THANTHI TV AGE 8
THANTHI TV AGE 8 தினமலர் பெற வேண்டிய டிவி, தந்தி குழுமத்திற்குப் போயிற்று. _______ " தந்தி தொலைக்காட்சிக்கு எட்டு வயது" என்ற விளம்பரத்தை தினத்தந்தி நாளிதழில் இன்று (13-11-2020) பார்த்தேன். பழைய நினைவுகள் என் இதயத்தில் சுழன்றன. தினமலர் நாளிதழ் பெறவேண்டிய டிவி அது. சில மாறுபாடுகள் காரணமாக தந்தி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இந்த நிகழ்வுகளில் நான் நேரடி தொடர்பு வைத்திருந்தவன் என்ற வகையில் வரலாற்று நிகழ்வுகளை இங்கே பதிவு செய்கிறேன். மாத்ருபூதம் என் நெருக்கமான நண்பர். அவர் நடத்திய "புதிரா? புனிதமா?" தொலைக்காட்சித் தொடர் தமிழகத்தில் மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவுகள் நடத்த மதுரை, சேலம், புதுவை ஆகிய மாநகரங்களில் தினமலர் சார்பில் நேரடி நிகழ்ச்சிகள் நடந்தன. அரங்கினர் கேள்விகள் எழுப்ப,. மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் மாத்ருபூதம் வேடிக்கையாகவும் விஷயப் பொதிவுகளோடும் பதிலளித்து, அரங்கினரை அதிர வைக்கும் சிரிப்பை உண்டாக்கிக் கொண்டே இருந்தார். இந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சிகளை விஜய் டிவி இரவு நேரங்களி...