P.S.VEERAPPA ,THE TERRIBLE VILLAIN IN FILMS
BORN SEPTEMBER 10,1911 -SEPTEMBER 11,1978
பி. எஸ். வீரப்பா (பிறப்பு 10.09.1911- இறப்பு-11.09.1998) வயது-80. புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
1911-ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார். சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர். சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குனர் எல்லீஸ் ஆர். டங்கனிடம் அனுப்பினார்.
திரைப்பட வாழ்க்கை
பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கரச் சிரப்பு அந்தக்காலத்து திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம். கே. பி. சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின் மணிமேகலை என்கிற திரைப்படத்தில் வீரப்பா அறிமுகமானார். தனது முத்திரைச் சிரிப்பான உரத்த ஹ ஹா ஹா.. என்பதை சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் செய்தார். இந்தச் சிரிப்பிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன் பிறகு, இதை தனது பாணியாக எல்லா படங்களிலும் பயன் படுத்த ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் போன்றோரிலிருந்து
கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் படங்கள் வரை நடித்துள்ளார்.
ஆஜானுபாகுவான, ஆண்மை மிக்க வில்லன் பி.எஸ்.வீரப்பா
1950களில் வந்த வில்லன்களில் மட்டுமல்ல அதன் பிறகு 1960களில் வில்லன்களாக தமிழ்த்திரையில் நின்றவர்கள் எவரையும் விட மகத்துவம் நிறைந்தவர் வீரப்பா.
வில்லன் வீரப்பாவின் முக்கிய படங்கள் என்று சில சொல்வதென்றால்
மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1956)
’அண்டாக்கா கசம் ஆபுக்கா கசம் திறந்திடு சீஸே!’
மகாதேவி ( 1957 )
சாவித்திரியை அவர் காமம் பொங்கப் பார்க்கும் பார்வை.
’அடைந்தால் மகாதேவி! இல்லையேல் மரண தேவி!’
எம். என்.ராஜம் அவரைப்பார்த்து வெட்கம், நாணம் கலந்து ’அத்தான்’ என்று குழையும்போது எரிச்சலுடன் வீரப்பா ’சத்தான இந்த வார்த்தைகளில் செத்தான் கருணாகரன்!’
’அப்படி அபசகுனமாக சொல்லாதீர்கள் அத்தான்’ என்று
எம்.என்.ராஜம் உடனே பதறும்போது ’சொல்லுக்கெல்லாம் கொல்லும் சக்தி இருந்தால் உலகம் என்றோ அழிந்திருக்குமடி!’
சந்திரபாபுவிடம் சீறல் ’கிளியைக் கொண்டு வரச்சொன்னால் குரங்கைக் கொண்டு வந்து விட்டாயே!’
'பெற்றவளுக்கில்லாத அக்கறை உனக்கென்னடி?’
ராஜராஜன் (1957)
’புகழ்ந்து பாடமாட்டானா இந்தப் புலவன்?
பட்டினி போடுங்கள்!
நான்கு நாள் பட்டினி கிடந்தால் கலிப்பா, வெண்பா என்று பொழிந்து தள்ளி விடமாட்டானா!
ஹா ஹா ஹா ‘
நாடோடி மன்னன் (1958)
மருமகன் ஆனால் என்ன
ஆண்டவனின் அருள் மகனாய் இருந்தாலென்ன
இந்த நாட்டுக்கு தேவை ஒரு பொம்மை
அவன் தான் பிங்கலன்
நாடோடி மன்னன் படத்தில் ’பிங்களனோ ஒரு அப்பாவி’ என்று நம்பியாரை எள்ளி நகையாடுவார்.
புதிய சட்டங்கள் பற்றி எம்.ஜி.ஆர் எடுத்துச்சொல்லும்போது ‘கற்பழித்தால் மரணதண்டனை.” என்ற சட்டம் குறித்து உடனே,உடனே வீரப்பா அதிர்ச்சியாகி முகத்தில் கடும்கோபக்குறி காட்டுவார். என்ன ஒரு வில்லத்தனம்!
வஞ்சிக்கோட்டை வாலிபன் (1957)
மிகப்பிரபலமான அந்த வசனம்! ’சாதுர்யம் பேசாதடி என் சதங்கைக்கு பதில் சொல்லடி’ என்று வைஜயந்திமாலா பொங்கி, பத்மினிக்கு நடன சவால் விடும்போது வீரப்பாவின் ஆரவார குதூகலம். ’சபாஷ்! சரியான போட்டி!’ வீரப்பாவின் வசனத்துக்கு தியேட்டரே அதிரும்!
சிவகெங்கைச் சீமை (1959)
’நள்ளிரவில் துள்ளி விழும் மருது பாண்டியரின் தலை!’ ஹாஹாஹா.
(ஜஞ்சஞ்சஞ்சங் ரீரிகார்டிங்க்) இடைவேளை! படத்துக்கு இடைவேளை!
இடைவேளைக்குப்பின் கூட சிவகெங்கைச் சீமையில் வீரப்பா பொறி சிந்தும் வெங்கனல் வசனங்கள் பிரமிக்க அடிக்கும்.
’கொள்ளையடித்தவன் வள்ளலாகிறான்!..... பல மண்டை ஓடுகளின் மீது சாம்ராஜ்யங்கள் அமைக்கப்படுகின்றன!......ஹாஹாஹா!..’
