SHEKH MUJIBIR ROHMAN ,
THE FIRST PRESIDENT OF BANGALADESH
BORN 1920 MARCH 17
சேக் முஜிபுர் ரகுமான் (வங்காள மொழி: শেখ মুজিবর রহমান Shekh Mujibur Rôhman) (மார்ச் 17, 1920 MARCH 17– ஆகஸ்ட் 15, 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர். இவர் குடும்பத்தில் உயிர்தப்பிய சேக் ஹசீனா 1996–2001 காலப்பகுதியில் வங்கதேசத்தின் தலைமை அமைச்சராக இருந்தார்.
பிறப்பும்,கல்வியும்
ஷேக் முஜிப்புர் ரஹ்மான் – (Sheik Mujibur Rahman) – மார்ச் 17 பிரிட்டிஷ் இந்தியாவின் கிழக்கு வங்கப் பகுதியின் ஃபரீத்புர் மாவட்டத்தில் டோங்கிபுரா கிராமத்தில் பிறந்தவர் (1920). கோபால்கஞ்ச் அரசுப் பள்ளியிலும் மாத்ரிபூர் இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். அனைவரிடமும் நன்கு பழகும், விளையாட்டில் விருப்பம் கொண்ட இளைஞராக இருந்தார். படிப்பில் கெட்டிக்கார மாணவன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றாலும் ஆசிரியர்களாலும் நண்பர்களாலும் மிகவும் விரும்பப்பட்டார்.
அரசியலில்
இவர்களுக்கு சொந்தமான கொஞ்சம் நிலம் இருந்தது. தனது பகுதியில் இருந்த பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரிசியை விநியோகம் செய்தார். இது எதிர்காலத் தலைவராக பொறுப்பேற்க இருந்த இவரது தலைமைப்பண்புக்கு அடையாளமான இருந்தது. 1940-ல் அகில இந்திய முஸ்லீம் மாணவர் அமைப்பில் சேர்ந்த பிறகு அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இஸ்லாமியா கல்லூரியில் (தற்போதைய மவுலானா ஆஜாத் கல்லூரி) சட்டம் பயின்றார். 1943-ல் பெங்காலி முஸ்லீம் லீகில் சேர்ந்தார். இந்த சமயத்தில் பாகிஸ்தான் என்ற இஸ்லாமிய தனி நாட்டுக்காக உழைத்தார். 1946-ல் இஸ்லாமியா கல்லூரி மாணவ யூனியனின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947-ல் பட்டம் பெற்றார். பிரிவினைக்குப் பிறகு இவர் புதிதாகப் பிறந்த பாகிஸ்தானில் இருக்கவே விரும்பினார். கிழக்கு பாகிஸ்தான் டாக்கா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பில் சேர்ந்தார். அந்தப் பகுதியின் முக்கியமான மாணவர் அரசியல் தலைவராக உயர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பரவலாக நிலவிய வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றிற்கான தீர்வாக சோஷலிஸம் இருக்கும் என்று இவர் உறுதியாக நம்பினார். இவர் தான் ஒரு பெங்காலி என்பதில் ஆழ்ந்த பெருமை கொண்டிருந்தார்.
மொழிப்போர்
கிழக்கு பாகிஸ்தானில் பேசப்படும் பெரும்பான்மையானவர்களின் மொழி பெங்காலியாக இருந்தாலும் 1949-ல் பாகிஸ்தானில் உருது மட்டுமே ஒரே அதிகாரபூர்வ தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. முகம்மது அலி ஜின்னா கிழக்கு வங்கத்தில் இருக்கும் மக்களும் உருதுவையே தங்கள் தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து, மக்கள் இதற்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. மாணவர் தலைவராக இருந்த இவர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமையேற்று நடத்தினர். கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தவாறே 13 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டார். தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் கிளர்ச்சிகளும் நடத்தப்பட்டதால், இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். முஸ்லீம் லீக் கட்சியிலிருந்து விலகி அவாமி லீக் கட்சியில் இணைந்தார். இதன் கிழக்கு வங்கப் பிரிவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது பாகிஸ்தான் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று 1955 முதல் 1958 வரை பணியாற்றினார். 1956-ல் கிழக்கு வங்கம், கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், இவர் வங்க மக்களின் பாரம்பர்ய அடையாளம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வங்க மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தினார். 1958-ல் ஜெனரல் அயுப் கான் அரசியல் அமைப்பை ரத்து செய்துவிட்டு ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டு 1961வரை சிறையில் அடைக்கப்பட்டார்.
