INDIA`S FIRST TEACHER SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10
இந்தியாவின் முதல் ஆசிரியை SAVITRIBAI PHULE 1831 JANUARY 3 - 1897 MARCH 10 பெண்ணுரிமை கல்வி “போ, கல்விபெறு, புத்தகத்தை கையில் எடு, அறிவு சேரும்போது ஞானம் வளரும்போது அனைத்தும் மாறிவிடும், வாசிப்பே விடுதலை” savitribai phuleஇந்த வாக்கியம் வெறும் அறிவுரை அல்ல. இன்றைய இந்திய சூழலில் புதிய கல்விக்கொள்கை என்று புதிர் போடும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளுக்கான பாடம். இதனை 19 ஆம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார் சாவித்ரி பாய் பூலே. ஆம் இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்ரி பாய் பூலே.இவர் 1831 ஆம் ஆண்டில் ஜனவரி -3ல் மகாராஷ்டிரா மாநிலம், சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது குடும்பம் சிறிய விவசாயக் குடும்பமாக இருந்தது. ‘சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” என குழந்தை திருமணம் பற்றி அறிவுத் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். அத்தகைய வேதனை விளையாட்டு சாவித்ரி பாய் பூலே-வின் வாழ்க்கையிலும் நடந்தது. தனது 9 -வது வயதில் ஜோதிராவ் பூலே-வை 1840 ஆம் ஆண்டில் மணந்தார். அப்போது ஜோதிராவ் பூலேவின் வயது 14. சில ஆண்டுகளுக்கு ...