Thursday 15 March 2018

S.A.NATARAJAN, VILLAIN ACTOR BORN 1918 MARCH 16




S.A.NATARAJAN, VILLAIN ACTOR 
BORN 1918 MARCH 16



நம்பியாரை விஞ்சிய வில்லன்!- எஸ்.ஏ.நடராஜன்

உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’யில் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, அந்தப் படத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ராஜகுருவாக மிரட்டிய எம்.என்.நம்பியாரையே தூக்கிச் சாப்பிட்ட வில்லன் வேடத்தை அந்தப் படத்தில் ஏற்று நடித்தவர் எஸ்.ஏ.நடராஜன். நாடக உலகிலிருந்து சினிமாவுக்குக் கிடைத்த நல்முத்து. ஆர். நாகேந்திர ராவ், ரஞ்ஜன், எம்.என். நம்பியார், எஸ்.வி. ரங்கா ராவ், எம்.ஆர். ராதா, வீ.கே.ராமசாமி என்று வயதிலும் அனுபவத்திலும் மூத்த பத்துக்கும் அதிகமான வில்லன் நடிகர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த ஐம்பதுகளில் ‘மந்திரிகுமாரி’ என்ற ஒரே படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார் இந்த நடராஜன்.


பெரும்புகழ் தந்த ‘மந்திரிகுமாரி’


மாடர்ன் தியேட்டர்ஸின் வெற்றித் தயாரிப்பான ‘மந்திரிகுமாரி’ படத்தை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. அதில் அவர் எழுதிய வசனங்கள் அன்று திரையுலகுக்கு வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. எம்.ஜி.ஆர். கதாநாயகன். கதாநாயகனைவிடக் கதாநாயகி மாதுரி தேவியின் வேடமே அதில் முதன்மையானது. அதையும் தூக்கிச் சாப்பிட்டது எஸ்.ஏ.நடராஜன் ஏற்ற வில்லன் வேடம். முல்லை நாட்டு அரசரின் மகள் ஜி.சகுந்தலாவும் மந்திரியின் மகள் மாதுரிதேவியும் உயிர்த் தோழிகள். அரசனைத் தனது தலையாட்டி பொம்மையாக வைத்திருக்கும் ராஜகுருவான எம்.என்.நம்பியாரின் மகன் பார்த்திபனாக நடித்தார் எஸ்.ஏ.நடராஜன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் கொள்ளைக்கூட்டத்தின் தலைவன்.

அப்பாவுக்கும் பிள்ளைக்குமாக நடக்கும் ஒரு உரையாடல் இது

“மகனே கொள்ளையடிப்பதை நீ விட்டுவிட மாட்டாயா?”

“ கொள்ளை அடிப்பதை விட்டுவிடுவதா, அது கலையப்பா, கலை!”

“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”


“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பானது எண்ணற்ற உயிர்களைக் குடிக்கிறது. வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியம் என்ற பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”

“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”

“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்” என்று நீளும் உரையாடலில் தனது வெண்கலக் குரலால், பளீர் சிரிப்பொலியை இடையிடையே புகுத்தி, தேவையான இடங்களில் புருவங்களை நெறித்துக்காட்டி, விழிகளை உருட்டி வில்லன் கதாபாத்திரத்தின் கொடூரத்தன்மையைத் தனது வசன உச்சரிப்பில் வெளிப்பட வைத்தார் எஸ்.ஏ.நடராஜன். ‘நம்பியாரையே தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் நடராஜன்.’ என்று பத்திரிகைகள் அவரது நடிப்புக்குப் பாராட்டுப் பத்திரம் எழுதின.

