Wednesday 21 March 2018

INDIA FIRST TALKIE FILM " ALAM ARA"






INDIA FIRST TALKIE FILM " ALAM ARA"


இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா. (உலகத்தின் ஆபரணம் என்று அர்த்தம்) 1931 மார்ச் 14 அன்று வெளியானது. அது இந்தியில் பேசியது.

அர்தேஷிர் இரானி என்பவர் அவரது நிறுவன மான இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி மூலம் இதைத் தயாரித்தார். இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

“பின்பற்றுவதற்கு எங்களுக்கு எந்த முன்மாதிரியும் அன்று இருக்கவில்லை, ஒலிப்பதிவு பற்றி ஒரு மாதம் பயிற்சி பெற்றோம், பார்ஸி நாடகமேடையிலிருந்து அதன் திரைக்கதையை அமைத்துக் கொண்டோம். வசன எழுத்தாளர் இல்லை. பாடல் ஆசிரியர் இல்லை.

ஒழுங்கற்ற கிறுக்கல்கள் மீது ஒவ்வொன்றையும் திட்டமிட்டோம். ஆரம்பித்தோம். நாடக மேடையில் பாடப்பட்டு வந்த பாடல்களை நானே தேர்ந்தெடுத்தேன். மெட்டுகளைத் தேடிப்பிடித்தேன், தபேலா, ஹார்மோனியம், வயலின் இந்த மூன்றும் தான் இசைக்கருவிகள்” என்றார் அர்தேஷிர் இரானி.

ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய பார்ஸி நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட காதல் சினிமா இது. ஒரு இளவரசன் நாடோடிப்பெண்ணை காதலிப்பதாக அது இருந்தது. படம் வெளியான அன்று கூட்டம் சமாளிக்க முடியாததால் போலீஸாரின் பாதுகாப்பு கேட்டு வாங்கப்பட்டது. அந்தத் திரைப்படத்தின் படச்சுருள் தற்போது இல்லை. காணாமல் போய்விட்டது




மார்ச் 14 , நாளில் தான் முதல் இந்திய பேசும் படம் ஆலம் ஆரா மும்பையில் உள்ள மெஜஸ்டிக் திரையரங்கில் 80 வருடங்களுக்கு முன் திரை இடப்பட்டது.  இந்தப் படம் தான் இந்திய திரை இசையின் முன்னோடி எனக் கூறலாம். ஆலம் ஆரா அர்தேசர் இராணி என்பவரால் இயக்கப்பட்டது, இது ஜோசப் டேவிட் என்பவர் எழுதிய ஒரு பார்சி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படம். 2  மணி நேரமும் 4  நிமிடங்களும்  ஓடக் கூடிய இந்த படத்தில் வித்தல், ஜுபைதா, L .V . பிரசாத் மற்றும் பிரித்திவி ராஜ் கபூர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்ப்பை பெற்றது, மேலும் வாசிர் முஹம்மது கான் பாடிய தே தே குதா கே நாம் பர் என்ற பாடல் இந்தியாவின் முதல் சூப்பர் ஹிட் பாடல் என்ற அந்தஸ்தையும் பெற்றது. ஒலிப்பதிவில் இரைச்சலை தவிர்ப்பதற்காக  இந்தப் படம் பெரும்பாலும் இரவிலேயே படமாக்கப்பட்டது, மைக்ரோ போன்களை காமெரா கோணத்தில் அமையாதபடி வைத்து ஒலிப்பதிவு செய்தனர். 

இந்தப் படத்தின் பிரதி இப்போது இல்லை. கடைசி பிரதி 2003 புனேயின் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் ஏற்ப்பட்ட தீ விபத்தின் போது அழிந்துவிட்டது. மூன்று வருடங்களுக்கு முன் தகவல்   தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆலம் ஆரா படத்தின் எந்தப் பிரதியும் தேசிய ஆவணக் காப்பகத்தில் இல்லை என்பதை தெரிவித்தது. இந்தியா முழுவதும் தேடும் பனி தொடங்கியது இருப்பினும் இதுவரை இந்தியாவின் முதல் பேசும் படத்தின் ஒரு பிரதியும் கிடைக்கப் பெறவில்லை.
இந்தியாவின் முதல் பேசும் படம் ஆலம் ஆரா இந்திய வரலாற்றில் பேசாமல் தன் இருத்தலை நமக்கு உணர்த்துகிறது…

No comments:

Post a Comment