GAJINI MOHAMED INVADER
GAJINI MOHAMED INVADER #அறிவோம்_கஜினி_முகமது_பகுதி_3 இந்தியாவில் நுழைந்த முதல் முஸ்லீம் மன்னனைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே பல மன்னர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சிறு சிறு பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு பிரச்சனையில்லாமல் இருக்கும் பொழுது வம்படியாக கொள்ளையடிக்கும் நோக்கில் புறப்பட்ட இளைஞன் இவன் தான். இவன் காபூலில் இருக்கும் போதே ஒரு விசித்திரமான பழக்கத்தைக் கொண்டிருந்தான்.போரில் வென்று கொள்ளையடித்து விட்டு திரும்பும்போது மறக்காமல் அந்த மன்னர்களின் விரல்களையும் வெட்டி எடுத்துக் கொண்டு வருவது அவனது ஸ்டைல்.நாம் தபால் தலைகளை சேகரிப்போமே அது போல.அந்த லிஸ்டில் ஜெயபாலனின் விரல்களும் சேர்ந்து கொண்டது தான் வேதனை.அவனது கலெக்சனில் முதல் இந்திய விரல்கள். கஜினிக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டது.வந்த நோக்கம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறுமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.இந்த வெற்றியின் ருசியால் தான் கி.பி.ஆயிரத்தில் சரியாகத் தொடங்கிய முதல் பயணம் ஆண்டுக்கு ஒரு முறை என்று வழக்கமாகிப் போனது. பிரச்சனையே இல்லை.எல்லையில் குட்டி குட்டி ராஜாக்கள்.சேர்...