Saturday, 24 March 2018

TIMUR ,MURDERER DESCENTANT OF MOGHUL DYNASTY BORN APRIL 9,1336 - FEBRUARY 18,1405






 TIMUR ,MURDERER 
DESCENTANT OF MOGHUL DYNASTY BORN 


APRIL 9,1336 - FEBRUARY 18,1405

தனது சந்ததியில் 72 பேர் இந்த பூமியை ஆள்வார்கள் என்று கனவு காண்கிறார். தைமூரின் தந்தை திராகாய் அடிக்கடி ஷெய்க் ஷம் ஸுத்தீன் என்ற ஞானியை சந்திப்பவராக இருந்தார். ஷெய்க் தைமூரின் பரம் பரை உலகின் ஏழு பகுதிகளை ஆளும் என்றார். பிற்காலத்தில் அதுதான் நடந் தது. 


ஒருமுறை அவர் திருக்குரானின் 67 வது அத்தியாயமான அல் முல்க் ஓதிக்கொண்டிருக்கும் திராகாய் சென்றதால், நிறுத்திவிட்டு உனது பிள்ளை க்கு “தைமூர்” என்று பெயர் சூட்டு என்று கேட்டுக் கொண்டார். ஆங்கிலேயர் களுக்கு ‘டாமெர்லேன்’ ஆகும். தைமூருக்கு ஏழு வயதான போது அவர் தந்தை திராகாய் முல்லா அலி பேக் என்பவரிடம் கல்வி கற்க சேர்த்தார். அவரிடம் தைமூர் அரபு மொழி பயின்றார். இவருக்கு எட்டு வயதான போது தாயார் மற்றும் சகோதரர்களுடன் எதிரி பிரிவினரால் சிறை பிடிக்கப்பட்டு சமர்கண்டு க்கு கொண்டு செல்லப்பட்டார். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தொழுகை யை கடை பிடித்து அத்தியாயம் 91 ஐ ஓதுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். வகுப்பில் அவர் தலைமை மாணவன் போல் கர்வத்துடன் செயல்பட்டார். 

ஒருமுறை மாணவர்களிடம் அமர்வதில் சிறப்பான முறை எது கேள்வி எழ, தைமூர் அவர்கள் முட்டுக்கால் மடக்கி அமர்வதே சிறந்தது என்று கூறி அனை வரின் பாராட்டைப் பெறுகிறார். மாணவர்களை இரு பிரிவாகப் பிரித்து படை போல் ஆக்கி சண்டை செய்ய விட்டு தான் நீதிபதி போல் பார்வையிடும் விளை யாட்டை அடிக்கடி விளையாடுவார். எந்த அணியாவது தோற்பது போல் இருந் தால் தான் களத்தில் இறங்கி சண்டையிட்டு அந்த அணியை வெற்றி பெறச் செய்வார். பனிரெண்டு வயது தான் சிறப்பான நிலையில் இருப்பதாக உணர்ந் தார். ஒன்பது வயதிலிருந்து எழுபத்தோரு வயது வரை அல்லாஹ் அவருக்கு நாடியதெல்லாம் வழங்கினான். எப்போதும் நண்பர்கள் சூழ தான் இருப்பார். ஒவ்வொரு முறை புதிய உடையை அணிந்து கழட்டினால், தன் நண்பர்களுக் குக் கொடுத்துவிடுவார். (அப்போதைய நாகரீகம் குறைந்த ஆப்கானிஸ்தானி யர்கள் ஒருமுறை உடை உடுத்தினால் அது கிழியும் வரை கழட்ட மாட்டார் கள்) தைமூருக்கு 16 வயது ஆகும் போது, தன் பழங்குடியினரிடம் அவர் தந்தை இனிமேல் ஜக்தாய் மற்றும் பெர்லாஸ் குடும்பத்தின் தளபதி தன் மகன் தான் என்று அறிமுகம் செய்தார். என்னதான் தங்க கூஜாவானாலும் அதே பழைய பூரான்களும், பாம்புகளும் தானே அதனுள்ளே என்பது போல் உணர்ந்தாலும், அவர்களிடையே தைமூர் தங்கள் குடும்ப பாரம்பரியத்தை நிலை நாட்டினார். இவரின் தந்தை மூலம் தைமூரியர்கள் துமுனெஹ் கான் என்பவரின் கீழ் வந்த வாரிசுகள் என்றும், துமுனெஹ் கான், நூஹ்(அலை) அவர்களின் வரிசையில் ஜாஃபெட் என்பவரின் கீழ் வந்தவரென்றும் அறிந்து கொண்டார்.

