் பிறவிதானே
கானல் வரி பாடி
அவளை
மேசையென்று செல்லி
விலகி போன
கோவலன் மட்டுமென்ன
கற்புக்கு அரசனா.....?
.......
இந்தியாவின்
இந்து சனாதனம்
அசிங்கங்களின் குப்பைத் தொட்டி
சுனி
அதையே கண்டனம் செய்தாள்
தன்னைத் தானே
கொன்று போட்டதாய்...!

ஆயிரம் ஆண்டுகளாய் சொல்லித்தும் போன இந்நிய பண்பாட்டையும் இந்து கடமையான சனாதனத்தின் பயன்பாடுகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சிக்கினறார். கார்க்கியின் வார்த்தைகளில் கூறுவதாயின் பொதுவில் சராசரி புத்திஜீவிகளின் அரசியல் கடமையான சமூக முரண்பாடுகளை சமரசம் செய்தல், நியாயப்படுத்தல். அழகுப்படுத்தல் எனும் புண்மைகளைத் தாண்டி இக்கவிஞனின் கவிதைகள் தனக்கே உரித்தான ஒளிப்பிழம்பை ஏற்றி துணிவுடன் நடக்கிறது.

பெண்ணியம் குறித்து கதைத்த போது அதனை வெறுமனே பெண்ணியத்துடன் மட்டும் நிறுத்தி விடுவதாக அவரது வரிகள் அமையவில்லை. அவ்வுணர்வு கள்  சமூகவிடுதலையுடன் ஒட்டியதாய் வேர்கொண்டு கிளைப் பரப்புகின்றது.

விண்வெளி
இராச்சியம் வருக
இங்கு வீழ்ந்தோரெல்லாம்
மீண்டு எழுக
எந்த மனிதர்கட்கும்
சிலுவை
இல்லை என்றுதான் மொழிக.
எங்கும் இராமர்கள் திரிக
ஆயின்
எந்த சீதையும் நெருப்பில்
வெந்துபடாது இருக்க
வேண்டிய விளைகளை சொரிக
...........
சிந்திய குருதியில் குளிதது
வானில் சீக்கிரம்
உதயம் நிகழ்க.

இவ்வரிகளில் கலைத்துவம் சற்றே குறைப்பட்டிருப்பினும் பெண்ணியம் கூறும் பலரும் வாழ்விலிருந்து அந்நியப்பட்ட வழியினைக் காட்டி நிற்க, இவர் வாழ்வை நிராகரிக்காமல் விரக்தியில் மூழ்காமல் அதேசமயம் பெண்னை எந்த சமரசத்திற்கும் உட்படுத்தாமல் தமது சரித்திர தூரிகை கொண்டு புதியதோர் சித்திரத்தை இவ்வாறு தீட்ட முனைந்துள்ளார்.
பெண்விடுதலை சமூக விடுதலையுடன் ஒட்டிப்பார்க்கின்ற கவிஞர் அதனை மரபு, பண்பாடு என்பவற்றுடன் கூடிய வடிவத்தினை கொண்டே ஆக்கியிருப்பது கவிதைக்கு மேலும் வலிமை சேர்க்கின்றது. சமூகத்தின் பன்மைகளைச் சாடுகின்றபோது ஆந்தைக் கூட்டங்களுக்கும் இருளின் ஆத்மாக்களுக்கும் எதிராய் இவர் கவித்தீ உமிழ்வது அதியமானதொன்றல்ல.
மக்களின் நளனிலிரு அந்நியமுறாமல் தீட்டப்பட்டிருக்கும் இவரது கவிதைகளில் காணக்கிட்டும் வாழ்க்கை மீதான காதல், நம்பிக்கை, நேர்மை என்பன திடுக்கிட்டவைக்கும் அளவிற்கு வளம் சேர்;ப்பதாக அமைகின்றது. சித்தாந்த தெளிவும், சிருஷ்டிகர திறனும் ஒருங்கிணைந்துள்ளமையே இதற்கான அடிப்படை எனலாம்.
இவையனைத்தும் சமூக மாற்றங்களின் வரலாற்று ரீதியான நியதியை குறித்து நிற்கின்றன. சாருமதியின் கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவர வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இவை இலங்கை தமிழ் கவிதை வளர்ச்சிக்கு புதிய ரத்தத்தை பாய்ச்சும். முயற்சியாக அமையும்.
சஞ்சிகை ஆசிரியர்