கொங்குநாட்டுத் தங்கம்

இன்றைய திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட சோமனூத்து என்ற ஊரில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் எஸ்.ஏ.நடராஜன். கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் தொடக்கல்வி பயின்று தேறினார். மேல்நிலைக்கல்வி பயில கோவையில் இருந்த தன் அண்ணன் வீட்டுக்குச் சென்றார். தஞ்சை ‘நவாப்’ ராஜமாணிக்கம் பிள்ளை நாடக கம்பெனி திருப்பூரில் முகாமிட்டு ‘கிருஷ்ண லீலா’ நாடகத்தை நடத்திக்கொண்டிருந்தது. தொழில்நிமித்தமாக திருப்பூர் சென்ற அண்ணன், நடராஜனையும் அழைத்துசென்று அந்த நாடகத்தைக் காட்டினார். அதைக் கண்டு அக்கணமே நாடகக் கலையின்பால் மனதைப் பறிகொடுத்தார் நடராஜன். வீட்டுக்குத் தெரியாமல் ரயிலில் திருப்பூருக்கும் திருச்சிக்கும் நாடகம் பார்க்கச் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில் அவர் இளைஞராக வளர்ந்து நின்றபோது, ‘நவாப்’ ராஜமாணிக்கம் கம்பெனி கோவையின் எடிசன் அரங்கில் முகாமிட்டு ‘பவளக்கொடி’ நாடகத்தை நடத்திவந்தது. தினசரி எடிசன் அரங்கில் தவமாய்க் கிடந்த 16 வயது நடராஜனைத் தனது குழுவில் சேர்த்துக்கொண்டார் ராஜமாணிக்கம்பிள்ளை.

‘கன்னியின் காதலி’ படத்தில்...



உருண்டையான விழிகளும் நீளமான புருவங்களும் கொண்ட நடராஜனுக்கு முதலில் கிடைத்தவை பெண் வேடங்கள். அடுத்த 4 ஆண்டுகளில் பவளக்கொடியாகவும் வேடம் கட்டினார். ஆனால், அவரது வெண்கலக்குரல் காரணமாக அவருக்கு விரைவிலேயே ‘கள்ள பார்ட்’ எனப்படும் வில்லன் வேடங்கள் கொடுக்கப்பட்டன. ராஜமாணிக்கம் கம்பெனியில் எம்.எம்.நம்பியார், கே.டி.சீனிவாசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எனப் பலர் நடராஜனுக்கு நண்பர்கள் ஆனார்கள். கம்பெனி கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தபோது, ‘இன்பசாகரன்’ நாடகத்தில் உத்தமபாதன் வேடத்தில் நடித்துவந்த எம்.என்.நம்பியார் சினிமா படப்பிடிப்புக்குச் சென்று திரும்பி வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் எம்.என்.நம்பியாருக்குப் பதிலாக அந்த வேடத்தில் நடித்து நாடக ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்றார் நடராஜன்.

அதன் பின்னர் நடராஜனுக்கும் திரைப்படங்களின் பக்கம் கவனம் திரும்பியது. இதனால் தினசரி 5 ரூபாய் சம்பளம் பெற்றுவந்த நாடக நடிகரான நடராஜன், ‘நவாப்’ ராஜமாணிக்கம் கம்பெனியிலிருந்து விலகி சேலம் வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடினார். சேலம் மீனாட்சி பிலிம் கம்பெனியாரின் சிபாரிசில் டி.ஆர். சுந்தரம் இயக்கிய ‘சதி சுகன்யா’ (1942) படத்தில் துணை வேடத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்துவாய்ப்புக் கிடைக்காமல் திரும்பவும் நாடக மேடையேறியனார். என்றாலும் சினிமா இழுத்துக்கொண்டே இருந்தது. ஜுபிடர் தயாரிப்பில் கே.ராம்நாத் இயக்கிய ‘கன்னியின் காதலி’ படத்தில் வசந்தபுரி மன்னனாக நடித்ததும் ரசிகர்களின் பார்வை இவர் மீது விழுந்தது. இந்தப் படத்தில்தான் நூறு ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு, ‘கலங்காதிரு மனமே...’ என்ற தனது முதல் பாடலை எழுதி திரையுலகில் அறிமுகமானார் கவியரசர் கண்ணதாசன்.

