Wednesday 17 August 2016

சுதந்திர போராட்ட வீரர்களும் ,எதிராய் செயல்பட்ட பெரியாரும்



சுதந்திர போராட்ட வீரர்களும் ,
எதிராய் செயல்பட்ட பெரியாரும் 





ராமநாதபுரம் மட்டுமல்ல, சாத்தான்குளம், மெய்ஞானபுரம் குலசேகரன் பட்டினம், உடன்குடி ஆகிய திருநெல்வேலி மாவட்டத்துச் சிறுநகரங்களிலும் கலவரம் வெடித்தது. நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்கள் இவை. ஒரு வெள்ளைக்கார அதிகாரி இங்கே கொலை செய்யப்பட்டார்.


rajaji2இந்த வழக்கில் காசிராஜன், ராஜகோபாலன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947-இல் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனராலாக இருந்த ராஜாஜி தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் இருவரையும் மரணதண்டனையிலிருந்து விடுவித்தார்.

பெஞ்சமின், செல்லதுரை, தர்மம் கோவில் பிள்ளை, தங்கைய நாடார், முத்துமாலை நாடார், மந்திரக்கோன் ஆகிய ஆறுபேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. தேவ இரக்க நாடாருக்கு பத்தாண்டும், நாராயண பிள்ளைக்கு ஐந்தாண்டும் மோட்டாரத்தினசாமி, பூவலிங்க நாடார் ஆகிய இருவருக்கும் இரண்டாமாண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. துரைசாமி நாடார், லக்ஷ்மண நாடார் ஆகிய இருவரும் பாதுகாப்புக் கைதிகளாக்கப்பட்டனர்.

கோவை, தஞ்சை, சென்னை, தென்னாற்காடு, ஈரோடு, மதுரை நீலகிரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் வன்முறை வெடித்தது.

அரசாங்கப் புள்ளி விவரங்களின்படி 26 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; இதில் 39 பேர் மாண்டனர், 17 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 6000 பேர் கைது செய்யப்பட்டனர். 295 பேருக்குச் சாட்டையடி தண்டனை தரப்பட்டது. காங்கிரஸ் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதற்காக 27 உள்ளூராட்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இத்தனை எழுச்சிக்கு இடையே நீதிக்கட்சி என்ன செய்தது?

மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று இந்தியர்கள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நேரத்தில் நீதிக்கட்சித் தலைவரான சர். ஏ. ராமசாமி முதலியார் வைஸ்ராயின் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகப் பதவியேற்றார்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நடத்தப்பட்ட உலகப் போருக்காக ஈவெரா நிதி திரட்டிக்கொடுத்தார். அவருடைய சீடர்கள் நாடகங்களை நடத்தி யுத்தநிதி திரட்டினார்கள்.

ஹரிஜனங்கள், தேவர்கள், நாடார்கள் போன்ற தாழ்த்தப்பட்டவரும் மிகவும் பிற்படுத்தப்பட்டவரும் முன்னனியில் செயல்பட்ட ஆகஸ்ட் போராட்டத்திற்கு எதிராகவே நீதிக்கட்சி செயல்பட்டது; ஈவெராவும் செயல்பட்டார்.

1942-இல் சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் தலைமையில் பிரிட்டிஷ் மந்திரி சபைக்குழு இந்தியா வந்தது. நீதிக்கட்சியின் சார்பில் 30.03.1942 இல் ஈ.வெ.ராமசாமி, டபிள்யு. பி. சவுந்தரபாண்டியன், என். ஆர். சாமியப்ப முதலியார், எம்.ஏ.முத்தையா செட்டியார் ஆகியோர் இந்தக் குழுவைச் சந்தித்து மனு கொடுத்தார்கள்.

திராவிடர்களுக்குத் திராவிடநாடு பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

ஆகஸ்டு போராட்டத்தில் அடக்குமுறைக்கு ஆளான தாழ்த்தப்பட்டோர் பற்றியோ பிற்படுத்தப்பட்டோர் பற்றியோ ஈவெராவும் நீதிக்கட்சியும் வாய்திறக்கவில்லை.

தமிழகமே திரண்டு விடுதலைப் போரில் முன்னணியில் இருந்தபோது நீதிக்கட்சியினர் செய்ததெல்லாம் ‘திராவிட நாடு’ வேண்டுமென்று மனுக் கொடுத்ததுதான்.

ஈவெராவைப் பொறுத்தவரை அவர் தேசியத்திற்கு எதிராக இருப்பது போதாது என்று நினைத்தார். ஒரு படி மேலே போய் பாகிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்கு ஆள்பிடித்தார்.







எரிகிற வீட்டில் கிடைத்ததைப் பிடுங்க ஈவெரா செய்த முயற்சி இது.

ஆகஸ்ட் தீர்மானம் இந்நாட்டு மக்களுக்குச் சம்பந்தப்பட்டதல்ல என்பதோடு அது ஜப்பான்காரனின் பலத்தை நம்பி அவன் வெற்றி பெற்றுவிடுவான் என்கின்ற தைரியத்தில் அவனுக்கு தங்கக் குடத்தில் பூரண கும்பம் எடுப்பதற்குச் செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் தீர்மானமேயாகும்— என்று எழுதி ஈவெரா தமிழர்களின் தியாக உணர்வையும் நாட்டுப் பற்றையும் இழிவுபடுத்தினார்.

தானடித்த ஜால்ரா வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக ஈவெரா காங்கிரசைக் குறைகூறினார். காங்கிரஸ் எப்போதும் சர்க்காருக்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறது என்று பச்சைப் பொய் ஒன்றை கட்டுரையாக எழுதினார்.

“காங்கிரசுக்கும் சர்க்காருக்கும் அந்தரங்கத்தில் என்றும் போராட்டம் நடந்ததில்லை. ஆரம்பகாலம் முதல் காங்கிரசானது ராஜ விசுவாச பிரமாணம் செய்து சர்க்காரை ஆதரித்தே வந்திருக்கிறது. சர்க்காரும் காங்கிரசை ஆதரித்தே, அதைப் பெருமைப்படுத்தியே வந்திருக்கிறது,” என்று ‘குடி அரசு’ இதலில் ஈவெரா எழுதினார்.

அரைப்பொய், கால்பொய் என்று சொல்லி இயக்கத்தைத் துவக்கிய ஈவெரா, தன் பொய்யில் தானே மயங்கி அதை முக்கால் பொய், முழுப்பொய்யாக்கி, அதுவும் போதாமல் அண்டப்பொய், ஆகாசப்பொய்யாக ஆக்கி விடுதலையே வேண்டாம் என்றார்.







No comments:

Post a Comment