சாருமதி 90 களின் ஆரம்பத்தில் ‘ வயல்’ என்ற இதழை நடத்தி வந்தார். மக்கள் இலக்கிய செல்நெறியை சிதையாதவகையில் முன்னெடுப்பதிலும் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுகின்ற பணியினை இச் சஞ்சிகை சிறப்பாகவே ஆற்றி வந்துள்ளது.6 இதழ்களே வெளிவந்த போதும் மக்கள் இலக்கியத்திற்கு ஆரோக்கியமான பங்களிப்பினை நல்கியுள்ளது. சஞ்சிகையின் அட்டைப்படத்தில் இலக்கிய கர்த்தாக்களின் படங்களைக் கொண்டு அலங்கரிக்கின்ற மரபினை தமிழகத்தில் ‘சாந்தி’ சரவஸ்தி போன்ற இதழ்கள் தோற்றுவித்தன. சாருமதியை ஆசிரியராக கொண்டு வெளிவந்த வயல் சஞ்சிகையும் இப்போக்கினை பின்பற்றியிருந்தன.
குறிப்பிட்ட ஓர் காலம் வெம்மை சூழ் கொண்டபோது குறிப்பிட்டவர்க்கத்தின் போர் முகமாய் அர்ப்பரித்து நின்ற தோழர்கள் கிருஷ்ணகுட்டி, சுபத்திரன் ஆகியோரின் படங்களை அட்டைப்படங்களாக வெளிக்கொணர்வதில் முனைப்புக் காட்டிய வயல் சஞ்சிகை தமது இலக்கிய தளத்தினையும் தெளிவாக இனம் காட்டி நின்றது. பூவரசு போன்ற இலக்கிய வட்டங்களுடன் இணைந்து பூவரசு சஞ்சிகையை வெளியிடுவதிலும் சாருமதியின் பங்களிப்பு முக்கியமானது. பூவரசின் தாரக மந்திரம் இவ்வாறு அமைந்திருந்தது. “கோடையினை வென்றே குடையாகிப் பூமிக்கு பாலூட்டும் பூவரசுகள்” 2 வது இதழின் அட்டைப்படம் இத்தாரகமந்திரத்தை நிறைவூட்டுவதாக அமைந்துள்ளது. மட்டகளப்பு பிரதேசம் சார்ந்த கலை இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்ததில் பூவரசிற்கு முக்கிய இடமுண்டு.

ஆசிரியர்

சாருமதி மட்டக்களப்பு பிரதேசத்தில் ஆசிரியராக கடமையாற்றியமையால் அமர்ந்த கருத்துக்களை முன்னெடுத்து செல்வதில் கூடிய கரிசனைக் காட்டினார். பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று பழமை பேணுவதே இலக்கிய கல்வியெனப் போதித்து வந்த பண்டிதர்களிடையே சாருமதியின் சமூகம் சார்ந்த பார்வை மாணவர்களிடையே புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது. மாணவர்களுக்கு கலை இலக்கியம் சம்பந்தமான குறிப்புகள் புத்தகங்கள் என்பவற்றினை கொடுத்து உதவியதுடன் பின்னேரங்களில் மாணவர்கள் நண்பர்களுடன் கூடி கலந்துரையாடலை மேற்கொள்வதும் இவரது முக்கிய செயற்பாடுகளின் ஒன்றாக அமைந்திருந்தது. தாம் ஏற்றுக் கொண்ட கொள்கையினை வெறும் கல்வி நாகரிக போக்காக கொண்டு தலைவீங்கி திரிகின்ற உளநோயாளராக அல்லாமல் அவற்றினை மாறிவருகின்ற உலக சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கவும் அதனை புதிய தலைமுறைக்கு தேக்கி தரவும் முனைகின்ற செயற்பாடுகளை முன்னெடுத்ததில் சாருமதிக்கு முக்கிய இடமுண்டு.
வெளியீட்டாளர்:-
ஒரு தொகுப்பு பெருமளவுக்குக் கவிதை எழுதிய சாருமதி தனக்கு ஒரு தொகுப்பை போட்டுக் கொள்ளாமல் சுபத்திரன் கவிதைகளை தொகுத்து வெளியிட்டமை அவரது தன்முனைப்பற்ற நாகரிகத்தினைக் காட்டுவதுடன் இன்றைய மக்கள் இலக்கியத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பாகவும் அமைந்துள்ளது. 1960 களில் வடக்கில் இடம்பெற்ற தீண்டாமையை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்டமானது அதன் அடுத்தக்கட்ட பரிணாமமான இனவிடுதலை போராட்டத்தையும் இணைத்து முன்னெடுத்தியிருக்குமாயின் ஆனால் இப்போராட்டத்திற்கு சேரன் போன்ற தவறான கவிஞர்கள் கிடைத்தமையினால் இன்று மஹாகவி உரித்திரமூர்த்தி போன்றோர் மறுக்கண்டு பிடிப்பு செய்யப்படுகின்றார். இன்று மஹாகவி உருத்திரமூர்த்தியை அளவுக்கு மீறி தூக்கி பிடிப்பதன் நோக்கம் பசுபதி சுபத்திரன் போன் மக்கள் இலக்கிய கவிஞர்களை இருட்டியடிப்பு செய்வதாகவே அமைந்துள்ளது. மக்கள் இலக்கிய கோட்பாட்டை தகர்த்துவவதில் பல நண்பர்களும் எதிரிகளாக மாறியுள்ள இன்றைய சூழலில் சுபாத்திரனின் கவிதைகளை தொகுத்து வெளியீட்டமை காலத்தின் தேவையை நாகரிமானதோர் தளத்தில் நின்று பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தது.

