Posts

Showing posts with the label சினிமா

டை ரக்டர் கே.பாலசந்தர் - அவன் ஒரு தொடர்கதை

Image
டை ரக்டர் கே.பாலசந்தர் -  அவன் ஒரு தொடர்கதை  டை ரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார். பொதுவாக பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பெண்களின் பிரச்சினைகள் அலசப்படும். பெண் உரிமை வலியுறுத்தப்படும். சமூக சீர்திருத்த கருத்துக்கள் எடுத்துக் கூறப்படும். இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பாலசந்தர் எழுதியிருப்பதாவது:- எங்கள் குடும்பம் பெரிய குடும்பம்தான். அண்ணன் பாலசுப்பிரமணியன் மூத்தவர். அவருக்குப்பின் சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி என்ற மூன்று மூத்த சகோதரிகள். ஐந்தாவதாக நான். எனக்கு அடுத்து ஒரு தங்கை nஜயலட்சுமி. நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோதே எனது மூத்த சகோதரிகளான சேதுலட்சுமி, மங்களம், சரசுவதி ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. அதுவும் நான் பிறப்பதற்கு முன்பே மங்களம் அக்காவுக்குத் திருமணம் முடிந்து விட்டது. அப்போது அக்காவுக்கு வயது 8. நான் பிறப்பதற்கு முன்பே திருமணமான மங்களம் அக்கா, அடுத்த ஆண்டே கணவனை இழந்து விட்டாள். ...

தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவைக் கதாநாயகன் TR இராமச்சந்திரன்-ஒரு சரித்திரம்

Image
 தமிழ் சினிமாவின் முதல் நகைச்சுவைக் கதாநாயகன் TR இராமச்சந்திரன்-ஒரு சரித்திரம்  திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள திருக்காம்புலியூரில்,  ரங்காராவ்-இரங்கம்மாள் தம்பதியருக்கு 9, ஜனவரி 1920ம் ஆண்டு பிறந்தார் TR இராமச்சந்திரன். இளம் வயதிலேயே இவரின் தாயார் இறந்து விட்டார். தந்தை மறுமணம் செய்து கொண்டார். இருப்பினும், தந்தை மகனை நன்கு கவனித்துக் கொண்டார். மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், இராமச்சந்திரனை, அவர் தந்தை குளித்தலை யிலுள்ள பள்ளியில் சேர்த்தார். 15 வயதாகியும் 5ம் வகுப்பைத் தாண்டவில்லை TRR. படிப்பில் நாட்டமில்லாத இவர் நாடகங்களில் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். மதுரையில் ஜகந்நாத ஐயர் நடத்தி வந்த “பாலமோகன ரஞ்சித சங்கீத சபா” கம்பெனியில் சேர்ந்து நடித்தார். அப்பொழுது இந்த கம்பெனியில்  இசையமைப்பாளர் SV வெங்கட்ராமன்,  MR இராதா,  TS பாலையா,  TR மகாலிங்கம் ஆகியோர் சேர்ந்திருந்தார்கள்.  பின்பு SV வெங்கட்ராமன் தனியாக நாடக கம்பெனி தொடங்கி குறிஞ்சிப்பாடியில் நடத்தியபோது, அந்த கம்பெனியில் சேர்ந்தார் இராமச்சந்திரன். காதலித்...

எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்

Image
  எம்.ஜி.ஆருடன் முதல் சந்திப்பு- ஆரூர் தாஸ்    கல்யாணராமய்யர் கம்பெனியில் டி.என்.ஆர். புரொடக்ஷன்ஸ் பேனரில், ‘‘ராணி லலிதாங்கி’ ’ படத்திற்கான வேலைகள் ஆரம்பமாயின. வாத்தியார்  தஞ்சை ராமையாதாஸ் சொன்ன கதையையும், சில நாடகக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு நான் எழுதிய லலிதாங்கியின் திரைக்கதைக் கோப்பை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடம் சென்றேன். காலை மணி ஒன்பது. எம்.ஜி.ஆரை சந்திக்கப் போகிறோம் என்ற சந்தோஷம். இப்பொழுது அவ்வை டி.கே.சண்முகம் சாலையும், (அப்பொழுது அதற்கு ‘லாயிட்ஸ் ரோடு’ என்று பெயர்) ராயப்பேட்டை நெடுஞ்சாலையும் சந்திக்கும் ரவுண்டானாவின் அருகில் உள்ள வழக்கறிஞர் வி.பி.ராமனின் இல்லத்திற்கு அருகே உள்ள ‘தாய் வீடு’ என்று பெயர் கொண்ட சொந்த வீட்டில் எம்.ஜி.ஆர். தன் மனைவியார் சதானந்தவதி அம்மையார் மற்றும் தனது மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். சதானந்தவதி அம்மையார் உடல் நலமின்றி படுத்த படுக்கையாகவே இருந்து வந்தார். “என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. எனவே, வி.என்.ஜானகியை மணந்து கொள்ளுங்கள். இதற்கு ...