CHRISTOPHER NOLAN ,
HOLLYWOOD DIRECTOR
BORN 1970 JULY 30
கிறிஸ்டோபர் நோலன் (பிறப்பு: சூலை 30, 1970) ஓர் ஐக்கிய அமெரிக்க/இராச்சிய திரைப்பட நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
தன் சகோதரர் ஜோனதன் நோலனுடன் சிறப்பாக திரைப்படங்களின் திரைகதைகளை எழுதுயுள்ளார். சின்காபி திரைப்படங்கள் என்றொரு திரைப்பட நிறுவனத்தினை நிறுவியுள்ளார். அவரது மெமன்டோ திரைப்படம் மிகவும் பாராட்டப்பட்டத் திரைப்படமாகும். அத்திரைப்படம் மிகுந்த பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுத்தந்தது. கிறிஸ்டோபர் நோலன் இன்றைய சிறந்த ஆங்கிலத் திரைப்பட இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
நோலன் தனது இளம் பருவத்தினை அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் செலவிட்டார். பின்னர் ஆங்கில இலக்கிய பட்டம் ஒன்றை இலண்டனில் உள்ள பல்கழைக்கழக கல்லூரியில் பெற்றார். கல்லூரியில் நிறைய குறுந்திரைப்படங்களை இயக்கினார். கல்லூரியின் திரைப்படச் சங்கத்தில் சந்தித்த நண்பர்களோடு பின்னர் 1998 இல் பால்லோவிங் திரைப்படத்தினை இயக்கினார்.
ஆரம்பக்கால வாழ்க்கை
இலண்டனில் பிறந்தார் நோலன். அவரது பிரித்தானிய தந்தை பிரெண்டன் நோலன் ஓர் விளம்பர எழுத்தாளர் மற்றும் அவரது அமெரிக்க தாயார் கிறிஸ்டினா (ஜென்சென்) ஓர் விமான பணிப்பெண் மற்றும் ஆங்கில வாத்தியாராக பணிப்புரிந்துள்ளார். [2][3][4]இலண்டன் மற்றும் சிகாகோ என இரு நகரங்களில் அவரது சிறு வயது கழிந்தது. அவருக்கு பிரித்தானிய மற்றும் அமெரிக்க குடியுரிமை இருந்தது.[5][6] அவருக்கு மாத்தியு எனும் அண்ணனும், ஜோனதன் எனும் தம்பியும் இருக்கின்றனர். [7]நோலன் தனது ஏழு வயதில், தன்னிடம் இருந்த பொம்மைகளை வைத்து, தனது தந்தையின் சூப்பர் 8 காணொளிகருவி மூலம் சிறு படங்கள் உருவாக்க ஆரம்பித்தார்.[8][9] தனது பதினோராவது வயதிலிருந்து, அவர் ஓர் இயக்குனர் ஆக வேண்டும் என கனவு கண்டார்.[7]
ஹெர்ட்பொர்ட்ஷயரில் உள்ள ஹெர்ட்பொர்ட் ஹீத் எனும் ஊரில் உள்ள ஹைளிபரி மற்றும் இம்பீரியல் சர்வீஸ் காலேஜ் எனும் பள்ளியில் நோலன் பயின்றார். பின்பு, இலண்டன் யுனிவெர்சிட்டி கல்லூரியில் (யுசீஎல்) ஆங்கில இலக்கியம் பயின்றார். யுசீஎல்-லை அவர் தேர்ந்தெடுக்க காரணம், அந்த கல்லூரியில் இருந்த ஸ்தீன்பக் தொகுப்பு அறை மற்றும் 16 மிமீ புகைப்பட கருவிகள் தான். [10] திரைப்பட குழுவின் தலைவராக நோலன் இருந்தார். எம்மா தாமஸ் உடன் இணைந்து 35 மிமீ திரைப்படங்களை திரையிட்டு, அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டு 16 மிமீ படங்கள் தயாரித்தார். [11]
அவரது கல்லூரி காலங்களில், நோலன் இரு குறும்படங்களை உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு, "டாரன்டெல்லா" எனும் 8 மிமீ படமே அவரது முதல் படமாகும்.[12] 1995-ஆம் ஆண்டு சிறிய குழு மற்றும் கருவிகளுடன் உருவான அவரது இரண்டாவது படம் "லார்சனி".[13] நோலனின் பணம் மற்றும் குழுவின் கருவிகளுடன் உருவான அந்த படம், 1996-ஆம் ஆண்டு காம்ப்ரிஜ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது மற்றும் யுசிஎல்-லின் சிறந்த குறும்படம் என கருதப்பட்டது.[14]
வரவேற்பு
அக்டோபர் 2011 அன்றுவரை, வட அமெரிக்காவில் நோலனின் திரைப்படங்கள் $ 1.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளன. அவரது முதல் திரைப்படமான பால்லோவிங் வெறும் $48,482 வருவாயினை ஈட்டிய நிலையில் அவரது த டார்க் நைட் திரைப்படம் $533,345,358 வருவாயினை ஈட்டியது.[15]
Directed features[edit source]
Critical, public and commercial reception to Nolan's directorial features as of 15 March 2018.
Year | Film | Rotten Tomatoes[319] | Metacritic[320] | BFCA[321] | CinemaScore[322] | Budget | Box office[323] |
---|---|---|---|---|---|---|---|
1998 | Following | 79% (24 reviews) | 60 (11 reviews) | N/A | N/A | $6 thousand | $48.4 thousand |
2000 | Memento | 92% (169 reviews) | 80 (34 reviews) | 90/100 | N/A | $9 million | $39.7 million |
2002 | Insomnia | 92% (199 reviews) | 78 (36 reviews) | 93/100 | B | $46 million | $113.7 million |
2005 | Batman Begins | 84% (271 reviews) | 70 (41 reviews) | 91/100 | A | $150 million | $374.2 million |
2006 | The Prestige | 75% (191 reviews) | 66 (36 reviews) | 83/100 | B | $40 million | $109.6 million |
2008 | The Dark Knight | 94% (326 reviews) | 82 (39 reviews) | 96/100 | A | $185 million | $1.005 billion |
2010 | Inception | 86% (337 reviews) | 74 (42 reviews) | 94/100 | B+ | $160 million | $825.5 million |
2012 | The Dark Knight Rises | 87% (345 reviews) | 78 (45 reviews) | 91/100 | A | $250 million | $1.085 billion |
2014 | Interstellar | 71% (325 reviews) | 74 (46 reviews) | 80/100 | B+ | $165 million | $675.1 million |
2017 | Dunkirk | 92% (375 reviews) | 94 (53 reviews) | 90/100 | A− | $100 million | $525.6 million |
No comments:
Post a Comment