                                                          இவர்களின் பழங்குடி பரம்பரையில் இஸ்லாமைத் தழுவியர்கள் தைமூர் வம்சம் தான். ஜக்தாய் கானின்(சக்குதாய்) மருமகன் கெராச்சார் நூயன் என்பவர், தான் மறுமையில் ஒரு வாழ்வு இருப்பதை நம்பு வதாகவும், இதையே முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சொல்வதால் தான் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்பதாகவும் சொல்லி இருந்தார். தன் தந்தைக்குப் பிறகு தைமூர் அவர் பணியைத் தொடர்ந்தார். தைமூர்  தன் பழங்குடியினரின் கால்நடைகளை பிரித்து நூறு எண்ணிக்கை கொண்டப் பிரிவுக்கு ஒரு பாது காப்பாளரை நியமித்தார். அதன் வருவாய் பால், வெண்ணெய், தோல் முதலிய வற்றிலிருந்து ஈட்டப்பட்டது. அதுபோல் கால்நடைகளில் ஆண்,பெண் என பிரித்து கூடும் காலங்களை முறைப்படுத்தி வருவாய் வரச் செய்தார். 
             பதினெட்டு வயதாகும் போது தைமூர் குதிரையேற்றம்,
வேட்டையாடுவதில் சிறந்து விளங்கினார். இடையில் நான்கு மாதங்கள் கடு மையான நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடினார். இந்த கால கட்டத்தில் குரான் ஓதுவதிலும், மதப்பூர்வமான பணிகளிலும், ஓய்வு நேரத் தில் சதுரங்கம் விளையாடுவதிலும் ஈடுபட்டார். சிறப்பான வகையில் போர் பயிற்சிகளையும் பெற்றார். தனது தகப்பனார் திராய் கானிடமிருந்து மூதா தையர் யாஃபித் அக்லானின் வரலாறுகளைத் தெரிந்து கொண்டார். யாஃபித் அக்லான் பொதுவாக அபு அல் அத்ராக் என்றும் அறியப்பட்டார். ஜாபெட்டின் மகனான யாஃபித் அக்லான் துருக்கிகளின் தந்தை என போற்றப்பட்டவர். ஜாஃபெட்டின் ஐந்தாவது மகனான அல்ஜிஹ் கானுக்கு இரட்டை ஆண் குழந் தைகள் பிறந்தன. அதில் ஒரு மகன் வரிசை டடார்களாகவும், இன்னொரு மகன் வரிசை மொகலாயர்களாகவும் பிரிந்தனர். டடாரின் எட்டு குழந்தைகள் எட்டு பழங்குடியினராகவும், மொகல்களின் ஒன்பது குழந்தைகள் ஒன்பது பழங்குடியினராகவும் பிரிந்து வாழ்ந்தார்கள். எப்போதுமே டடார்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையே நட்பில்லாமல் துர்கிஸ்தான் பகுதியில் அடிக் கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். இஸ்லாமில் இணைந்த துமெனாஹ் கான் துர்கிஸ்தானை ஆண்ட போது, இரட்டை குழந்தைகளாக கஜூலி என்பவ ரும், குபெல் கானும்(இவரை காபுல் கான் என்றும் அழைப்பர்) பிறந்தார்கள்.
கஜுலி இரு பிரிவினரையும் அழைத்து, பெரிய விருந்து வைத்து தங்கள் ‘கான்’ பரம்பரை உலகை ஆளும் தகுதி உள்ளவர்கள் நம்மிடையே பகை இருக்கக் கூடாது. இனிமேல் ஒற்றுமையாக இருப்போம் என்று கூறி, குபெல் கானின் சந்ததி தளபதியாகவும், கஜூலி சந்ததியினர் பிரதம மந்திரியாகவும் இருந்து கொள்ளலாம் என்று கூறி அதை ஒரு உலோகத்தட்டில் பதிவு செய்து பொக் கிஷ அறையில் பாதுகாத்தார்கள்.

           549 ல் குபெல் கானின் மகன் முங்கு பஹதூருக்கு          ( யெசுகெய் பகதூர் என்றும் அழைப்பர்), திமுஜி(திமுஜின்) என்ற மகன் பிறந்து அவர் துர்கிஸ்தானை ஆண்டார். இந்த திமுஜி தான் பிற்காலத்தில் ஜெங்கிஸ்கானாக புகழப்பட்டு மூதாதையர்கள் ஏற்றுக் கொண்ட இஸ்லாமிய வம்சத்தைச் சேர்ந்தவர்களை லட்சக் கணக்கில் இரக்கமின்றி கொன்றார்.                                              
                                     நான்கு நேர்மையான மந்திரிகளை தனக்கு கீழ் நியமித்தார். அதில் ஒருவர் போற்றுதலுக்குரிய கோரசானின் கவர்னர் மஹ்மூத் மற்றவர் நசீருத்தீன். அவர்கள் தைமூரிடத்திலே எந்த பொய்யும் சொல்லவில்லை. ஊழல் போன்ற செயல்களிலும் ஈடுபடவில்லை. அனடோலியாவில் பதினை ந்து மைல்களுக்கு தைமூரின் இராணுவம் அணிவகுத்து நின்ற போது, தனக்கு கீழ் இத்தனை பெரிய கூட்டமா என்று இறைவனின் கருணையை எண்ணினார். தைமூருக்கு இருபத்தியோரு வயது ஆனபோது ஷெய்க் ஸெய்னுத்தீன் அபு பக்கர் என்னும் மதகுரு தனது சால்வையைப் போர்த்தி, தலையில் தொப்பி யையும் அணிவித்து, விரலில் அழகாக செதுக்கப்பட்ட வைர மோதிரம் (ராஸ்டி வ ரூஸ்டி) ஒன்றையும் அணிவித்து, தைமூருக்கு நபிகளாரின் சந்ததிகளின் மூலமாக மிகப்பெரிய சிறந்த எதிர்காலம் என்றாவது வரும் என்று தான் உண ருவதாகச் சொன்னார். தைமூருக்கு எழுபது வயது ஆகும் போது அனடோலி யாவை வெற்றி கொண்ட பிறகு, ஷெய்க் சுத்தர்தீன் அர்திபெல்லி(குத்ப் அல் ஆரிஃபைன்) என்னும் துருக்கி ஞானி ஒருவரின் ஆசீர்வாதம் பெற சென்றார். அவர் ஆசீர்வாதம் வழங்கியதோடு, ‘சலாரன் மலையில் சில சமயம் சூடாக வும், சில சமயம் குளிர்ந்த நிலையிலும் நீர் வரும் அருவி ஒன்று இருக்கிறது. அங்கு சென்று அதிகாலைத் தொழுகையை தொழு. அங்கு உனக்குப் பின் வரும் முதல் மனிதரே உனது குருநாதர் அவரை பின் தொடர்ந்து கொண்டால் நல்ல எதிர்காலம் வரும் என்று சொல்கிறார்.

