Tuesday, 20 March 2018

HISTORY OF INDIAN CINEMA



HISTORY OF INDIAN CINEMA




உலக சினிமா உருவான வரலாறு 3– 
on March 20, 2014 10:18 am / no comments



(நமது அன்றாட வாழ்வில் நம்மோடு ஒட்டி, பின்னி பிணைந்த சினிமாவும், அதுக் கொண்ட தொழில் நுட்பங்களும் வளர்ந்த கதையையும், அவைக் கொண்ட பரிணாம வளர்ச்சிகளையும் எடுத்துரைத்து அடையாளம் காட்டுவதே இந்தத் தொடர்)

Kalidas_sudesamitran_poster

 ‘ராஜா ஹரிச்சந்திரா’ படம் மக்களுக்கு திரையிடுவதற்கு  பத்து நாட்களுக்கு  முன்பாக மும்பையின் மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் பல செய்தித்தாள்கள் ஆசிரியர்களுக்கு  பாம்பே ஒலிம்பியா சினிமாவில்,

முன்னோட்டக் காட்சிக்கு தாதா சாஹேப் பால்கே ஏற்பாடு செய்திருந்தார். இந்திய சினிமா வரலாற்றில்,  சினிமாவுக்காக நடத்தப்பட்ட முதல் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இதுவே . பால்கே, இப்படத்துக்காக நிறைய செலவு செய்தார். படம் திரையிடப்பட்டு அமோக வரவேற்பை பெற்றாலும் அவருக்கு இந்த படத்தின் மூலம்  நஷ்டமே எஞ்சியது.

இருந்தாலும் ராஜா ஹரிச்சந்திராவை விட பால்கே இயக்கி 1921 ஆம் ஆண்டு வெளிவந்த “லங்கா தகன்”  முதன்முதலில் வசூலில் வெற்றி பெற்ற படம். அது பாம்பே கிர்காம் என்ற இடத்திலுள்ள வெஸ்ட் எண்டு சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. 23 வாரங்கள் ஓடி வசூலில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

அதே ஆண்டில்  பாம்பே கோஹினூர் ஸ்டூடியோஸ் தயாரித்த ‘பகத் விதூர்’ படத்தில் ஸ்டுடியோவின் உரிமையாளர் துவாரகா தாஸ் நரந்தாஸ் சம்பத்தே, அப்படத்தின் பிரதான வேடத்தில் நடித்தார். அதில் அவர் மகாத்மா காந்தி போன்ற தோற்றத்தில் நடித்தார். அரசியல் காரணங்களுக்காக அப்படத்தை தணிக்கை குழு மும்பையில் தடை செய்தது. இருப்பினும் வேறு சில மாநிலங்களில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது.


ஒரு காலக்கட்டத்தில் திரையரங்குகளில் சாதி தகராறுகள், அரசியல் பேச்சு நீண்டு சண்டையாக முடிவது என வழக்கமாகிவிடவே, திரையரங்குக்கான வரையறை வகுக்கப்பட்டது, ஒரு திரையரங்கு எப்படியிருக்கவேண்டும், அங்கு எந்த மாதிரியான படங்கள் காட்டப்பட வேண்டும், என்னென்ன பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றவேண்டும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை எல்லாம் அரசாங்கம் முடிவு செய்தது. 1920 இல் பாம்பே, கல்கத்தா, மெட்ராஸ் மற்றும் ரங்கூனில் தணிக்கைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. பிறகு லாகூரில் 1927 இல் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டது.


“பிலேத் பேராட்” என்ற  வங்காள மொழி திரைப்படமே இந்தியாவின்  முதல் சமூக நையாண்டிப் படம். இந்த படத்தை   தயாரித்து நடித்தவர் தீரேன் கங்கூலி. இந்தப் படம் காதல் மற்றும் கிழக்கத்திய – மேற்கத்திய கலாச்சார முரண்பாடு ஆகியவற்றைக் கையாண்ட சமூகத் திரைப்படங்களுக்கு முன்னோடி. தீரேன் கங்கூலி அவர்கள் பிற்காலத்தில் இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான “தாதாசாகே பால்கே” விருது மற்றும் “பத்ம பூஷன்” விருது பெற்றார்.

