ASIN MALAYALA ACTRESS BORN 1985 OCTOBER 26
ASIN MALAYALA ACTRESS BORN 1985 OCTOBER 26 .அசின் தொட்டும்கல் (ஆங்கில மொழி: Asin, மலையாளம்: അസിന് തോട്ടുങ്കല്), (பிறப்பு அக்டோபர் 26, 1985[1])பரவலாக அசின் என்ற பெயரால் அறியப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இந்திய நடிகையும், பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும். அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது. கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். கஜினி (2005), வரலாறு (2006), "போக்கிரி" (2007), "வேல்" (2008), "தசாவதாரம்" (2008) ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றார். தமிழ் கஜினி த...