THIRUMANGAI ALWAR , ONE OF THE VAISHNAVIST
THIRUMANGAI ALWAR , ONE OF THE VAISHNAVIST திருமங்கையாழ்வார் திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில், திருமாலின் சார்ங்கம் என்ற வில் லின் அம்சமாக பிறந்தவர், இவரது வீரத்தில் மகிழ்ந்த சோழ மன்னன், நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன், திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். குமுதவல்லி எனும் மங்கை மீது கொண்ட காதலினால் வைணவம் அனுசரிக்க ஆரம்பித்தவர்.விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள்.நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது.இதன் காரணமாக ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத...