RANI AVANTHIBAI FREEDOM FIGHTER
BORN 1831 AUGUST 16- 1858 MARCH 20
ராணி அவந்திபாய்
“ஆயிரம் ஆயிரம் படைகள் வந்தாலும்
அசைக்க முடியாத வண்ணம் - நீ
போர்களத்தை ஓர் கலையாய் எண்ணி
அனைவரையும் வீழ்த்தும் வீரம்
கொண்ட பெண்ணாக தோன்றிய ஆணே..!
எதிரியின் கையில் மடிவதை
விடுத்து தன்னை தானே மடித்து கொண்ட
வீரத்தின் மறு உருவமாய் இன்றும்
இடம் பிடிக்கிறாய் இத்தேசத்தில்..!!”
ராம்கட் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங் உடல் நலம் குன்றி, தனது மதிப்புமிக்க மனைவியான அவந்திபாயை நிர்கதியாக விட்டுவிட்டு இறந்தார். மாடமாளிகையும், கூட கோபுரமும், பணிபுரிய ஆயிரமாயிரம் சேவகர்கள் இருந்தும், அவரது உடல் நலக்குறைவிலிருந்து அவரது உயிரை பாதுகாக்க முடியவில்லை. அவர் ஆட்சியின் போது ஆங்கிலேயர்கள் பலமுறை அவரது நாட்டை தங்கள் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர முயற்சி செய்தனர். பல்வேறு தந்திரங்களையும் கடைப்பிடித்தனர். மிரட்டியும், நயந்து பேசியும் அவரை திசைதிருப்ப முயன்றனர். ஆனால் அவர் எதற்கும் அடிபணிய மறுத்தார்.
காலம் கனியும் நேரம் பார்த்திருந்தனர் ஆங்கிலேயர்கள். மன்னனின் ஆட்சியில் அடுத்து அமர்வதற்கு அவருக்கு பிள்ளை வாரிசு இல்லை என்று அவர்களுக்குத் தெரியும். அவர் மரணமடைந்த இந்த நிலையில், ஆங்கிலேய அரசு அவர்களது நாட்டை சட்டத்தின் பாதுகாப்பின் கீழ் வைத்தது. தனது நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டார் அவந்திபாய். எதற்கும் துணிந்த, தேசத்தை நேசிக்கும், நான்காயிரம் வீரர்களைத் திரட்டிக் கொண்டு 1857 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார் அவந்திபாய்.
மிகவும் தைரியமாகப் போர் புரிந்தும், தீரத்துடன் எதிர்த்து நின்றும் கூட ஆங்கிலேயர்களின் பெரும் படைக்கு முன் அவந்திபாயால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியைத் தெரிந்து கொண்ட ராணி அவந்திபாய், 1858 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20 ஆம் தேதி தனது வாளைக் கொண்டு தன்னைத் தானே மாய்த்துக் வீரமரணம் அடைந்தார். தனது நாட்டிற்காக தனது உயிரை போர்களத்தில் முன் வைத்த இவரது தியாகம் இவ்வுலகில் என்றும் அழியாத நினைவாக இருக்கிறது.
No comments:
Post a Comment