                தைமூர் அவர்களும் ஞானியின் சொல்படி சலாரன் மலை சென்று அதிகாலைத் தொழுகையைத் தொழுது முதல் மனித ருக்காகக் காத்திருக்கிறார். ஆச்சரியம் வந்த முதல் மனிதர் தைமூரின் குதிரை களைக் கழுவி பராமரிக்கும் தலைமைப் பணியாள்(மீர் அகூர்). ஷெய்க் தனக்கு ஏதோ தவறான தகவலைத் தந்து விட்டார் என்று கருதிய தைமூர் இரண்டாம் நாள், மூன்றாம் நாள் தொடர்ந்து அந்த இடத்திலே தொழுது வந்தார். ஆச்சரியம் அதே பணியாள் தான் தொடர்ந்து முதலில் வந்தார். தைமூர் அவரிடம், ‘நீ என் பணியாள் என்று தெரியும் எனக்கு மட்டுமே அறிவுறுத்தப்பட்ட இந்த சிறப்பான இடத்திற்கு எப்படி நீ தினமும் தொழ வருகிறாய்’ என்று கேட்டார். அந்த பணி யாள்,‘என் தொழுகையின் போது நட்சத்திரங்களுக்கெல்லாம் தலைவர் போல் ஒருவர் உடன் தொழுதார். அவர் எனது வேண்டுதல்களுக்கெல்லாம் பதில் சொன்னது போல் தோன்றியது. நான் நம்பிக்கையை வேண்டினேன். அவர் இந் நிலையில் நீ அல்லாஹ்வின் விருந்தாளி. அல்லாஹ்வின் விருந்தாளிகளான முஹம்மதின் வழித்தோன்றல்களுக்கு அது அதிகமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றார். நான் தொழுது முடித்தபோது அவர் என்னருகில் உயிருடன் இல்லை. நான் சென்று ஷெய்க் அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். எனக்கு வழங்கப்பட்ட அருளில் இருந்து சொல்கிறேன் இந்த ஆண்டு கைசரின் ஆட்சி வீழ்ந்துவிடும். அல்லாஹ் அந்த ரோமுக்கு தகுதியான வாரிசை கொடுக்க இருக்கிறான் என்றார். ஒருவேளை இதைத் தெரிவிக்கதான் நான் இங்கு வருகி றோனோ?’ என்றார்.                              
                                           தைமூர் 1378 ல் தூரனுக்கு வெளியே உள்ள உஸ்பெக்கில் முடி சூட்டிக் கொள்ள சென்றார். அரசு மதகுரு மன்னரின் நல்வாழ்வுக்காக மக்களை பிரார்தனை செய்து கொள்ள வேண்டுகிறார். அனால் அப்போது மிக வும் புகழ் பெற்ற மதகுருவான குவாஜீ அபித் என்பவர், இவருக்காக பிரார்த னை செய்யாதீர்கள். துருக்கிகள் அதிகமான முஸ்லீம்களைக் கொன்றவர்கள் என்றார். அதே இரவு குவாஜீ அபித், தைமூரிடம் வந்து தான் தவறு செய்து விட்டதாகவும் மன்னித்து விடுமாறும் வேண்டினார். (இதற்கு தைமூர் எழுதி யுள்ள காரணம். குவாஜீத் கனவில் நபி (ஸல்) நாயகத்தைக் கனவில் கண்டது போலவும், குவாஜித்தை கடிந்து கொண்டது போலவும் பத்து பக்கத்துக்கு எழுதி உள்ளார். இது இஸ்லாத்துக்கு உகந்ததாக இல்லை என்று தவிர்த்து விடுகி றேன்.) 1393 ல் தைமூர் அனடோலியாவில் படை எடுத்த போது ஓட்டோ மான்(உஸ்மானிய) சுல்தான் பயேசித் என்பவர் எதிர்த்து வந்தார். எகிப்தில் நசீருத்தீன் ஃபரஜ் என்பவர் ஆட்சியில் இருந்தார். தைமூரின் அங்காரா போர் பிரசித்தி பெற்றது. ஓட்டோமான்களை விட செல்ஜுக்குகளை நல்லவர்களாகக் கருதினார். தைமூர் படைகளை முன்னேறி செலுத்திக் கொண்டிருந்த போது ஈராக், கர்பலா மற்றும் நஜஃப் பகுதியைச் சேர்ந்த முந்நூறு வீரர்கள் சையது முஹம்மது மிஃப்தாஹ் என்பவரின் கிழ் வந்து உதவினார்கள். இது தனக்கு இறைவனிடமிருந்து வந்த உதவியாக தைமூர் கருதினார். தனது மகன் ஷாஹ் ரூக்குடன் சென்று ஃபர்ஸ் பகுதியைக் கைப்பற்றினார். கிறிஸ்தவர்களின் ஆட்சியில் இருந்த அர்மேனியா மற்றும் ஜியார்ஜியாவை வென்றார். 60,000 பேர் அடிமைகளாக சிறை பிடித்தார்.

                                            பின் கோரசானிலிருந்து அதன் சுல்தான் கியாஸித்தீனிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கடிதம் வருகி றது. இதனால் மகிழ்ந்த தைமூர் ஜிஹுன் பகுதியைக் கடந்து கோரசானை வென்றார். சமர்கண்ட் நகரத்தில் இருந்த போது, அடிக்கடி இந்தியாவை வெல்ல வேண்டும் என்று உறுதி கொள்கிறார். துக்ளக் பேரரசின் மன்னர் நசீருத்தீன் முஹம்மது ஷா என்பவர் டெல்லியை ஆண்ட போது வட இந்தியா வின் மீது படையெடுத்தார். அவரை ஜாட்களும், அஹீர்களும் எதிர்த்தனர். அங்கிருந்த பிராமணர்கள் பெரும் எடையுள்ள தங்கத்தை பகரமாக தர முன் வந்தார்கள். இந்துஸ் நதியைக் கடந்து துலம்பா என்ற இடத்தைக் கைப்பற்றி னார். பின் அங்குள்ள இந்திய முஸ்லீம்களுக்கு பொருளுதவி செய்தார். பின் முல்தானை நோக்கி முன்னேறினார். சுல்தான் முஹம்மது ஷாவின் படை யில் தந்தங்களில் விஷம் தடவப்பட்டு, சங்கிலியால் பினைக்கப்பட்ட யானைப் படையும் இருந்தது. தைமூரின் வீரர்கள் யானையைக் கண்டு பயந்தார்கள். தைமூர் தன் படைகளின் முன் பெரிய குழிகளை வெட்டச் செய்தார். ஓட்டகங் களின் மீது சுமக்கும் அளவுக்கு மரங்களையும், வைக்கோலையும் ஏற்றி, யானைப்படைகள் தாக்க வரும் போது, வைக்கோலையும், மரங்களையும் எரித்து பெரிய இரும்பு கம்பிகளை அதில் சூடேற்றி யானயைத் தாக்கச் செய் தார். சூட்டைத் தாங்காத யானைகள் மதம் கொண்டு தாறுமாறாக ஓடி சொந்த படைகளையே துவம்சம் செய்தது. ஏறக்குறைய 100,000 பேர் கொல்லப்பட்டு டெல்லி வெல்லப்பட்டது. டெல்லி வெற்றி ஜெங்கிஸ்கான் மற்றும் அலெக்ஸா ண்டரின் வீரத்திற்கு ஈடாக பேசப்பட்டது. தைமூரின் படையெடுப்பால் சிதைந்த டெல்லி மீண்டு வர 100 ஆண்டுகள் ஆயிற்று. ஈராக்கின் பாக்தாத் நகரத்தை வென்றார். சிரியாவின் மீது படையெடுக்க முனைந்தபோது, தைமூரின் தளபதி கள் சிரியாவுடன் எகிப்து மற்றும் கான்ஸ்டாண்டிநோபிள் படைகளும் இணை வதால், மூன்று பெரும் படைகளுடன் போரிட நாமும் அதற்கேற்றவாறு பல மான இராணுவம் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தைமூர் அதை பொருட்படுத்தாமல் இறைவன் மீது நம்பிக்கை கொண்டு உறுதியுடன் எதிர்த்து சிரியாவை வென்றார். 1365 ல் தைமூருக்கு ஒரு மகன் பிறக்கிறான். அதற்கு முஹம்மது என்று பெயர் சூட்டுகிறார். பின் ஜஹாங்கீர் (உலகை வென் றவர்) என்றும் பெயரிட்டார். மதகுருமார்களும், மந்திரிகளும் வெள்ளிக் கிழமை தொழுகையில் தைமூரின் பெயரை மொழியவும், நாணயம் வெளி யிடவும் வேண்டுகிறார்கள். தைமூர் இது சரியான நேரமில்லை என்று மறுத்து விடுகிறார். ஜாட்களின் தலைவர் அமீர் கிஸர் யுசுரி தனது கூட்டத்துடன் தைமூரின் தலைமையில் செயல்பட சம்மதிக்கிறார். 30 வயதில் மொத்த துர் கிஸ்தான் (மாவ்ர் அல் நெஹார்) பகுதிகள் இவரின் கீழ் வந்தது. அருகாமை பழங்குடிகள் அனைவரும் தைமூரின் கிழ் வந்து சேர்ந்தார்கள்.
                 சமர்கண்ட் பகுதியில் அமீர் தாவூத் என்பவரை கவர்னராக்கி, அம்மக்களிடம் எந்த வரியும் வசூலிக்கக்கூடாது என்று கூறுகி றார். தைமூரின் நம்பிக்கையான நால்வர் ஸிந்த் குஷ்ம், அமீர் மூஸா, அபுல் மற்றும் அபு உல் மௌலி ஆகியோர் ஒரு வேட்டையில் இருக்கும் போது அவரைக் கொல்ல முயல்கிறார்கள். அதிலிருந்து தப்பித்த தைமூர் அவர் களைக் கைது செய்து அரண்மனையில் நிறுத்துகிறார். அவர்களுக்கு என்ன தண்டனைக் கொடுக்கலாம் என்று மதகுருமார்களைக் கேட்கிறார். அவர்கள் மரணதண்டனைக் கொடுக்கலாம். ஆனால் முதல் முறை என்பதால் மன்னி த்து விடலாம் என்று கூறுகிறார்கள். தைமூர், அபு மௌலவியிடம், ‘நாயகத் தின் சந்ததியில் வந்த நீ எப்படி ஒரு முஸ்லீமைக் கொல்லலாம்? நான் உன்னை மன்னிக்கிறேன்’ என்றார். அபுலிடம்,  அவரொரு அரேபிய வம்சாவழி யினராதலால் மன்னிப்பதாகக் கூறுகிறார். அமீர் மூஸாவிடம், தாம் இருவரும் மிகவும் நெருங்கிய உறவினர்கள். தான் எந்த உறவினருக்கும் வேதனை செய்ய மாட்டேன் என்று உறுதி கொண்டிருப்பதால் அவரை மன்னிப்பதாகக் கூறினார். தைமூரின் மனைவி ‘சிராய் முல்க் கானும்’ என்பவர் கிசான் கானின் மகளும், அமீர் ஹுசைனின் விதவையும், அமீர் மூஸாவின் சகோதரரும் ஆவார். ஷிர்கான் பகுதியில் நல்ல பொறுப்பில் இருந்து கவனித்ததால் ஷிண்ட் குஷ்மையும் விடுதலை செய்தார்.