பிற முயற்சிகள்:-

சாருமதி அவ்வப்போது எழுதிய கட்டுரைகள், ஆற்றிய சொற்பொழிவுகள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்கள் என்பன தொகுக்கப்பட்டு வெளியிடப்படல் அவசியமான ஒன்றாகும். இவை சாருமதி குறித்து முழுமையாக புரிந்துக் கொள்வதற்கு உதவும்.
சாருமதியின் கட்டுரைகள் அவ்வப்போது வயல்பூவரசு சஞ்சிகைகளில் தலைக்காட்டும். பழந்தமிழ் இலக்கிய பரிட்சயமும் நவீன இலக்கிய நோக்கும் சாருமதியில் ஆழமாகவே வேரூண்றியிருந்தது.
1990 களின் ஆரம்பத்தில் மட்டகளப்பிலே இலக்கிய மேதினம் ஒன்றினை நடத்தினார். திருமதி சித்திரலேகா மௌனகுரு பெண்னியம் தொடர்பாகவும் ந. இரவிந்திரன் அவர்கள் சமகால இலக்கிய செல்நெறி தொடர்பாகவும் உரையாற்றினார்கள் இலக்கிய மே தினம் குறித்து சாருமதியின் கூற்று இவ்வாறு வெளியீட்டிருந்தது
“மேதினம் என்பது உழைக்கும் மக்களின் விடுதலைக்குரிய நாளாகும். உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தை இலக்கிய ரீதியாக முன்னெடுக்கும் எம் போன்றோராலும் இத்தினத்தை மறந்து நிற்க முடியாது.
இவ்வாறு சிறப்புமிக்கதோர் இலக்கிய மேதினத்தை இலங்கை இலக்கிய வரலாற்றில் அறிமுகப்படுத்தியமை பெருமை சாருமதியை சாரும்
சாருமதி மக்கள் ஐக்கிய முன்னஸிக் கோட்பாட்டினை வலியுறுத்தியதுடன் அதனையே நடைமுறையிலும் கடைப்பிடித்து வந்தார். இவர் யாழ் பல்கலைகழகத்தில் மாணவராக இருந்த கால முதல் இறக்கும் வரை இந்த நடைமுறையை பின்பற்றி வந்தார். என்பதற்கொருவர் தேசம் தழுவியவகையில் இலக்கிய நண்பர்களை கொண்டிருந்தமை இதற்குதக்க எடுத்துக்காட்டாகும். குறிப்பாக தேசிய கலை இலக்கிய பேரவை, நந்தாலா இலக்கிய வட்டம், புதிய சிந்தனைக் கலை இலக்கிய பேரவை முதலிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தார்.

சமூக செயற்பாட்டுத்தளத்திலான பலவீனங்கள்:-

கவிஞர் என்றவகையில் சமூக மாற்ற போராட்டங்களுக்கு காத்திரமான பங்களிப்பினை நல்கிய சாருமதி சமூக செயற்பாட்டு தளங்களில் பல தவறுகளுக்கு உள்ளானவராகவும் காணப்படுகின்றார். சஞ்சிகையாளர் பதிப்பாளர் என்கின்றவகையில் அச்சகத்துறையின்; பால் எத்தகைய சக்திகளை சாருமதி அணித்திரட்டியிருந்தார் என்பது குறித்த ஒரு விமர்சன பார்வையை முன்வைத்தல் இவ்விடத்தில் அவசியமானதாகின்றது. ஒரு இலக்கிய அமைப்பையோ சமூக - பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த தக்க அணியையோ காத்திரமான வகையில் அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை என்பதே உண்மையாகும்.

சரியான கோட்பாட்டுத் தெளிவும் உறுதியான அமைப்பாக்க நடைமுறைகளில்லாமையும் இதற்கான அடிப்படை காரணமாகும். அவர் இறுதிவரை இயங்கிய அமைப்புகள் என்பவை உதிரிகளின் கூட்டு என்கின்ற அளவில் செயற்பட்டனவேயன்றிச் சமூகமாற்ற சக்திக்கான ஸ்தாபனக் கட்டமைப்புகளாகத் துலங்கவில்லை.

