Posts

Showing posts with the label Baldaeus

Philippus Baldaeus , BISHOP WHO ISSUED BIBLE IN TAMIL BORN 1632 OCTOBER 24

Image
  Philippus Baldaeus ,  BISHOP WHO ISSUED BIBLE IN TAMIL  பைபிளை தமிழுக்கு தந்த  பிலிப்பு பால்டேஸ் பாதிரியார் -  என்.சரவணன்  “அறிந்தவர்களும் அறியாதவையும்” 22 பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus) ஒரு டச்சு நாட்டு அமைச்சர். பின்னர் அவர் பாதிரியாராக ஆனார். டச்சு ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மீதான டச்சு ஆக்கிரமிப்புப் மும்முரமாக இருந்த காலத்தில் அவர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். ஆபிரஹாம் ரொஜேரியசுக்குப் (Abraham Rogerius) பின்னர் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த இரண்டாவது நபராக பிலிப்பு பால்டேஸ் அறியப்படுகிறார். அவர் பதிவு செய்த தகவல்களும், வரைபடங்களும் அன்றைய இலங்கையையும், குறிப்பாக வடக்கு பகுதியையும் தமிழர்களையும் அறிவதற்காக இன்று வரை பல ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் ஆவணங்கள். பூர்வீகம் 24.10.1632 இல் பிறந்தார் பிலிப்பு பால்டேஸ். சிறு வயதிலேயே குறுகிய கால இடைவெளிக்குள் தாயும், தந்தையும், சகோதரனும் இறந்து போனார்கள். ஒரே சகோதரியும் துறவறம் பூண்டதும் 4 வயதிலேயே பிலிப்பு அனாதையானர். ஆனால் மாமனாரின் உதவியுடன் வளர்ந்தார். ...