SRINIVASA IYENGAR ADVOCATE GENERAL VS BHARADHIYAR
SRINIVASA IYENGAR ADVOCATE GENERAL VS BHARADHIYAR மாதச் சம்பளம் ரூ.4333.60 இட்டிலியாக… srinivasa-iyengar-150x150.jpg 1920ம் ஆண்டில் திருநெல்வேலி தாமிரவருணி ந்திக்கரையில் தமிழ் மாகாண அரசியல் மாநாடு கூடியது. அப்போதுதான் அட்வகேட்-ஜெனரல் பதவியை உதறியெறிந்து விட்டு வந்திருந்த எஸ். சீனிவாஸய்யங்கார்தலைமையில் இம்மாநாடு மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றியது… சீனிவாஸவரதய்யங்காரும் பாரதி மருமான் சங்கரனும் மற்றும் இருவரும் மாநாட்டுக்குப் போய்விட்டு, பாரதியைக் காணக் கடையம் சென்றார்கள். bharathi_chellammalஇரவு பத்து மணிக்கு பாரதியின் வீட்டை அடைந்தார்கள். செல்லம்மாவும் குழந்தை சகுந்தலாவும் உறங்குகின்றனர்; பாரதி படுக்கையை விரித்து எதிரே ஒரு கைப்பெட்டியின் முன் உட்கார்ந்து ‘சுதேசமித்திரனுக்கு’ ஒரு விலாசம் எழுதிக் கொண்டிருந்தார். அருகே ஒரு முக்காலியில் ஹரிகேன் விளக்கு; பக்கத்தில் வெற்றிலைப் பெட்டி. கறுப்புக் கோட்டு, வால்விட்ட தலைப்பாகையுடன்தான் அந்த நேரத்திலும் விளங்குகிறார் பாரதி. வந்தவர்கள் பாரதியை நமஸ்கரித்தனர். அரசியலைப் பற்றி...