அவர் சுபத்திரனுடன் செயற்பட்ட அவரது ஆரம்பக்காலங்கள் சுபத்திரன் சண்முகதாசன் தலைமையிலான கம்பூனிஸ்ட் கட்சி மீது விரக்திப்பட்டுக் கவிதைகள் படைத்துக் கொண்டிருந்த துரதிஷடமானதொரு காலமாகும். உட்கட்சி போராட்டத்தைச் சரியான முறையில் முன்வைக்கவும் முடியாமல் வெளியேறி சுதந்திரமாக கட்சி கட்டமைப்பை உருவாக்கவும் முடியாமல் விரக்தியின் ஓலங்களாக அந்தக் கவிதைள் அமைந்தன. சுபத்திரன் கவிதைகளை அற்புதமாக தொகுத்தளித்த சாருமதி இக் கவிதைகளை தனிப்பகுதியாக வகைப்படுத்தியிருந்தமையையும் அவதானிக்க முடியும். அதன் மீது தீர்க்கமான சமூகவியல் அணுகுமுறையுடனான விமர்சனத்தை சாருமதியால் முன்வைக்க முடியவில்லை.

இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்து நோக்குதலும் முக்கியமானதொன்றாகும். சாருமதி உருவாகிய தமது செயற்பாடுகளை முன்னெடுத்த மட்டகளப்பு சமூக அமைப்பினை ஏனைய யாழ்ப்பாண மலையக சமூக அமைப்புகளுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற போது சமூக முரண்பாடுகள் கூர்மையாடைந்த ஒன்றாக காணப்படவில்லை. அத்துடன் சாருமதியின் காலம் என்பதும் உழைக்கும் மக்கள் சார்பான இயக்கங்கள் தளர்ச்சியடைந்திருந்த காலகட்டமாகும். சுபத்திரன் அவர்களின் தற்கொலை சம்பவம் கூட இந்த பின்னணியில் வைத்து நோக்கப்பட வேண்டியதொ ன்றாகும். இக்காலத்துச் சூழலில் வைத்துதான் சாருமதியின் தவறுகளும் நோக்கப்பட வேண்டும். சாருமதியின் பலவீனத்தை விட அவரது சமூக பங்களிப்புக்கான நடவடிக்கைகள் வெற்றிபெற்று நிற்கின்றன என்பதே இங்கு பிரதானமான அம்சமாகும்.

வரலாற்றில் சமூகமாற்றத்திற்காக செயற்பட்ட இயக்கங்கள் தனிமனிதர்கள் இத்தகைய பலவீனங்களுக்கும் பின்னடைவுகளுக்கும் உட்பட்ட வந்துள்ளனர் என்பதையும் அவை காலத்தால் களையப்பட்டு பலமாக மாற்றப்பட்டு வெற்றிகளாக்கப்பட்டவையும் வரலாற்றை நேர்மையுடன் அணுகுபவர்களால் உணரமுடியும்.

முடிவுரை:-

கவிஞனாக ஆசிரியனாக சஞ்சிகையாளராக பரிணமித்த சாருமதியின் பங்களிப்பு மகத்தானது சாருமதி தன் காலக்கட்டத்தில் எதிர் நோக்க முரண்பாடுகளை கண்டு அதற்கு அடங்கி போகாமலும் அம்முரண்பாடுகளிலிருந்து விலகி நின்ற தத்துவ ஞானியாகவும் இல்லாமல் அவர் அம் முரண்பாடுகளை எதிர்கொண்டு அவற்றுக்கான தீர்வினையும் முன்வைக்க முனைந்த சமூக விஞ்ஞானியாகவும் காணப்படுகின்றார். சாருமதியை பொறுத்த கனதியான ஆழமான ஆய்வுகள் வெளிவரவேண்டியது அவசியமானதாகும். அவரது வெற்றிகள் மட்டுமல்ல தோல்விகள் கூட அடுத்த
தலைமுறையினருக்கு வழிகாட்டியாக அமையும்.

இறுதியாக நாற்பத்தொரு வயதினை ஒருவரின் இறப்பு வயதாக கொள்வது துயரகரமானது அதிலும் உழைக்கும் மக்களின் பதாகையை உயர்த்திப் பிடித்த இம்மனிதனின் இறப்பு மிக மிக துயரமானது. சாருமதியின் பதாகையை தடம் புரளாது முன்னெடுத்து செல்வதே மாணவர்கள், நண்பர்களின் மிக முக்கியமான பணியாகும். இதுவே மறைந்த கவிஞருக்காய் நாம் ஆற்றும் அஞ்சலி

- லெனின் மதிவானம்