Posts

Showing posts with the label AFFECTION

EGO AND AFFECTION

Image
  EGO AND AFFECTION வீட்டுக்கு வந்த நண்பர்..... "வாடா! எவ்வளவு நாள் கழிச்சு என் வீட்டுக்கு வந்திருக்க! உக்காரு" என்று நண்பர் சாமிநாதனை உற்சாகத்துடன் வரவேற்றார் பழனிவேல். சாமிநாதன் உட்கார்ந்ததும் கண்களைச் சுழற்றி வரவேற்பறையில் பொருட்கள் தாறுமாறாகச் சிதறி இருப்பதைப் பார்ப்பதை கவனித்துப் பழனிவேல் தனக்குள் சிரித்துக் கொண்டார். "கம்பெனி எப்படி நடக்குது? 24 மணி நேரமும் கம்பெனியையே நினைச்சுக்கிட்டிருப்பியே! என் வீட்டுக்கு வர உனக்கு நேரம் கிடைச்சதே பெரிய விஷயம்தான்!" என்றார் பழனிவேல். "என்ன செய்யறது? உன்னை மாதிரி ரிடயர் ஆயிட்டு ஹாய்யா வீட்டில் உக்காந்திருக்க முடியலே என்னால. கம்பெனியில ஏகப்பட்டபிரச்னை. எனக்கும் 70 வயசு ஆகப் போகுது. சமாளிக்கிறது கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் ஒரு ஆறுதலுக்கு உன்னைப் பாத்துப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்."   "அதான் உன் பையன் இருக்கானே? அவன் பாத்துக்கறான். நீயும் என்னை மாதிரி ஹாய்யா வீட்டில இருக்கலாமே!" இதற்குள் கையில் காப்பியுடன் வந்த பழனிவேலின் மனைவி கங்கா, "எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் ஆச்சு. சுமதியையும் அழைச்சுக்கி...

M.G.R. AFFECTION WITH ANIMALS

Image
M.G.R. AFFECTION WITH ANIMALS விலங்கினங்களை வசீகரித்த எம்ஜியார் “அன்பே வா” படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு நடந்துக் கொண்டிருந்த சமயம் அது. ஊட்டிக்குச் சென்றுக் கொண்டிருந்தோம். பொன்மனச் செம்மலுடன் ஜானகி அம்மையாரும், செம்மலின் உதவியாளர் சபாபதியும், நானும் (ரவிந்தரும்) காரில் ஒன்றாக பயணித்தோம். கார் , குன்னூரைத் தாண்டியபோது ஒரு வயோதிக முஸ்லீம் பெரியவர் ஒருவர் பாதையோரத்தில் நடந்துச் செல்வதை நாங்கள் காண நேரிட்டது. செம்மல் உடனே காரை நிறுத்தச் சொல்கிறார் , டிரைவரிடம் :”இராமசாமி , அந்த பெரியவர் போற இடம் கேட்டு ஏத்திக்க , ரவீந்திரன், நீங்க என் பக்கத்திலே வாங்க ” – என்றார் . அந்தப் பெரியவரை கூப்பிட்டதும் சற்று நேரம் உற்றுப் பார்த்தார் , காரில் அவரையும் ஏற்றிக் கொண்டார் . கார் புறப்பட்டது. அவர் ஏதோ பிரார்த்தனை செய்வதுபோல் சிந்தனையில் இருந்தார் . அப்பொழுது மக்கள் திலகம் அவரைப் பார்த்து கேட்டார் ” பெரியவரே எங்க போயிட்டு வரீங்க ? ” “கீழே போய் விறகு வித்துட்டு வர்றேன் ” ” இந்த வயசுல நீங்க வேலை செய்யனுமா என்ன? … உங்களுக்கு பிள்ளைக் குட்டி கிடையாதா ?” ” இருக்கிறாங்க, ஆனா ...