Saturday 24 March 2018

RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS IN HINDI CINEMA BORN 1978 MARCH 21




RANI MUKHERJI ,ONE OF THE TOP ACTRESS
IN HINDI CINEMA BORN 1978 MARCH 21




ராணி முகர்ஜி (வங்காள: রাণী মুখার্জী) 21, மார்ச் 1978 இல் பிறந்தார், இவர் பாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தில் அறிமுகமாகிய முகர்ஜி, கரன் ஜோகரின் குச் குச் ஹோதா ஹே என்கிற காதல் திரை படத்தில் தன்னுடைய முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அவரது மிகப்பெரிய வெற்றி படம் இதுவே மற்றும் இந்தப்படத்தில் சிறந்த துணைநடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். அதன் பிறகு அவர் நிறைய படங்களில் நடித்தார். ஆனால் எல்லா படங்களும் எதிர்பார்த்ததற்கு குறைவான வெற்றியையே கண்டது. பிறகு அவர் சாத்தியா என்கிற வணிகரீதியாக வெற்றிபெற்ற திரைப்படத்தில் நடித்து அவரது நிலையை தக்கவைத்தார். இத்திரைப்படத்திற்கு அவருக்கு பல விருதுகள் கிடைத்தன.[1]

2004 ஆம் ஆண்டில், அவருடைய இரு திரைப்படங்கள் ஹம் தும் மற்றும் யுவா , அவருக்கு சிறந்த நடிகை மற்றும் சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை வழங்கியது அதுமட்டும் இல்லாமல் இத்திரைப்படங்களே இவருக்கு இரு மிக பெரிய விருதுகளை ஒரே வருடத்தில் வாங்கிய முதல் நடிகை என்ற புகழையும் கொடுத்தது. செவிடு, ஊமை மற்றும் கண் பார்வையற்ற பெண்ணாக நடித்த பிளாக் என்கிற படத்திற்கு அவருக்கு ஒருமனதான பாராட்டும் கிடைத்தது. அத்துடன் பல விருதுகளும் கிடைத்து அவர் பாலிவுட் படங்களில் ஒரு முன்னணி நடிகையாய் திகழ்ந்தார்.
ஆரம்ப வாழ்க்கையும் பின்னணியும்

முகர்ஜி பெங்காலி திரைக்குடும்பத்திலிருந்து வந்தவர். இவரின் தந்தை ராம் முகர்ஜி ஒரு பணியிலிருந்து விலகிய இயக்குனர் மற்றும் ஃபிலிம்மாலயை ஸ்டுடியோவின்[2] ஒரு பங்குதாரரும் ஆவார், இவரின் தாயார் ஒரு பின்னணிப் பாடகி இவரின் சகோதரர் ஒரு படத் தயாரிப்பாளர், இப்போது இயக்குனராக மாறியுள்ளார். இவர் அத்தை, தேபாஷ்ரே ராய், தேசிய விருதுபெற்ற ஒரு பெங்காலி நடிகை மேலும் அவரின் ஒன்றுவிட்ட சகோதரி, காஜோல், ஒரு பிரபல பாலிவுட் நடிகை மற்றும் அவரின் மற்றொரு சகோதரர், அயன் முகர்ஜி வேக் அப் சிட் டின் எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார்.

முகர்ஜி ஒடிசி நாட்டியத்தைப் பயின்றவர்,[3] மேலும் நாட்டியத்தை பத்தாம் ஆண்டிலிருந்து பழகத்தொடங்கினார். ஜுகுவில் உள்ள மனேக்ஜி கூப்பர் மேல்நிலைப் பள்ளியில் முகர்ஜி பயின்றார், பிறகு மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் சேர்ந்தார்.