      இராணுவ நடவடிக்கை மூலம் மேற்கு, தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை வென்ற இஸ்லாமிய மன்னராக அறியப்பட்டார். எகிப்தி லும், சிரியாவிலும் மம்லுக்குகளை வென்றார். ஓட்டோமான்களை எதிர்த்தார். இவரின் தைமூர் பேரரசு தான் 16 ம் நூற்றாண்டில் வெடித் துகள்களை போரில் பயன்படுத்தினார்கள். தைமூர் தங்கள் பழங்குடி குழுக்கள் பலரை இஸ்லாமில் இணைய வைத்தார். இவர் காலத்தில் இஸ்லாமின் போர்வாள் என்று புகழப் பட்ட இவர் பல மதக்கல்வி நிலையங்களை துவங்கினார். அன்றைய உலக மக்கள் தொகையில் 5% பேர் அதாவது 17 மில்லியன் மக்கள் இவரது பல படை யெடுப்புகள் மூலம் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. தைமூர், கணித வல்லுனரும், வானாராய்ச்சி நிபுணருமான “உலுக் பேக்” கின் பாட்டனாராவார். மொகலாயச் சக்கரவர்த்தி பாபருக்கு மூன்று தலைமுறைக்கு மூத்தவர். இப்ன் கல்தூன் மற்றும் ஹ்ஃபீஸ் இ அப்ரூ ஆகிய இஸ்லாமிய அறிஞர்களிடம் நட்பு கொண்டவர். ஜெங்கிஸ்கானின் வாரிசுகள் ‘கான்’ என்ற பட்டப்பெயரை பயன் படுத்தியதால் இவர் தன் பெயருக்குப் பின்னால் கான் என்று போட்டுக் கொள்ள வில்லை. இறைவனிடமிருந்து தனக்கு தனி சக்தி வழங்கப்படுவதாக எப்போ தும் எண்ணிக் கொள்வார். காஸலை ஆண்ட மூன்றாம் ஹென்றியுடன் நட்பாக இருந்தார். ஹஜ்ஜி முஹமது அல் காஸி என்பவரை பரிசுப் பொருள்களுடன் தூதுவராக ஹென்றி இடம் அனுப்பினார்.
                       1402 ல் ஆறாம் சார்லஸுக்கு, வாணிபம் செய்ய அழைப்பு விடுத்து பாரசீக மொழியில் எழுதிய கடிதம். 1403 ல் அதே சார்லஸு க்கு லத்தீன் மொழியில் எழுதிய கடிதம். பயேஸித்தை வெற்றி கொண்டதாக மகன் மிரான் ஷா எழுதிய கடிதங்கள் ஆதாரமாக உள்ளன. அக்காலத்தில் முஸ்லீம்களை ஒருங்கிணைத்தவர் இவரே. புகழ் பெற்ற இந்திய தத்துவ வாதி யும், கவிஞருமான முஹம்மது இக்பால் எழுதிய “ட்ரீம் ஆஃப் திமூர்” என்ற கவிதை புகழ் பெற்று, பின்னாளில் இரண்டாம் பஹதூர் ஷாவின் அரண்மனை யில் பாடப்பட்டு வந்தது. 1941 ல் சோவியத்தைச் சேர்ந்த மிகாயீல் ஜிராசிமாவ் என்ற ஆராய்சியாளரால் தைமூரின் சமாதி தோண்டி எடுக்கப்பட்டது. பின் 1942 நவம்பர் மாதம் இஸ்லாமிய முறைப்படி மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. ஹிராத் பகுதியில் திமுரித் மசூதி, கோஹர்ஷாத் மசூதி, பீபி கானும் மசூதி, பால்க் பகுதியில் கிரீன் மசூதி என்று பல மசூதிகளையும், கலைநயத்துடன் கூடிய காஜா அஹ்மத் யசாவி நினைவு மண்டமும் தைமூர் கட்டினார். 
               தைமூருக்கு ஜஹாங்கீர், உமர் ஷெய்க், மிரான் ஷா மற்றும் ஷாருக் என்று நான்கு பிள்ளைகள். தைமூர் இறந்த சில நாட்களிலே யே மிரான் ஷா இறந்து போனார். தைமூருக்குப் பிறகு வாரிசாக ஷாருக் ஆட்சி க்கு வந்தார். அவருக்குப் பின் பேரர் பீர் முஹம்மது இப்ன் ஜஹாங்கீர் ஆட்சிக்கு வந்தார். பீர் முஹம்மதுக்குப் பிறகு பதவிக்காக சில காலம் இவர்களுக்குள்ளே யே சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். இவரின் வாரிசுகள் முறையே தைமூர், தைமூருக்குப் பிறகு ஃபர்கானாவை ஆண்டவர்களாக மைரன் ஹுசென், முஹம்மது மிர்ஸா, அபு சயீத், ஓமர் ஷெய்க், இந்தியாவை ஆண்ட வர்களாக பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான், ஒளரங்க ஸேப், பஹதூர் ஷா, ஃபரூக் ஷாயர், முஹம்மது ஷா, இரண்டாம் ஆலம்கீர், ஷா ஆலம், அக்பர் ஷா ஆகியோராவார்கள். இவர்களல்லாமல் காபூல், சமர்கண்ட் என்று பிரிந்து ஆண்டவர்களும் உள்ளார்கள். தைமூர் இறந்து பல நூற்றாண் டுகள் ஐரோப்பாவில் பேசப்பட்டார். காரணம் அப்போது கிழக்கு ஐரோப்பியர் களுக்கு சிம்மசொப்னமாக விளங்கிய பயேஸித்தை தைமூர் வென்றதே ஆகும். தைமூர் இறந்த பிறகு, உடலை சணல் துணியில் வைத்து சந்தனம், பன்னீரால் அடைத்து சமர்கண்ட் நகரத்திற்கு அனுப்பினார்கள். இன்றைக்கும் “குர் இ அமீர்” என்ற இவரது கல்லறை உள்ளது.







ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டுமென்ரால் விண்ணை முட்டும் இமயமலை தொடரை தாண்டி தான் வரவேண்டும்.இல்லையென்றால் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் சிந்து நதி கரையை தாண்டி தான் வரவேண்டும்.  

            1398   இல் மங்கோலிய பரம்பரையில் வந்த தைமூர் என்கிற கொடுங்கோல் மன்னன் மத்திய ஆசியாவில் இருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி ஆப்கானிஸ்தானை கடந்து இந்தியாவுக்கு வந்து சேர்ந்தான்.சிந்து  நதியை அவன் சட்டை செய்யவில்லை.படகுகளை வரிசையாக இணைத்து பாலம் ஏற்படுத்தி கண நேரத்தில் நதியை கடந்து டெல்லியை நோக்கி முன்னேறினான்.அவன் இந்தியாவில் தங்கி இருந்தது ஆறு மாத காலம்தான்.
       இருப்பினும் பிற்பாடு மொகலாய ராஜ்யம் இந்தியாவில் தோன்றுவதற்கான ஒரு முக்கிய காரணம்  தைமூர் என்பதால் அவன் சம்பந்தபட்ட ரத்தமயமான இந்திய அத்தியாயங்களை நம்மால் ஒதுக்க முடியவில்லை.ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலின் வடக்கில் முந்தைய சோவியத் ரஷ்யாவின் தென்கோடியில் இன்றைய உஸ்பெக் பகுதியில் உள்ள முக்கிய நகரம் சாமர்கன்ட் துருக்கிய மங்கோலிய இனத்தை சார்ந்த தைமூரின் தலைநகரும் அதுதான்.சாமர் கண்டியிலிருந்து கிளம்பிய தைமூரின் படை முதலில் பாக்தாத் நகரை சூறையாடியது.பிறகு பாரசீகம் வெறியும் வேகமும் கொண்ட தைமூரின் வீரர்கள் பாரசீகத்தை பந்தாடினார்கள்;.கொடூர களிப்புடன் அவர்கள் வெட்டி வீழ்த்திய மனித தலைகளின் எண்ணிக்கை சுமார் எழுபதாயிரம்.அவற்றை குவித்து நூற்றுகணக்கான மனித தலை பிரமீடுகளை உருவாக்கிய பிறகே தைமூர் பரசீகதி விட்டு வெளியேறினான்.அடுத்தபடி ரஷ்ய மாஸ்கோவுகுள் புகுந்து சூறையாடிவிட்டு சில நாட்கள் ஓய்வெடுத்து விட்டு கொடு நேராக இந்தியாவை நோக்கி அவன் படை முன்னேற ஆரம்பித்தது.அவன் இலக்கு ஏற்கனவே கேள்விபட்டிருந்த புகழ் பெற்ற டெல்லி தான்.இந்தியாவை நோக்கி தைமூரின் படை முன்னேறிய வேகத்தோடு பறவைகள் கூட போட்டியிட முடியவில்லை.செப்டெம்பர் 22 1398 ஆம் ஆண்டு தைமூரின் படை சிந்து நதிக்கரையோரம் வந்துசேர்ந்தது.
                 இந்த பரபரப்பான செய்தி வந்து சேர்ந்த உடனே வாடா இந்திய பீதியில் ஆழ்ந்தது டெல்லியில் கோலோச்சிய பலம் வாய்ந்த சுல்தான் பிரோஸ் ஷா துக்ளக் இறந்து பாத்து ஆண்டுகள் ஓடிவிட்டன.நீயா நானா என்ற என்று கோஷ்டி சண்டையில் ஈடுபட்டிருந்த பொம்மை அரசர்கள் இருவர் டெல்லியை ஒரு ஒப்புக்கு ஆண்டு வந்தனர் ஒரு கோஷ்டி தகராறில் மல்லுகான் கை ஓங்க அவன் உதவியோடு டெல்லி அரியணையில்  உட்கார்ந்தான் முகமது ஷா அவன் பதவி ஏற்ற கையேடு தைமூரின் படை டெல்லியை நெருங்கி கொண்டிருக்கும் செய்தியும் வந்து சேர்ந்தது.
       வரட்டுமே ! ஒரு நொண்டி மன்னனுக்கா  நாம் பயப்படுவது? ஆர்ப்பாட்டம் போடும் அந்த மகோலிய நடோடியை தோற்கடித்தல் டெல்லி சுல்தனகிய தாங்கள்தான் உலக சாம்பியன்! என்கிற ரீதியில் மன்னனை மல்லுகான் இக்பால் உசுப்பேற்ற யார்  என்ன என்று விசாரிக்காமலே போர் உடை பூண்டான் முகமது ஷா.சிந்து நதியை கடந்த தைமூரின் படை மகிழ்ச்சியை கொண்டாட பஞ்சாப் பகுதியை சூறையாடி வெறியாட்டம் போட்டது
சுமார் ஒரு லச்சம் பேர் தைமூரின் அடிமைகளாக சிக்கினர்.அவர்களை மொத்தமாக கயிறுகளால் கட்டி தைமூரின் படை கூடவே இழுத்து சென்றது.டிசம்பர் ஆரம்பம் ....வாள்களை உயர்த்தியவாறே,ஏகமான ரத்த ஆர்வத்துடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்ட இந்த மகோலிய படையின் மொத எண்ணிக்கை சுமார் தொண்ணூறு ஆயிரம்.
                டெல்லி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த தைமூரிடம் நெருங்கி சென்ற சில தளபதிகள் களத்தில் குதிக்கும் தருணத்தில் கையோடு சுமார் ஒரு லட்சம் அடிமைகளை அதவும் இந்தியாவை சேர்ந்தவர்களை பக்கத்தில்       வைத்துகொண்டிருபது சற்று ஆபத்தானது என்றும் ஏதேனும் கலவரமான சூழ்நிலையில் அவர்கள் தப்பித்து எதிரிகளோடு சேர்ந்தால் அதனால் பிரச்சினை ஏற்படலாம் என்றும் எடுத்து சொன்னார்கள் ஆகவே,தேர்ந்த சில ஆயிரம் அடிமைகளை தவிர மற்றவர்களை தீர்துகட்டிவிடலம் எந்த்ரு௭ம் யோசனை சொன்னார்கள்.அடங்கி ஒடுங்கி போய் துவண்டு கிடக்கும் இந்த அடிமை கூட்டத்தை கொன்று தள்ளுவதில் நேரத்தை செலவிட்டு கொண்டிருக்க முடியாது. 



மாமல்லன்(ன்னன்)தைமூர்-மன்னர்க்கெல்லாம் மன்னன்!
குறிப்பு:இந்த வீரனின்/கொடுங்கோலனின்(உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளுங்கள்) வரலாற்றை உங்களுக்கு பகிரத்தூண்டிய சக பதிவர் ஜனா அவர்களுக்கு தான் முதலில் நன்றிகள் சொல்ல வேண்டும்.பல மாதங்களாகிவிட்டது அவர் கேட்டு.நான் பெயரை கூட மறந்து கடந்த வாரம் தான் மீண்டும் கேடு தேடி அலசி கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு அப்திவாக்கி வைத்து உங்களுடன் பகிர்கிறேன்.வரலாறுகளை வாசிக்கும் போது என்ன ஒரு இன்பம்..பலருக்கு இதே விதமான ஆசை இருப்பதை கண்டிருக்கிறேன்..நீங்களும் ஒரு வரலாற்றுப் பிரியர் எனில் தொடர்ந்து செல்லுங்கள்!
தைமூர் (6 ஏப்ரல் 1336-19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய-மங்கோலியரான பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இப்பேரரசு, இந்தியாவில் முகலாயப் பேரரசாக 1857 ஆம் ஆண்டுவரை நீடித்தது.



மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.



தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்கவிளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.



வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.



முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா டில்லியை ஆண்டுகொண்டிருந்த போது தனது படைகளுடன் வந்த தைமூர் கோட்டை வாயிலில் முகம்ம்மது துக்ளக்கின் படையை தோற்கடித்து அரண்மனையினுள் புகுந்து சூறையாடி டெல்லி வீதிகளில் இரத்தம் ஓட செய்தது இரண்டு வாரங்களில் திரும்பி சென்றதாக வரலாறுகள் கூறுகிறன!



குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின்சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ளசமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள்உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது




இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும்,பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சுஎன்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.



உலகம் முழுவதையும் வென்று, தம் அதிகாரத்தின் கீழ்கொண்டு வரவேண்டும் என்று, வெறிபிடித்து அலைந்த மாவீரர்களுள் தைமூரும் ஒருவர். அவருக்கு ஒரே கால்தான் உண்டு. போரின்போது மற்றொரு காலை இழந்துவிட்டார்.



உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.



இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.



அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??



அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.



14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!





Timur, or Tamerlane, is one of Central Asia’s most famous historical figures. Born around 1336 (though some place his birth in the late 1320s) amid the squabbling remains of the Mongol Empire, Timur would eventually claim an empire of his own stretching from South Asia to the Middle East, extending all the way from Delhi to Aleppo. Using tactics borrowed from the Mongols, Timur razed cities from Khwarazm to Iraq, slaughtering millions in the process and sending the skilled–artisans and craftsmen–back to his capital at Samarkand. For a man engaged in warfare for most of his life, Timur did not meet his end on a battlefield.

During a campaign in the Middle East lasting several years, Timur sacked Aleppo and Damascus and is said to have built a pyramid of heads in Baghdad. He exchanged challenge-laced and insulting letters with Sultan Bayezid I of the Ottoman Empire. In 1402 Timur defeated and captured  Bayezid. Bayezid had been in the west, preparing to lay siege to Constantinople, when Timur invaded from the east. Bayezid’s defeat at the Battle of Ankara, and his death in captivity a few months later, touched off the 11-year Ottoman civil war.

Enjoying this article? Click here to subscribe for full access. Just $5 a month.
Shortly after Ankara, Timur decided to return back home. But upon his return to Samarkand he did not settle in to rule. Throughout his conquests Timur had capitalized on a powerful legacy, that of the Mongol Empire which he sought to restore. The Mongol Empire was fragmented and in decline by Timur’s time, but as historian Beatrice Forbes Manz noted “the empire remained ideologically vigorous.” Timur set out to take China back from the Ming dynasty, which had superseded the Yuan (itself the successor to the Mongol Empire in China, having been established by Kublai Khan, the grandson of Genghis).

In 1395, the Ming had sent an official embassy to Samarkand. But the letter Fu An carried from the Hongwu Emperor treated Timur “as a typical vassal of the Chinese court,” as historian Morris Rossabi phrased it. Timur detained the embassy and a second embassy sent in 1397. Some accounts say Timur had the 1,500 men sent with the first embassy executed.

Sharaf ad-Din Ali Yazdi, a Persian historian writing two decades after Timur’s death and drawing heavily upon the biography (Zafarnama) penned by Nizam ad-Din Shami, a contemporary of Timur, casts Timur’s designs on China as nothing short of divinely inspired, even if they led him to his death. Timur, upon returning to Samarkand, “form’d a design to make war on idolaters of China, hoping by that to obtain pardon of God for his former crimes.” Yazdi says “It was fitting that so great a hero as Timur shou’d die in the bed of honor, and that this inevitable accident shou’d happen during a journey he undertook for God’s glory…” Granted, Yazdi’s biography had been commissioned by a descendant of Timur from remains of his empire, which fractured soon after his death.


Divinely inspired or out of anger at an insult dealt by a far off emperor, Timur returned from his conquests in the Middle East and figured it was time to deal with the Chinese. He set out in early February 1405 amid a harsh winter. Timur, if he was born in 1336, would have been nearly 70 at the time. But as he gathered his army, estimated at more than 200,000 men, Timur became sick–whether from a cold, pneumonia or the plague is history’s secret. He died in the city of Otrar, now in modern Kazakhstan. As Rossabi wrote, “the Ming court had no conception of dangers it faced” but Timur’s death “saved the court and prevented the disruption of the state.”


No comments:

Post a Comment