''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' - சுஜாதா
''நா.முத்துக்குமாரை சினிமா விழுங்கிவிடாமல் இருக்க ஸ்ரீரங்கநாதரைப் பிரார்த்திக்கிறேன்'' - சுஜாதா நா.முத்துக்குமாரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி குறித்து வெளியான செய்திகளுக்கு அவரது சகோதரர் நா.இரமேஷ்குமார் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரான நா.முத்துக்குமார் ஆகஸ்ட் 14ம் தேதி மஞ்சள் காமாலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 41. அவருடைய மரணத்தைத் தொடர்ந்து பலரும், அவருடைய குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், அவர் சிகிச்சைக்கு பணமின்றி மரணம் அடைந்ததாகவும் செய்திகளை வெளியிட்டு வந்தார்கள். இச்செய்தி குறித்து நா.முத்துக்குமாரின் சகோதரர் நா.இரமேஷ்குமார் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது.. "ஆம் நண்பர்களே... அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் 'பாவம் தாயில்லாப் பிள்ளைகள்...'' என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத எங்கள் தந்தை, உறவினர்கள் ஒன்றுகூடும் எல்லா விருந்து விசேஷங்களிலும் வி...