நடிப்பு வாழ்க்கை

முந்தைய வேலை மற்றும் இடைவெளி, 1997-2002
ப்யார் பூல் (1992) என்ற அவர் தந்தையின் பெங்காலி படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றியபிறகு, முகர்ஜி அவரது நடிப்பை ஐந்து வருடங்களுக்குப் பிறகு தொடர்ந்தார், ராஜா கி ஆயாகி பாரத் (1997) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். வணிக ரீதியாக படம் வெற்றிப்பெறா விட்டாலும், கற்பழிப்புக்கு பலியான ஒருவராக அவரின் பாத்திரம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது. இதனால் ஸ்டார் ஸ்கிரீன் விருதில் நடுவரின் சிறப்பு அடையாளத்தைப் பெற்றார். பாக்ஸ் ஆஃபிஸில் படம் தோல்வியுற்றதால் அவர் மீண்டும் கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தார்.[4]

குலாம் மில் 1998 இல் முகர்ஜி திரும்பவும் வெற்றிபெற்றார், அமிர்கானுக்கு எதிராக; பாக்ஸ் ஆஃபீசில் படம் நன்றாக வந்தது.[5] ஆத்தி க்யா கன்டாலா பாடல் முகர்ஜியை பிரபலமாக்கியது, மேலும் அவருக்கு கன்டாலா பெண் என்ற பட்டப்பெயரையும் வழங்கியது. அந்த வருடத்தில் தொடர்ந்து கரன் ஜோகர்ரின் முதலாவதாக இயக்கி வந்த, குச் குச் ஹோத்தா ஹே யில், ஷாருக்கான் மற்றும் கஜோல் உடன் நடித்தார். படம் மிகப் பெரிய வெற்றிகண்டது,[5] மேலும் தனது முதல் ஃபிலிம் ஃபேர் விருதை சிறந்த துணை நடிகைக்காக பெற்றார்.

மேலும் பல திட்டங்களில் நுழைந்து இவர் தனது தொழிலைத் தொடர்ந்தார். துரதிஷ்டவசமாக அவைகளில் பல பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை. இருப்பினும் பதல் 2000 இல் ஒரு நல்ல படமாக திகழ்ந்தது, இருப்பினும் அந்நேரத்தில் அவரால் அவரது பெயரை நிலைநாட்ட இயலவில்லை.[6][7]

2001 இல், முகர்ஜி அப்பாஸ் முஸ்தானின் காதல் நாடகமான சோரி சோரி சுப்கே சுப்கே வில், சல்மான் கான மற்றும் பிரீத்தி ஜிந்தாவுடன் இணைந்து நடித்தார். ஓர் ஆண்டு தாமதத்திற்குப் பிறகு படம் வெளிவந்தது, மாற்று குழைந்தை பிறப்பு பற்றிய முதல் பாலிவுட் படமாகும்.[8] முகர்ஜியின் பாத்திரம் பிரியா மல்ஹோத்ரா, ஒரு கருக்கலைப்பிற்கு பிறகு தாயாக முடியாமல் வாடகைப் பெண்ணைக் கொண்டு குழந்தைபெறும் பெண்ணாக நடித்துள்ளார். Rediff.com கூறியதாவது, "அழுகை சோகத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லாத ஒரு கதாப்பாத்திரத்தில் முடங்கியுள்ளார். அவரின் சிறப்புக்காக, பார்திய நாரி யில் அச்சடிக்கும் விதமான தியாகியாக தன்னையே எடுத்துச்சென்றார்."[9]

2002 இல், குனால் கோஹிலியின் காதல் படமான முஜ்சே தோஸ்தி கரோகே! யில், ரித்திக் ரோஷன், கரீனா கபூர் உடன் இணைந்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தியாவில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[10] வெளிநாடுகளி்ல் நல்ல வணிகத்தைப் பெற்றது,[11] மேலும் இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் அவரை நுழையவிட்டது: யஷ் ராஜ் ஃப்லிம்ஸ். அடுத்த வருடத்தில், ஷாத் அலியின் பரபரப்பான சாத்யாவில் விவேக் ஓப்பராய்க்கு எதிராக முகர்ஜி நடித்தார். சுஹானி ஷர்மா என்ற பாத்திரத்தில், சிறு வயதிலேயே திருமணம் செய்து அதனால் துண்டிக்கப்பட்ட மற்றும் மனஉளைச்சல் கொள்ளும் மருத்துவ மாணவியாக நடித்துள்ளார், சிறந்த நடிப்பிற்கான ஃபிலிம்ஃபேர் க்ரிட்டிக்ஸ் விருதை பெற்றார், மேலும் பல பரிந்துரைப்புகள், அவருக்கு இது ஃபிலிம்ஃபேரில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப்பைத் தந்தது. பிபிசி மானிஷ் காஜர் குறிப்பிட்டதாவது, "...ராணி முகர்ஜி...நடுத்தர குடும்ப பெண்ணாக தனது நடிப்பை சிறப்பாக எடுத்து நிரூபித்துள்ளார்."[12]


