JINNA HOUSE IN MUMBAI
JINNA HOUSE IN MUMBAI இதெல்லாம் நடக்குற காரியமா? வேற வேலையை பாருங்கடே !! மும்பையில் உள்ள, ஜின்னா வீட்டை, பாகிஸ்தான் உரிமை கோரி வருகிறது; கொடுக்க மறுக்கிறது, இந்தியா; சர்ச்சை சூடு பறக்கிறது. மும்பையில் பிறந்து, பாகிஸ்தான் கவர்னர் ஜெனராக இருந்தவர், முகமது அலி ஜின்னா. வக்கீல் தொழிலில் நல்ல வருமானம் வரத் துவங்கியதும், மும்பையில், பணக்காரர்கள் வாழும் பகுதியான, மலபார் ஹில்சில் இடம் வாங்கி, வீடு கட்ட ஆரம்பித்தார். விசாலமான வராண்டா, ஆறு படுக்கை அறைகள், வெளியில் தோட்டம், இவற்றையெல்லாம் கட்டி முடிக்க, அக்காலத்தில், 2 லட்சம் ரூபாய் பிடித்தது. ஜன., 1939ல், புதிய வீட்டிற்கு குடிபுகுந்தார், ஜின்னா. மும்பையில், அவருக்கு, மேலும் ஆறு வீடுகள் இருந்தன. ஆனால், புதிய வீட்டை தான் அதிகமாக விரும்பினார். காந்திஜி - ஜின்னா பேச்சுவார்த்தை, 1944ல், இந்த வீட்டில் தான் நடைபெற்றது. கதர் அணிந்து, தன் இல்லத்திற்கு வந்த, காந்திஜியை, ஐரோப்பிய ஆடை அணிந்து வரவேற்றார், ஜின்னா. பாகிஸ்தான், தனி நாடாகி, அங்கு சென்று விட்டார். 'ஜின்னாவின் மும்பை வீட்டை என்ன செய்வ...