Friday 2 April 2021

ORU THALAI RAAGAM

 

ORU THALAI RAAGAM




தமிழ் சினிமாவில் ஒரு புது தடம் பதித்த 'ஒரு தலை ராகம்' ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க 30 தியேட்டர்களுக்குள்ளாகவே வெளியானது. படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே ஏறக்குறைய புதுமுகங்கள். சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்குத் தெரியாது, தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று. படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள். அதற்கு நான்காண்டுகளுக்கு முன்பு வெளியான ’16 வயதினிலே’ கொடுத்த அதே புதுமை. ’16 வயதினிலே’ அதுவரை காட்டியிராத கிராமத்தைக் காட்டி இருந்தது என்றால், இதில் சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ் சினிமா அச்சு அசலாகப் படம் பிடித்திருந்தது. இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. ’நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா’ என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்கள்,

பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி. பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது. அதுவரை தமிழ் சினிமாவில் கல்லூரி என்றாலே மாணவர்கள் கூட கோட்சூட் அணிந்து செல்வார்கள் என்று நிழல் நிதர்சனம் நிஜத்திலிருந்து விலகியே இருக்கும். பெரும்பாலும் 40வயதைக் கடந்த கதாநாயகர்கள் கல்லூரி மாணவர்களாகத் தோன்றுவார்கள், ஆனால் நாம் கண்முன்னால் பார்க்கும் கல்லூரியை, மாணவர்களை, அவர்களின் இயல்பான நடை, உடை, பாவனைகளுடன் உலவவிட்டது ஒருதலை ராகம். குறிப்பிட்ட வார்த்தைகளுடனேயே புழங்கும் ஒரு சமூகத்திற்குள் பத்திரிகைகள், தொலைக்காட்சி, திரைப்படம் மூலமாகத்தான் புதிய வார்த்தைகள் சென்று சேரும். அல்லது அந்தப் பகுதிக்கு வரும் மற்றவர்களாலும் புதிய வார்த்தைகள் அறிந்து கொள்ளப்படும். தொலைக்காட்சி இல்லாத, அதிகம் பேர் பத்திரிக்கை படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும் சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன. அப்படிப் பார்த்தால் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி, மாமூ போன்ற வார்த்தைகள் இந்தப் படத்தின்

மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன. காதலியைத் தொடாமல், பேசாமல் காதலன் காதலித்த முதல் படம் இதுதான் பாடல் - '' வாசமில்லா மலரிது...வசந்தத்தை தேடுது...
வைகை இல்லா மதுரை இது...
மீனாட்க்ஷியை தேடுது...
ஏதேதோ ராகம்...என்னாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்... பாடல் , இசை டி. ராஜேந்தர் - எஸ். பி. பாலசுப்ரமணியம் குரலில் .

No comments:

Post a Comment