SATYAJIT ROY , PIONEER ,DIRECTOR OF HINDI CINEMA BORN 1921 MAY 2 -1992,APRIL 23
SATYAJIT ROY , PIONEER ,DIRECTOR OF HINDI CINEMA BORN 1921 MAY 2 -1992,APRIL 23 . சத்யஜித் ராய் (வங்காளம்: সত্যজিৎ রায়) ஒலிப்பு, (Satyajit Ray, மே 2, 1921 - ஏப்ரல் 23, 1992) இந்தியாவில் உள்ள மேற்கு வங்காளத்தில் பிறந்த, ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட மேதை. இவர் ஒரு திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்ற பன்முகத் தன்மைக் கொண்டவர். திரைப்படம், ஆவணப்படம், குறும்படம் உட்பட மொத்தம் 36 படங்களை இயக்கியுள்ளார். இவர் புனைக்கதை எழுத்தாளர், இசையமைப்பாளர், புத்தக பதிப்பாளர், சித்திரவேலைப்பாடுடைய கைத்திறமுடையவர், வரைபட வடிவமைப்பாளர், திரைப்பட விமர்சகர் ஆவார். வணிகம் கலைஞராக கலைத்துறையில் அறிமுகமானாலும், இலண்டனில் பைசைக்கிள் தீவ்சு (1948) என்ற இத்தாலிய படத்தை பார்க்கும் போது பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், எழுத்தாளருமான சீன் ரேனோயர் மூலம் வணிக நிறுவனம் மூலம் அல்லாத தனி நபர் திரைப்படத் தயாரிப்புக்கு ஆர்வமானார். இவருடைய பதேர் பாஞ்சாலி, அபராஜிதோ, அபுர் சன்ஸார் ஆகிய மூன்று திரைப்படங்களும் உலகப் புகழ் பெற்றவை. ஆக்சுபோர்ட...