வெற்றி, 2003-06
ஆசிஸ் மிஷ்ராவின் படமான சல்தே சல்தே யில் ஷாருக்கானிற்கு எதிர்மறை கதாப்பாத்திரத்தில் முகர்ஜி நடித்து 2003 இல் வெளிவந்த முதல் படம்.[13] சாத்தியா வைப் போன்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்ததாக இது காட்டியது, மேலும் அவர் அவரின் இரண்டாவது ஃபிலிம்ஃபேர் சிறந்த நடிகைக்கான விருதின் பரிந்துரைப்பைப் பெற்றார். அந்த ஆண்டில் மற்ற மூன்று படங்களுடன், முகர்ஜி சோரி சோரி யைத் தொடங்கினார், இதில் அவர் முதன்முதலில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[14] பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை என்றாலும், அவரின் நகைச்சுவைத் திறன் பேசப்பட்டது.[15]

2004 இல், மணிரத்திரனத்தின் யுவா வில் பெங்காலி மனைவியாக நடித்தது அவருக்கு அவரது இரண்டாவது சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுத் தந்தது. படம் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[16] அவரது நடிப்பு ஒரு திறனாய்வில் இவ்வாறு எழுதப்பெற்றது, "கதாப்பாத்திரமானது ஒரு நடிகைக்கான சாராம்சம் மேலும் ராணி அதில் எதிர்பார்ப்பை விட மிகவும் நன்றாக நடித்துள்ளார்".[17] காதல் மற்றும் நகைச்சுவைப் படமான ஹம் தும்மில் முக்கிய கதாப்பாத்திரத்தை ஏற்றார், அந்த வருடத்தில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.[16] படமானது, 1989 ஆண்டின் வென் ஹேர்ரி மெட் சால்லி ..., குனால் கோலியால் தயாரிக்கப்பட்டது. முகர்ஜி ஏற்ற பாத்திரம் ரியா ஷர்மா, இன்றையத் தலைமுறைப் பெண், அவர் நிறைய விருதுகளைப் பெற்றார், இதில் அவரின் முதல் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதும் உட்படும். பிபிசி அவரின் நடிப்பைப் பற்றி," ராணி விரைவில் அவர் தலைமுறையில் பல துறைகளில் திறமைவாய்ந்தவராக இருப்பார்."[18]

கடைசியாக வெளிவந்த இவரின் படம் யஷ் சோப்ராவின் லவ் சகா வீர் ஜாரா, ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தாவுடன் நடித்தார். இப்படம், இந்தப்படம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதிகளவில் பேசப்பட்டது,[11][16] இந்திய அதிகாரியின் காதல் கதையைச் சொல்கிறது, வீர் பிரதாப் சிங்காக ஷாருக் நடித்தார், பிரீத்தி ஜிந்தா பாக்கித்தான் பெண்மணி ஜாராவாக நடித்தார். ராணி சாமியா சித்திக்யூ என்ற துணைப்பாத்திரத்தில் நடித்தார், இவர் ஒரு பாக்கித்தான் வக்கில், வீர் பிரதாப் சிங்கின் வழக்கை எடுத்து அவரைப் பற்றி அறிய முயற்சிக்கும் ஒருவர்.

2005 இல், முகர்ஜி நான்கு பெரிய படங்களில் தோன்றினார்: சன்சய் லீலா பன்சாலியின் பிளாக் , ஷாத் அலியின் பன்டி ஆர் பப்லி , அமோல் பலேக்கரின் பெஹ்லே மற்றும் கேதன் மெக்தாவின் தி ரைசிங் . ப்ளாக் கில் அவரது நடிப்பு முக்கியமாக பேசப்பட்டது. பன்சாலி முகர்ஜியிடம் இந்த கதையைக் கொண்டுவந்த போது, அவர் மறுத்துவிட்டார்[19].மேலும் அவர் குருடு செவிடாக நடிக்குமளவுக்கு போதுமான நம்பிக்கை எனக்கு இல்லை எனக் கூறினார்.[19] இயக்குனர் அவர்மீது நம்பிக்கை வைத்தவுடன், அவர் இதில் நடிக்க சம்மதித்தார் மற்றும் மும்பய் ஹெலென் கெல்லர் கல்வி நிறுவனத்தில் சைகை மொழியை இதற்காக கற்றார்.[20] ராணி முகர்ஜி இதற்காக நல்ல மதிப்புரையைப் பெற்றார் மற்றும் அவரது நல்ல நடிப்பிற்கு பலவற்றில் சிறந்த நடிகை க்கான விருதுகளைப் பெற்றார். இந்தியா எப்எம் குறிப்பிட்டதாவது, "ராணி இதுவரை நல்ல திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை மறுக்க இயலாது. எந்த உரையாடலுமே இல்லாமல், இவரது நடிப்பின் மூலம் எல்லா உணர்ச்சிகளைம் வெளிக்காட்டினார் மேலும் பெரும் பரபரப்பை அவர் உண்டாக்கினார். நல்ல நடிகராக வேண்டும் என்பவர்களுக்கு இதுவே ஒரு நல்ல வழிகாட்டி".[21] அவரின் அடுத்த வெளியீடு, பன்டி ஆர் பப்லி , மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.[22] படமானது, பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிகரமாக ஓடினாலும், எல்லா வகையான திறனாய்வையும் பெற்றது, மேலும் ராணி முகர்ஜியின் நடிப்பு, ஒரு கட்டுரையில், "எப்பொழுதும் ராணி நன்றாகவே செய்துள்ளார், ஆனால் அவர் அழுகு அளவிற்கு போகவில்லை.[23] இருப்பினும், ஐபா விருதுகள் மற்றும் ஃப்லிம்ஃபேர் விருதுகளில் சிறந்த நடிகை க்கான பரிந்துரைப்புகளைப் பெற்றார்..


மீரா நாயரின் ஹோலிவுட் படத்தில் முக்கிய பாத்திரம் முகர்ஜிக்கு வந்தது, தி நமேசகே (2007) கபி அல்விதா நா கெஹ்னா வின் தேதியுடன் ஒத்துப்போகாததால், இதில் அவர் நடிக்க இயலவில்லை.[24] கரன் ஜோகரின் படமான கபி அல்விதா நா கெஹ்னா 2006 இல் வெளிவந்த இவரின் முதல் படம் கபி அல்விதா நா கெஹெனா வாகும், அதில் அமிதாப் பட்சன், ஷாருக்கான், அபிஷேக் பச்சன், பிரீத்தி ஜிந்தா மற்றும் கிரோன் கேர் உள்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படம் பலதரப்பட்ட விமர்சனத்தைப் பெற்றாலும் வெளிநாட்டில் நல்ல வெற்றியைப் பெற்றது.[11] நியூயார்க்கில் சந்தோஷமில்லாமல் வாழும் இரு கணவன் மனைவியைப் பற்றிய கதை, இது வெளிப்புற ஈர்ப்பை விளைவிக்கிறது. முகர்ஜி தன்னம்பிக்கையற்ற மற்றும் அவரக்கும் அவரது அபிஷேக் பச்சன் ஏற்று நடித்த கணவருக்குமான உறவில் கேள்விக்குறியோடு இருக்கும் மாயா தல்வாராக நடித்துள்ளார்; அவரது நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. சிஎன்என்-ஐபிஎ னிலிருந்து ராஜிவ் மசந்த் கூறியது, "ராணி மில்லியன் பக்ஸாக தெரிகிறார் மேலும் அதிக நாள் நினைவிலிருக்கும் வண்ணம் அவர் அந்த பாத்திரமாகவே மாறியுள்ளார்."[25] அவர் சிறந்த நடிகைக்கான பல பரிந்துரைப்புகளைப் பெற்றார், மூன்றாவது வருடமாக அவர் சிறந்த நடிகைக்கான IIFA விருதைப் பெற்றார். முகர்ஜியின் அடுத்த வெளியீடு B.R. சோப்ராவின் பாபுல் . இந்தியாவில் படமானது பாக்ஸ் ஆஃபீஸில் நன்றாக ஓடவில்லை என்றாலும்,[26] வெளிநாட்டில் வெற்றிபெற்றது..[11] அவரின் விதவைக் கதாபாத்திரம் பலவிதமான விமர்சனத்தைத் தந்தது.

