CHINESE LITERATURE - WOLFS WAITING ஒநாய்கள் காத்திருக்கின்றன
CHINESE LITERATURE - WOLFS WAITING ஒநாய்கள் காத்திருக்கின்றன உலக இலக்கியத்தின் போக்கினை ஒவ்வொரு பத்தாண்டுகாலமும் ஒரு குறிப்பிட்ட இலக்கிய வகை திசைமாற்றம் செய்கிறது. ஆப்ரிக்க இலக்கியங்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள், அமெரிக்காவின் நான்லீனியர் எழுத்து, பின்நவீனத்துவக் கதையாடல் என்று மாறிவந்த சூழலில் இரண்டாயிரத்துக்கு பிறகான இலக்கியப் போக்கினை மாற்றம் கொள்ளச் செய்திருப்பது ஆசியாவின் சமகால இலக்கியங்களே. குறிப்பாக சீனா, ஜப்பான், லெபனான், கொரியா, இந்தியா, துருக்கி, இஸ்ரேல், கம்போடியா, ஆர்மீனியா என்று ஒவ்வொரு தேசமும் தனக்கான தனித்துவமான இலக்கியப் பங்களிப்பையும் முன்னில்லாத புதிய கதைசொல்லும் முறைகள், கவித்துவ வெளிப்பாடுகள், சிந்தனைத் தளங்களை அடையாளப்படுத்தி வருகின்றன. இன்று உலக அளவிலான சிறந்த இலக்கியப் பரிசிற்கான தேர்வு பட்டியலில் ஆசிய நாடுகளின் புத்தங்களே மூன்றில் இரண்டு பங்கை வகிக்கின்றன. முக்கிய பரிசுகளை வென்றுமிருக்கின்றன. இந்த வளர்ச்சியை மேற்குலகம் இன்னமும் அங்கீகாரம் கொள்ளாதற்கு அதன் அரசியல் நிலைப்பாடுகளே காரணம் . இந்தியாவினைப் போலவே நீண்ட இலக்கிய பர...