INDIA CAPITAL CITY CALCUTTA WAS CHANGED , SHIFTED TO NEWDELHI FEBRUARY 13,1931
INDIA CAPITAL CITY CALCUTTA WAS CHANGED , SHIFTED TO NEWDELHI FEBRUARY 13,1931 புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது அரியானாவிலுள்ள ஃபரிதாபாத், குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது. ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.[4] இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு புது தில்லி என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[5] 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[6] புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குத...