அண்மைக்காலப் பணி, 2007–முதல் தற்போது வரை.
முகர்ஜிக்கு 2007 இல் முதல் வெளியீடு, தா ரா ரம் பம் , இதில் அவர் வலியுள்ள இல்லத்திலிருக்கும் மனைவியாக மற்றும் முதன் முதலில் தாயாகவும் நடித்துள்ளார், இது பாதி வெற்றியடைந்தது.[27] அவரின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது, ஒரு குறிப்பிட்ட விமர்சனத்துடன், "ராணி தொழில் ரீதியாக ஒரு தாய்/மனைவியாக நடித்துள்ளார்."[28] அந்த வருடத்தில் கடைசி இரண்டு வெளியீடானது, ப்ரதீப் சேகரின் லாக சுனாரி மே டாக் அதில் அவர் வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்ணாக நடித்தார் மேலும் சஞ்சய் லீலா பன்சாலியின் சாவர்யா வில் திரும்பவும் விபச்சாரியாக நடித்துள்ளார், இந்தியாவில் இது வணகரீதியாகவும் தோல்வியடைந்தது.[27]

குனால் கோஹிலின் தோடா ப்யார் தோடா மேஜி க்கில் முகர்ஜி நடித்தார், 27 ஜூன் 2008 இல் வெளிவந்தது, க்ரிடிக்ஸிடமிருந்து நல்ல விமர்சனத்தைப் பெற்றது; இருப்பினும், பாக்ஸ் ஆஃபீஸில் படம் நன்றாக ஓடவில்லை. அவரின் சமீபத்திய படமான, தில் போலே ஹடிப்பா டோரோன்டோ சர்வதேச பட நிகழ்ச்சியில் இடம்பெற்றது, யஷ் ராஜ் ஃப்லிம்ஸின் பேனரில் 18 செப்டம்பர் 2009 உருவாக்கப்பட்டது மேலும் பாக்ஸ் ஆஃபீஸில் ஓரளவு ஓடியது. என்ன வந்தாலும், முதல் தரத்தில் கிரிக்கெட் விளையாடவேண்டும் என்ற கனவைக் கொண்ட பஞ்சாபி கிராமத்து பெண்ணாக வந்தார். மக்களிடையே இவர் நடிப்பு பொதுவாக நல்லவறேப்பைப் பெற்றது.[29] படத்தில் ஷாகித் கபூர் மற்றும் அனுபம் கேர் நடித்திருந்தன.

சொந்த வாழ்க்கை
பல வருடங்களுக்கு முன்னால் ராணி அவரின் குடும்பப் பெயரை முகர்ஜீயிலிருந்து முகர்ஜியாக ஒலிமாற்றம் செய்தார். அந்நேரத்தில், இவர் நியூமராலஜிப்படியே பெயரை மாற்றிவைத்ததாக கூறப்பட்டது. 2006 இல், நியூமராலஜி ஒரு காரணமில்லை என்று அறிக்கைவிட்டார்; அவர் பாய்போர்ட்டில் பெயர் முகர்ஜி என எழுதப்பட்டதாகவும், மேலும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கவேண்டும் எனக் கூறினார்.

