Posts

Showing posts with the label VIRUTHUNAGAR

VIRUTHUNAGAR TEPPAM HISTORY

Image
VIRUTHUNAGAR  TEPPAM  HISTORY நீர் நிறைந்து நிற்கும் இத்தெப்பக்குளத்தைப் பார்த்தாலே, எனக்கு சிறுவயதில் டின்னைக் கட்டிக் கொண்டு, என் தந்தையுடன் மைய மண்டபம்  வரை   நீச்சலடித்துக் கொண்டு சென்று குளித்தது நினைவுக்கு வரும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை பெய்து நீர்  நிறைந்திருக்கும் தெப்பத்தில் கந்தசஷ்டி, திருக்கார்த்திகை தினங்களில் அனைவரும் குளிக்கலாம். மேலும் என் தந்தை திருவி.வி.எஸ.கேசவன் அவர்கள் நாட்குறிப்பு எழுதும்போது விருதுநகரில் மழை பெய்யும் நாட்களையும், தெப்பத்திற்குத் தண்ணீர் வந்த நாட்களையும் குறித்து வைப்பார். தெப்பம் நிறைந்து விட்டால் சொல்பவர்களுக்குப் பரிசும் உண்டு. மழை பெய்யாமல் இருந்தால்," மழை பெய்து தெப்பத்திற்குத் தண்ணீர் வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுங்கள்" என்று பார்க்கும் அனைவரிடமும் சொல்வதோடு, துண்டுப் பிரசுர ங்கள் அச்சிட்டும் ஊர் மக்கள் அனைவரையும் வேண்டச் சொல்வார்.சிறு வயதில் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இப்பொழுது நன்றாகப் புரிகிறது, தெப்பம் நிறைந்தா ல் சுற்று வட்டாரத்தில் உள்ள எத்துணை அடிகுழாய்...