வியத்தகு வில்லன் நடிகர்


அதன் பின்னர் ‘மந்திரிகுமாரி’யும் ‘மனோகரா’வும் எஸ்.ஏ.நடராஜனை வியத்தகு வில்லன் நடிகராக மாற்றின. பல படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்தார் என்றாலும், தமிழ் சினிமா வரலாறு நினைவில் கொள்ள வேண்டிய வியத்தகு வில்லன் நடிகராக முத்திரை பதித்தார். முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்த நடராஜன், ‘நல்ல தங்கை” (1955) என்ற படத்தைத் தனது ஃபார்வட் ஆர்ட் பிலிம்ஸ் கம்பெணி மூலம் தயாரித்து இயக்கவும் செய்தார். இந்த முயற்சி வெற்றிபெற்றாலும் ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் நடராஜன் தயாரித்த ‘மாங்கல்யம்’ உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெரும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதனால் நொடித்துப்போனவர் அதன்பின் எழவே இல்லை. 90 வயதில் சென்னை வந்த எல்லீஸ் ஆர். டங்கன், தாம் பாதிவரை இயக்கிய ‘மந்திரிகுமாரி’ படத்தில் நடித்த நடிகர்களைப் பார்க்கவிரும்பினார். முக்கியமாக எஸ்.ஏ.நடராஜனை. ஆனால், அவர் அப்போது காலமாகியிருந்தார்.

படங்கள் உதவி : ஞானம்







மந்திரி குமாரி எல்லிஸ் ஆர் டங்கன் .
மந்திரி குமாரி படத்தை இயக்கிய எல்லிஸ் ஆர் டங்கன் அமெரிக்க வெள்ளைக்காரர் . இந்த படத்தில் கே சோமு (டவுன் பஸ் ,சம்பூர்ணராமாயணம் ,பட்டினத்தார் ஆகிய படங்களின் இயக்குனர் ), முக்தா வி சீனிவாசன் ஆகியோர் உதவி இயக்குனர்கள் .எல்லிஸ் ஆர் டங்கன் கிட்டத்தட்ட ஐம்பதுவருடங்களுக்கு மேல்தன் தொண்ணூறு வயதில் இந்தியா வந்திருந்தார் . தன் படத்தில் நடித்த கதாநாயகன் மக்கள் நாயகனாக தமிழக முதல்வர் ஆகி கொடிகட்டி வாழ்ந்து மறைந்த செய்தி அறிந்து ஆச்சரியப்பட்டார் . மந்திரி குமாரி யில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் , டெக்னிஷியன்ஸ் இவர்களில் உயிரோடு இருப்பவர்களை எல்லாம் இவரை சந்தித்தார்கள் . (அப்போது மாதுரி தேவி , வில்லன் எஸ் ஏ நடராஜன் (சிரித்தவாறு வசனம் பேசுவார் !கடைசி காலத்தில் நடராஜன் கஷ்டப்பட்டார் .)ஆகியோர் மறைந்து விட்டார்கள் )அப்போது இவருக்கு பெரிய அதிர்ச்சி . இந்த மந்திரி குமாரி பட சம்பந்தப்பட்ட கலைஞர்கள் பலரும் செட்டில் ஆகாமலே இருந்தார்கள் . சொந்த வீடு மந்திரி குமாரி படத்தில் எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ஜி சகுந்தலாவுக்கு கூட இல்லை .வறுமையில் வாடும் தன் படத்தில் நடித்த கலைஞர்களை பார்த்து இடிந்து போய் விட்டார்.
ஜி சகுந்தலா சிவாஜி கணேசனின் ஜோடியாக வியட்நாம் வீடு நாடகத்தில் நடித்தவர் . நடிகை பத்மினியின் உறவினர் . உருக்கமாக உடைந்த குரலில் சோகமாக பல படங்களில் நடித்த இவர் 'உயர்ந்த மனிதன் 'படத்தில் அருமையாக காமெடி செய்திருக்கிறார் .
எஸ் எஸ் சிவசூரியன் பற்றி நினைக்கும்போது என் நினைவிற்கு வருகிற விஷயம் ஒன்று அவர் தன் முதிய வயதில் தன் மகனை விபத்தில் பறிகொடுத்தவர் . புத்திர சோகம் இவரை முதுமையில் பீடித்தது வேதனையான விஷயம் . சிவசூரியன் நாடகங்களில் நடித்துகொண்டே இருந்தார் . எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பித்தபோது அதிமுக வில் உடனே சேர்ந்தவர் . நான்கு வருடங்களில் ஆட்சியை அதிமுக பிடித்தது .அப்படியும் அதன் பின்னும் கூட இவர் வாழ்வு செழிக்கவே இல்லை என்று தான் சொல்லவேண்டும் . 
மாதுரி தேவி கிறித்துவ பெண் . க்ளாரா என்று பெயர் . இவர் அண்ணன் ஒரு ரவுடி . தியாகராஜபாகவதர் , என் எஸ் கிருஷ்ணன் தண்டனை அனுபவித்த 'இந்து நேசன் லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கில்' க்ளாராவின் அண்ணன் சம்பந்தப்பட்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன் .பின்னால் க்ளாரா 'மாதுரி தேவியாக' பிரபலமானார் .
மந்திரி குமாரி படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் எஸ்.ஏ.நடராஜன். கள்ளபார்ட் நடராஜன் அல்ல. கள்ளபார்ட் நடராஜனையும் எஸ் ஏ நடராஜனையும் குழப்பிக்கொள்ளாதீர்கள் .இந்த எஸ் ஏ நடராஜன் சிவாஜியின் மனோகராவிலும் வில்லனாக வந்து கலக்கியவர். எம்ஜியாரின் மந்திரி குமாரி , சிவாஜியின் மனோகரா இரண்டு படங்களை நினைத்தால் எஸ் .ஏ .நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன் இந்த எஸ் ஏ நடராஜன் .