மும்பையில் முகர்ஜிக்கு மூன்று வீடுகள் இருந்தன, குழந்தப்பருவ வீடு உட்பட. அவருக்காகவும் அவர் பெற்றோருக்காகவும் ஜுகுவில் 2005 மத்தியில் பங்களா வாங்கினார். ட்விங்கில் கன்னா மற்றும் சுசன்னே ரோஷனால் வீட்டின் உட்புற வடிவமைப்பு இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.[30]

சர்ச்சைகள்
2005 ஜூனில், முகர்ஜி பிரித்தானிய செய்தித்தாள் தேசி எக்ஸ்ப்ரெஸ் உடனான பேட்டியால் பரவலாக பேசப்பட்டார். முகர்ஜி அவரது முன்மாதிரியை பெயரிடச்சொன்னார்கள் அவர் அதற்கு, "அடோல்ஃப் ஹிட்லர்" என பதிலளித்தார்.[31] ஒரு வருடத்திற்குப் பிறகு டைம்ஸ் நௌவ் பேட்டியில், ஹிட்லர் பெயரை சொன்னதை மறுத்தார்.[31]

2006 நவம்பரில், முகர்ஜி லாகா சுனாரி மே டாக் படத்திற்காக வாரனாசியில் நடித்த போது அவித் ரசிகர்கள் செட்டில் நுழைந்தார்கள். பாதுகாவலர்கள் கூட்டத்தை விரட்டினர்.[32] மீடியாவில் முகர்ஜி பாதுகாவலர்களைத் தடுத்திருக்க வேண்டும் என்று கூறினர். முகர்ஜி பின் அதற்காக மன்னிப்புக் கேட்டார்.[32]

இதர பணி(கள்)
2004 மார்ச்சில், முகர்ஜி ராஜஸ்தான் மணல் குவியலில் ஜாவான்களின் மதிப்பை அதிகரிக்கச் சென்றார். இது ஒரு பொழுதுபோக்கு மற்றும் தொலைதூர இடங்களை ஊக்குவிக்க NDTV உடனிணைந்த இந்திய நட்சத்திரங்களின் வருகை நிகழ்ச்சி.[33]

2005 பிப்ரவரியில், பிற பாலிவுட் நடிகர்களுடன் டீசுனாமியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி திரட்டுவற்காக HELP! Telethon Concert இல் பங்கேற்றார்.[34]

அவர் முற்றிலும் டெம்ப்டேஷன்ஸ் 2005 நியூடெல்கி நிகழ்ச்சியில் பங்கேற்றார். முன்னனி முடியாதவர்களுக்கான உரிமைக் குழுவான, நேஷனல் சென்டர் ஃபார் ப்ரொமோஷனல் ஆஃப் எம்ப்ளாய்மென்ட் ஃபார் ட்ஸ்ஸேபில்டு ப்யூப்பில் க்காக நிதித்திரட்ட நடிகை உதவினார் (NCPEDP).[35]

முகர்ஜி அவரின் பரிசுத் தொகையை, அதாவது ப்ரீத்தி ஜிந்தாவுடன் கோன் பனேகா க்ரோர்பதி யில் பெனெகா க்ரோர் பதி 2007 இல் அவரின் பகுதியான 50 லட்சத்தை ஹோலி ஃபேமிலி ஹாஸ்பிட்டலுக்கு வழங்கினார். அவர் இந்த நிலையம் இருதய நோய் உடைய குழந்தைகளுக்கானது என்று கூறினார்.[36]

முகர்ஜி ஒரு மேடை நடிகர் மேலும் அவர் இரண்டு உலகப் பயணத்தில் கலந்துகொண்டார். அமிர் கான், ஐஸ்வர்யா ராய், அக்ஷய் கன்னா மற்றும் டுவிங்கில் கன்னாவுடன் 1999 இல் அவர் முதல் உலகப்பயணம் மேற்கொண்டார். இது மேக்னிஃபீஷியன்ட் ஃபைவ் என அழைக்கப்பட்டது.[37]

ஐந்து வருடங்கள் கழித்து, டெம்ப்டேஷன்ஸ் 2004 வந்தது. அந்த நேரத்தில் பாலிவுட்டில் இதுவே வெற்றியாக இருந்தது. ராணி முகர்ஜி ஷாருக்கான், சாயிஃப் அலி கான், ப்ரீத்தி ஜிந்தா, அர்ஜூன் ராம்பால் மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து உலகம் முழுவதும் பத்தொன்பது மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[38]



கடந்த பல ஆண்டுகளாக, ராணி முகர்ஜி ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் அவரது ‘ஹிச்க்கி’ (Hichki) திரைப்படத்தை சித்தார்த் பி. மல்ஹோத்ரா இயக்கியிருக்கிறார். ராணி முகர்ஜியின் நடிப்பில் ‘மர்தானி’ வெளியாகி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. இந்த இடைக்காலம் அவரது திருமணம், குழந்தைபேறுக்கானதாக அமைந்திருக்கிறது.

