MALAYALAM LITERATURE - AN EVOLUTION
MALAYALAM LITERATURE - AN EVOLUTION மலையாள இலக்கிய எழுத்தாளர், விமர்சகர், கல்வியாளருமான எஸ்.குப்தன் நாயர் எழுதிய முன்னுரை: தகழி சிவசங்கரன் பிள்ளை. நாவல், மத்தியதர வர்க்கத்தினரின் – அல்லது பூர்ஷ்வா (முதலாளித்துவ) வர்க்கத்தினரின் – கலையுருவமாகத்தான் பிறவி எடுத்தது. மத்தியதர வர்க்கத்தினரின் உயர்வு தாழ்வுகள், கனவுகள், இவற்றின் சீரழிவு – ஆகியவற்றையே இந்தக் கலையுருவம் மீண்டும் மீண்டும் பிரதிபலித்து வந்திருக்கிறது. சமூகமென்ற பெரும் கோட்டையின் நடுவில் யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்ற தனிமனிதனே, பழைய நாவலின் இடையறாத மையக் கருத்து. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொழில் புரட்சியின் விளைவாக, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளில் புதியதொரு மத்தியதர வர்க்கம் உருப்பெற்றது; இன்றைய நாவல் இலக்கியம் பிறந்ததும் இந்நாடுகளில் தான். மாறுபட்ட சூழ்நிலையில், வாழ்வது என்பதே மத்தியதர வர்க்கத்தினருக்குச் சாகசம் மிக்க ஒரு செயலாகிவிட்டிருந்தது. இந்தச் சாகசங்களைச் சித்திரிப்பதில் தான் அன்றைய நாவலாசிரியர்கள் ஆர்வம் காட்டினார்கள். ராபின்ஸன் குரூஸோ, டான் க்விக்ஸாட், பிக்விக் ஆகியோர் இந்தச் சாகசங்களின் பிரதிநி...