யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’ உண்மை கதை
யார் மாமா இது, ஸ்மிதா பாட்டீல் மாரியே?’ சிறு கதை / உண்மை கதை -வேணுவனம் ---------------------------------------------------------------------------------- கே.ஏ.அப்பாஸ்தான் அதுக்குக் காரணம். இன்னைக்கும் ராஜ்கபூர் படங்கள்லயே ‘மேரா நாம் ஜோக்கர’ அதானெ நம்மால மறக்க முடியல. அப்பாஸ லேசுப்பட்டவன்னு நெனச்சுராதெ. ‘ஆவாரா’வும் அவன் கததான்’. சஞ்சீவி மாமா இப்படித்தான் திடீரென பாதியிலிருந்து பேசத் துவங்குவார். அதற்கு முந்தைய நாளோ, முந்தைய சந்திப்பிலோ எங்களது உரையாடலின் தொடர்ச்சியாக, விட்ட இடத்திலிருந்து தொடங்கிப் பேசிக் கொண்டேபோவார். அவர் பேசப் பேசத்தான் எனக்கு முதல்நாள் என்ன பேசினோம் என்பது மெல்ல நினைவுக்கு வரும். சஞ்சீவி மாமா பேசுவது போலவே அவரைப் பற்றிய தகவலொன்றும் இப்படி திடீரென்று வந்தது. ஒருவாரமாக திருநெல்வேலியிலேயே இருந்தவன், சஞ்சீவி மாமாவைப் போய்ப் பார்த்திருக்கலாம்தான். இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கப் போகிறோமே, சென்னைக்குக் கிளம்புமுன் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக இருந்தது, எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை தொலைபேசியில் வந்த தகவல் உணர்த்திவிட்டது. இத்தனைக...