இந்த அம்சம் எப்படி அவர் தனது பணியை அணுகுவதைப் பாதித்திருக்கிறது? நேர மேலாண்மையுடன் பணியையும் வீட்டையும் சம நிலையில் நிர்வகிக்க முடிவதாக வாழ்க்கை இப்போது மாறியிருக்கிறது என்று சொல்லும் அவர், “என்னால் ஒரு நொடியைக்கூட விட்டுக்கொடுக்க முடியவில்லை. நான் படப்பிடிப்புத் தளத்துக்கு வருவதற்கு முன்னரே எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்க இயக்குநர்களிடம் சொல்கிறேன். நான் வந்ததும் உடனடியாகப் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறேன்.

படப்பிடிப்புத் தளத்தில் சாப்பிடுவதற்குக்கூட நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பணியை முடித்ததும் என் குழந்தையிடம் சென்றுவிடுவேன். ஆனால், அதற்காக ஏனோதானோவென்று நடித்துக்கொடுப்பதில்லை. எப்போதும் என் சிறந்த நடிப்பைக் கொடுக்கவே விரும்புகிறேன்” என்கிறார். அதனால், ‘ஹிச்க்கி’ திரைப்படத்துக்காக இன்னும் கூடுதலாகப் பணியில் கவனம்செலுத்துகிறார் அவர்.

மீண்டும் திரைப்படங்கள்

‘ஹிச்க்கி’ திரைப்படத்தில் மீண்டும் தன்னை நடிக்கத் தூண்டியது தன் கணவர்தான் என்று சொல்லும் ராணி, “என் மகளுடன் நான் ஒன்றிப்போயிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். என்னை ஒரு தனிமனுஷியாக, நடிகையாக அவர் மதிக்கிறார். அதுதான் என் இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவியது. முன்பு இதுபோன்ற தூண்டுதல்களை என் அம்மாதான் செய்துகொண்டிருந்தார். இப்போது என் கணவர் அதைச் செய்கிறார்” என்று சிரிக்கிறார்.

சமீபத்தில் அவர் பெரிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. அவர் நடிக்கும் படங்களில் ராணியே பிரதானமாக இருக்கிறார். பெரிய நட்சத்திரங்கள் யாருடனும் அவர் இணைந்து நடிக்கவில்லை. அவர் தன் மகளுக்காக, ஒரு நேரத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கே முன்னுரிமை கொடுக்கிறார். அவர் ‘யஷ்ராஜ் ஃபிலிம்ஸ்’ படத்தில் நடிப்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஏனென்றால், அவருக்கு வசதியான நேரத்தில் அங்கே பணியாற்ற முடிகிறது.

“இந்த மாதிரியான நேரச் சுதந்திரம் எனக்கு வேறு தயாரிப்பு நிறுவனத்தில் கிடைத்தால் நான் மகிழ்ச்சியாகப் படங்களில் நடிப்பேன். ஆனால், நான் எப்போதும் தனித்துவமான நபராகத்தான் இருந்துவருகிறேன். என் சாதனைகள் எனக்குச் சொந்தம். என் கணவரின் சாதனைகள் அவருக்குச் சொந்தம். அவரது தயாரிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவர்தான் காரணம். அவரது படங்களில் நான் ஒரு பகுதியாக இருந்திருக்கிறேன். ஆனால், அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அவருடைய தந்தையும் அவரும்தான் காரணம்” என்று விளக்குகிறார் அவர்.

ராணி, பதினாறு வயதிலிருந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். தன் தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்ட பிறகு, குடும்பத்துக்கு உதவுவதற்காக அவர் 90-களின் பாதியில் நடிக்கவந்துவிட்டார். “இளம்வயதிலேயே பணிவாழ்க்கையைச் செதுக்க தொடங்குவதில் எந்தத் தவறுமில்லை. நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் விஷயமாக வயது எப்போதும் இருக்க முடியாது. 80 வயதாகும்போதுகூட நீங்கள் பணியாற்றலாம்” என்கிறார் அவர்.

