Showing posts with label HUSSEIN. Show all posts
Showing posts with label HUSSEIN. Show all posts

Wednesday, 19 August 2020

SADDAM HUSSEIN AND OSAMA




SADDAM HUSSEIN AND OSAMA



மீனை பிடிக்க புழுவை இரையாக வைப்போம்
பெரிய மீனை பிடிக்க சிறிய மீன் இரையாகும்
அந்த பெரிய மீன் சதாம் உசேன்
சதாமை கைது செய்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான எரிக் மர்கடோ பின் செய்தியாளர்க்கு சொன்ன செய்தி சுவாரஸ்யமானது.
சதாமை தேடி பலரிடம் விசாரணை செய்தபோது சதாமின் சமையல்காரர் சொன்ன ஒரு விஷயம் அவருக்கு பொறி தட்டியது. சதாமுக்கு " மஸ்கோ " என்ற மீன் வகை பிடித்தமானது என்றும் எப்போதும் அதை விரும்பி சாப்பிடுவார் என்றார்.
எரிக் சதாம் எப்படியும் அந்த மீனை வாங்க தன் ஆட்களை அனுப்புவார் அல்லது அவருக்கு வேண்டியவர் அந்த மீன் களை வீட்டில் குளம் வெட்டி வளர்க்க வேண்டும் என்று எண்ணி விசாரித்தார்.சதாமின் பாதுகாவலர் ஒருவர் இப்படி குளம் வெட்டி மஸ்கோ மீன் களை வளர்க்கிறார் என்று தெரிந்து அவரை கடுமையாக விசாரிக்க அவரது பண்ணையில் சதாம் தங்கி இருந்த பாதாள குகை யைக் காட்டிக் கொடுத்தாராம்.

சதாமுக்கு மீன் என்றால் ஒசாமா பின் லேடனை காட்டிக் கொடுத்தவர்கள் அவருக்கு தகவல் சொல்பவர்களும் மனைவிகளும் என்று எரிக் கூறினாராம்