BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS
BANUMATHI , EXTRA-ORDINARY TALENTED ACTRESS அப்பா பொம்மராஜு வெங்கட சுப்பையாவிடம் கர்நாடக சங்கீதமும் வேறொரு குருவிடம் இந்துஸ்தானியையும் கற்றார் பானுமதி. அப்பா வாங்கிவரும் கிராமபோன் ரெக்கார்டுகளில் உள்ள பாடல்களை ஒருமுறை கேட்டு, அப்படியே பாடும் திறமை அவருக்கு இருந்தது. மகளை சினிமா பாடகியாக்க வேண்டும் என்பது அப்பாவின் கனவு. திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் அவரது கனவு மகளின் திருமணமாக மாறியது. வரன் பார்த்தார்கள். முதலில் வந்தவருக்கு உடல் குறைபாடு. அடுத்ததாக வந்தவர் மூன்றாம் தாரம். பெண்ணின் திருமணம் கேள்விக்குறியாகிவிடுமோ என்று கலங்கினார் அப்பா. அந்த நேரத்தில் வந்துசேர்ந்தார் டைரக்டர் சி. புல்லையா. ‘வரவிக்ரயம்’ தெலுங்குப் படத்தில் பானுமதியை இரண்டாவது கதாநாயகியாக நடிக்கவைக்க விரும்பினார். ‘பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கும் நேரத்தில் சினிமாவில் நடித்தால் சொந்தபந்தம் என்ன சொல்லும்? வந்துபோகிற மூன்றாந்தார வரன்கள்கூட வரமாட்டார்களே’ என்று பயந்த வெங்கடசுப்பையா மறுத்தார். புல்லையா பிடிவாதம் பிடித்தார். குடும்ப ஜோதிடரிடம் பானுமதியின் ஜாதகத்தைக் காட்டினார்கள். ‘இந்தப் பெண் கலைத...