நடிகர் எஸ். ஏ. நடராஜன் பிறந்த தினம் மார்ச் 16, 1918.

எஸ். ஏ. நடராஜன் (பிறப்பு: மார்ச் 16, 1918) தமிழ்த் திரைப்பட, நாடக நடிகராவார். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் பங்களித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

நடராஜனின் தந்தை அப்பாஜி செட்டியார் தாராபுரம் வட்டம் சோமனூத்து என்னும் ஊரைச் சேர்ந்தவர். நடராஜனுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நடராஜனுக்கு எட்டு வயதாகும் போதே தந்தை இறந்து விட்டார். நடராஜன் வாளவாடி என்ற ஊரில் இருந்த அவரது பெரிய தாயாரான அம்முலம்மா என்பவரின் வளர்ப்புப் பிள்ளையாக 13 வயது வரை வளர்ந்தார். உடுமலைப்பேட்டையிலும், மேட்டுப்ப்பாளையத்திலும் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார்.

நாடகங்களில் நடிப்பு


நடராஜன் சில காலம் தனது தமையனார் வீட்டில் வசித்து வந்த போது 1933 இல் நவாப் ராஜமாணிக்கம் கம்பனி கோவை எடிசன் அரங்கில் நாடகங்களை நடத்தி வந்தது. அவர்களின் நாடகங்களைப் பார்த்து வந்த நடராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. தாயாரின் அனுமதி இன்றி நாடகக் கம்பனியில் சேர்ந்தார். 1933 இல் அவர்களது நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலான நாடகங்களில் இவர் பெண் வேடங்களிலேயே நடித்தார். 1939 இல் கும்பகோணம் முகாமில் இன்பசாகரன் நாடகத்தில் எம். என். நம்பியாருக்குப் பதிலாக உத்தமபாதன் வேடத்தில் நடித்தார்.

நடராஜனுக்குத் திரைப்படங்களில் நடிக்கும் ஆசை வந்தது. இதனால் நாடகக் கம்பனியில் இருந்து விலகினார். ஆனாலும், திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. டி. கே. சம்பங்கி, பி. வி. எத்திராஜ் ஆகியோர் ஆரம்பித்த மங்களகான சபா, எஸ். டி. சுத்தரத்தின் தமையனார் எஸ். டி. உலகு ஆரம்பித்த சேலம் பாய்ஸ் கம்பனி ஆகியவற்றில் சேர்ந்து சில காலம் நாடகங்களில் நடித்து வந்தார்.

திரைப்படங்களில் நடிப்பு

சேலம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, சேலம் மீனாட்சி பிலிம் கம்பனியின் கோவிந்தசாமி பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் டி. ஆர். சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா (1942) படத்தில் சிறிய வேடங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புக் கிடைக்காமல் தாராபுரம் திரும்பினார்.
குறிப்பிடத்தக்க நடிப்புகள்
மந்திரி குமாரி (1950) இவரின் இரண்டாவது திரைப்படமாகும். ராஜகுருவின் மகனாக நடித்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்
1. கன்னியின் காதலி (1949) - இது இவரின் முதலாவது திரைப்படமாகும்.
2. வேலைக்காரி (1949)
3. மந்திரி குமாரி (1950)
4. கைதி (1951)
5. மர்மயோகி (1951)
6. ஜமீந்தார் (1952)
7. அழகி (1953)
8. ரோஹிணி (1953)
9. புதுயுகம் (1954)
10. மாங்கல்யம் (1954)
11. நல்ல தங்கை (1955)
12. கோகிலவாணி (1956)
13. அமுதவல்லி (1959) - இப்படத்தில் வில்லன் கதைப்பாத்திரத்தில் நடித்தார்.
14. சங்கிலித்தேவன் (1960)





தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றாலே நம்பியார், பி.எஸ்.வீரப்பா, அசோகன், ஆர்.எஸ்.மனோகர், பின்னாளில் ரஜினிகாந்த், சத்யராஜ், ரகுவரன் இப்படித்தான் நினைவுக்கு வருவார்கள். ஆனால் நம்பியார் காலத்தில் அவரை விடவும் பவர்புல் வில்லனாக இருந்தவர் எஸ்.ஏ.நடராஜன்.

திருப்பூர் மாவட்டம் சோமத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த எஸ்.ஏ.நடராஜன் நடிப்பு ஆசையால் நாடங்களில் நடிக்க ஆரம்பித்தார். நவாப் ராஜமாணிக்கம் நாடக கம்பெனியில் சேர்ந்த அவர் பெரும்பாலும் பெண் வேடத்தில் நடித்தார். ஒரு முறை இன்பசாகரன் என்ற நாடகத்தில் வில்லனாக நடிக்க வேண்டிய நம்பியார் வராததால் அந்த கேரக்டரில் நடராஜன் நடித்தார். அது பாராட்டப்படவே அதன்பிறகு நாடகங்களில் வில்லனாக நடித்தார். 

நாடக வாழ்க்கைக்கு பிறகு சினிமா வாய்ப்பு தேடினார். டி.ஆர்.சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் வில்லனாக நடித்தவர் மந்திரி குமாரி படத்தில் ராஜகுரு எம்.என்.நம்பியாரின் மகனாகவும், கொள்ளைக்கூட்டத் தலைவனாகவும் நடித்தார். படத்தில் நம்பியாரை விட அதிகம் பேசப்பட்டவர் நடராஜன். மனோகரா படத்திலும் வில்லானக நடித்து புகழ்பெற்றார்.

நம்பியாருக்கு இணையாகவோ அல்லது அவருக்கு போட்டியாகவோ வளர்ந்திருக்க வேண்டிய நடராஜன் சொந்தப் படம் எடுத்து பெரும் நஷ்டத்திற்கு உள்ளானதால் சினிமாவை விட்டே விலக நேர்ந்தது. அதனால் அவரை மக்களும் மறந்து விட்டார்கள்.





எஸ்.ஏ.நடராஜன்
அழகான வில்லன்களில் ஒருவர் இந்த எஸ்.ஏ.நடராஜன். குரலோ வெண்கலக்குரல். வசனம் பேசும் விதமோ தனிப்பாணி. சிரித்துக் கொண்டே வசனம் பேசுவது இவரது தனிச்சிறப்பு. எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கிய மந்திரிகுமாரி என்ற படத்தில் வில்லனாக நடித்திருப்பார். சிவாஜிகணேசனுடன் ‘மனோகரா’ என்ற படத்திலும் கலைஞர் கருணாநிதியின் கூரிய வசனங்களை சிறப்பாக பேசி கைதட்டல் பெற்றவர். எம்.ஜி.ஆரின் மந்திரி குமாரி , சிவாஜிகணேசனின் மனோகரா இந்த இரண்டு படங்களை நினைத்தால் எஸ்.ஏ. நடராஜனை நினைக்காமலிருக்க முடியாது . தமிழ் சினிமா கண்ட முக்கிய வில்லன்களில் ஒருவர் இந்த எஸ் ஏ நடராஜன்.

”நல்ல தங்கை” என்ற படம் இவர் தயாரித்து இவரே இயக்கிய படம். தனது ஃபார்வேடு ஆர்ட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் இதைத் தயாரித்தார். இப்படம் 1955-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிப்படமானது. இதனால் மேலும் ஒரு சில படங்களை இவர் தயாரித்து அவை வெற்றி பெறாததால் இவர் நொடிந்து போனார். இவரது கடைசி காலம் மிகவும் சோகம் நிறைந்தது.

