Posts

Showing posts with the label 1808

NEPOLEON III OF FRANCE DIED 1873 JANUARY9

Image
NEPOLEON III OF FRANCE  DIED  1873 JANUARY 9 1851 டிசம்பரில் துவங்கி 1852 மார்ச் வரையில் நான்கு மாத காலமாக காரல்மார்க்ஸ் எழுதிய நூல்தான் ‘‘லூயிஸ் போனபார்ட்டின் 18வது புருமையர்’’. ஏழு அத்தியாயங்களைக் கொண்ட இந்த நூல் முதன்முதலில் 1852ல் நியூயார்க்கிலிருந்து வெளியாகத் துவங்கிய `டை ரெவல்யூசன்‘ (னுநை சுநஎடிடரவiடிn) என்ற ஏட்டின் முதல் இதழில் வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரில் ஜோசப் வெயித்மெயர் என்ற அறிஞரால் நிறுவப்பட்ட ஜெர்மனி மொழி மாத ஏடுதான் ‘டை ரெவல்யூசன்’. இந்த ஏட்டில் தனது கட்டுரைத் தொடர் வெளியானது பற்றி, 1869ல் வெளியான இந்த நூலின் இரண்டாவது பதிப்பில் காரல் மார்க்ஸ் தானே எழுதிய முகவுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ‘‘ பிரான்சில் லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் கலகம் செய்து தனது சர்வாதிகார ஆட்சியை நிறுவியதைப் பற்றி அரசியல் வார ஏடான டை ரெவல்யூசனில் எழுதுமாறு எனது நண்பர் ஜோசப் வெயித்மெயர் கேட்டுக் கொண்டார்; அதை ஏற்று வாரந்தோறும் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்’’ என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ‘டை ரெவல்யூசன்’ ஏடு அமெரிக்காவில் வெளியானாலும், ஜெர்மன...