இயல்பான நடிப்பே சிறந்தது

‘ஹிச்க்கி’ திரைப்படம் ‘தூரே நோய்க்குறியீடு’ (Tourette Syndrome) என்ற நோய் பற்றிப் பேசுகிறது. ஒரு தாயாக மாறிய பிறகு, இதுபோன்ற பிரச்சினைகளைக் கூடுதல் அக்கறையுடன் அணுக முடிவதாக அவர் தெரிவிக்கிறார். ஹாலிவுட்டில் 2008-ம் ஆண்டு வெளியான ‘ஃப்ரன்ட் ஆஃப் தி கிளாஸ்’ (Front of the Class) திரைப்படத்தைத் தழுவி ‘ஹிச்க்கி’ திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம், பிராட் கோஹனின் ‘Front of the Class: How Tourette Syndrome Made Me the Teacher I Never Had’ என்ற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

இந்தத் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கும் ‘நைனா’ கதாபாத்திரம் பிராட் கோஹனை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால், தொடர்ந்து கோஹனிடம் பேசிவந்திருக்கிறார் ராணி. “நான் கோஹனுடன் ஸ்கைப்பில் உரையாடினேன். அவர் குழந்தையாக, வளரும்போது இருந்த மனநிலையைப் புரிந்துகொள்ள இது உதவியது. அவர் ஆசிரியராக விரும்பியபோது, பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.


இப்போது ராணி முகர்ஜி   -  PTI

ஆனால், இப்போது அவர் பள்ளி முதல்வராக இருக்கிறார். அவர் எப்படி இந்தப் பாகுபாடுகளை எதிர்கொண்டார்? எப்படித் தன் இலக்குகளை அடைந்தார்? போன்ற அம்சங்களை அவரிடம் பேசிய பிறகு புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார் அவர்.

இயல்பான நடிப்புதான் ராணியின் வலுவான அம்சமாக எப்போதும் இருந்திருக்கிறது. அவர் பிராட் கோஹனின் வாழ்க்கையையும் பிரச்சினைகளையும் தன்னுடையதாக உணர ஆரம்பித்திருக்கிறார். “அவரின் உணர்வுகளை எனக்குள் உள்வாங்கி, அதைப் படத்தில் இயல்பாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். ‘தூரே நோய்க்குறியீடு’ பற்றிய பெரிய விழிப்புணர்வை ‘ஹிச்க்கி’ திரைப்படம் ஏற்படுத்தும். இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் எதிர்கொள்ளும் பலவிதமான பாகுபாடுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது” என்கிறார் அவர்.

நம்பர் 1

பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன், ராணி முகர்ஜி, தனக்குத் திருமணமாகும் வரை நம்பர் 1 இடத்தைத் தக்க வைப்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், இப்போது வெற்றியைப் பற்றிய அவரது அணுகுமுறை எளிதானதாக மாறியிருக்கிறது. “என்னுடைய ஆட்டத்தில் நான் நம்பர் 1 ஆக இருக்கிறேன். அப்படி நான் நம்புவதுதான் நல்லது. இல்லையென்றால், என் பணிவாழ்க்கை தேக்கமடையத் தொடங்கிவிடும்.


தற்போது என்னுடன் போட்டிபோடவே நான் விரும்புகிறேன். தொடர்ந்து கற்றுக்கொள்கிறேன்; புதுமையான வழிகளை அறிந்துகொள்கிறேன். என் வாழ்க்கையிலிருந்து புதுமை நீங்கிவிட்டால், என் ரசிகர்களையும் நான் இழந்துவிடுவேன். ஒரு நடிகர் எல்லாவற்றையும் சாதித்து விட்டேன் என்று நினைத்தால், அந்த நடிகரின் நடிப்பு முடிவுக்கு வந்துவிட்டதாகத்தான் அர்த்தம்” என்று சொல்கிறார் ராணி.


No comments:

Post a Comment