JOHN CABOT ,ITALIAN EXPLORER AFTER COLUMBUS DISCOVERED CANADA 1497 july 24
JOHN CABOT ,ITALIAN EXPLORER AFTER COLUMBUS DISCOVERED CANADA 1497 july 24 கீழை நாடுகளில், கொட்டி கிடக்கும் செல்வத்தை கொண்டு வர, ஐரோப்பியர் கடல் பயணங்களில் ஆர்வம் காட்டினர். உலகம் உருண்டை என்று, நம்பியவர் ஜான் கபாட். கடலில் ஒரு இடத்தில் பயணத்தை துவங்கினால், துவங்கிய இடத்துக்கே, மீண்டும் வந்து விடலாம் என்று நம்பியவர். புதிய நிலப்பரப்புகளை காணும் ஆர்வமும், வேகமும், அவரிடம் இருந்தது. முஸ்லீம்களின் புனித ஸ்தலமான, மெக்காவுக்கு போன, கபாட், துார கிழக்கு நாடுகளுக்கு செல்ல, ஐரோப்பாவின் மேற்கு திசையில் கடலில் புதிய வழித்தடம் காண வேண்டும் என்ற உறுதியோடு, தாயகம் திரும்பினார். அந்த காலத்தில், கடல் பயணம் என்பது, லேசான விஷயமல்ல; மன்னர்கள், பெரும் வணிகர்கள், நிலப் பிரபுக்களின் உடைமையாக கப்பல்கள் இருந்தன. அவர்கள் மனம் வைத்தால் தான், கடல் பயணம் மேற்கொள்ள முடியும். கப்பல் தவிர, பல நாட்கள் பயணத்துக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வேண்டும். ஐரோப்பா கண்டத்தில், ஸ்பெயினும், போர்ச்சுக்கல் நாடும், கடற்பயணம் தொடர்பாக, கபாட் தீட்டிய திட்டத்தையும் வேண...