தனிநாட்டுக்கோரிக்கை
சிறையிலிருந்து வெளிவந்த இவர், மாணவத் தலைவர்களைக் கொண்ட ஸ்வாதீன் பெங்காலி பிபோபி பரிஷத் (சுதந்தர வங்க புரட்சி கவுன்சில்) என்ற தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். வங்க மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் கிழக்கு பாகிஸ்தானின் விடுதலைக்காகவும் இவர்கள் பாடுபட்டனர். தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டு வந்ததால், 1966-ல் அவர் கார்டர் ஆஃப் சர்வைவல் என்ற 6 கோரிக்கைகள் அடங்கிய ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். இதில் சுயாட்சி, குறிப்பிடத்தக்க அளவு அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு சுதந்தரம் ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
வங்கதேசம் உருவாக்கம்
மாபெரும் புரட்சி வெடித்தது. ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர் கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் கொண்டு செல்லப்பட்டார். முக்தி வாஹினி படை உருவானது. ஏராளமானவர்கள் அகதிகளாக இந்தியா வந்தனர். இந்திய ராணுவம் இவர்களுக்கு உதவ முன்வந்தது. இந்திய ராணுவத்துடன் உதவியுடன் முக்தி வாஹினி படையினர் பாகிஸ்தான் ராணுவத்தினருடன் போரிட்டனர். இறுதியில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது. வங்க தேசம் உருவானது. அதன் முதல் பிரதமரானார். ஆனால், ராணுவத்தினர் சதியினால் 1975-ல் வெளியூரில் படித்துக்கொண்டிருந்த இரு மகள்கள் தவிர அவரும் இவரது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். வங்கத்தின் தந்தை என்று போற்றப்பட்ட இவர், 1975-ல் 55-வது வயதில் கொல்லப்பட்டார்.
வியாழன், ஜனவரி 28, 2010
வங்காளதேசம்
வங்காளதேசத்தில் இருந்து ஏனைய செய்திகள்
22 நவம்பர் 2015: போர்க்குற்றங்களுக்காக இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் வங்காளதேசத்தில் தூக்கிலிடப்பட்டனர்
9 மார்ச் 2014: துடுப்பாட்டம்: இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது
31 ஜனவரி 2014: ஆயுதம் கடத்திய குற்றத்திற்காக வங்காளதேச எதிர்க்கட்சித் தலைவருக்கு தூக்குத்தண்டனை தீர்ப்பு
6 ஜனவரி 2014: வங்காளதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த தேர்தலில் ஆளும் அவாமி லீக் கட்சி வெற்றி
13 டிசம்பர் 2013: போர்க்குற்றங்களுக்காக வங்கதேச இசுலாமியத் தலைவர் அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப்பட்டார்
வங்காள தேசப் பிரதமரும் வங்கத் தந்தையுமான முஜிபுர் ரகுமானை 1975 ஆம் ஆண்டில் படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஐவருக்கு நேற்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.இராணுவப் புரட்சி ஒன்றில் சேக் முஜிபுர் ரகுமான், அவரது மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மருமகள்மார் மேலும் அவர்களது குடும்பத்தவர்கள் 20 பேர் ஒட்டு மொத்தமாகப் படுகொலை செய்யப்பட்டனர். முஜிபூர் ரஹ்மானின் புதல்வியும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா ஆகியோர் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருந்ததால் உயிர் பிழைத்தனர்.
சில மணி நேரத்துக்கு முன்னதாகவே இவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் தூக்கிலிடப்படுவார்கள் என வங்காளதேச சட்டத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனாலும் எந்த நேரத்திலும் அது நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் ஐவரும் டாக்கா சிறைச்சாலையில் புதன்கிழமையன்று தூக்கிலிடப்பட்டார்கள்.
ரகுமானின் கொலையில் தாம் சம்பந்தப்பட்டிருந்ததை ஐவரும் ஒத்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் தம்மீதான விசாரணைகள் இராணுவ நீதிமன்றத்திலேயே நடத்தப்பட வேண்டும் என அவர்கள் மேன்முறையீடு செய்திருந்தார்கள். உச்சநீதிமன்றம் இதனை நிராகரித்திருந்தது. 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ் தனி நாடாக உருவாகக் காரணமாக இருந்தவர் முஜிபூர் ரஹ்மான்.
இந்த இராணுவ புரட்சி மேற்கொண்டவர்கள் மீது 21 ஆண்டுகளுக்குப் பின், அதுவும் ஷேக் ஹசீனா பிரதமராகப் பொறுப்பேற்றதன் பிறகுதான் அதாவது 1996-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது.1975ஆம் ஆண்டு இந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அப்போதைய அரசு தடை விதித்தது. இதை பிரதமராக பொறுப்பேற்றவுடன் ஷேக் ஹசீனா ரத்து செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 பேர் தலைமறைவாக உள்ளனர். ஒருவர் சிம்பாப்வேயில் இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. 3 பேர் 2001ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். சிறையில் உள்ள 5 பேர் மட்டும் மேல் முறையீட்டுக்காக விண்ணப்பித்தனர்.
சம்பவம் நடந்து ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment