Sunday, 18 March 2018

SASI KAPOOR ,HINDI ACTOR BORN 1938 MARCH 18




SASI KAPOOR ,HINDI ACTOR 
BORN 1938 MARCH 18





ஹிந்தி நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனாக கடந்த 1938-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி சசி கபூர் பிறந்தார். கடந்த 1940-ஆம் ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் சசி கபூர் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக நடித்த திரைப்படங்களில், "ஆக்' (1948), "ஆவாரா' (1951) ஆகியவை சசி கபூருக்கு புகழைப் பெற்றுத் தந்தன.

18-3-1938 அன்று கொல்கத்தா நகரில் பிறந்த சசி கபூர், புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நாடகங்களிலும், புராணப் படங்களில் நடிக்க தொடங்கிய சசிகபூர் படிப்படியாக முன்னேறி இந்திப் பட கதாநாயகனாகவும், இணை நாயகனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் சுமார் 175 படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 1950-ஆம் ஆண்டுகளில், துணை இயக்குநராக பல படங்களில் சசி கபூர் பணிபுரிந்துள்ளார்.
பின்னர் 1961-ஆம் ஆண்டில், "தர்மபுத்ரா' எனும் படத்தில் கதாநாயகனாக சசி கபூர் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் சுமார் 116 திரைப்படங்களில் கதாநாயகனாக அவர் நடித்துள்ளார்.
அதில் "தீவார்', "கபி கபி', "நமக் ஹலால்', "காலா ஃபாதர்' போன்ற திரைப்படங்கள், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தன. குறிப்பாக, ஹிந்தி திரையுலகில் கடந்த 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலானவற்றில் நாயகனாக அவர் நடித்திருந்தார். இதனால் காதல் சின்னமாகவே அவர் ரசிகர்களால் பார்க்கப்பட்டார். 

பாலிவுட் திரையுலகை மட்டுமல்லாது இந்தியத் திரையுலகையை வேறொரு தளத்திற்கு உயர்த்திய பங்கு கபூர் குடும்பத்துக்கு உண்டு. தலைமுறையாக இந்தி சினிமாவில் அவர்களது பங்களிப்பை உலகறியும். சசி குமார் கிட்டத்தட்ட 148 படங்களில் நடித்துள்ளார். 1960 -  1970-ம் ஆண்டுகளில் இந்தி திரையுலகில் ரொமான்ஸ் ஸ்டாராக விளங்கியவர் சசி கபூர். அவரது கலையுலக சேவையை பாராட்டி, கடந்த 2011-ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது அளித்து மத்திய அரசு கௌரவித்தது. இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் தாதா சாகேப் பால்கே விருதும் அளிக்கப்பட்டது.

3 முறை தேசிய விருதுகள் வாங்கி உள்ளார். நடிகராக மட்டுமில்லாமல் படங்களை இயக்குவதிலும், தயாரிப்பதிலும் ஈடுபட்டு இருந்தார் சசி குமார். 

பாலிவுட்டில் கோலோச்சும் கபூர் குடும்பத்தில் திரைப்பட மற்றும் நாடக நடிகர் பிரித்விராஜ் கபூரின் மகனும் ராஜ் கபூர் மற்றும் சம்மி கபூருக்கு இளையவரும் ஆன இவர், பிரித்தானிய நடிகை ஜென்னிபர் கெண்டலைத் திருமணம் புரிந்தார். இவரது வாரிசுகளான கரண் கபூர், குணால் கபூர் மற்றும் சஞ்சனா கபூர் ஆகியோரும் கலைத்துறையில் நாட்டம் கொண்டு சாதனை படைத்துள்ளனர். 

அமிதாப் பச்சனுக்கு இணையாக இவர் நடித்த இந்தித் திரைப்படங்கள் தீவார், தோ அவுர் தோ பாஞ்ச், நமக் ஹலால் ஆகியன இவருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தன. தவிர பல பிரித்தானியப் படங்களிலும் "சேக்ஸ்பியர்வாலா" போன்ற மெர்ச்சென்ட் ஐவரி தயாரித்த ஆங்கிலப் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவரது மனைவியான ஜெனிபர் கெண்டால் 1984 ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பால் காலமானார். சிறுநீரக பாதிப்பால் பல ஆண்டுகள் சிகிச்சைப் பெற்று வந்தார் சசி கபூர்.

பிரதமர் மோடி இரங்கல்: ஹிந்தி நடிகர் சசி கபூரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதில் அவர்கள், சசி கபூர் நடித்த கதாபாத்திரங்கள் பலதலைமுறைகளுக்கும் நினைவு கூரப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


வாழ்வாங்கு வாழ்ந்தோரையும் விட்டுச் செல்லுமோ மரணம்?

இந்நிலையில் டிசம்பர் 4, 2017 சசி கபூர் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79.. மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த சசி கபூர் திங்கள்கிழமை மாலை 5.20 மணியளவில் உயிரிழந்தார். இந்தத் தகவலை மூத்த நடிகர் ராஜ் கபூரின் மகனும், நடிகருமான ரன்தீர் கபூர் உறுதி செய்தார். காலமான சசிகபூருக்கு குணால் கபூர், கரண் கபூர் என இரு மகன்களும், சஞ்சனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
பாலிவுட் திரையுலக பிரபலங்கள் அபிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாரூக் கான், சஞ்சய் தத், அனில் கபூர், சயஃப் அலி கான், ராணி முகர்ஜி, கஜோல், நீது கபூர் உள்ளிட்ட பலர் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ரசிகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிரியங்கா சோப்ரா, கரண் கபூர், ஹ்ருதிக் ரோஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் கபூர் குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் சேர்ந்து மகிழ்ச்சியாகக் கொண்டாடியத் தருணத்தை கரிஷ்மா கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் 'நாங்கள் ஒன்று கூடி உணவருந்தும் குடும்பம் மட்டுமல்ல, ஒன்றி வாழும் குடும்பமும் கூட’ என்று பதிவிட்டிருந்தார். 

அந்த புகைப்படம் சசி கபூர் தனது குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட கடைசிப் புகைப்படமாகிவிட்டது. கரீனா கபூருக்கு குழந்தை பிறந்திருந்த சமயமாதலால், அவர் இதில் இல்லை
பாலிவுட் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று பல்முனைகளில் பணியாற்றியவர் சசி கபூருக்கு கடந்த 2015-ம் ஆண்டுதாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அரசு வழங்கியது. இந்திய சினிமாவின் வளர்ச்சியில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது.

முன்னதாக 2011-ல் பத்மபூஷன் விருதினை அரசு வழங்கி பெருமைபடுத்தியது. மூன்று முறை தேசிய விருதினையும், பல ஃபிலிம் பேர் விருதினையும் பெற்றவர். 

சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சசி கபூர் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்று நெஞ்சு எரிச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று மாலை தனது 79-வது வயதில் அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



Actor Shashi Kapoor — who has completed 50 years in films — goes down memory lane in a chat with Ranjan Das Gupta
Dharmendra's golden jubilee in films received a lot of media coverage as did Manoj Kumar's. Astonishingly their contemporary Shashi Kapoor, who also completed his golden jubilee around the same time, has been ignored both by the film industry and the media.

Beginning as a child artist in Raj Kapoor's “Aag” and “Awara”, Shashi Kapoor started his career as a hero with “Char Diwari” in 1960. The film's editor, Hrishikesh Mukherjee, predicted a bright future for him. Through thick and thin, his main support was his wife Jennifer Kendal. Her death was an irreparable loss and Shashi kapoor lost all interest in work after her demise.

When I met him recently, Shashi Kapoor sat silently in his wheelchair after receiving the Padma Vibhushan. Seeing him smile, memories of a golden era throng the mind. “May be the media does not feel I deserve any coverage. After all I am a flop actor, producer and director,” he says.

String of hits


Why does he consider himself a flop? What about the string of hits like “Jab Jab Phool Khile”, “Waqt”, “Haseena Maan Jayegi”, “Sharmilee” and “Kabhi Kabhi”? After a brief lull, Shashi Kapoor breaks the silence, “I may have given hits, but what are they compared to the stupendous success achieved by my father Prithviraj Kapoor and brothers Raj and Shammi Kapoor? As a producer I tried my best to make offbeat and good cinema. None was a hit. If a film does not connect with the audience it carries no meaning.”

Shashi Kapoor spent all his earnings from commercial pot boilers in producing memorable films like “Junoon”, “Kalyug” and “Vijeta” under his banner Filmvalas. He gave Aparna Sen her coveted break as a director with the evergreen “36 Chowringhee Lane”. “The films received critical acclaim and awards but a flop is a flop is a flop. I tried my hand at fantasy with “Ajooba”. When it bit the dust, I understood I had had my innings.”

After Dev Anand, Shashi Kapoor ranks the second most romantic actor on the Hindi screen. His devastating good looks backed by his toothy smile, charm and effortless performance saw his popularity soar in the 1960s, 1970s and even the 1980s. However, Shashi Kapoor does not consider himself great. “Chabi Biswas, Dilip Kumar, Raj Kapoor and Uttam Kumar were truly great actors. Balraj Sahni was versatile and honest. In the past four decades, Amitabh Bachhan has been the biggest star actor with whom I acted in ‘Deewar', ‘Kabhi Kabhi', ‘Trishul', ‘Kala Pathhar', ‘Silsila' ...”

Mala Sinha, Sadhana, Asha Parekh, Sharmila Tagore, Hema Malini and Shabana Azmi... Shashi Kapoor has acted with all of them successfully. Of his heroines, whom does he remember the most? “Nanda,” is the spontaneous reply. “She acted with me in my first film ‘Char Diwari'. Nanda excelled in a variety of characters; she performed with dignity. Her movements in the song sequence Yeh Shama in ‘Jab Jab Phool Khile' were imitated even by Sridevi later. Sadhana was initially hesitant to act with a new hero like me but we developed a good rapport while working in Bimal Roy's, ‘Prem Patra'. Sadhana's eyes and smile were her assets.”


Unforgettables

Of course the best of Shashi Kapoor came in the films produced and directed by Ismail Merchant. Shashi Kapoor - according to the late Satyajit Ray - was unforgettable in “Householder”, “Shakespearewala”, “Pretty Polly”, “Bombay Talkies” and “In Custody”. Remember the suave anti-hero in “The Deceivers” opposite Pierce Brosnan? For once Shashi Kapoor flashes his famous smile and recollects, “In one scene I had to look up straight into Brosnan's eyes and smile. Brosnan asked me to look around after looking up and then into his eyes. The advice yielded brilliant histrionic results.”


Until now Shashi Kapoor remains the only actor to have refused a National Award for “Dharam Putra” in 1961. He answers, “I did not consider my performance worth an award. I did receive the National Award for “New Delhi Times” in 1986. Do you remember the scene where I dream of running through burning debris and then break down in Sharmila Tagore's lap? That was instrumental in me receiving my recognition.”


No comments:

Post a Comment