GAJINI MOHAMED INVADER
#அறிவோம்_கஜினி_முகமது_பகுதி_3
இந்தியாவில் நுழைந்த முதல் முஸ்லீம் மன்னனைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.ஏற்கனவே பல மன்னர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள் சிறு சிறு பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டு பிரச்சனையில்லாமல் இருக்கும் பொழுது வம்படியாக கொள்ளையடிக்கும் நோக்கில் புறப்பட்ட இளைஞன் இவன் தான்.
இவன் காபூலில் இருக்கும் போதே ஒரு விசித்திரமான பழக்கத்தைக் கொண்டிருந்தான்.போரில் வென்று கொள்ளையடித்து விட்டு திரும்பும்போது மறக்காமல் அந்த மன்னர்களின் விரல்களையும் வெட்டி எடுத்துக் கொண்டு வருவது அவனது ஸ்டைல்.நாம் தபால் தலைகளை சேகரிப்போமே அது போல.அந்த லிஸ்டில் ஜெயபாலனின் விரல்களும் சேர்ந்து கொண்டது தான் வேதனை.அவனது கலெக்சனில் முதல் இந்திய விரல்கள்.
கஜினிக்கு இந்தியா மிகவும் பிடித்துப் போய் விட்டது.வந்த நோக்கம் இவ்வளவு சீக்கிரம் நிறைவேறுமென்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை.இந்த வெற்றியின் ருசியால் தான் கி.பி.ஆயிரத்தில் சரியாகத் தொடங்கிய முதல் பயணம் ஆண்டுக்கு ஒரு முறை என்று வழக்கமாகிப் போனது.
பிரச்சனையே இல்லை.எல்லையில் குட்டி குட்டி ராஜாக்கள்.சேர்த்த சொத்துக்களை சரியாக அனைவருக்கும் பிரித்துக் கொடுத்ததால் நீ நான் என்று அவனது படையில் சேர ஆட்கள் க்யூவில் நின்றார்கள்.இந்தப் படையெடுப்பை ஏதோ திருவிழாக் கணக்காக கொண்டாடி விட்டுத் தான் புறப்படவே ஆரம்பிப்பான்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சௌராஷ்ட்ரம் கன்னோசி மதுரா தானேஷ்வர் என இவனது படையெடுப்பு நீண்டு கொண்டே போனது.ஒவ்வொரு முறையும் கஜினி படையின் வாள் வீச்சில் இந்தப் பகுதிகள் ரத்தம் பூசிக் கொண்டன.
இந்த லிஸ்டில் ஒரு முஸ்லீம் மன்னனும் சேர்ந்து கொண்டான்.அப்போது இந்தியாவில் இருந்தது முல்தான் பகுதி.இன்று அது பாகிஸ்தானில் உள்ளது.இந்தப் பகுதியை ஆண்ட மன்னன் சுல்தான் தாவூது.நாம் இன்று முகத்திற்குப் பூசுவோமே முல்தானி மெட்டி.அது இங்கிருந்து தான் வருகிறது.அங்கு மட்டுமே கிடைக்கும் ஒரு வகை மண் அது.அந்த நாட்டின் மன்னனையும் விட்டுவைக்கவில்லை கஜினி படை.
கொள்ளை என்று இறங்கி விட்டால் அவனுக்கு மதமாவது மண்ணாங்கட்டியாவது.முல்தானை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் விட்டான்.போரில் வென்றது மட்டுமல்லாமல் அந்தப் பகுதியையே தரைமட்டமாக்கியது விட்டான்.ஆயிரக்கணக்கான தலைகள் தரையில் உருண்டது.சுல்தான் தாவூதும் பரலோகம் அனுப்பப்பட்டான்.
நாம் ஏதோ கஜினியை ஒரு முஸ்லீம் மன்னனாகவும் இந்துக்களின் விரோதியாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.ஆனால் அவனது பார்வையே வேறு.நாம் முன்பே கண்ட தைமூரைப் போலவே இவனது செயல்பாடுகளும் இருக்கும்.அவனது நாட்டு மக்கள் மட்டுமே அவனுக்கு முக்கியம்.மற்றவர்கள் அனைவருமே எதிரிகளே.அவர்கள் முஸ்லீம்களா அல்லது இந்துக்களா என்று பார்ப்பதே இல்லை.
ஆரம்பத்தில் அவனது கவனம் அரண்மனை நோக்கியே இருந்தது.போகப்போக ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டான்.செல்வங்கள் அனைத்தும் கோயில்களில் உள்ளது என்ற உண்மை தான் அது.கொள்ளையடித்த ஊர்கள் அனைத்தும் சிறிய சிறிய ஊர்களானதால் பெரிய கோயில்கள் எங்கு உள்ளது என்று ஆராய ஆரம்பித்தான்.அப்படி சிக்கியது தான் நாம் இன்றும் பேசிக் கொண்டிருக்கும் சோமநாதபுரப் படையெடுப்பு.இந்திய வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகிப் போன படையெடுப்பை நாளை காணலாம்.
வளரும்.
No comments:
Post a Comment