APOORVA RAGANGAL
APOORVA RAGANGAL அபூர்வமான திரைப்படம்! அபூர்வ ராகங்கள் திரைபடத்தில் கேள்வியின் நாயகனே!!! என்னும் தமிழ் பாடலின் சிச்சுவேஷனை எத்தனை அழகாக கவிஞர் மற்றும் மெல்லிசை மன்னருடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் என்று பாருங்கள்?!!! மேடையில் பாடிக்கொண்டிருக்கும் பைரவி வயதில் இளையவரான பிரசன்னா தன்னை மணக்க நினைப்பது வெட்கம் கெட்ட செயல் என்பதை பலம் பொருந்திய வார்த்தைகளில் விளக்குவதைப் பாருங்கள். பசுவிடம் கன்றுவந்து பாலருந்தும் - கன்று பாலருந்தும் போதா காளை வரும்? சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம் சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம் தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா? வேலிக்கு இன்னொருவன் வேலி உண்டா? கதை எப்படி? அதன் முடிவெப்படி? இப்படி பைரவியின் முடிவைக் கேட்டதும் மேடையில் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த பிரசன்னா சினத்துடன் பாதிப்பாடலில் எழுந்து போய் மறைவில் நின்று கொள்வார், இப்போது பல வருடங்களாக பைரவியை நிர்கதியாக தவிக்க விட்டுப்போன ரஜினி அங்கே அரங்கத்தின் பால்கனியில் வெளிப்படுவார், ”உன்னை ஏமாற்றிச் சென்றவன் இங்கு வந்திருக்கிறேன், உன் தரிசனம் தே...