Posts

Showing posts with the label IN FILMS

DEEPAVALI SONGS IN FILMS FROM BEGINNING

Image
DEEPAVALI SONGS IN FILMS FROM BEGINNING திரைப்படங்கள் என்பது அடிப்படையில், ஒரு தனி நபர் அல்லது அவரைச் சார்ந்த சிறிய வட்டத்தை வெளிப்படுத்தும் கலை அம்சமாக மட்டுமே திகழ்கின்றன. ஒரு நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு மற்றும் விழாக்கள் ஆகிய அனைத்தும் கதாநாயகன் – நாயகி அல்லது வில்லன் ஈடுபடும் செயல்கள் என்ற ‘திரையின் முக்கிய நிகழ்வுகளின்’ பின்புலமாகவே காட்சியாக்கப்படும். இதன் பொருட்டே, தேசம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தீபாவளி தொடர்பான பாடல்கள் நம் படங்களில் அதிகம் இடம்பெறவில்லை. அரிதாக, இப்படி இடம்பெற்று, அதிகம் புகழடைந்த இரு, தமிழ்-ஹிந்தி பாடல்களைப் பார்ப்போம். வழக்கப்படி முதலில் ஹிந்திப் பாட்டு. 1950-ம் ஆண்டு வெளிவந்த சீஷ் மஹால் (கண்ணாடி மாளிகை) என்ற சமூகத் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எழுதியவர் நாஜிம் பானிபட் என்ற இஸ்லாமியர். இசை வசந்த் தேசாய் என்ற இந்து பிராமணர். பாடலைப் பாடியவர்கள், பாடத் தொடங்கிய 14-ம் வயது முதல், இறுதி மூச்சுவரை, நகல் செய்ய முடியாத தன் வசீகரக் குரலால், ‘கஜல் உலகின் ராணி’ என்று புகழப்பட்டு, அண்மையில் இந்திய அரசு சிறப்பு நாணயம் வெள...