Posts

Showing posts with the label ராஜாஜி

சுதந்திர போராட்ட வீரர்களும் ,எதிராய் செயல்பட்ட பெரியாரும்

Image
சுதந்திர போராட்ட வீரர்களும் , எதிராய் செயல்பட்ட பெரியாரும்  ராமநாதபுரம் மட்டுமல்ல, சாத்தான்குளம், மெய்ஞானபுரம் குலசேகரன் பட்டினம், உடன்குடி ஆகிய திருநெல்வேலி மாவட்டத்துச் சிறுநகரங்களிலும் கலவரம் வெடித்தது. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்கள் இவை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி இங்கே கொலை செய்யப்பட்டார். rajaji2இந்த வழக்கில் காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947-இல் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் இருவரையும் மரணதண்டனையிலிருந்து விடுவித்தார். பெஞ்சமின், செல்லதுரை, தர்மம் கோவில் பிள்ளை, தங்கைய நாடார், முத்துமாலை நாடார், மந்திரக்கோன் ஆகிய ஆறுபேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தேவ இரக்க நாடாருக்கு பத்தாண்டும், நாராயண பிள்ளைக்கு ஐந்தாண்டும் மோட்டாரத்தினசாமி, பூவலிங்க நாடார் ஆகிய இருவருக்கும் இரண்டாமாண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. துரைசாமி நாடார், லக்ஷ்மண நாடார் ஆகிய இருவரும் பாதுகாப்புக் கைதிகளாக்கப்பட்டனர். கோவை, தஞ்சை, சென்னை, தென்னாற்காடு, ஈரோடு, மதுரை நீலகிரி, சேலம...