வெள்ளையர்களுக்கெதிரான மருது பாண்டியர்களின் போராட்டம் தான் சிவகெங்கைச்சீமை. வெள்ளைக்காரன்கள் இருந்தால் தான் என்ன! சிவகெங்கைச்சீமையில் வில்லன் வீரப்பா மட்டும் தான்!
வீரப்பாவின் உச்சமான பெர்ஃபாமன்ஸ் என்றால் மகாதேவி, நாடோடி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், சிவகெங்கைச் சீமை என்ற நான்கு படங்கள் தான்.
சரித்திரப்படங்களுக்கென்றே அளவெடுத்து உருவாக்கப்பட்டவர் வீரப்பா. ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டமான பிரத்யேக ஸ்பெஷல் ’ஹாஹாஹாஹா’ சிரிப்பு.
அவருடைய நடிப்பில் ஒரு காவியத்தன்மை, காப்பியத்தன்மை இருந்ததால் சமூகப்படங்களுக்கு வில்லனாக அவர் பொருத்தமானவராக இருந்ததில்லை. சமூகப்படங்களில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.
ஆனந்த ஜோதி (1963), சங்கமம் (1970) பல்லாண்டு வாழ்க (1975) ஆகிய சமூகப்படங்களில் வில்லனாக வீரப்பா நடித்துள்ளார்.
வீரப்பா பல திரைப்படங்களின் தயாரிப்பாளர். பி.எஸ்.வி பிக்சர்ஸ் என்பது அவரது படக்கம்பெனி. ஆலயமணி (1962) அவர் தயாரிப்பில் வந்த படம். அதில் கூட ஒரு நல்ல சீனில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது திலீப்குமார், வஹிதாரெஹ்மான் நடித்து ஆத்மி (1968) ஹிந்திப்படம் கூட வீரப்பா தயாரிப்பில் வெளிவந்துள்ளது.
பி. எஸ். வீரப்பாவின் புகழ்பெற்ற நடிப்பு பாணிகள், முத்திரை வசனங்கள்
எதிர் நாயகன்களுக்கு உரிய உரத்த ஹ ஹா ஹா.. சிரிப்பு (சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்திலிருந்து, கிட்டத் தட்ட எல்லா படங்களிலும்)
சபாஷ், சரியான போட்டி.. (வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில்)
மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி (மகாதேவி திரைப்படத்தில்)
பண நெருக்கடியில் நடிகர் பிஎஸ் வீரப்பா மகன்... தேடிச் சென்று நிதி உதவி செய்த கலைப்புலி தாணு!
பிஎஸ் வீரப்பாவை நினைவிருக்கிறதா... மகாதேவி, மன்னாதி மன்னன், வஞ்சிக்கோட்டை வாலிபன், மீனவ நண்பன், மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் கம்பீர வில்லனாக வந்து பின், பிஎஸ்வி பிக்சர்ஸ் என்ற பேனரில் ஆந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, நட்பு உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். பிஎஸ்வி பிக்சர்ஸ் பேனரில் வெற்றி, சபாஷ், சாட்சி உள்பட அடுத்தடுத்து 4 படங்களை இயக்கியவர் இன்றைய டாப் ஸ்டார் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் என்பது குறிப்பிடத்தக்கது. Buy Tickets வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். இவரும் தயாரிப்பாளர்தான். ஆனால் பிஎஸ் வீரப்பாவின் மறைவுக்குப் பிறகு, படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டார். ஏராளமான படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தை, படத் தயாரிப்பில் இழந்துவிட்டார் வீரப்பா. இப்போதும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார் வீரப்பாவின் மகன் பிஎஸ்வி ஹரிஹரன். பொருளாதாரப் பிரச்சினை காரணமாக வாடகையைக் கூடச் செலுத்த முடியவில்லை. வீட்டைக் காலி செய்யச் சொல்லி வீட்டு உரிமையாளர் நிர்ப்பந்தப்படுத்த, செய்வதறியாமல் திகைத்து நின்றார் ஹரிஹரன். விஷயம் கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தாமாகவே முன் வந்து ரூ 1 லட்சத்துக்கான வரைவோலையை பிஎஸ்வி ஹரிஹரனுக்குக் கொடுத்து உதவியுள்ளார். இந்த வரைவோலையை இன்று பிஎஸ்வி ஹரிஹரனிடம், அவர் வசிக்கும் முகலிவாக்கம் வீட்டுக்கே சென்று கலைப்புலி தாணு சார்பில், பிஆர்ஓ சங்க தலைவர் டைமண்ட் பாபு மற்றும் பிஆர்ஓ சிங்காரவேலு ஆகியோர் வழங்கினர். ஆரம்பத்தில் இந்த உதவியைச் சத்தமில்லாமல் செய்துவிட வேண்டும் என்றுதான் கலைப்புலி தாணு விரும்பினார். ஆனால், தான் உதவி செய்ததைப் பார்த்த பிறகு, பிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடித்த பிரபலங்கள் ஹரிஹரனுக்கு மேலும் பண உதவி செய்ய முன் வரக்கூடும் என்பதாலேயே இந்த தகவலைப் பகிர்ந்து கொண்டார் கலைப்புலி தாணு. பெரும் நடிகராக இருந்து சம்பாதித்ததை, தயாரிப்பாளராகி இழந்து வாடும் பிஎஸ் வீரப்பா குடும்பத்துக்கு நடிகர் சங்கமும் தயாரிப்பாளர் சங்கமும் என்ன செய்யப் போகிறது...?
No comments:
Post a Comment