Tp rajalakshmi

இந்தியாவின் முன்னணி சினிமாக் கலைஞராகத் திகழ்ந்த அர்தேஷிர் இரானி முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’மட்டுமல்ல தமிழின் முதல் பேசும்படமான ‘காளிதாஸ்’படத்தையும் தயாரித்தவர். ஆங்கிலத்தில் பேசிய சினிமாவைப் பார்த்த இரானிக்கு அதில் இந்தி மொழியைப் பதிவுசெய்ய விருப்பம் ஏற்பட்டதன் விளைவாகத்தான் ‘ஆலம் ஆரா’பிறந்தது. பிற இந்திய மொழிகளிலும் சினிமாவைப் பேசவைக்க வேண்டும் என்ற அவரின் பெருவிருப்பத்தின் விளைவுதான் ‘காளிதாஸ்’. ‘ஆலம் ஆரா’எடுக்கப்பட்ட அதே செட்டில்தான் “காளிதாசும்” எடுக்கப்பட்டது. அந்நாளைய வழக்கப் படி மக்கள் அறிந்து வைத்திருந்த புராணக்கதைகளையே படமாக்கிக்கொண்டிருந்த நமது சினிமா முன்னோர் இந்தக் ‘காளிதாஸ்’படக்கதையையும் அந்த அடிப்படையிலேயே அமைத்துக்கொண்டனர். காளியின் மீதான பக்தியின் பயனால் அறிஞனாக உயர்ந்த புராண வகைக் கதையே ‘காளிதாஸ்’. மக்கள் தாங்கள் கேள்விப்பட்டு, படித்து, அறிந்து வைத்திருந்த கதையை சினிமாவாக மீண்டும் பார்க்கிறபோது ஒருவிதமான சிலிர்ப்புக்கு உள்ளானார்கள். இது படம் தயாரிப்போருக்கு லாபத்தை உறுதிப்படுத்தியது. எனவே, இந்தப் போக்கு சில காலங்கள் தொடர்ந்தது.

இம்பீரியல் மூவிடோன்சின் சார்பில் மார்ச்14, 1931 இல் வெளியான ‘ஆலம் ஆரா’ திரைப்படம் தான்   இந்தியாவின் முதல் பேசும்படம். இப்படம் மதன் தியேட்டர் தயாரித்து வெளியிட்ட “ஷிரின் ஃபர்ஹாத்” என்ற படத்தை திரையில் தோல்வியுறச் செய்தது. ஏனென்றால்  ”ஆலம் ஆராவில்” பாடல், நடனம் இசை ஆகியவை இடம்பெற்றிருந்தது ஆகையால்  இந்தியாவின் முதல் வணிகரீதியான படமாக நிலைத்து விட்டது.

”ஆலம் ஆரா” ஒரு வெற்றி பெற்ற பார்சி நாடகமாகும். அந்த நாடகத்துக்கு திரைப்பட வடிவம் கொடுக்கப்பட்டது. அர்தேஷிர் இரானி இதை தழுவி இந்தியாவின் முதல் பேசும் படத்தை உருவாக்கினார். படத்தின் பாடல்களுக்கான ட்யூன்களையும் பாடகர்களையும் அவரே தேர்வு செய்தார். பாடல்களுக்கு தபலா, ஹார்மோனியம் மற்றும் வயலின் ஆகிய மூன்றே மூன்று இசைக் கருவிகளே உபயோகப்படுத்தப்பட்டன.  இந்தியாவின் முதல் திரையிசைப்  பாடல்களை கொண்ட முதல் படம்  என்றாலும் படத்தின் டைட்டில் கார்டில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஜெர்மனியத் தொழில்நுட்ப வல்லுநர்களைக்கொண்டு, ஜெர்மனியக் கருவிகளின் துணையுடன் விட்டாஃபோன் முறையில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள்.

TPR

ஹெச்.எம்.ரெட்டி இயக்கிய “காளிதாஸ்” 1931 அக்டோபர் 31 ஆம் நாள் வெளியிடப்பட்டது.  இந்தப் படத்தை எட்டே நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார்கள் இந்த  படக்குழுவினர். வசனம் தமிழிலும் பாடல்கள் தெலுங்கிலும் அமைந்தன.வணிக ரீதியாக இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது. ரூபாய்.8,000 பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட  படம்,  ரூபாய்.75,000க்கு மேல் வசூல் செய்தது. பட சுருள் சென்னை கொண்டுவரப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மலர்கள் தூவி, தேங்காய் உடைத்து, நறுமணப்பத்தி ஏற்றி பட சுருளை வழிபட்டனர். கிட்டத்தட்ட, முதலீட்டைப் போல் பத்து மடங்கு வசூல். அந்த நாளில் இது ரொம்பப் பெரிய தொகையாக கருதப்பட்டது.  இப்படத்தில் தான் “சினிமா ராணி” என்று அழைக்கப்படும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்  ஜி. றி. ராஜலக்ஷ்மி அறிமுகம் ஆனார், இவர் தான் பிற்காலத்தில் முதல் தமிழ் பெண் இயக்குனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆனார். 1931 ஆம் ஆண்டு தமிழில் முதல் பேசும் படமும் முதல் சூப்பர் ஸ்டாரும், சினிமா வரலாற்றில் எழுதப்பட்டனர்.


No comments:

Post a Comment