1951-இல் கைதி, 1953-இல் ரோகினி, 1955-இல் முல்லை வனம், 1956-இல் கோகிலவாணி, 1959-இல் அமுதவல்லி, இதே ஆண்டில் பாண்டித்தேவன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

“நல்லதங்கை’’ 1955 படத்தில் எஸ்.ஏ.நடராஜன்


Filmography[edit source]

He has acted in over 30 movies.[3]

YearMovies NameRolesLanguage
1949VelaikaariTamil
Kanniyin KaadhaliKing Vasantha Kumaran
1950Manthiri KumariParthiban
1951KaithiVijayasaradhi
MarmayogiBaisatchi
Ek Tha RajaHindi
1952En Thangai
Penn Manam
1953Inspector
Azhagi
Manithan
Rohini
1954ManoharaUkrasenan
Mangalyam
Pudhu Yugam
1955Zamindar
Nalla Thangai
Mullai Vanam
1956Kokilavani
1958Mahishasura MardiniKannada
1959Pandi Thevan
1961Ellam Unakkaga
1962Nichaya Thaamboolam
1964Magale Un Samathu
1966Mani Magudam
Marakka Mudiyumaa?
1967Paarvathi KalyanamKannada
1969Odahuttidavaru
1971Nyayave Devaru

1 comment:

  1. You may also be interested in


    S.A.Natarajan Fans Reviews (11)
    Though I don't remember seeing you,have heard lots about you. As the father, the son. It gives me enormous pleasure when I talk about my dad (Mr. SAN Gopi) or about you grandpa. Whenever someone sings your songs I go crazy and proud to say its my grandfather's song. Im obliged grandpa. Miss you and dad. Love you both Sanju!

    Sanjna Gopi, Chennai on 26-09-2017
    Proud to be The grandson of prominent Actor,SAN Still lives with Films SAN Laid the foundation for villian roles in tamil cinemas ,An only villian actor in history of tamil cinema Who Received Double the Payment of Heroes.. Miss u Grandpa 'KalaiMamani'S.A.Natarajan

    Akshay Natarajan, Chennai on 13-09-2017
    actor ,S.A. Natarajan action in Manohara: and Manthirikumareee as villan Character made foundation stone for Villan role in Tamil movie......he has 12 Children and Grand Children, Having Big tree of family too....Poongothai...

    divya, on 14-10-2016
    though Thiru. S.A. NATARAJAN is no more his actions in his movies are lively and still live for ever.

    Zackaria, Singapore on 13-11-2015
    Thiru S.A. Natarajan had acted in over 30 movise and had his own production company which released two films by name Kokilavani and Nallathangai

    Devi Natraj, chennai on 10-11-2015
    Thiru S.A. Natarajan was also one of the person who identified the present Nadigar Sangam property at Habibulla Road and contributed for the purchase of same but nothing is recognised now.

    Devi, chennai on 10-11-2015
    WE ENJOPYED HIS CLASSIC ROLE AS VILLAN. RICH CULTURED MAN ACTOR.S.A.NATRAJ.HE HAS BIG FAMILY TREE IN INDIA..... LOVE JILAON, MALAYSIA.

    JIGLAON, on 03-09-2014
    WE ENJOPYED HIS CLASSIC ROLE AS VILLAN. RICH CULTURED MAN ACTOR.S.A.NATRAJ.HE HAS BIG FAMILY TREE IN INDIA..... LOVE JILAON, MALAYSIA.

    JIGLAON, on 03-09-2014
    Actor S.A.Natrajan was lived in Kodambakkam 1945-1983. He was known as SAN. He was awarded " "Kalaimaa mani " by Tamilnad Govt.

    Davidf, Tamilnadu on 26-08-2014
    Actor S.A.Natarajan was blessed with 12 children. He is Nomore now.But His Actions Live.. His children are married and settled in different parts of the Country

    nagas, chennai on 13-03-2013
    His acting in Manthiri Kumari, apparently his first movie was superb.My younger days, I was fascinated by the song "varai Nee Varai" Is he alive?

    Dr.Siva Achanna, MALAYSIA on 07-03-2013
    Share Your Comments About S.A.Natarajan
    Name
    Enter Your Name
    Email
    Enter Your Email
    Location(optional)
    Enter Your Location
    Comments
    Enter your comments here

    ReplyDelete